செவ்வாய், 31 மே, 2022

மாற்றத்தின் பாதையை நோக்கி ....(1.6.2022)

மாற்றத்தின் பாதையை நோக்கி ....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 


இன்றைய முதல் வாசகத்தில் எபேசு நகரில் தனது பணியை முடித்துவிட்டு பவுல் எருசலேம் நோக்கி செல்கிறார் எனவே நகர மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் அவரது உரையின் சாரம்சம் எப்பொழுதும் இணைந்திருப்பதுதான்.  நான் உங்களுக்குக் கற்பித்த பற்றி குறித்து அதில் பல கற்பனைகளை புகுத்தி குழப்பம் உண்டாக்க கூடிய நபர்கள் உங்களுக்கு மத்தியில் வருவார்கள் ஆனால் நீங்கள் எப்போதும் இணைந்திருங்கள் என்று ஒற்றுமையை குறித்து அவர்களோடு உரையாடுகிறார் அதேசமயம் தனது எதிர்காலத்தை குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு தந்தையாம் இறைவனிடம் வேண்டுகிறார் அவரின் வேண்டுதலும் ஒற்றுமையை மையப்படுத்தியே அமைகிறது. 

ஒற்றுமைதான் பலம் என்பதை இயேசு முழுமையாக அறிந்திருந்தார். எனவேதான் மூன்றாண்டுகளாக பலவிதமான கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த சீடர்களை ஒன்றுபடுத்தி உறுதிபடுத்தி அவர்களுக்குள் இருந்த ஐயங்களை எல்லாம் போக்கி அவர்களை இறையாட்சி பணிக்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகின்ற பணியில் ஈடுபட்டார்.

இந்த சீடர்கள் அனைவருமே இயேசுவோடு இருந்தவர்கள் அவர் செய்த புதுமைகளைக் கண்ணால் கண்டவர்கள் அவர் வார்த்தைகளை காதால் கெட்டவர்கள் அவர் செய்த அரும் அடையாளங்களைக் உடனிருந்து பார்த்தவர்கள் ஆனாலும் பல நேரங்களில் மனித இயல்புக்கு ஏற்ப இயேசுவின் மீதான அய்ய நிலையிலே அவர்கள் இருந்தார்கள் ஆனால் இவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்ற மனநிலையை இயேசு கொண்டிருந்தார் அந்த மனநிலையை தனது சீடர்கள் மத்தியில் உருவாக்கவும் முற்பட்டார் ... அதன் விளைவுதான் இயேசுவின் விண்ணேற்பு க்கு பிறகு திருஅவையில் பல விதமான கருத்து மோதல்கள் எழுந்து நேரங்களிலெல்லாம் சீண்டல்கள் ஒன்றுகூடி தூய ஆவியாரின் துணையோடு கலந்தாலோசித்து ஒரு மனதோடு ஒற்றுமையாக இருந்து சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்த மனிதர்களாக விளங்கினார்கள்.


இன்றைய இந்த இறைவார்த்தை பகுதி நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் நாமும் ஒற்றுமையோடு இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவருடன் பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்துள்ள நாம் சாதி மத இன பாகுபாடுகளையும் கருத்து மோதல்களையும் புறம்தள்ளி ஒன்றுபடுவோம் இயேசுவின் இறையாட்சி மண்ணில் மலர்வதற்கான மாற்றத்தின் பாதையை நோக்கி ....





 

திங்கள், 30 மே, 2022

தேடிச் செல்லவும்...(31.5.2022)

தேடிச் செல்லவும்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மரியாவை சந்திக்கிற போது சங்கடங்கள் மறையும் என்பார்கள். 
மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்தல் நிகழ்வை
 இன்று விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய நாம், மரியாவின் சந்திப்பு நமக்கு தரும் வாழ்வுக்கான பாடம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

       மரியா முதிர்ந்த வயதில் எலிசபெத்து கருவுற்றிருக்கிறார்  என்ற செய்தியை கேட்ட மாத்திரமே, பல மைல் தூரம் பயணம் செய்து எலிசபெத்தம்மாளின் துயரத்தில் உடன் இருப்பதற்காக தன் பயணத்தை மேற்கொண்டார். 

நமது வாழ்வில் பல நேரங்களில் நாமும் பல மனிதர்களை தேடுகிறோம். நாம் தேடுகிற மனிதர்களை எதன் அடிப்படையில் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்?  நாம் நலன்களைப் பெற வேண்டும், உதவிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலா? அல்லது நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலா? 

         எந்த அடிப்படையில் நாம் அனுதினமும் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்தபோது வாழ்த்தினார்.  அவரின் வாழ்த்துச் செய்தி எலிசபெத்தம்மாளின் வயிற்றிலிருந்த குழந்தையை மகிழ்ச்சியால் துள்ளச் செய்தது. நாமும் அனுதினமும் பல மனிதர்களை சந்திக்கிறோம்.  நமது வார்த்தைகளால்  எத்தனை மனிதர்களை ஊக்கமூட்டுகிறோம்? மகிழ்ச்சிப்படுத்துகிறோம்? என்ற கேள்வியை இன்று நமக்குள்ள எழுப்பிப் பார்ப்போம்.

          அடுத்தவரின் துயரத்தை துடைப்பதற்காகவும், 
அவர்கள் நலனுக்காக அடுத்தவரை நாம் தேடிச் செல்லவும்,  நமது வார்த்தைகள் மூலமாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், ஊக்கமூட்டவும், இறைவனிடத்தில் அருள்வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.

ஞாயிறு, 29 மே, 2022

துனிவோடு தொடர் பயணம்....(30.5.2022)

துனிவோடு தொடர் பயணம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்களை வாசிக்கின்ற போது துன்பம் துன்பமா?  என்ற கேள்விதான் உள்ளத்தில் எழுகிறது. 

வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம், துன்பங்களிலிருந்து நாம் வாழ்வுக்கான பாடம் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் துன்பம் துன்பமா? என அலசிப் பார்க்கும்போது, துன்பங்கள் வாழ்வுக்கான வழி முறைகளை கற்பிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  நமது வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பங்கள் எல்லாம்,  நமக்கு ஏதோ ஒரு  வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கின்றன. இயேசுவும் தனது வாழ்வில் துன்பத்தின் வாயிலாகவே மீட்பை உலகிற்கு கொண்டு வந்தார்.

               நாம் நமது வாழ்வில் துன்பம் வரும் போதெல்லாம் துவண்டுவிடாமல் ஆண்டவர்மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய்,  தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எல்லாம் எளிதாகவே இருக்கும் என்பதல்ல,  இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் இயேசுவைப் போலவே பலவிதமான இன்னல்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடலாம். சந்தித்தாலும் அதிலிருந்து வாழ்விற்கான பாடத்தை கற்றுக் கொண்டவர்களய்,  இயேசுவின் சீடர்களாய் திகழ முடியும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். 

               இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை புரிந்து கொண்டு, வாழ்வில் துன்பங்களை சந்திக்க நேரிடும் போதெல்லாம், இந்த துன்பங்கள் நம்மை விட்டு கடந்து போகும் என்பதை மனதில் இருத்தியவர்களாய், தொடர்ந்து பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

சனி, 28 மே, 2022

விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்வோம்...(29.5.2022)

விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்வோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
                          இன்று தாய்த் திருஅவையாக இணைந்து நாம் அனைவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி  மகிழ்கின்றேன். 

ஓர் ஊரிலே ஒரு கணவனும், ஒரு மனைவியும்! அவர்கள் வாழ்க்கையில் திருமணம் ஆன நாளிலிருந்து சண்டையும் சச்சரவும் போரும் பூசலும் !

கணவர் வடக்கு வடக்கு என்றால் மனைவி தெற்கு தெற்கு என்பார்! காலச் சக்கரம் சுழன்றது! இருவருக்கும் வயதாகி விட்டது! கணவருக்கு 90 வயதும், மனைவிக்கு 85 வயதும் இருக்கும். ஆனால் சண்டை ஓயவில்லை !

ஒரு நாள் இரவு வீடு முழுவதும் வெளிச்சம். வானதூதர் ஒருவர் அந்த தாத்தா, பாட்டியின் முன்னால் நின்றார்.

அவர் அந்தத் தம்பதியரைப் பார்த்து, உங்களில் யாராவது ஒருவரை விண்ணகத்திற்கு அழைத்துப் போக வந்திருக்கின்றேன். உங்கள் இருவரில் யாருக்கு என்னோடு வர ஆசை? என்றார்.

