துனிவோடு தொடர் பயணம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்களை வாசிக்கின்ற போது துன்பம் துன்பமா? என்ற கேள்விதான் உள்ளத்தில் எழுகிறது.
வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம், துன்பங்களிலிருந்து நாம் வாழ்வுக்கான பாடம் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் துன்பம் துன்பமா? என அலசிப் பார்க்கும்போது, துன்பங்கள் வாழ்வுக்கான வழி முறைகளை கற்பிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. நமது வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பங்கள் எல்லாம், நமக்கு ஏதோ ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கின்றன. இயேசுவும் தனது வாழ்வில் துன்பத்தின் வாயிலாகவே மீட்பை உலகிற்கு கொண்டு வந்தார்.
நாம் நமது வாழ்வில் துன்பம் வரும் போதெல்லாம் துவண்டுவிடாமல் ஆண்டவர்மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய், தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எல்லாம் எளிதாகவே இருக்கும் என்பதல்ல, இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் இயேசுவைப் போலவே பலவிதமான இன்னல்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடலாம். சந்தித்தாலும் அதிலிருந்து வாழ்விற்கான பாடத்தை கற்றுக் கொண்டவர்களய், இயேசுவின் சீடர்களாய் திகழ முடியும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.
இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை புரிந்து கொண்டு, வாழ்வில் துன்பங்களை சந்திக்க நேரிடும் போதெல்லாம், இந்த துன்பங்கள் நம்மை விட்டு கடந்து போகும் என்பதை மனதில் இருத்தியவர்களாய், தொடர்ந்து பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக