வியாழன், 30 ஜூன், 2022

பலியை விட இரக்கமே கடவுள் விரும்புவது....(1.7.2022)

பலியை விட இரக்கமே கடவுள் விரும்புவது....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமது வாழ்வை திரும்பி பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றார்.

              இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்களின் தவறான வாழ்வை ஆமோஸ் இறைவாக்கினர் சுட்டிக் காண்பித்து, மனமாற்றத்திற்கான அழைப்பினை விடுக்க கூடியவராக இருப்பதை வாசிக்க கேட்டோம். 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பாவி எனக் கருதப்பட்ட மத்தேயுவை தன் பணியை செய்வதற்காக அழைக்கின்றார். யூத சமூகத்தை பொறுத்த வரைக்கும், செய்கின்ற தவறுகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு, ஆண்டவருக்கு பலிப் பொருட்களை கொடுப்பதன் வாயிலாக, தங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டது என எண்ணக் கூடிய ஒரு பார்வை வளர்ந்து இருந்தது.  அந்த அடிப்படையில் தான் அவர்கள் மனிதர்களை கூட பாவிகள் எனவும், ஒதுக்கப்பட்டவர்கள் எனவும், கடவுளுக்கு அருகில் வர  தகுதியற்றவர்கள் எனக் கூறியும், பலரை பல பிரிவினைகளின் மத்தியில் பிரித்து வைத்திருந்தார்கள். 

     அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் மத்தேவை அவர்கள் பாவி எனக் கருதினார்கள். காரணம் அவர் வரியை வசூலித்து உரோமை அரசிடம் கொடுக்கக்கூடிய பணியை செய்து கொண்டிருந்ததால். 

         ஆனால் இயேசு அனைவரையும் ஒன்றென கருதினார். எனவே அவர் தனது பணிக்கென எல்லோரையும் அழைத்தார்.  மத்தேயுவையும் அழைத்தார். 
பாவி என்ற பாகுபாடு தவறு என்பதையும், மனிதர்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதையும், அவர் கற்றுத்தருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். வெறுமனே கற்பிப்பவராக அல்ல, தான் கற்பித்ததை தன் வாழ்வில் பின்பற்றக் கூடிய ஒரு மனிதராக, தனது பணிக்கென, அனைவரையும் அழைத்தார். 
       பலியை விட இரக்கத்தை விரும்புவதாக கூறிய கடவுள் நாம் மனிதர்களிடத்தில் இரக்கம் காட்டவும், நாம் தவறு செய்த மனிதர்களுக்கு எதிராக தவறை திருத்திக் கொண்டு அவரோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொண்டு இணைந்து வாழ்வதையே இறைவன் விரும்புகிறார். 

        நாம் உண்டியலில் செலுத்துகின்ற காசோ அல்லது நாம் செபிக்கின்ற செபமோ, இறைவனை திருப்திப்படுத்துவது இல்லை. கடவுளை திருப்திப்படுத்துவது, நமது 
செயல்களில் ஏற்படுகின்ற மாற்றம் மட்டுமே.  நாம் செய்கின்ற செயல் தவறு என உணர்கிற போது, அந்த தவறை திருத்திக் கொண்டு, நமது வாழ்வை நல்வழி நோக்கி நகர்ந்துகிறோம் என்றால், அதுவே கடவுளுக்கு உகந்த வழியாக அமைகிறது. 

           இத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, இறைவனின் பாதையில் எப்போதும் இணைந்து பயணிக்க, இறைவனிடத்தில் அருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

புதன், 29 ஜூன், 2022

இயேசுவின் பணியை செய்வதில் நிலைத்திருக்க...(30.6.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் அமட்ச்சியா என்பவர் இறைவாக்கினர் ஆமோஸ் உரைப்பதை, இறைவாக்கு அல்ல- தனது பிழைப்புக்காக அவர் இவ்வாறு இறைவனது வார்த்தைகள் எனக் கூறி பலவற்றை உரைக்கிறார் என குறிப்பிடுகிறார். அதற்கு ஆமோஸ், நான் இறைவாக்கினரும் அல்ல, இறைவாக்கினர் குழுவிலும் இடம் பெறவில்லை. ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பதே என் தொழில். ஆனால் என்னை இறைவன் அழைத்து இப்பணியை செய்யச் சொன்னார். எனவே நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறி, இறைவாக்கு உரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, முடக்குவாதமுற்ற ஒரு மனிதனைப் பார்த்து, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றதுமே, அங்கிருந்த திருச்சட்ட அறிஞர்களும்  பரிசேயர்களும் சதுசேயர்களும்  இறைவனைத் தவிர பாவத்தை மன்னிக்க எவராலும் இயலாது. இவர்  பாவங்களை மன்னிக்கிறார் என்றால், இவர் இறைவனை அவமதிக்கிறார்  கூறி இயேசுவின் பெயரில் குற்றம் சாட்டக்கூடிய நண்பர்களாக இருந்தார்கள். 

               ஆனாலும் இயேசு அவர்களை பார்த்து நோயற்ற ஒருவரின் பாவத்தை மன்னிப்பதே சிறந்தது என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். 

                        இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட நிகழ்வும், நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது  செய்தி போது வாழ்வில் நாம் நல்ல செயல்களை முன்னெடுக்கின்ற போது
அல்லது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது,  பலவிதமான எதிர்ப்புகளையும் நாம் சந்திக்க நேரிடலாம்.  அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாது மற்றவரின் பேச்சுக்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்து நமது அறச்செயல்களையும் நிறுத்தி விடாது தொடர்ந்து இறைவனது பணியை ஆற்ற, இறைவன் காட்டுகின்ற பாதையில்,  தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்ற  மையச் சிந்தனையினை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ளுகிறோம்.  நாம் உணர்ந்து கொண்ட இந்த  வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  எதிர்ப்புகள் பல வந்தாலும்,  ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதில் நிலைத்திருக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.

திங்கள், 27 ஜூன், 2022

நம்பிக்கையோடு தொடர...(28.6.2022)

நம்பிக்கையோடு தொடர...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
        இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ரயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்து தகுதி உள்ளவர்களாக மாற்றினார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.  இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கான கடவுளை தேர்ந்தெடுக்கவில்லை, கடவுள் தான் அவர்களை தங்களுக்கான மக்களாக தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு, தவறுகிற போதெல்லாம் அவர்களை வழிநடத்த கூடியவராக அழைத்த மக்களை அழைப்பிற்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார் என்பதை முதல் வாசகம் வாயிலாக அறிகின்றோம்.