உடனே தாத்தா, இவளை அழைத்துச் செல்லுங்கள் என்றார். பாட்டியோ. இல்லை, இல்லை இவரை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

வானதூதருக்கு ஆச்சரியம்! அவர்களைப் பார்த்து, இப்படி அன்பு செய்யும் கணவன், மனைவியை இதுவரை நான் பார்த்ததே இல்லை ! என்றார்.

அதற்கு தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! இவள் இல்லாத இடமே எனக்கு மோட்சம் என்றார்.

பாட்டியும், இந்தக் கிழவன் இல்லாத இடமே எனக்கு மோட்சம் என்றார்.

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அவர்கள் கூறிய இந்தக்கதை ஒரு வேடிக்கையான  ஒரு விளையாட்டான கதையாக இருக்கலாம்! ஆனால் மோட்சம் என்பது, விண்ணகம் என்பது துன்ப துயரங்கள், சோதனைகள், வேதனைகள் இல்லாத இடம், நிலை என்பது நமக்குப் புரிகின்றது.

     ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக இம்மண்ணில் பிறந்தார். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு வாழ்ந்து காட்டினார்.  பலரின் சூழ்ச்சியால் அவர் மரணத்தை சந்தித்தார். மரணத்திற்குப் பிறகாக முதன் முதலில் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தவரும் இவரே.  இந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் உடனடியாக விண்ணகம் செல்லவில்லை. 

                      40 நாட்களாக சீடர்களோடு இருந்து,   அவர்களை ஆற்றல்படுத்தி, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய நபராக இருந்தார். பல நேரங்களில் சீடர்கள், இயேசு உயிர்த்தாரா? இல்லையா? என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்த போதெல்லாம்,  அவர்கள் முன்னிலையில் தோன்றி, அவர்களோடு உடன் நடந்து, இறைவார்த்தையை விளக்கிக் கூறி, அவர்களோடு அமர்ந்து உணவு உண்டு,  தான் மெய்யாக உயிர்த்தார் என்பதை வெளிக்காட்டக் கூடியவராக இயேசு இருந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த இயேசு கிறிஸ்து நம்மை விட்டு பிரிந்து செல்வதற்கு முன்பாக, "உங்களோடு எப்போதும் இருப்பதற்கு ஒரு துணையாளரைத் தருவேன்.  அவரை கொண்டு நீங்கள் என் வார்த்தைகளின்படி உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியவராய், துணையாளராம் தூய ஆவியாரை நமக்காக பொழிந்தருளி அவர் விண்ணேற்றம் அடைந்தார். 

             ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பைக் கொண்டாடுகிற நாம், இந்த விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, விண்ணில் என்ன செய்கின்றார்? என்ற கேள்வி நமது உள்ளத்தில் எழலாம். 

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: கிறிஸ்து விண்ணகம் நுழைந்து நம் கடவுளின் முன் நிற்கிறார். எனவே உறுதியான நம்பிக்கையுடன் அவரை அணுகிச் செல்லவேண்டும். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி 10:22-23).


விண்ணகம் சென்ற அவர் நமக்காக தொடர்ந்து இறைவனிடத்தில் பரிந்து பேசி கொண்டிருக்கிறார்.

நாம் பாவம் செய்தாலும் நமக்காகத் தந்தையிடம் கிறிஸ்து பரிந்து பேசுகிறார் (1 யோவா 2:1). கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுவதற்காகவே உயிர் வாழ்கிறார் என எபிரேயர் திருமுகம் கூறுகிறது (எபி 7:25)

 விண்ணகத்திலிருந்து நமக்காக பரிந்து பேசுகின்ற இந்த இறைவனுடைய வார்த்தைகளை பின்பற்றும் மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் வாழ அழைக்கப்படுகின்றோம். 

என்ன தான் இயேசு சீடர்களோடு இருந்து அவர்களை வலுப்படுத்தினாலும்,  திடப்படுத்தினாலும்,  அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்பித்து இருந்தாலும், இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய மனிதர்களாகத்தான் இருந்தார்களே ஒழிய,  அவர்கள் செயலில் ஈடுபட தயங்கினார்கள். 

                     அப்போது தான் வானதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?  நீங்கள் நடந்ததைக்  கண்டீர்கள் அல்லவா?  நீங்களே அதற்கு சாட்சிகளாக மாறுங்கள் எனக் கூறி,  இயேசுவின் சீடர்களை வலுப்படுத்துகிறார்கள், உறுதியூட்டுகிறார்கள். 

               இயேசுவின் சீடர்களும் தமது வாழ்வை, தாங்கள் கண்ட அனைத்தையும்  அடுத்தவரோடு பகிர்ந்து,  இயேசுவின் பணியை செய்யும் சீடர்களாக , சாட்சிகளாக இந்த மண்ணில் மாறிப்போனார்கள்.  இந்த சாட்சிகளைப் பின்பற்றி வாழும் நாமும் இந்த இயேசுவுக்கு சாட்சிகளாக மாறிட  இன்று  அழைக்கப்படுகின்றோம். 

            ஆலயத்திற்கு  வந்து அவரது திருப்பலியில் இன்று கலந்து கொண்டோம். திருவிருந்தில் பங்கெடுத்தோம்.  திருவிருந்து மன்றாட்டு  சொல்லப்பட்ட பிறகு,  அனைத்தும் முடிவடைந்தது என்ற மனநிலையோடு நம்மில் பலர் பல நேரங்களில் கடந்து செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,  நம்மை அவரின் பிள்ளைகளாக மாற்றிட அழைப்பு தருகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, நாம் எப்படி வாழவேண்டும் என கற்பித்தாரோ,  அதன் அடிப்படையில் நமது வாழ்வை  அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த இறைவனின் விருப்பம். 

                    விண்ணகம் என்பது வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள் வாழும் இடம்! அவர்கள், ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென் (திவெ 7:12) என்று பாடிக்கொண்டிருப்பார்கள்!

அவர்கள் அனைவரும் தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள் (திவெ 7:14). வானுலகில் யாருக்கும் எந்தத் துன்பமும் இருக்காது (திவெ 7:16-17).

இந்த விண்ணகத்தை நாம் நமதாக்கிக்கொள்ள இறைவனின் திருவுளத்தை அறிந்தவர்களாய்,  ஆண்டவர் இயேசுவைப் போல வாழ முயல்வோம். 
ஆண்டவர் இயேசு கற்பித்த வாழ்வுக்கான நெறிகளை அடுத்தவரோடு பகிர்வோம்.  அப்படி பகிர்வதன் மூலமாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பிலும் உயிர்ப்பிலும் பங்குபெற்ற நாம்,   இயேசுவோடு இணைந்து,  பரிந்து பேசக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் அருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக பக்தியோடு செபிப்போம்.

வெள்ளி, 27 மே, 2022

Encourage our Neighbours ...

Encourage our Neighbours ...

Dear brothers and sisters in christ Jesus,  I'm very happy to share my thoughts on today's word of God. 

In the first reading we heard that st. Paul prepares and encourages his disciples to preach jesus and about Jesus boldly. One of them named Appolos had been instructed in the way of the Lord; and being filled with spirit, he spoke and taught accurately the things concerning Jesus. 

The same way in the gospel Jesus tells and encourages us that you ask God in my name and you will receive it. 

The words of Jesus and the words of St. Paul give us strength to involve in the ministry of preaching the word of God in faith. In this world there is shortage for not only food and love but also for encouraging others with whole heart. So today let's decide to join hands with encouraging God to encourage our neighbours and friends etc.... to lead their life in the light Christ's word and relate with God always in love. For this grace let's pray in the rest of the Holy Mass.

Are we with God always ?....

Are we with God always ?....


Dear brothers and sister….. in today's first reading Jesus said to st. paul that Don't be afraid,  I am with you…. I would like to share my thoughts regarding this word of God 

The great leader Abraham lingan was going to take charge as the president of America …. That time his close friend said him. Lingan God is with you….that's why you got so many victories in your life…. But lingan replaied to his friend…. You are right…God is with me always….but i have a question within mysel that am i with God?…. Like lingan, let us ask the same question to ourselves that Are we with God ways ?

Whether we like or do not like, God is with us always but are we with Him is the biggest question today in our life. But one thing is sure that When we start to be with God, our life will be filled with blessings and joy and no one can take away the blessings, joy and happiness of our life …. 

So let us try, try ,try and be with God at all the time… 
for this grace we pray to God in this holy mass. God may bless us well today...

Sorrows will be Turned into Joy.

Sorrows will be Turned into Joy. 


INTRO

Dear brothers and sisters in Jesus christ, let us thank God for He has given us a new day. And let's all pray in this Holy Mass for God may use us as his fine instrument to do good for others in many ways. Along with this intention let's also put forth our personal intentions and pray.


