இறைவனோடு நாம் இணைந்திருக்க...
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பார்த்து இயேசு அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றார் இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சீர் தூக்கி பார்க்க என்று அழைக்கப்படுகின்றோம் ....
பலவிதமான எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் சாதனை புரிந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற போது நிகழ்வுக்கு வருகை தந்த அவரது அன்பு நண்பர் அவரை பார்த்து சொன்னார். கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் ஒவ்வொரு நாளும் உனது பெயரும் புகழும் வளர்ந்துகொண்டே செல்கிறது என்றார் அவர் கூறியதைக் கேட்டதும் ஆபிரகாம் லிங்கன் உடனடியாக அவரை நோக்கி கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அந்த இறைவனோடு நான் இணைந்து இருக்கின்றன என்பதுதான் எனக்குள் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி என்றாராம் என்று நாமும் அதே கேள்வியை நமக்குள் ஆக எழுப்பி பார்ப்போம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு இருந்து வழிநடத்துகின்ற இறைவனோடு நாம் இணைந்து இருக்கின்றோமா அவரோடு நாம் இணைந்து இருக்கின்ற போது நாம் மகிழ்வின் மக்களாக மாறமுடியும் நம்மிடமிருந்து நமது மகிழ்ச்சியை எவரும் எடுத்துக்கொள்ள இயலாது என இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எடுத்துரைக்கிறார் நாம் மகிழ்ச்சியில் மக்களாக இருக்க வேண்டுமாயின் எப்போதும் நம்மோடு இருக்கின்ற இறைவனோடு நாம் இணைந்திருக்க இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம் ....
Very Good Reflection Dear Brother. All the best.
பதிலளிநீக்கு