      இன்றைய நற்செய்தி வாசகத்திலும், ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள்,  அவரோடு உடன் இருந்தார்கள்; அவர் செய்த அனைத்து விதமான புதுமைகளையும் கண்டார்கள்; கேட்டார்கள்

            ஆனாலும் அவர்களின் உள்ளத்தில் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கை என்பது தளர்வுற்ற நிலையில்தான் இருந்தது.  வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போது இதுநாள் வரை தங்களோடு உடன் இருந்து வந்த செயல்களைச் செய்த இயேசு கிறிஸ்துவை மறந்து போனவர்களாய்,  அச்சத்திற்கு மத்தியில் ஆண்டவரை மறந்து, ஆண்டவரே!  சாகப்போகிறோமே! உமக்கு கவலை இல்லையா?  என்று கூறி இயேசுவை எழுப்பக்கூடிய செயலில் ஈடுபடுகிறார்கள். எழுந்த இயேசு அவர்களின் நம்பிக்கையின்மையை கடிந்து கொண்டு, அஞ்சாதீர் என்று கூறி, காற்றையும் கடலையும் அடக்கி, அங்கிருந்தவர்களுக்கு இயேசு நம்பிக்கையை விதைத்து செல்கிறார். 

          இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாமும்,  வாழ்வில் துன்ப துயரங்கள் வருகிற போதெல்லாம், 
இதற்கு முன்பு வரை நாம் வாழ்வில் சந்தித்த இன்ப துன்பங்களில் எல்லாம் நம்மை வழிநடத்தி வந்த இறைவனை மறந்து  போய்,  அச்சத்தோடும்  கலக்கத்தோடும் வாழ்வை நகர்த்துகின்ற நிலை இன்று நம்மில் தொடருகின்றது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்பதையே இறைவன் வலியுறுத்துகிறார்.

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
1 பேதுரு 5:10.
 
       என்று இறைவார்த்தையின் வழியாக நம்மை உறுதிப்படுத்துகிறார். 
துன்பங்கள் வருகிற போதெல்லாம் இறைவன் உடனிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள, அச்சத்தோடு இருந்த சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய அதே அறிவுரையை இன்று நமக்கும் வழங்குகிறார்.  அஞ்சாது, துணிவோடு, ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் தொடர்ந்து நமது வாழ்வை நகர்த்துவோம்.  நம்பிக்கை ஒன்றே நம்மை இறைவனோடு இணைத்துச் செல்லும்.  நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் செபிப்போம்.

ஞாயிறு, 26 ஜூன், 2022

அன்னை மரியாவின் திரு இருதயம்...(25.6.2022)

அன்னை மரியாவின் திரு இருதயம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்று தாய் திரு அவையானது  தூய கன்னி மரியாவின் தூய்மை மிகு இதயத்தை நினைவுகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசுவின் திருஇருதயத்தின்  பெருவிழாவிற்கு  அடுத்து வருகின்ற நாளை அன்னை மரியாவின் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்த செபிக்கின்றன நாளாக திரு அவை அனுசரித்து வருகிறது.

    அன்னையின் இதயத்தோடு இணைந்து  நமது இதயமும் இறைவனைப் புகழ கூடியதாக, இறைவனது வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி சிந்திக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை இன்றைய நாள் விழா நமக்கு வலியுறுத்துகிறது. 

ஆண்டவர் மரியாவின் வாழ்வில் செயல்படுத்திய அனைத்து செயல்பாடுகளையும், மரியா உள்ளத்தில் இருத்தி ஆழமாகச் சிந்தித்தார் என விவிலியத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் இன்பங்கள் வந்த போதும் துன்பங்கள் வந்த போதும், மரியா துவண்டு போய் விடாமல், அனைத்தையும் கடவுளின் திட்டம் எனக் கருதி, அனைத்தையும் இதயத்தில் இருத்தி சிந்தித்து, தன் வாழ்வை ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றினார். தன் மகனுக்கும் அதன் வழி துணை நின்றார். 

  இத்தகைய அன்னை மரியாவின் இதயத்தை நாமும் பெற்றுக் கொள்ள, இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். இன்றைய நாளில் நாமும் அன்னை மரியாவோடு இணைந்து நமது இதயத்தை இறைவன் பால் திருப்புவோம். ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்தித்து, அந்த சிந்தனைக்கு நமது வாழ்வில் செயல்வடிவம் தருகின்ற மனிதர்களாக மாறுவோம். அன்னை மரியாவின் இதயத்தோடு நமது இதயத்தையும் இணைத்துக் கொண்டு இறைவனைப் புகழ இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக இணைந்து செபிப்போம்.

இயேசுவைப் பின்பற்ற....(27.6.2022)

இயேசுவைப் பின்பற்ற....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
இன்றைய முதல் வாசகத்தில் விற்பதும் வாங்குவதும் பற்றி பேசப்படுகிறது.  விற்பதும் வாங்குவதும் என்பது பொருளை இங்கு  குறிப்பிடவில்லை, மனிதர்களை.  ஒரு மனிதன் கடனாக  ஒருவரிடம் பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றால் அவரை அடிமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வழக்கம் இருந்தது. இப்படி அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களை சுரண்டுவதை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே தான் சட்டம் இதை அனுமதித்திருந்தாலும்,  அதை பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை லேவியர் புத்தகம் முப்பதாம் அதிகாரத்தில் ஆறாவது வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

      கடவுளின் வழியாக நாம் பெற்ற சகோதரர் ஒருவர் அடிமை என்ற நிலைக்குச் சென்று இருந்தால்,  அவரை நாம் ஒரு வீட்டுக் கூலியாள் போலவோ, விருந்தினர் போலவோ  உபசரிக்கவேண்டும். யூபிலி ஆண்டு முடியும் வரை அவரை ஆதரிக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறிமுறைகள் அனைத்தையும் தருகிறது. இந்த நெறிமுறைகள் அனைத்துமே மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