Dear brothers and sisters, when suffering comes, there comes loss of faith. But Today's liturgy of the word emphasizes that we should be deeply firm in the faith of christ whenever we face suffering in our life.

We read in the scripture that all your suffering and sorrows will be turned into joy. So we need to keep in our mind that God never allows problems and sufferings more than our capacity. They may be a little burden but never be unsolved.

So let's belive that the God who took care of the Israelite in many sufferings, will love and care for us too always. With this hope and trust in God let's continue to pray and God may bless us all.


ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாகிட....(27.5.2022)

ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாகிட....

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாளில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தன்னுடன் எழுந்தவுடன் உழைப்பாளர்களை ஊக்கமூட்டி இறைவனின் நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களை தகுதி படுத்துவது குறித்து நாம் வாசிக்க கேட்டோம் ...

அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் தந்தையிடம் கேளுங்கள் நீங்கள் கேட்பதை அவர் உங்களுக்கு தருவார் என ஊக்கமூட்டும்வதையும் நாம் வாசிக்கின்றோம். 

ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளும் புனித பவுலின் வார்த்தைகளும் இறைவனோடு உறவாட இறைவனது வார்த்தைகளை இதயத்தில் இருத்தி நம்பிக்கையோடு இறைவார்த்தையை அறிவிக்கும் பணியில் ஈடுபட நமக்கு ஊக்கம் தருகிறது இன்று நாம் வாழும் உலகத்தில் பற்றாக்குறையை நிலவுவது உணவுக்காகவும் அன்புக்காகவும் மட்டுமல்ல ஊக்கமூட்டும் தடுக்கும் என்ற பற்றாக்குறை நிலவுகிறது. இன்றைய நாளில் நாம் சந்திக்கும் மனிதர்களை ஊக்கமூட்டும் இறைவனோடு அவர்கள் உறவில் வளரவும் இறைவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாக நாம் இன்றைய நாளில் செயல்பட இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலியில் ஜெபிப்போம்

வியாழன், 26 மே, 2022

இறைவனோடு நாம் இணைந்திருக்க...(27.5.2022)

இறைவனோடு  நாம் இணைந்திருக்க...

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பார்த்து இயேசு அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றார் இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சீர் தூக்கி பார்க்க என்று அழைக்கப்படுகின்றோம் ....

பலவிதமான எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் சாதனை புரிந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற போது நிகழ்வுக்கு வருகை தந்த அவரது அன்பு நண்பர் அவரை பார்த்து சொன்னார்.  கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் ஒவ்வொரு நாளும் உனது பெயரும் புகழும் வளர்ந்துகொண்டே செல்கிறது என்றார் அவர் கூறியதைக் கேட்டதும் ஆபிரகாம் லிங்கன் உடனடியாக அவரை நோக்கி கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அந்த இறைவனோடு நான் இணைந்து இருக்கின்றன என்பதுதான் எனக்குள் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி என்றாராம் என்று நாமும் அதே கேள்வியை நமக்குள் ஆக எழுப்பி பார்ப்போம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு இருந்து வழிநடத்துகின்ற இறைவனோடு நாம் இணைந்து இருக்கின்றோமா அவரோடு நாம் இணைந்து இருக்கின்ற போது நாம் மகிழ்வின் மக்களாக மாறமுடியும் நம்மிடமிருந்து நமது மகிழ்ச்சியை எவரும் எடுத்துக்கொள்ள இயலாது என இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எடுத்துரைக்கிறார் நாம் மகிழ்ச்சியில் மக்களாக இருக்க வேண்டுமாயின்  எப்போதும் நம்மோடு இருக்கின்ற இறைவனோடு  நாம் இணைந்திருக்க இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம் ....

புதன், 25 மே, 2022

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்...(26.5.2022)

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே துன்பம் வருகிற போது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் தளர்வு ஏற்படுகிறது ..... வாழ்வில் துன்பங்களை சந்திக்க போதெல்லாம் நாம் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன .

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என இறைவன் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.     வாழ்வில் துன்பம் வருகிற போதெல்லாம் இதயத்தில் நாம் திருத்திக் கொள்வோம் நம்மால் தாங்க முடியாத எந்த துயரத்தையும் இறைவன் நமது வாழ்வில் அனுமதிப்பதில்லை.

இதுநாள் வரை நாம் நமது வாழ்வில் சந்தித்த துன்பங்களில் இருந்து நம்மை காக்க இறைவன் இனி வருகின்ற நாட்களிலும் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்

திங்கள், 23 மே, 2022

நன்றியின் மக்களாக....(24.5.2022)

நன்றியின் மக்களாக....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      இன்பமும் துன்பமும் கலந்த மனித வாழ்வில் எது எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் மாறி மாறி அனுமதிக்கிறார் என்பதை நாம் ஆழமாக உணர்ந்து இருக்கிறோம்.  இவ்வார்த்தைகளின் அடிப்படையிலேயே இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் அமைந்திருப்பதை நாம் உணரமுடிகிறது.  ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததன் காரணமாக,  பவுலும் பர்னபாவும்
 பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதையும்,  அதே சமயம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கின்ற காரணத்தினால் காவலர் ஒருவர் மனமாற்றம் அடைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்வதை பற்றியும், இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது.

      அது போல  நம்மோடு எப்போதும் இருக்கின்ற இறைவன் இயேசு கிறிஸ்து இறந்து உயிர்ப்புக்குப் பிறகாக விண்ணகம் செல்லுகின்ற நிகழ்வு, சீடர்களுக்கு துன்பத்தை வருவிப்பதாக இருந்தாலும்,  அவர்களின் துன்பத்தை போக்கும் வகையில் உங்களோடு எப்போதும் இருக்கும் வண்ணம் நான் ஒரு துணையாளரை உங்களுக்குத் தருவேன் என இயேசு கூறக்கூடிய வார்த்தைகள், மகிழ்வினை தரக்கூடியதாகவும் அமைகிறது.

 இவ்வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை இணைத்து பார்க்கிற போது, இன்பம் துன்பம் இரண்டும் இருக்கின்ற நமது வாழ்வில்,  துன்ப நேரங்களில் துவண்டு போகின்ற நாம், இன்ப நேரங்களில் இறைவனைத் தேட மறுக்கின்றோம்.  இன்பம் துன்பம் என்ற இரண்டு நிலையிலும் நாம், ஒரே மனநிலை கொண்டவர்களாய், இறைவனின் பெயரால் அனைத்தையும் ஏற்கத் துணிந்தவர்களாய் இருக்க , இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
1 தெசலோனிக்கர் 5: 16-18

                          என்ற இறைவார்த்தைக்கேற்ப அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  இன்பம் துன்பம் இரண்டையும் அனுமதிக்கும் இறைவன், எல்லா நேரத்திலும் நம்மை உடனிருந்து காத்து வழிநடத்துவார்.  துன்ப நேரத்தில் துன்பத்தைக் கடந்து செல்வதற்கான ஆற்றலையும் வழிகளையும் கற்பிப்பார் என்ற மனநிலையோடு, எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறக் கூடிய மக்களாக நாம் இருக்க இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

வியாழன், 19 மே, 2022

நம்பிக்கைக்குரிய நண்பர்களாக...(20.5.2022)

நம்பிக்கைக்குரிய நண்பர்களாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஊரும் சதமல்ல!
 உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல! 
பெண்டீர் சதமல்ல!
 பிள்ளை சதமல்ல!
சீரும் சதமல்ல!
 செல்வமும் சதமல்ல! -நின் தேசத்திலே யாதும் சதமல்ல! ஒன்றை சதம் - அது கச்சியேகம்பனே!

 பட்டினத்தாரின் இப்பாடலுக்கான விளக்கம்: ஊரும் நிரந்தரமல்ல. உற்றாரும் நிரந்தரமல்ல. உற்றுப் பெற்ற பேரும் நிரந்தரமல்ல. கட்டிய மனைவி, கொண்டு வந்த சீர், பெற்ற பிள்ளை என எதுவும் இந்த உலகத்தில் நிரந்தரம் அல்ல. ஆனால் ஒன்றே ஒன்று நிரந்தரம், அது இந்த இறைவன் ஒருவன் மட்டுமே.  இந்த இறைவன் நம்மை பணியாளர்கள் என அழைக்க மாட்டேன், உங்களை நான் நண்பர்கள் என அழைப்பேன் என்று கூறினார். ஏன் இவர் நம்மை பணியாளர் என அழைக்கவில்லை?  என்ற கேள்வி உள்ளத்தில் எழுகின்ற போது, தொடக்க காலத்தில் இறைவாக்கினர்கள் அனைவரும் தங்களை கடவுளின் ஊழியர்களாக கருதினர்.

