அன்புக்குரியவர்களே
திரையுலகில் இருக்கக்கூடிய ஒருவர் கூறினார். “ஏழைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டியது கடவுளுக்குத்தான்” என்றார். ஆனால் இயேசுவால் கவரப்பட்டு அவரைப் போலவே பிறரன்பு பணியை செய்த நம் புனிதை புனித அன்னை தெரசா அவர்கள் கூறுகிறார் “ஒரு ஏழை ஒருவன் பசியால் உயிர் விட்டால் அது கடவுளால் அல்ல உன்னையும் என்னையும் போன்றோர் அவனுக்கு உணவளிக்காமையால் தான் அது நிகழ்ந்தது” எனக் குறிப்பிடுகிறார். இன்று தன் குறைகளை விடுத்து மற்றவரின் குறைகளை பெரிதுபடுத்தி கூறுவதையே பலர் வாடிக்கையாகக் கொண்டு சுயநலம் கொண்ட மனிதர்களாக வாழும் நிலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு செல்கிறது.
புரட்சிக்கவி பாரதிதாசன் கூறுகிறார் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோன்.” என்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள் நம்மை பிறர் மீது அன்பு கொண்டவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா ஆண்டவர் எல்லார் முகங்களில் இருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார் என குறிப்பிடுகிறார். இதனையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உடல் ஊனமுற்றோர் நலம் அடையச் செய்வதும், பார்வையற்றோருக்கு பார்வை வழங்குவதும், பேச்சாற்றல் இழந்தவருக்கு பேச்சாற்றலை தருவதுமான பல விதமான செயல்களை இயேசு செய்கிறார். அதோடு மட்டுமன்றி அடுத்தவரின் பசியை உணர்ந்தவராய் தன்னை பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய நிகழ்வையும் இன்றைய வாசகங்களில் நாம் காணலாம். எனவே இன்றைய நாளில் கண்ணில் காணக்கூடிய மனிதர்களுக்கு உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
அப்துல் கலாம் அவர்கள் கூறுவார் “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை”என்று அவ்வார்த்தைகளை சற்று மாற்றி “வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் ஒரு தலைமுறையாவது” என்று சிந்தையில் நிறுத்துவோம். ஒவ்வொரு நாளும் தேவையில் இருக்கக்கூடிய யாராவது ஒருவருக்கு உதவி செய்ய முன்வருவோம். உதவி என்பது பொருளைச் சார்ந்தது மட்டுமல்ல மற்றவருக்காக நாம் நேரம் செலவிடும் நல்ல உள்ளத்தையும் சார்ந்தது. உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். அதற்கான அருளை இறைவனிடத்தில் வேண்டுவோம்.
Sahayam! Truly we depend on many social friends like the farmers to lead our every day life.without others, we can't live our lives. It is really the duty of every person in this world to support and make some one to live their life peacefully!
பதிலளிநீக்குSahayam! Truly we depend on many social friends like the farmers to lead our every day life.without others, we can't live our lives. It is really the duty of every person in this world to support and make some one to live their life peacefully!
பதிலளிநீக்கு