   இத்தகைய வழிகாட்டுதலின் அடிப்படையில்,  மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.  இன்று முதல் அப்படி  அமைத்துக் கொள்ளுகிறவன், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிற,  ஏற்றுக் கொண்ட மனிதனாக மாறுகிறான். 
 இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று  சொல்லிவிட்டு பிறகு தன் சுய விருப்பத்தையும், சுய லாபத்தையும்  மட்டும் மனதில் கொண்டு, ஒருவன் பயணிக்கின்றான் என்றால், அது இறைவனுக்கு ஏற்புடையது ஆகாது. இறைவனை பின்பற்ற  விரும்புகிற ஒவ்வொருவருமே, தன்னலம் துறந்து பொது நலத்தோடு தன்னைப் போல மற்றவர்களையும், நேசிக்கக் கூடியவராக, அன்பு செய்யக்கூடிய மனிதர்களாக, வாழ இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ....(26.6.2022)

ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழவும், ஆண்டவரின் பணியைச் செய்யவும் ஒரு அழைப்பை தருகின்றன. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே கடவுளின் ஆற்றலை பெற்றிருக்கிறோம்.  ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளின் ஆவியார் குடிகொண்டிருக்கிறார். அந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு உட்பட்ட மக்களாய் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை இறைவன் என்று வலியுறுத்துகிறார்.  இந்த ஆவியானவர் நமக்குள்ளாக இருந்து,  நாம் செய்ய வேண்டிய நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கக் கூடியவராகவே இருந்து கொண்டிருக்கிறார். 

           இன்றைய முதல் வாசகத்தில் எலியாவை பின்பற்றி, எலிசா ஆண்டவரின் பணியை முன்னெடுத்துச் சென்றது போல, மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே தூய ஆவியின் தூண்டுதலால் இறைவனின் பணிகளை முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம்.  குருக்களாக இருந்தாலும் சரி, துறவியராக இருந்தாலும் சரி, பொது நிலையினராக இருந்தாலும் சரி,  மண்ணில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவருமே ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி அதனை நமது செயலில் வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.  இறைவன் தருகின்ற வாழ்வு காண பாடத்தை புரிந்து கொண்டவர்களாக,  நாம் பெற்றிருக்கின்ற தூய ஆவியானவரை உணர்ந்து கொண்டவர்களாய்,  அந்த தூய ஆவியானவரின் தூண்டுதலின் அடிப்படையில் நாம் ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று செயலில் வெளிப்படுத்தக் கூடியவர்களாக,  அவரைப் பின்பற்றுகிற மனிதர்களாக வாழ்வோம்.  அவரை பின்பற்றுகிற போது,  வாழ்வில் பலவிதமான ஏற்ற இறக்கங்களையும் தடங்கல்களையும் சந்திக்க நேரலாம்.  சந்தித்தாலும் அனைத்திற்கும் மத்தியிலும் இந்த ஆண்டவரை இறுகப் பற்றி பிடித்துக் கொண்டு அவரை பின்பற்றக் கூடியவர்களாக, அவரது வார்த்தைகளுக்கு செயல்வடிவம் தரக்கூடிய மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இன்றைய நாளில் செபிப்போம்.

வியாழன், 23 ஜூன், 2022

திரு இருதய பெருவிழா....(24.06.2022)

திரு இருதய பெருவிழா....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
        இன்று தாய் திரு அவையானது இயேசுவின் திரு இருதய பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து  நம்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். 
தன் இருதயத்தில் இருந்து அன்பை மட்டுமே நமக்குத் தர வல்லவர்.  நம்மீது அவர் கொண்ட அன்பின் காரணமாகத் தான் நமக்காக பலவிதமான இன்னல்களுக்கு மத்தியிலும் தனது இன்னுயிரை தியாகம் செய்தவர். 

     நாம் வாழ வேண்டும்; நாம் மீட்பு பெற  வேண்டும் என்பதற்காக தன் உயிரை சிலுவையில் தியாகம் செய்தவர். தன் இரத்தத்தை நமக்காக சிந்தியவர். இந்த இயேசுகிறிஸ்துவின் இதயத்தை உற்றுநோக்க, அவரை குறித்து சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

 விவிலியத்தின் துவக்கத்திலிருந்து நாம் வாசிப்போமாயின், இஸ்ரயேல் மக்களை கடவுள் தனது அன்புக்கு உரியவராக தேர்ந்தெடுத்தார். தன் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக அவர்களை பாதுகாத்தார். 
இன்ப துன்பங்களில் உடன் இருந்தார்.  ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர்கள் கடவுளிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டாலும் பல நேரங்களில் அந்த கடவுளை புறம் தள்ளிவிட்டு கல்லான இதயம் படைத்த மனிதர்களாக  தங்கள் மனம் போன போக்கில் மாறிப்போனார்கள். 

 ஆனால் ஆண்டவரோ, தனது அன்பான இதயத்திலிருந்து அந்த மக்களை பாதுகாத்தார்;  பராமரித்தார். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தார்.  அவர்களோடு உடனிருந்து  வழிநடத்தினார்.  வாழ்வில் அவர்கள் ஏற்றங்களை சந்தித்த போதும், இறக்கங்களை சந்தித்த போதும், அவர்களோடு மகிழ்ந்து அவர்களோடு அழுகின்ற ஒரு கடவுளாக இருந்தார்.  உணர்வுகளை புரிந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக இருந்தார், நாம் பின்பற்றுகின்ற ஆண்டவர் செயல்பட்டார் என்பதை விவிலியத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். 

       அனைத்து உணர்வுகளின் பிறப்பிடமாக அமைகின்ற இந்த இதயத்தில் நாம் இயேசுவின் இதயம் போல மாற்றிட,  நமது இதயத்தை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டவர் இயேசுவின் திருஇருதய பெருவிழா நமக்கு அழைப்பு தருகிறது. 

       ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில், மனிதர்களாகிய நாம் நமது இதயத்தில் இருந்து அன்பையும் இரக்கத்தையும் பரிவையும் நிறைக்கக்கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய நாள் விழா நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது. 

      ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவரின் இருதயத்தை உற்று நோக்கிச் செபிக்கின்ற இந்த நல்ல நாளிலே,  நமது இதயத்தை அவரின் இதயம் போல மாற்றிட அவரிடத்தில் அருள் கேட்போம்.