 ஊழியர் என்றால் பணியாளர் என்ற அர்த்தம்.  பணியாளர் என்ற வார்த்தைக்கு அடிமைகள் எனவும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இணைச்சட்ட நூல் 34வது அதிகாரத்தில் நாம் வாசிப்போமாயின், மோசே தன்னை கடவுளின் ஊழியர் எனப் பதிவு செய்துள்ளார்.  யோசுவா புத்தகம் 24ஆம் அதிகாரத்தில் நூனின் மகனாகிய ஆண்டவரின் ஊழியனாகிய யோசுவா என, யோசுவா தன்னை அடையாளப்படுத்துகிறார். திருப்பாடல் 89ல் கூட, தன்னுடைய ஊழியன் தாவீதை நான் கண்டு கொண்டேன் என தாவீதும் கடவுளின் ஊழியன் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. 

 ஏன், புதிய ஏற்பாட்டு லூக்கா நற்செய்தி 1ம் அதிகாரம் 38ம் வசனத்தில் அன்னைமரியா ஆண்டவரின் கட்டளைக்கு இணங்கியவராய்,  தன்னை முழுவதும் கையளித்து,  நான் ஆண்டவரின் அடிமை எனக் கூறி தன்னை முழுவதுமாக இறைவனின் விருப்பத்திற்கு கையளிக்கிறார்.  இவ்வாறு தொடக்க காலத்தில் இருந்த கடவுளின் பணியாளர்கள் என்ற மனநிலையை மாற்றும் வகையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இனி உங்களை நான் பணியாளன் என அழைக்க மாட்டேன்.  உங்களை நான் நண்பர்கள் என அழைப்பேன்.  நண்பர்கள் என்கிற போது நான் செய்கின்ற அனைத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  என்னோடு சம உரிமை உங்களுக்கு உண்டு. எதையெல்லாம் நான் செய்கிறேனோ அதையெல்லாம் நீங்களும் செய்யமுடியும் என அவர்களுக்கு பாடம் கற்பித்து, நட்பிற்கு நல்லதொரு உதாரணமாக,  நட்பு, உயிரையும் கொடுக்கத் துணியும் என்பதை தனது வாழ்வால் நமக்கு வெளிக்காட்டிச் சென்றிருக்கிறார். 

 இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திக்கிற போது,  இன்றைய நாள் இறைவார்த்தை நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிற போது,   விபரம்  தெரிந்த நாளிலிருந்து இந்நாள் வரை ஒவ்வொருவருமே பலவிதமான நட்பு வட்டாரங்களை நமக்கென கொண்டிருப்போம்.  குழந்தையாக இருந்த போது, இளைஞனாக மாறிய போது, திருமணம் முடித்த போது, முதுமை அடைந்த போது என ஒவ்வொரு நிலையிலும் பல வகையான நண்பர்களை நமது வாழ்வில் சந்தித்திருப்போம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல உறவுகள் நம்மோடு வந்து பழகி, நமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்து நம்மை கடந்து சென்றிருப்பார்கள்.  அவர்களை எல்லாம் நன்றியோடு நினைவு கூரவும், அவர்களுக்காக செபிக்கவும், மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாட்களும் இந்த நட்பு உறவுகளோடு இணைந்து இருக்கவும்,  போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு என அனைத்தையும் கடந்தவர்களாய், நட்பால் அனைவரோடும் இணைந்திருக்க இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார். 

      இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நம்மை நண்பர் என அழைத்த இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக, உயிரை கொடுக்கக் கூடிய நண்பர்களாக மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

புதன், 18 மே, 2022

மகிழ்ச்சியின் தூதுவர்களாக மாறுவோம்..(19.5.2022)


மகிழ்ச்சியின் தூதுவர்களாக மாறுவோம்


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அழுகையோடு அகிலத்தை எட்டிப் பார்க்கும் நமக்கு, மகிழ்ச்சியைத் தருவதற்கு பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.  மகிழ்ச்சி என்பது மனித மனங்கள் விரும்பக்கூடிய ஒன்று.  இந்த மகிழ்ச்சியையே இறைவன் தருகிறார்.  நாம் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பமாக உள்ளது.  இந்த மகிழ்ச்சி அகிலத்தில் உள்ள அனைவரையும் அன்பு செய்வதன் வழியாக உதயமாகிறது என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு வெளிக்காட்டுகிறது. 

             மகிழ்வோடு இந்த சமூகத்தில் நாம் வாழ வேண்டுமாயின்,  நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும்; அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இறைவன் தருகின்ற மகிழ்ச்சியை அப்போது நாம் உணர்ந்துகொள்ள முடியும். 

 தொடக்க காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிற இனத்தார்கள், எப்படி எல்லாம் வாழ வேண்டும் என யூதர்கள் தாங்கள் பின்பற்றி வந்த சட்டத் திட்டங்களை அவர்கள் வாழ்வில் நுழைக்க முயன்ற போது,  இறைவன் விரும்புவது, வெளிப்புற அடையாளத்தை அல்ல,  உள்ளார்ந்த விசுவாசத்தையே என்பதை எடுத்துரைத்து, இறைவனை ஏற்பதற்கும், இறைவன் இயேசுவின் வழியில் நடப்பதற்கும், சட்டதிட்டங்கள் அவசியமல்ல; உண்மையான, உள்ளார்ந்த அன்பும், மகிழ்ச்சியுமே அவசியமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில்,  தொடக்க காலத்தில் அவ்வப்போது எழுந்த சிக்கல்களை எல்லாம் சீடர்கள் சரிசெய்து, மகிழ்வோடு ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழ வழிவகை செய்து கொடுத்தார்கள்.  இதையே இன்றைய வாசகங்கள்  வலியுறுத்துகின்றன.  

      நாம் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே,   இறைவன் இந்த உலகத்தை படைத்திருக்கிறார். கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் உற்று நோக்கினார்; அவை மிகவும் அழகாக இருந்தன, என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அழகாக படைக்கப்பட்ட
 இந்த உலகத்தில்,  நாம் அடுத்தவர் மகிழ்வில் இந்த உலகை இன்னும் அழகாக்கக் கூடிய மனிதர்களாக மாற இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். 

 மகிழ்ச்சியின் தூதுவர்களாக மாறுவோம்; பிறரை மகிழ்விப்போம்; நாமும் மகிழ்வோம்.   பிறரின் மகிழ்வில் இறைவனைக் கண்டு கொள்ள  இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செபிப்போம்.

செவ்வாய், 17 மே, 2022

இணைக்கும் முயற்சியில் ஈடுபட...(18.5.2022)

இணைக்கும் முயற்சியில் ஈடுபட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பது நம்மை கனிதரும் மரம் போல இந்த சமூகத்தில் சிறந்து விளங்க வைக்கும்.  கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.  நாம் கடவுளோடு இணைந்திருக்கிறோமா?  என்ற கேள்வியை  நமக்குள் எழுப்பிப் பார்ப்போம்.  கடவுளோடு இணைந்த வாழ்வே ஒரு அர்த்தமுள்ள வாழ்வு.  கடவுள் நமது வாழ்வில் நாம் அறியாத வகையில் பல நேரங்களில், பல வழிகளில், பல மனிதர்கள் வழியாக பலவிதமான நன்மைகளை மட்டுமே நமக்கு தந்து கொண்டிருக்கிறார்.  நன்மைகளை தருகின்ற இறைவனுக்கு நாம் தரும் கைமாறு என்ன? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். இறைவன் நம்மிடம் இருந்து மிகப் பெரிய காரியங்களை எதிர்பார்ப்பது இல்லை.  நாம் அவரோடு இணைந்திருப்பதை மட்டுமே விரும்புகிறார். பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நாம், ஆண்டவரோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என சிந்திப்போம்.  ஆண்டவரோடு நாம் நமது நிலையை உணர்ந்தவர்களாக நம்மை நாம் மாற்றிக் கொண்டு அவரோடு நாம் இணையும் பொழுது, கனி தரும் மரங்களாக மாறுகின்றோம். 

                 நம்மிடமிருந்து பலவிதமான பயன்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள துவங்குகிறார்கள். நாமாக எதையும் செய்யாவிட்டாலும் நம்மோடு இணைந்து இருக்கின்ற இறைவன் நம்மை பலருக்கு பயன் தரும் மனிதர்களாக மாற்றுகின்றார்.  இந்த உண்மையை உணர்ந்து கொண்டவர்களாக இறைவன் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து திராட்சை கொடியின் கிளைகளாக நாம் இருப்பதற்கு இந்த நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். 

                  பவுல் ஆண்டவர் இயேசுவை அறியாத மனிதராக இருந்தார். அறிந்த போது கடவுள் அவரை தன்னோடு இணைத்துக் கொண்டார்.  அவரை வைத்தே பலரும் பயன்பெறக்கூடிய வகையில் பலரும், இயேசுவை அறிந்து கொள்ளக்கூடிய வகையில், இயேசு காட்டிய அன்பு நெறியில் பயணம் செய்யக்கூடிய மனிதர்களை உருவாக்க திருவுளம் கொண்டார்.  பவுலின் வாழ்வு இத்தகைய வாழ்வாக அமைய  ஒரே காரணம் அவர் கடவுளோடு இணைந்திருந்தார் என்பது மட்டுமே. 

 இறைவனோடு இணைந்திருப்பதே இந்த அகிலத்தில் பல விதமான நன்மைகளை உருவாக்குவதற்கான வழி.  இறைவனோடு இணைய வேண்டுமாயின் நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டுமென விவாதிக்க தேவையில்லை. 

இன்றைய முதல் வாசகத்தில் கூட, இயேசுவை  ஏற்றுக்கொண்டவர்கள், விருத்தசேதனம் செய்ய வேண்டும்- செய்யாவிட்டாலும் பரவாயில்லை, என்ற கருத்து மோதல் எழுந்தது. இந்த பிரச்சினைக்கான தீர்வாக, திருத்தூதர்கள் கூறியது,   விருத்தசேதனம் செய்தாலும் செய்யாவிட்டாலும்,  நாம் கொள்ளுகின்ற நம்பிக்கையே நாம்  இறைவனோடு இணைந்து இருப்பதற்கான அடையாளம் என்பதை வெளிப்படுத்தினார்கள்.  நாம் இறைவனோடு இணைந்து இருப்பதற்கு நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. நாம் இறைவனோடு இணைந்திருப்பது மட்டுமே அவசியமான ஒன்று. இறைவனோடு இணைந்து இருக்க முயலுவோம். அவரோடு உரையாடுவோம். அவர் காட்டும் வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். 

     நாம் விரும்பாவிட்டாலும் நாம் இணைந்து இருக்கின்ற இறைவன், நம்மோடு இணைந்து இருக்கின்ற இறைவன், நம்மை, நம் மூலமாக இந்த சமூகத்தில் பலர் பயன் பெறக் கூடிய வகையில், பயன் தரும் மரங்களாக, நம்மை பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு நாம்  நமது வாழ்வை நகர்த்திட, நாம் நம்மை இறைவனோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

திங்கள், 16 மே, 2022

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"(17.5.2022)

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு தந்த முதல் வார்த்தை, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்பதாகும். அகிலத்தில் வாழும் அனைவருக்கும் இன்று தேவையான ஒன்று, அமைதி. பரபரப்பான இந்த உலகத்தில், பல பணிகளுக்கு மத்தியில் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கின்ற அனைத்து உள்ளங்களும் விரும்புவது இந்த அமைதி.  அனைத்தும் இருந்தும் அமைதி இல்லை என்றால் அங்கு நிம்மதி பிறக்காது. 

     அமைதிக்காகத் தான் அனைவருமே அனுதினமும் பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அமைதியைத் தேடி பல மலைகளுக்கு பயணம் செய்வோர் ஒருபுறமிருக்க, அடுத்தவருக்கு உதவுவதன் வழியாக அமைதியைப் பெற முடியும் என எண்ணுபவர்கள் பலர் இருக்க,  அன்றாட கடமைகளை சரிவர செய்வதால் அமைதியை கண்டுகொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு பலர் இருக்க, உலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே,  அமைதியை எப்படிப் பெறுவது என அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த அமைதியைத் தர  வல்லவராக,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கின்றார். "நான் உங்களுக்கு அமைதியை தருவேன்!" என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தை,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு வாழ்ந்து காண்பித்த
அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப,  நமது வாழ்வை அமைத்துக் கொள்வதன் வாயிலாக நாம் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இயேசு இன்றைய நாள் வாசகத்தின் வழியாக நமக்கு வலியுறுத்துகிறார். 

 ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அகிலத்திற்கு அறிவிக்கச் சென்ற பவுலும்  அவருடன் இருந்த உடன் உழைப்பாளர்களும் பலவிதமான இன்னல்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்கள்.  சந்தித்த போது அவர்கள் அமைதியை இழந்து விடவில்லை. அவர்கள் அமைதியை ஆண்டவரிடத்தில் தேடினார்கள். ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிப்பதில் தான் அமைதி இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினார்கள். எனவே அவர்கள் அமைதியைக் கண்டு கொண்டார்கள்.  நாமும் நமது வாழ்வில் அமைதியை நம்முடையதாக மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் ஆண்டவருடைய வார்த்தைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய்,  அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது எப்படி வாழ்ந்தாரோ,  அவரைப்போல நாமும் வாழ முற்படுவோம்.  அவர் காட்டிய வழியில் பயணம் செய்வோம். அமைதியை  நம்முடையதாக மாற்றிக்கொள்ள நம்மை இறைவனிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்க இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

ஞாயிறு, 15 மே, 2022

அன்புக் கட்டளை....(16.5.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

ஆண்டவர் தந்த அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு அதை தன் வாழ்வாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஒவ்வொருவருமே ஆண்டவரை அறிந்து கொள்ள முடியும்.  அன்புக் கட்டளையை தன் வாழ்வாக்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

 ஆண்டவரை அறிந்து கொள்ளவும், தன்னை வெளிப்படுத்தும் இறைவனை உணர்ந்து கொள்ளவும், நாம் அன்பை ஆடையாக அணிந்த மக்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.  அன்பால் அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழவும், அன்பால் அனைவரோடும் இணைந்து இருக்கவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  அன்பே அனைத்திற்கும் ஆணிவேர். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப அன்பில் அணை போட எவராலும் இயலாது என்பதை உணர்ந்தவர்களாய் கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதரையும் எந்தவித பாகுபாடும் வேறுபாடுமின்றி அன்பு செய்து வாழ, அந்த அன்பால் ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள, அந்த அன்பின் நிமித்தமாக ஆண்டவர் தம்மை வெளிப்படுத்துவதை உணர்ந்துகொள்ள, இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

சனி, 14 மே, 2022

அன்பே கட்டளை...(15.5.2022)

அன்பே கட்டளை...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒரு மனிதனின் இறப்பு இன்று வரை ஒவ்வொரு நாளும் பலரால் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதே மனிதனுடைய உயிர்ப்பு  இன்றுவரை பல இடங்களில் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. அது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு என்பதை நாம் ஒவ்வொருவருமே அறிந்திருக்கிறோம். ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவரை பின்தொடருகின்ற நாம் ஒவ்வொருவருமே,  பாஸ்கா  காலத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.  அந்த அடிப்படையில் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரமான இந்த நாளில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது நாம் பின்பற்ற வேண்டும் என நமக்கு கற்பித்த கட்டளைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது மனிதனை மனிதனாக மதித்து ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ கற்பித்தார்; தான் கற்பித்ததை தன் வாழ்வாக அமைத்துக் கொண்டார்.  அதன் விளைவாகத் தான் பலரின் சூழ்ச்சியால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். சிலுவையில் உயிர் விடும் தருணத்திலும் தன்னை  இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மன்னிக்கும் மனிதனாக இயேசு செயல்பட்டார்.  இந்த இயேசுவைப் பின்பற்றித் தான் பல மனிதர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறினார்கள்.  

    அவர்களுள் ஒருவரான பவுலை குறித்தே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது பயணத்தை தொடங்கியவர்.  ஆனால் இயேசு அவரை ஆட்கொண்டு, தன்னை பற்றிய நற்செய்தியை,  தான் கற்பித்த கட்டளைகளை, அகிலம் முழுவதும் உள்ள அனைவருக்கும் அறிவிப்பதற்கான கருவியாக அவரை மாற்றினார்.  பவுல் பல ஆயிரம் மைல்கள் தூரம் கடந்து சென்று ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே உண்மையான இறைவன்; அவர் நமக்காக இறந்தார்.  அவர் கற்பித்த கட்டளைகளின்படி நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என,  பல இடங்களுக்கு, பல மைல் தூரம் பயணம் செய்து கற்பித்தார்.

      பொதுவாக பவுல் நான்கு தூதுரைப் பயணங்களை மேற்கொண்டதாக விவிலியம் நமக்கு குறிப்பிடுகிறது.  ஒரு இடத்தில் இருந்து துவங்கி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேருவதை ஒரு தூதுரைப்  பயணமாக பார்க்கிறோம்.  இன்று பவுல் முதல் தூதுரை பயணத்தை நிறைவு செய்வதை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் தூதுரை பயணத்தின் போது பலவிதமான எதிர்ப்புகளையும் இடையூறுகளையும் இன்னல்களையும் பவுல் சந்திக்க நேர்ந்தது. 