புதன், 22 ஜூன், 2022

இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாகிட....(23.6.2022)

இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாகிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இன்று தாய் திரு அவையானது திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவை கொண்டாடுகிறது. மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையுமே கடவுள் இந்த உலகத்தை இன்னும் அதிகமாக அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறுவார்கள்.  மனிதர்களாகிய நாம் இம்மண்ணில் பிறந்ததற்கு பலவிதமான காரணங்கள் உண்டு.  மனிதர்களாகிய நாம் இந்த மண்ணில் பிறந்து இருக்கிறோம் என்றால் நமது பிறப்பிற்கான காரணத்தைக் கண்டு கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

    திருமுழுக்கு யோவானின் பிறப்பு இந்த உலகத்தில் ஆண்டவரின்  வழியை ஆயத்தம் செய்வதற்கான ஒரு வாழ்வாக அமைந்தது, பிறப்பாக அமைந்தது.  திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஆண்டவர் இயேசுவுக்கான பாதையை தயாரிக்கின்ற ஒரு வாழ்வாக அமைந்தது.  நமது வாழ்வும் ஆண்டவருக்கு பணி புரியக்கூடிய, ஆண்டவரின் மக்களாக ஆண்டவருக்கு ஊழியம் செய்யக் கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு வாழ்வாக அமைய இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். 

          இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா தன்னை ஆண்டவரின் ஊழியர் எனக்கூறி பெருமைப்படுகிறார்.  அவரைப் போல நீங்களும் நானும் பெருமைப்பட கடமைப்பட்டுள்ளோம். 

     அது போலவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுள் மனிதர்களை பார்த்து பார்த்து படைத்தார்; அனைவரையும் தனது இதயத்திற்கு நெருக்கமானவராக, அன்புக்குரியவர்களாக தேர்ந்தெடுத்தார் என்பதை எடுத்துரைக்கின்றார். இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாம் நமது வாழ்வில் நாம்  பிறந்தோம்; வாழ்ந்தோம்; இறந்தோம் என்று நகர்ந்து விடாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இறைவனுக்கு உகந்தவர்களாக,  இறைவனின் இதயத்திற்கு நெருக்கமான இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாக வாழ இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 21 ஜூன், 2022

நமது செயல்களே சான்று....(22.6.2022)

நமது செயல்களே சான்று....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் இலக்கியா ஆண்டவரின் நூலை கண்டெடுத்தேன் எனக் குறிப்பிடுகிறார்.  அவர் கண்டெடுத்த அந்த திருச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்கள் எதைப் பின்பற்ற வேண்டும்? என்பதற்கான சட்டதிட்டங்கள் இடம்பெற்றிருந்தன.  இந்த சட்ட திட்டங்கள் அனைத்துமே அவர்களின் வாழ்வை நெறிப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை.  அது போலவே, நாம் வாழுகிற இந்து சமூகத்திலும் பலவிதமான சட்டதிட்டங்கள் இருக்கின்றன.  அனைத்தும்  நம்மை நெறிப்படுத்துவதற்காக.  ஆனால் அதில் இருக்கின்ற சில துளைகளை மட்டும்,  குறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்வைத் தொடர்கின்ற போக்கு இன்று அதிகரிக்கிறது.

           இந்த இறைவார்த்தைப் பகுதியோடு நமது வாழ்வை ஒப்பிடுகிற போது, மரத்தின் கனி கொண்டு  மரம் அறியப்படுவது போல, நமக்கு நாமே உருவாக்கி இருக்கக்கூடிய சட்டத்திட்டங்களை கொண்டே நாம் யாரென  அறியப்படுகிறோம். 

 அனுதினமும் ஆலயத்திற்கு வருவது, என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட சட்டம்.   திரு அவை இதனை முன்மொழிந்து இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் உரிமை உடையவர்கள் நாம்.  ஏற்றுக்கொண்டிருக்கிறோம்; அச்சட்டத்தின் படி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறோம். அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது விதைத்த ஒவ்வொரு வார்த்தைகளுமே பலவிதமான அர்த்தங்களைக் கொண்டது. பலவிதமான வாழ்வுக்கான வழிகளை உள்ளடக்கியது. சில நேரங்களில் அது சட்டம் போலவும் தோன்றலாம்.  பல நேரங்களில் ஆண்டவரின் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சட்டம் போல தோன்றலாம். 

 ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை சட்டமாக இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த சட்டத்தை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் செயல்பட வேண்டும்.  நமது செயல்களைக் கொண்டே நாம் பின்பற்றுகின்ற இயேசுவை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும்.  மரத்தின் கனி கொண்டு மரம் அறியப்படுவது போல,  நமது செயல்களைக் கண்டு நாம் கிறிஸ்தவர்கள் என்பது புலப்பட வேண்டும்  என்பதை நாம் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் உணர்த்துகின்றார். 

           இறைவன் உணர்த்தும் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய்,  நமது செயல்களால் இயேசுவை வெளிப்படுத்த இறையருள் வேண்டுவோம்.

திங்கள், 20 ஜூன், 2022

நம் எண்ணங்கள் பிறருக்கு நலம் தரட்டும்....(21.06.2022)

நம் எண்ணங்கள் பிறருக்கு நலம் தரட்டும்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                    இன்றைய முதல் வாசகத்தில் செதேக்கியா என்ற அரசன் மிகப்பெரிய குழப்பத்திற்கு உள்ளாகிறான். படையெடுத்து வருகின்ற நபர்களை எதிர்கொள்வதற்கு யாவே இறைவன் மீது நம்பிக்கை வைத்து பயணத்தைத் தொடர்வதா? அல்லது  அல்லது மற்றவர்கள் சொல்லக் கூடிய வார்த்தைகளைக் கேட்டு பிற படைகளோடு இணைந்து எதிரியை எதிர்  கொள்வதா? என்ற கேள்விக்கு உட்படுத்தப்படுகிறார்.  இறுதியில் யாவே இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்; போரிலும் வெற்றி பெறுகிறார். 

         இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை வைக்க நமக்கு அழைப்பு தரப்படுகிறது.  ஆண்டவருடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து, அதனை பின்பற்றும் மனிதர்களாக நாம் இருக்க இன்று அழைக்கப்படுகிறோம்.  இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக, பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்கும் செய்யுங்கள் என்ற இறை வார்த்தை தரப்படுகிறது.  மற்றவர்கள் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணுகிறோம்; நம்மை பற்றி புகழ வேண்டும் என கருதுகிறோம்; நமக்கு உதவ வேண்டும் என எண்ணுகிறோம்; துன்பத்தில் துணை நிற்க வேண்டும் என எண்ணுகிறோம். அந்த எண்ணங்கள்  அனைத்தையும் நாம் அடுத்தவருக்கு செய்யக்கூடிய மனிதர்களாக இருக்க இறைவன் அழைப்பு தருகிறார். 

நாம் எண்ணுவதை நமக்கு 
 மற்றவர்கள் செய்யாவிட்டாலும் நாம் மற்றவர் நமக்கு செய்ய வேண்டும் என எண்ணுவதை மற்றவர்களுக்கு  செய்யக்கூடிய மனிதர்களாக இருக்கவும், அதன் வழியாக இறைவனின் வார்த்தைகளை வாழ்வாக்கவும், அவரின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும்,  செதேக்கியா அரசனைப் போல, அந்த இறைவனின் மீது,  அவர் தந்த வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும்,   இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் அழைக்கின்றார் இறைவனின் அழைப்பை உணர்ந்து வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இறைவன் மீதான ஆழமான நம்பிக்கையில் நாளும் வளர இறையருள் வேண்டுவோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2022

கற்பித்தவற்றை கடைபிடிப்போம்...(21.6.2022)

கற்பித்தவற்றை கடைபிடிப்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகமானது கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் நம்மை சரி செய்து கொண்டு மற்றவரை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனையை நமக்கு வழங்குகிறது.

                    ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவற்றை நமக்கு கற்பித்தார்.  அவர் கற்பித்த அனைத்தையும் நாமும் கற்பிக்கின்ற மனிதர்களாக இருக்கிறோம். ஆனால், அதை பின்பற்றுகின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்க்கை பாடமாக உள்ளது.  கடவுள் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவர் நமக்கு கற்பித்தவைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவர் கற்பித்தவைகளை நாம் பின்பற்றவும், நாம் பின்பற்றுவதை மற்றவருக்கு கற்பிக்கக் கூடிய மனிதர்களாக இருக்கவும் இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. 

அழைக்கும் இறைவனின்  குரலுக்குச் செவிகொடுத்தவர்களாய்,  இறைவன் உணர்த்திய பாடங்களை உணர்ந்துகொள்வோம்;  இறைவன் கற்பித்தவற்றை கற்றுக்கொள்வோம்; கடைபிடிப்போம்; வாழ்வாக்குவோம்.  பிறர் வாழ்வாக்க நாம் துணை நிற்க, இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

சனி, 18 ஜூன், 2022

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (19.6.2022)

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய்த் திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

   ஒரு ஊரில் ஒரு ஏழை சிறுவன் இருந்தானாம். அவன்  இறைவனிடத்தில் சென்று,  ஆண்டவரே! நீர் என்னை அன்பு செய்வதாக மறைக்கல்வி ஆசிரியர் கூறினார்.  என்னை எந்த அளவிற்கு அன்பு செய்கிறீர்கள் என்று கேட்டானாம்.  அதற்கு இயேசு சொன்னாராம்,  என்னை உற்றுப்பார் என்று.  அவனும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தானாம், ஒன்றும் தெரியவில்லையாம்.  வீட்டிற்கு சென்று விட்டான்.  

          மறு நாளும் வந்தானாம்.  ஆண்டவரே! இன்று நான் வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் பேசினேன். என் அம்மாவும் சொன்னார், நீர் என்னை அதிகமாக அன்பு செய்கிறீர் என்று.  நீர் என்னை எந்த அளவிற்கு அன்பு செய்கிறீர்? எனக்கு சொல்லித் தாரும். கடவுள் மீண்டுமாக அவனிடம், "என்னை உற்றுப் பார்!" என்றார்.  அவனும்  உற்று நோக்கினான்.  அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லையாம்.  மீண்டுமாக மூன்றாம் நாளும் அவன் இயேசுவின் முன்னால் வந்து நின்று, ஆண்டவரே என்றும் என்னுடைய
நண்பர்களிடம் பேசினேன்.  அவர்களும் சொன்னார்கள், நீர் என்னை அதிகமாக அன்பு செய்கிறீர் என்று. எந்த அளவுக்கு நீர் என்னை அன்பு செய்கிறீர்? எனக்கு நீர் சொல்ல வேண்டும்.  இல்லையென்றால், உன்னை விட்டு நான் போக மாட்டேன் என்றானாம்.  கடவுள் சொன்னார், "என்னை உற்றுப் பார்!" என்று.  இப்படித்தான் மூன்று நாளும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.  நான் பார்க்கிறேன்.  ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. நீங்க  கண்ண மூடிக்கிட்டு நிற்கிறீங்க என்று சொன்னானாம். 

      அப்போது கடவுள்  நான் உனக்கு எப்படி தென்படுகிறேன்?  எனக் கேட்டாராம்.   நீங்க சிலுவையிலே உங்க கை கால் எல்லாம் ஆணியடிச்சு,  தென்படுறீங்க. 

     "நான் என்னுடைய உயிரை கொடுக்கும் அளவிற்கு உன் மீது அன்பு கூர்ந்தேன், அதனால் தான் என்னை உற்றுப் பார் என்று சொன்னேன் என்று சொன்னாராம்.  

        அப்போது தான் அவனுக்கு புரிந்ததாம்.  கடவுள் அவனிடம், எனது   இரு கைகளையும் கால்களையும் பார்.
உன் மீது நான் கொண்ட அன்பின் காரணமாக என்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்ததன் அடையாளமாகத் தான் உன்னை உற்று நோக்கச் சொன்னேன் என்றாராம். 

               இன்று நாமும் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடுகின்ற நாம், இந்த கல்வாரி இயேசுவை உற்றுநோக்குவோம்.  இவர் இங்கு இரத்தம் சிந்தி உயிரை விட்டது, நமக்காக. நம் மீது கொண்ட அன்பின் காரணமாக என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

நமக்காக தன் இன்னுயிரைத் அந்த இந்த இறைவனை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில் நாம் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உற்று நோக்குவோம்.  நமக்காக தமது உயிரை தியாகம் செய்த இறைவனின் தியாகத்தை உணர்ந்து கொண்டு, நம் மீது அவர் கொண்டுள்ள ஆழமான அன்பை உணர்ந்து கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

வெள்ளி, 17 ஜூன், 2022

செல்வமா...? இறைவனா...?(18.6.2022)