 இயேசுவைப்பற்றி அறிவித்ததனால் சொந்த மக்களால் இகழ்ந்து தள்ளப்பட்டார்.  சொந்த மக்களால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளானார்.  ஆனால், அனைத்திற்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். 

 இன்னல்களுக்கு மத்தியிலும் எப்படி இந்த மனிதன் இந்த பணியை செய்ய முடிந்தது? என சந்திக்கின்ற போது அவர் தன் வாழ்வில் படுகின்ற அனைத்து துன்பங்களையும் இயேசுவின் சிலுவை மரணத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.  இயேசு சிலுவையில் பட்ட வேதனைகளை விட இவை ஒன்றும் மிகப்பெரிய வேதனைகள் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார்.  அந்த அடிப்படையில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்தையும் குப்பை எனக் கருதி உதறித் தள்ளியவராய்,  ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பை என உதறித் தள்ளிய   ஒரு மனிதனாய், இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை கற்பிப்பதில் முழுமூச்சோடு செயல்பட்டார். 

 அப்படி என்ன கட்டளைகளை அவர் கற்பித்தார் என சிந்திக்கின்ற போது, இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது, ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ கற்பித்தார். இயேசு கற்பித்த அந்தக் கட்டளையை தன் வாழ்வாக மாற்றிக்கொண்டு சக மனிதர்களை அன்பு செய்து, அனைவரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரக்கூடிய மனிதனாக செயல்பட்டார்.  ஒரு வேளை இந்த பவுலடியார் மட்டும் இல்லாது போயிருந்தால்,  இந்த கிறிஸ்தவ மதம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மதமாக மாறியிருக்கும். இவர் தான் புறவினத்தாரையும்  ஆண்டவருடைய மக்கள்; அவர்களுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உரியவர் என்பதை எடுத்துரைத்து அனைவரையும் கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்த்தார் என்பது வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு பாடம்.  இந்த பாடங்களை எல்லாம் மனதில் இருத்தியவர்களாய்,  ஒருவர் மற்றவரை அன்புசெய்து  பொதுவாகவே அறியாத நபர்களை விட, அறிந்த நபர்களால் தான் நாம் அதிகம் காயப்படுத்தப்படுகிறோம். பவுலும் சரி,  இயேசுவுடன் இருந்த சீடர்களும் சரி , 

நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக சென்ற இடங்களில் அவர்களை அறிந்து  வைத்திருந்தவர்கள் பல நேரங்களில் பல விதமான இடையூறுகளையும் இன்னல்களையும் தந்தார்கள். இந்த இடையூறுகளையும் இன்னல்களையும் சந்திக்கின்ற போதெல்லாம் திருத்தூதர்களும் சரி, தொடக்க கால கிறிஸ்தவர்களும் சரி,  தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் அவ்வப்போது தளர்ச்சியுறக் கூடியவர்களாக இருந்தார்கள்.  ஆனால் தளர்ச்சியுறுகிற நேரத்திலெல்லாம் ஆண்டவரின் வெளிப்பாடானது அவர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டே இருந்தது. 

 அந்த அடிப்படையில் தான் இன்றைய நாளின் இரண்டாம் வாசகம் அமைகிறது. இன்றைய நாளில் திருவெளிப்பாட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வாசகமானது,  புதிய விண்ணகமும், புதிய மண்ணகமும் கடவுளால் வழங்கப்படும் என்பதை வலியுறுத்துகிறது. 

         கடவுளின் ஆட்சி இவ்வுலகத்தில் கண்டிப்பாக ஒருநாள் நிலைநாட்டப்படும்.  அதற்கான கருவிகளாய் நாம் இருக்க வேண்டும் என்பதை,  காட்சிகள் வழியாக அவ்வப்போது இறைவன் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். இறைவன் வெளிப்படுத்தக்கூடிய இந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில்,  தளர்வுகளையும் சிக்கல்களையும் சந்திக்கின்ற நேரங்களில் எல்லாம் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொண்டவர்களாய் ஆண்டவர் இயேசு விதைத்த  அன்பினை அடிப்படையாகக் கொண்டு அன்பு பணியையே தங்களின் அறப்பணி என்பதை உணர்ந்தவர்களாய் சக மனிதர்களை அன்பு செய்யும் மனிதர்களாக இயேசுவின் சீடர்களும் தொடக்ககால கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். 


 இந்த இயேசுவும் இவ்வாறு தான் வாழ்ந்து காட்டினார்.  தன்னை சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட மனிதர்களையும் அவர் அன்பு செய்யக் கூடியவராக அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசக் கூடியவராக இயேசு இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

 இந்த இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும் தொடக்ககால கிறிஸ்தவர்களும் அப்படிப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள்.  நாம் காணுகின்ற ஒவ்வொரு மறைசாட்சியும் ஒவ்வொரு புனிதரின் வாழ்வும் நமக்கு வெளிப்படுத்துவது,  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய அன்பினை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதன் விளைவாக தங்கள் இன்னுயிரையும்  இழக்கத் துணிந்தார்கள். 

 அவர்களின் அந்தத் தியாகம் வலியுறுத்துவது, தங்களுக்கு முன்மாதிரியான இயேசு இத்தகைய அன்பின் அடிப்படையில் தன்னுயிரை தியாகம் செய்தார்.  நாமும் அவரைப் பின் தொடர்கிறோம்.  அவரைப் பின்தொடர்வதன் அடையாளமாக அந்த அன்பின் அடிப்படையில்,  தமது இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள்.  இன்று அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு இந்த சமூகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம்.  கிறிஸ்தவர்கள் என்றால் கையில் ஜெபமாலை வைத்திருப்பவர்கள்; விவிலியத்தை பிடித்து இருப்பவர்கள்; சிலுவையை பார்த்து தந்தை மகன் தூய ஆவியின் அடையாளம் வரையக் கூடியவர்கள் என்ற வெளிப்படையான அடையாளம் நமக்கு அவசியம் அல்ல. 

கிறிஸ்தவர்கள் என்றால், அன்பின் மறு உருவம். 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

 என்ற திருவள்ளுவரின் வார்த்தைக்கு இணங்க நல்லது செய்தாலும்,  தீயது செய்தாலும், காணுகின்ற மனிதர்களை எல்லாம் இறைவன் பார்த்த அதே பார்வையோடு உற்று நோக்கி,  ஒவ்வொருவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பது தான் இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்பதை உணர்ந்து கொள்வோம். 

திருச்சபை நாம் பின்பற்ற வேண்டுமென பல ஆயிரம் கட்டளைகளை தந்தாலும், அனைத்துக் கட்டளைகளுக்கும் அடிப்படையாக அமைவது, ஆண்டவர் இயேசு கொடுத்த அன்புக் கட்டளை மட்டுமே.  

                 இந்த அன்பு கட்டளையை வாழ்வின் இறுதி மூச்சு இருக்கும் வரை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ்கிற போது, நாமும் தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, இயேசுவைப் பின்பற்றிய சீடர்களைப் போல ஒரு சாட்சிய வாழ்வை இந்த சமூகத்தில் வாழ முடியும் என்பதை உணர்ந்தவர்களாக, அத்தகைய ஒரு வாழ்வை வாழுவதற்கான முயற்சிகளில் ஈடுபட,  இறைவன் அழைப்பு தருகின்றார். 

          நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவதன் வழியாக என் சீடர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

புதன், 11 மே, 2022

இருக்கின்றவர் நானே!(12.5.2022)



இருக்கின்றவர் நானே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "இருக்கின்றவர் நானே", என்று கூறுகிறார். நான் அனுப்பியவரை ஏற்றுக்கொள்ளுகிறவர் என்னை ஏற்றுக் கொள்கிறார், என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பிய தந்தையை ஏற்றுக்கொள்கிறார்  என்கிறார். 

இந்த உலகில் ஆண்டவரின் பணியை அன்புடன் ஆற்ற எத்தனையோ நபர்களை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார். நமக்கும் கூட அவரது இறையாட்சி பணிக்கு அழைப்பு தருகிறார். 

இந்த நாட்களில் சிறப்பாக இறை அழைத்தல் பணிக்காக தம்மை அர்ப்பணித்த பல்வேறு மறை மாவட்டங்கள் மற்றும் துறவற சபைகள் சார்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை இறைவன் சிறப்பாக தமது பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களுக்காக இன்றைய நாளில் சிறப்பாக செபிப்போம். 