செல்வமா...? இறைவனா...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் யோவாசு அரசன் யாவே இறைவனை பின்பற்றிக் கொண்டிருந்த தனது போக்கை மாற்றிக் கொண்டு எடுப்பார் கைப்பிள்ளை போல பலர் கூறக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்ப தனது வாழ்வை மாற்றிக் கொண்டு தனது மனம் போன போக்கில் வேற்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றார். அவரின் இத்தகைய செயலை தவறு என இறைவாக்கினர்கள் எடுத்துரைக்கக்கூடிய நிகழ்வையே இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

    இன்றைய நற்செய்தி வாசகமும் ஒரே நேரத்தில் ஒருவர் இரு தலைவர்களுக்கு பணிவிடை புரிய முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் கடவுளுக்கும் செல்வத்திற்கும் இணையாக பணி செய்ய முடியாது. செல்வத்திற்கு பணிவிடை செய்யக் கூடிய நபர் அடுத்த நாளைக் குறித்த கவலையோடு தன் வாழ்வை நகர்த்திக் கொண்டே இருப்பார். ஆனால் இறைவனுக்குப் பணி செய்யக்கூடிய நபரோ அடுத்த நாளைப் பற்றிய கவலை இன்றி, கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தனது வாழ்வை நடத்திக் கொண்டிருப்பார். 

     நாம் செல்வத்தின் மீது மோகம் கொண்டவர்களாக பற்று கொண்டவர்களாக நமது வாழ்வினை நகர்த்துகிறோமா? அல்லது இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை நகர்த்துகிறோமா என்ற கேள்வியை இதயத்தில் எழுப்பிப் பார்க்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

    இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழுகின்ற இந்த காலத்தில் இறைவன் மீது மட்டுமே ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவருக்கு மட்டுமே பணிவிடை செய்யக்கூடிய மனிதர்களாக வாழ இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம்.

வியாழன், 16 ஜூன், 2022

விண்ணகச் செல்வத்தை நாட...(17.6.2022)

விண்ணகச் செல்வத்தை நாட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அத்தளியா அரியணைக்கு உரிய தன் மகன்  இறந்துவிட்டான் என்பதை கேள்விப்பட்டு அரச குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்கிறார். ஆனால் கடவுள் யோசியாவை காப்பாற்றுகிறார். அத்தளியாவின் பார்வையில் இவ்வுலகிலுள்ள  பதவியும் பட்டமுமே உயரிய செல்வமாக தெரிந்தது. அவரது உள்ளம் மண்ணை சார்ந்திருந்தது விண்ணை சார்ந்தது அல்ல.....


உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ உங்கள் உள்ளமும் அங்கேயே இருக்கும் ... என்ற இறை வார்த்தைகள் நமது எண்ணத்தையும் செயலையும் சீர்தூக்கி பார்க்க என்று அழைப்பு தருகின்றன.

மனம் என்பது ஒரு குரங்கைப் போல நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் என்பார்கள். மனம் மாறாமல் இருக்கிறது என்றால் அது செல்வத்தை சேர்த்து வைப்பது மட்டுமே ...

மண்ணில் வாழும் மனிதர்கள் பலர் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருக்காக எதற்காக சேர்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார் ஒன்று நமக்காக மற்றொன்று நமது வருங்கால சந்ததியினருக்காக என பலரும் காரணம் கூறுவது உண்டு.... நாம் நமக்காகவும் வருங்கால சந்ததியினருக்காக சேர்த்து வைக்க வேண்டியது செல்வங்களை அல்ல மாறாக நல்லெண்ணங்களை என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் வெளிப்படுத்துகிறார் ...

நமக்கு என்ற மனநிலையோடு நாம் விண்ணக செல்வங்களை  சேர்த்து வைப்பதைவிட பிறருக்கு என்ற மனநிலையோடு இருப்பதை இல்லாதவ ரோடு பகிரவும், ஏழைகளுக்கு உதவவும், துன்பத்தில் வாடுவோருக்கு துணை நிற்கவும், கூடிய நல்லெண்ணங்களை நாம் நமது செல்வங்களாக சேர்க்கவும் அந்த செல்வங்களை நமது குழந்தைகள் தங்கள் செல்வங்களாக எண்ணி சேர்க்கவும் வழிகாட்டுவோம். ஏனெனில் இவையே விண்ணகத் செல்வங்கள்.   இவையே பூச்சும் துரும்பும் அழிக்க முடியாதவை....  திருடர் கன்னமிட்டு திருட முடியாத செல்வம் ....இந்தச் செல்வம் இருக்கும் இடமே விண்ணகம் இந்த செல்வத்தை நாடுகிற போது நமது உள்ளமும் அந்த விண்ணக செல்வத்தை சார்ந்திருக்கும் ...

விண்ணகச் செல்வத்தை நாடவும் அதை உரிமையாக்கிக் கொள்ளவும் இறையருள் வேண்டும்....

புதன், 15 ஜூன், 2022

இறைவனோடு உரையாட...(16.6.2022)

இறைவனோடு உரையாட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது ...
இந்த நூலானது பல விதமான அறிவுரைகளை தன்னகத்தே உள்ளடக்கியது.  இந்த நூலிலிருந்து இன்று நாம் இறைவார்த்தைகளை கேட்ட முதல் வாசகமானது ஆண்டவரைப் பற்றிய புகழ்ச்சிப் பாடலாக அமைகிறது ....

இறைவாக்கினர் எலியா இறைவனோடு கொண்டிருந்த ஆழமான உறவைக் குறித்தும், அதனால் அவரால் பலவிதமான நல்ல காரியங்களை முன்னெடுக்க முடிந்தது என்பதையும் இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.  ....

நாமும் இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்களை முன்னெடுக்க நமது வார்த்தைகளும், இந்த சமூகத்தில் மாற்றத்தை விளைவிக்க வேண்டுமாயின், நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உரையாடல் அதிகரிக்கவேண்டும். அந்த உரையாடல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் எடுத்துரைக்கிறார்.

செபம் என்பது நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். இந்த உரையாடல் தொடர்கிறதன் வழியாக நமது உறவானது தொடரப்படுகிறது ...  எலியாவுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல் தொடர்ந்ததன் விளைவாகத்தான் எலியாவின் வார்த்தைகள் அனைத்தும் இந்த மண்ணில் செயல்வடிவம் பெற்றது. 