உன்னை என்று பெயர் சொல்லி அழைத்ததும் நானே உன்னை திருநிலைப்படுத்தியதும் நானே என்று கூறும் ஆண்டவர், தமது ஆவியாரின் அருள் கொடைகளை அவர்கள் அனைவருக்கும் நிறைவாக வழங்கிடவும், அவர்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் அரணும் கோட்டையும் ஆக இருந்து அவர்களுக்கு நல்ல உடல் உள்ள நலன்களை தந்து அவர்களது பணி ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஆசீர்வதித்து வழிநடத்த செபிப்போம்.

நம் புதிய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் வழியாக ஆண்டவர் இயேசுவைக் கண்டு அவர்களோடு இணைந்து நாமும் தந்தை இறைவனை மாட்சிப்படுத்த, அவர்களின் பணிகளில் நாமும் உறுதுணையாக இருக்க, இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

செவ்வாய், 10 மே, 2022

இருளில் இராதபடி !(11.5.2022)

இருளில் இராதபடி !

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் கட்டளைகள் நிலை வாழ்வை அளிக்கின்றன என்பதையும், அதை கடைபிடிக்காதவருக்கு, அந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து நடக்காதவர்களுக்கு இறுதிநளில் தண்டனை தீர்ப்பு கிடைக்கும் என்பதையும் ஆண்டவர் இயேசு இன்று கூறுகிறார்.

ஆண்டவர் இயேசுவின் கட்டளைகள் நிலைவாழ்வு அளிக்கும். அவை இருளில் இராதபடி ஒவ்வொருவரையும் ஒளிக்கு அழைத்துச் செல்லும். ஒளி இருக்கின்ற இடத்தில் வாழ்வு துவங்கும். ஒளி இருக்கின்ற இடத்தில் நன்மைகள் மலரும். ஒளி இருக்கின்ற இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியை காண்பார்கள். இவ்வாறாக ஆண்டவரின் கட்டளைகள் இருக்குமிடத்தில் ஒளியும் மகிழ்ச்சியும் வாழ்வும் நிறைந்திருக்கும். 
ஆனால் ஒளியின் பாதையை அறிந்திருந்தும், அதில் நடக்காதவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தை தண்டனை தீர்ப்பை வழங்கும் என்று கூறுகிறார். அவர்கள் ஒளியை காணாதபடி இருளில் சென்று சேர்வார்கள் என்று குறிப்பிடுகிறார். 

நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.
யாக்கோபு 4:17

                                    என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப பிறருக்கு வாழ்வு கொடுக்க உதவிக்கரம் நீட்டுவோம். ஒளியின் மக்களாக வாழ்வோம். ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து நிலை வழ்வின் பாதையில் நடந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

சனி, 7 மே, 2022

தந்தையின் அரவணைப்பில்.....(8.5.2022)

தந்தையின்  அரவணைப்பில்.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பவுல் மற்றும் பர்னபா இவர்களின் நற்செய்தியை கேட்ட மக்கள் ஆண்டவரை ருசித்து பார்க்க ஆவல் கொண்டவர்களாய், மகிழ்ச்சியோடு அவர்களின் போதனைகளுக்கு செவிசாய்த்தார்கள். ஆனால் அங்கிருந்த யூதர்கள் அவர்களது போதனைகளை முன்னிட்டு பொறாமை அடைந்தவர்களாய்  சில வசதி படைத்த, பணம் படைத்த நபர்களை தூண்டிவிடடு பவுல் பர்னபாவிற்கு எதிராக பேசச் செய்தனர்.  பொறாமையின் அலைகள் வீசினாலும், ஆண்டவரின் பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற்றதை,  ஆண்டவரின் நற்செய்தி எங்கும் பரவியதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் மொழியையும் சார்ந்த மக்கள் ஆண்டவர் திருமுன் நிற்கின்றனர். இவர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட ஆண்டவரின் நற்செய்தியை கேட்டு அவரை ஆர்வத்தோடு பின்பற்றியவர்கள். ஆண்டவருக்கு எதிராக செயல்படுகின்ற நபர்களால் பெரும் இன்னல்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளானவர்கள்.
ஆனால் அவர்கள் இறுதிவரை மன உறுதியோடு அவர்களது நம்பிக்கையில் நிலைத்திருந்ததால், இன்று ஆண்டவரின் திருமுன் நிற்கும் பேறு பெற்றார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எனது ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன என்கிறார். நானும் தந்தையும் ஒன்றாக இருக்கிறோம். அதுபோலவே எனது ஆடுகளும் எனது குரலுக்கு செவிசாய்த்து அனைவரும் ஒன்றாக இருப்பர். அவர்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ, ஏழை பணக்காரன் என்றோ, வேறுபாடுகள் இருக்காது. தந்தையும் நானும் ஒன்றாய் இணைந்து இருப்பது போல,  எனது ஆடுகளாகிய மக்களும்,  அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் , தங்களிடையே இருக்கும் வேறுபாடுகளை களைந்து , உண்மையான அன்புடன் அனைவரையும் மதித்து ஏற்று வாழ்வர். இவர்களே மாட்சிமிகு ஆண்டவர் திருமுன் நிற்க தகுதி பெற்றவர்கள். 

எனவே இன்றைய நாளில் நாம் அனைவரும் இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டு இருக்கிறோம். நாம் வாழும் காலம் நிறைவு பெறும் பொழுது மீண்டும் அந்த இறைவனின் இடத்திற்கே செல்லவிருக்கிறோம். எனவே நாம் இந்த பூமியில் வாழ்கின்ற காலங்களில் ஆண்டவர் இயேசுவையும் , நம்மை சுற்றி வாழ்கின்ற அவரது மக்களையும் நிறை குறைகளோடு ஏற்று, மதித்து, ஆண்டவரின் இறைச்சாயலை அனைத்து மாந்தரிலும் கண்டு, அன்போடு இணைந்து செயல்பட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வெள்ளி, 6 மே, 2022

ஆவியை கொடுக்கும் வார்த்தைகள்!(7.5.2022)

ஆவியை கொடுக்கும் வார்த்தைகள்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு வாழ்வு தரும் உணவாகிய நற்கருணை பற்றியும், தனது திரு இரத்தத்தை பற்றியும் நம்மேல் அவர் கொண்டிருக்கும் அன்பு பற்றியும் இந்த நாட்களில் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். 

இன்றைய வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ளாத சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர். 
ஆண்டவராம் இயேசுவின்  இறைத் திருவுளம் எதுவென புரிந்துகொள்ள இயலாமல் தங்களது முணுமுணுப்புகளில் மூழ்கி போனவர்களாய் தமது சுய அறிவை மட்டுமே சார்ந்தவர்களாக இன்று ஆண்டவர் இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள். 

ஆனால்,

உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
திருப்பாடல்கள் 119:103

என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கேற்ப,

ஆண்டவரின் வார்த்தைகள் ஆவியும் உயிருமாகும். ஆண்டவரின் வார்த்தைகள் நம்பத்நக்கவை என்பதை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோம். ஆண்டவரின் வார்த்தைகள் நமது அன்றாட வாழ்வில் நாம் செல்ல வேண்டிய பாலை நிலப்பயணத்தையும், நாம் மேற்கொள்ள இருக்கின்ற ஒவ்வொரு புதிய காரியத்தையும் ஆண்டவரின் திருப்பாதம் அர்ப்பணிப்போம்.
ஆண்டவரின் திருவுளம் என்ன என்பதை கேட்டு உணர்ந்து கொள்ளக்கூடிய, அதனை மன உறுதியோடு செயல்படுத்தக் 
கூடிய இறையருள் வேண்டி இன்றைய திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வியாழன், 5 மே, 2022

அனைவரும் வாழ்வு பெற!(6.5.2022)

அனைவரும் வாழ்வு பெற!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு தனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் உண்மையில் வாழ்வு பெறுவர் என்கிறார். 
ஆண்டவரது உடலும் இரத்தமும் அனைவருக்கும் வாழ்வு தரும் என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்திலும் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டு வந்த பவுல் ஆண்டவர் இயேசுவை சந்தித்த பின்பாக மூன்று நாள் உணவு உண்ணாமல் இருப்பதையும்  தான் இழந்து போயிருந்த வாழ்வின் ஒளியை பெற்றுக் கொள்ள  ஆண்டவர் இயேசுவை  அவர் மீண்டுமாக  சந்திக்க வேண்டும் என ஆண்டவருக்காக காத்திருப்பதையும் நாம் வாசிக்கிறோம். 