                          பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் நாமும் இறைவனோடு உரையாட நேரம் ஒதுக்கவும், இறைவனோடு இணைந்திருக்கவும் இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 14 ஜூன், 2022

இறைவனா?... மனிதனா...?(15.6.2022)

இறைவனா?... மனிதனா...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 செபம், தபம், தர்மச் செயல்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையானவை.  இந்த மூன்றிலும் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். 

        நாம் முன்னெடுக்கின்ற செபமாக இருந்தாலும் சரி, தவச் செயல்களாக இருந்தாலும் சரி,  அல்லது தர்மச் செயல்களாக இருந்தாலும் சரி, இவை மூன்றுமே இதயத்தில் இறைவனை முன்னிறுத்தி நடக்கிறதா? அல்லது இருக்கிற மனிதர்களை முன்னிறுத்தி நடக்கிறதா? மனிதர்களின் புகழுக்கும், அவர்களின் நன்மதிப்புக்காக இவை இடம் பெறுகிறதா? அல்லது இதயத்தில் உறைந்திருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளவும்,  அவர் மீது நாம் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் இவை நடைபெறுகிறதா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

                       இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியாவின் வழியாக வெளிப்பட்ட ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இணங்கி, அவ்வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை, அமைத்துக் கொண்ட, எலியாவை பின்பற்ற விரும்பிய எலிசாவை போல நமது வாழ்வு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறக் கூடிய வார்த்தைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். நாம் தவத்திலும், தர்மம் செயலிலும், செபத்திலும் எப்படி இருக்க வேண்டும் என இறைவன் இன்று கற்பிக்கின்றார். 

 இதயத்தில் உள்ள இறைவனை மையப்படுத்தி இவை தொடருகிறது என்றால், இறைவனுக்கு நன்றி கூறுவோம். இருக்கிற மனிதர்களை மையப்படுத்தி இவை நமது வாழ்வில் அரங்கேறுகிறது என்றால், அதனைத் தவிர்த்து, 
இறைவனுக்கு உகந்த ஒரு வாழ்வு வாழ, இறைவன் இன்று நமக்குக் கற்பிக்கும் பாடத்தை இதயத்தில் இருத்தி, வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறையருள்  வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

திங்கள், 13 ஜூன், 2022

இரக்கம் காட்ட...(14.6.2022)

இரக்கம் காட்ட...



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 



நடக்கின்ற தவறுகள் அனைத்தையும் கண்டும் காணாதவர் போல இருப்பவர் அல்ல கடவுள் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் உணர்ந்து கொள்கிறோம். நாபோத்து என்ற எளியவரின் நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள சென்ற அரசனாகிய ஆகாபையும் அவன் மனைவி ஈசபேலையும் எலியா இறைவாக்கினர் வழியாக இறைவன் தடுக்கின்றார்....

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்மை இகழ்ந்து தூற்றுபவர்களையும் ஏற்றுக்கொள்ள, பகைவரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்பதை ஆண்டவர் வலியுறுத்திக் கூறுகின்றார்.... 

       ஆயிரம் மதங்கள் இருந்தாலும், கிறிஸ்தவ மதத்தின் தனித்துவம் பகைவரையும் அன்பு செய் என்பதாகும்... வெறும் வார்த்தைகளல்ல இவை, வாழ்வாக்கப்பட வேண்டியவை என்பதை வாழ்வாக்கிக் காட்டியவர் நமது இயேசு கிறிஸ்து.  இந்த இயேசு கிறிஸ்து பின்பற்றுகின்ற நாமும் இந்த வாழ்வுக்கான பாடத்தை வாழ்வில் செயல்படுத்த இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

அனுதினமும் நாம் பயன்படுத்துகின்ற விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற இறைவேண்டலில் கூட பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என நாம் சொல்லி செபிக்கிறோம்.   அடுத்தவர் மீது இரக்கம் காட்டாது நம் மீது மட்டும் இறைவன் இரக்கம் காட்ட வேண்டும் என எண்ணுவோமாயின் அது அர்த்தமற்றது என்பதை உணர்ந்தவர்களாக நமக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் ....

அன்னை தெரசாவை போல 
வெறுப்பது யாராக இருந்தாலும், இன்னும் நேசிப்பது நாமாக இருப்போம்! 

ஞாயிறு, 12 ஜூன், 2022

மன்னிப்பே மகத்துவம்....(12. 6.2022)

மன்னிப்பே மகத்துவம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


ஆகாபு அரசன் நாபோத்தின் நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள விரும்பி அதை அடைய முயன்றதையும், ஆகாபின் மனைவி ஈசபெல்  நயவஞ்சகத்தால் நாபோத்தைக் கொன்று அந்த நிலத்தை தன் கணவனுக்கு உரிமையாக கொடுத்ததையும் நாபோத்து என்ற ஏழைக்கு இழைக்கப்பட்ட அநீதியை குறித்தும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது  


இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்ணுக்கு கண்’, ‘பல்லுக்குப்பல்’ என்ற சட்டங்கள் இருந்தாலும், பழைய ஏற்பாட்டு காலத்தில் அதுமுறையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை .... சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றம் இழைத்தவருக்கு வெறுமனே தண்டனை கொடுப்பது மட்டும் சட்டமாக இருக்கவில்லை. மாறாக, குற்றம் இழைத்தவர் 5 வகைகளில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்ய வேண்டும். 

காயத்திற்கு, 

அதனால் ஏற்பட்ட வலிக்கு, 

மருத்துவ செலவிற்கு, 

இந்த காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பிற்கு  

இந்த சமுதாயத்தில் அவர் இழந்த மாண்பிற்கு 

என இவை அனைத்திற்கு சேர்த்து குற்றம் செய்தவர் இழப்பீடு தர வேண்டும். 

இந்த அடிப்படையில் நீதியை தழைத்தோங்கச்செய்வதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இயேசு இதையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலே சென்று, மன்னிப்பை முன்னிறுத்துகிறார். அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார்.

எத்தகைய இழப்பையும் அன்பால் மட்டும்தான் இழப்பீடு செய்ய முடியும் என்பது இயேசு நமக்கு வெளிப்படுத்தும் பாடம். நமக்கு துன்பம் தருகிற மனிதர்களையும் மன்னித்து ஏற்றுக் கொண்டு அவர்களை அன்பு செய்து வாழ இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வோம் ...

எண்ணங்கள் சிறக்க வேண்டும்(10.6.2022)

எண்ணங்கள் சிறக்க வேண்டும்


நமது எண்ணங்கள் சிறப்பானதாக அமைகின்ற போது நமது செயல்களும் சிறப்பானதாக மாறுகிறது. 