இன்று ஆண்டவர் இயேசு இந்த உலகில் அனைவருக்கும் வாழ்வு தந்து கொண்டிருக்கிறார். அன்று அவரது உடலையும் இரத்தத்தையும் உணவாக வழங்கிய ஆண்டவர் இன்றும் கூட பல்வேறு நபர்களுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு தேவைகளில் நம் ஆண்டவர் இயேசுவை போல நமது உடலையும் இரத்தத்தையும் உணவாக வழங்கிட அழைப்பு தருகின்றார். 

இன்று இரத்த தானம் என்பது உயிரை காக்கின்ற தானமாக இருக்கின்றது. நமது இரத்தம் பல்வேறு நபர்களின் உயிரையும் வாழ்வையும் காப்பாற்ற கூடியதாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக அவரைப்போல நாமும் தேவையில் இருப்போருக்கு நமது ரத்தத்தை தானமாக வழங்கி வாழ்வு கொடுக்க நல் மனம் கொண்டு இரத்த தானம் வழங்கி பிறருக்கு வாழ்வு தரக் கூடியவர்களாக மாறிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

புதன், 4 மே, 2022

கடவுள்தாமே கற்றுத் தருவார்!...(5.5.2022)

கடவுள்தாமே கற்றுத் தருவார்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் எத்தியோப்பிய நிதி அமைச்சர் கந்தகி எசாயாவின் இறைவாக்கு நூலை ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அது முழுமையாக விளங்காவிட்டாலும் ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைய நாள் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கடவுள் தாமே கற்றுத் தருவார் என்று கூறுகிறார். மேலும் என் தந்தை ஈர்த்தாலொழிய என்னிடம் வர இயலாது என்கிறார். 

ஆண்டவர் இயேசு இவ்வாறு கூறுவதன் வழியாக, ஆண்டவரையும் அவரது காரியங்களையும் ஆர்வத்தோடு தேடுகிறவர்களுக்கு கடவுள் தாமே  அனைத்தையும் கற்றுத் தருவார் என அமைச்சர் கந்தகியின் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாக நமக்கு வெளிப்படுத்துகிறார்.

 அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33

என்ற இறைவார்த்தையின் வழியாக இறைவனுக்கு ஏற்புடைய காரியங்களை  செய்பவர்களாக நாம்  இருக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு தருகிறார். எனவே இன்றைய நாளில் நாம் முன்னெடுக்கின்ற காரியங்களில் இறைவனது விருப்பத்தையும் அறிந்து அதற்கேற்ற வகையில்  செயல்பட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம் .

செவ்வாய், 3 மே, 2022

தணியாத தாகம் .(4.5.2022)

தணியாத தாகம் .

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறைவார்த்தையில் ஆண்டவர் இயேசுவிடம் வருபவருக்கு பசியே இராது, என்றுமே தாகம் இராது என்று கூறுகிறார். தன்னையே உணவாக தந்த ஆண்டவர், இன்று நாம் அவரிடம் நம்பிக்கை கொள்ளவும் அவரை நாடி வரவும் சிறப்பான அழைப்பினை தருகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பு சமாரியப் பகுதியில் நற்செய்தி அறிவித்ததை கேட்டு மக்கள் செவிசய்த்து ஆண்டவரை தமது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டபோது அவர்களை பிடித்திருந்த தீய ஆவியிடமிருந்து அன்று விடுதலை பெற்றனர். உடல் ஊனத்தாலும் முடக்குவாதத்தாலும் தம்மையே முடக்கிக் கொண்டிருந்த மக்கள், நான் என்றாவது ஒருநாள் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற மாட்டேனா? 

எனக்கும் மற்றவருக்கும் ஆன காரியங்களை என்னால் செய்ய இயலாதா? 

இறைவன் என்னை இந்த உலகில் படைத்ததன் நோக்கத்தை நிறைவேற்ற நான் எழுந்து நடக்க மாட்டேனா?  
என்று வாழ்வுக்கான ஏக்கமும் தாகமும் கொண்டிருந்த மக்களுக்கு அன்று பிலிப்பு அறிவித்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தி அவர்களுக்கு விடுதலை அளித்தது. அவர்களுக்கு வாழ்வை வழங்கியது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறினர். 

எனவேதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று. ஆண்டவர் இயேசுவின் பெயரும் அவருடைய வார்த்தையும் எப்பொழுதும் விடுதலையை வழங்கும் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், உண்மையான வாழ்வாகிய ஆண்டவர் இயேசுவை நமது வாழ்வின் மையமாக்கிட அவரது வார்த்தையால் வாழ்வு பெற, நாம் அவருக்கு செவிசாய்க்கக் கூடியவர்களாய், நமது இதயத்தின் செவிகளை ஆண்டவர் பால் திருப்பவும், அவருக்கு செவிகொடுத்து அவர் காட்டும் பாதையில் வழிநடக்கவும் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

திங்கள், 2 மே, 2022

இயேசுவின் பெயரால் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வோம்...(3.5.2022)

இயேசுவின் பெயரால் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு இன்றைய வாசகத்தின் வழியாக, அன்று தம் சீடர்களோடு உரையாடியது போல இன்று நம்மோடும் உரையாடுகிறார்.
தந்தையும் நானும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னைக் கண்டவன் தந்தையை காண்கிறான்  என்று கூறுகிறார். 

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னை விட பெரியவற்றை செய்வார் என்று இயேசு கூறுவதன் வழியாக, இன்று இயேசு நமது நம்பிக்கையில் ஆழப்பட, உறுதி கொள்ள,  நம்மை அழைக்கிறார். 

உண்மையில் இயேசு ஆண்டவரை விட பெரியவர் இந்த உலகத்தில் நிச்சயமில்லை என்பது நாம் அறிந்ததே.  ஆயினும் அவரில் உண்மையான நம்பிக்கை கொண்டவர் அவரை விட பெரிய காரியங்களை செய்வார் என்று இயேசு கூறுவதன் வழியாக,  இந்த உலகில் ஆண்டவரின் பணி இன்னும் அதிகமதிகமாக, அவர் வாழ்ந்த காலத்தை விட இன்றைய நாட்களில் அதிகம் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை ஆண்டவர் இயேசு நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று கூறுவதன் வழியாக, ஆண்டவரின் வழியாக செய்யப்படுகின்ற காரியங்கள் நிறைவான ஆசீர்  பெறும் என்பதையும், இதையே "என் பெயரால் நீங்கள் கேட்பதையெல்லாம் தந்தை உங்களுக்கு அருள்வார்" என்று ஆண்டவர் கூறுகிறார். 

எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் வல்லமையை பெற்றுக்கொண்ட சீடர்கள் தூய ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சீடர்கள், ஆண்டவர் இயேசுவின் பணியை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் எதிர்வருகின்ற தடைகளையெல்லாம் வென்று அவரது பணிகளை இம்மண்ணில் ஆற்றியது போல, நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் தூய ஆவியாரின் வல்லமையை ஆண்டவரிடம் கேட்போம். அவரது அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொண்டு அவரின் சாட்சிகளாக இம்மண்ணில் அவரின் பணியை செய்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 1 மே, 2022

நிலை வாழ்வு தரும் உணவு எது?(2.5.2022)

நிலை வாழ்வு தரும் உணவு எது?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

உணவு- அது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஒருவர் உணவை உண்ணுகின்ற பழக்கமானது , அவரது வாழ்வின் பண்புகளையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகினில் எதை உண்போம்? எதைக் குடிப்போம்? என்று கவலை கொள்ள வேண்டாம்.  உங்கள் தேவை என்ன என்பதை உங்கள் வானகத் தந்தை அறிந்திருக்கிறார். எனவே அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். மாறாக நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள் என்று ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்மை உழைக்க அழைக்கின்றார். 

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் என நாம் ஒவ்வொரு நாளும் விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்கிறோம். நானே உயிர் தரும் உணவு என்று கூறும் இயேசு ஆண்டவர் , தன்னையே நமக்கு உணவாக தருகின்றார். 

வழக்கமாக நாம் அருந்துகின்ற ஒவ்வொரு உணவும் அதன் அதனுக்குரிய சத்துகளை நமக்கு வழங்கிச் செல்கின்றது. அது போல நமது வாழ்வின் உணவாக தன்னையே வழங்கிய ஆண்டவர் இயேசுவை ஒவ்வொரு நாளும் உணவாக உட்கொள்ளும் நாம், அவரது உணவினால் ஊட்டம் பெறும் நாம்  அதன் வெளிப்பாடாக , அவரது இறையாட்சியை மலரச் செய்வோம். நமது அன்பினால், கனிவினால், இரக்கத்தால்,  நிலை வாழ்வின் உணவுக்காக உழைத்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...