எண்ணங்களின் தொகுப்பாக விளங்குகின்ற மனித வாழ்வில் எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

விடுதலைப்பயணம் 20: 14 ல் கூறுகிறது : “விபச்சாரம் செய்யாதே” என்று. லேவியர் 20: 10 விபச்சாரத்தைக் கடுமையாகச் சாடுகிறது, “அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும், அந்தப்பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்”. ஆனால், இயேசு அதனைவிடக் கடுமையான வார்த்தைகளைக் கையாளுகிறார், “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்கிறார்.


சொல்லும் செயலும் பிறப்பதற்கு ஊற்றாக இருப்பது சிந்தனை. நம் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுகின்ற போது அந்த எண்ணம் நம் கற்பனையோடு கலந்து நம் மனக் கண் முன்னே ஒரு காட்சியையே சித்தரிக்கும் தன்மை வாய்ந்தது. 

எண்ணம் முதலில் எழும்; செயல் அதைத் தொடரும். ஒரு செயலின் தொடக்கத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் இன்று நமக்குத் தருகின்றார்.

நமது எண்ணங்களை குறித்து சந்திப்போம் நமது எண்ணங்கள் நேர்மையானதாக இறைவனின் விருப்பத்திற்கு உகந்ததாக இந்தச் சமூகத்தில் நன்மைகளை மட்டுமே முன்னெடுப்பதாக இருக்குமாயின் இறைவனுக்கு நன்றி கூறுவோம்....

இல்லை நமது எண்ணங்களில் மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகுமானால்  இறைவனின் துணையை நாடுவோம்... 

சனி, 11 ஜூன், 2022

மூவொரு கடவுளின் திருவிழா....(12.6.2022)

மூவொரு கடவுளின் திருவிழா....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தாய் திருஅவையாக இணைந்து நாம் என்று மூவொரு கடவுளின் திருவிழாவை பெரு விழாவாக கொண்டாடி கொண்டிருக்கிறோம் .

நாம் பயன்படுத்துகின்ற ஜெபங்களில் மிகவும் பெரியதும் மிகவும் பெரியதுமாக விளங்குவது தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் எனக்கூற கூடியதாகும்.

சிறிய ஜெபம் ஆக இருந்தாலும் மிகப்பெரிய மறை உண்மைகள் மறைந்து இருக்கக்கூடிய மிகப்பெரிய ஜெபமாக விளங்குவதும் ஜெபமே.
ஆல் என்ற தன்மையில் மூவராக தென்பட்டாலும் ஒரே ஒரு படமும் ஒரே வல்லமையும் ஒரு இறை தன்மையும் கொண்டு ஒன்றித்து இணைந்துள்ளார்கள்.

இஸ்ரயேல் மக்கள் பல நேரங்களில் தங்கள் நம்பிக்கையை வைத்திருந்ததும் பல நேரங்களில் நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்றதும் இந்த யாவே இறைவன் மீதான ஒற்றை நம்பிக்கை இவரே துன்பங்களில் இருந்து தங்களை காத்தவர் இவரே தங்கள் வாழ்வில் அனைத்து விதமான எண்ணங்களும் உடனிருந்தவர் தங்களை தந்தவரும் அவரே தங்களை மீட்க வரும் அவரை தங்களை வழி நடத்துபவர் அவரே என ஆழமாக நம்பினார்கள்.  இந்த இறைவன் நம்மை மீட்பதற்கு தன் ஒரே மகனை அனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள் அந்த மகனை எதிர்நோக்கி தங்களைத் தயாரித்துக் கொள்ளக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்ற கடவுளாக இருக்கின்ற யாவே இறைவன் வாக்களித்த படியே தன் மகனை அனுப்பினார் இந்த மனக் குளத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை அவர் தன் வாழ்வால் கற்பித்தார் தனக்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

நமக்காக பாடுகள் பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்ப்பு விண்ணேற்றம் செல்லும் நிலையிலும் நம்மோடு இருப்பதற்கு நம்மை வழி நடத்துவதற்கு தேவையான தூய ஆவியாரே எழுந்தருளினார் இவரின் மீது நாம் ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் ....
இந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த இந்த மூவொரு கடவுளின் திருவிழா நாம் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தலாம் ஆனால் ஒரு கட்டத்தில் இறைவனை அனைத்தையும் வெளிப்படுத்துவார் நிறைவு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியாரின் துணை கொண்டு அனைத்தையும் உணர்ந்து கொள்ள ஒவ்வொரு இறைவனிடம் காணப்பட்ட ஒற்றுமைகளை நமத் ஆக்கிக் கொண்டு மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாட்களும் ஒருவர் மற்றவரோடு இணைந்து இன்புற்று வாழ இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம் ...
 

வெள்ளி, 10 ஜூன், 2022

கிறிஸ்துவை ஏற்றவர்கள் நாம் என்பதை செயலில் காட்டுவோம்(11.6.2022)

கிறிஸ்துவை ஏற்றவர்கள் நாம் என்பதை செயலில் காட்டுவோம்


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தியோக்கு நகரில் முதன்முதலாக கிறிஸ்தவர்கள் என்ற பெயரை அதாவது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என பெயர் பெற்றுக்கொள்கிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்கக்கூடிய நபர்களாக இருந்தார்கள் இந்த அறிவிப்பில் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார்கள் அனைத்திற்கும் மத்தியிலும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி பணியை இன்முகத்தோடு நிறைவேற்றினார்கள் என்பதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இந்த கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாமும் விண்ணக வாழ்வுக்கு உரிய செயல்களை நமது செயலாகக் கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில், நோயாளிகளுக்கு உதவுவதிலும், தனிமையிலும், சிறையிலும் வாடுபவர்கள் சந்திப்பதிலும், சந்திக்கும் நபர்கள் எல்லாம் வாழ்த்துவதில் நிலைத்து இருக்க வேண்டுமென இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக இயேசு குறிப்பிடுகிறார்.

இயேசு கூறுகின்ற இந்த இறைவார்த்தையின் வழியில் நமது வாழ்வை சீரமைத்துக் கொண்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் நமது செயல்களால் அவரின் சீடர்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
 

வியாழன், 9 ஜூன், 2022

எண்ணங்கள் சிறக்க வேண்டும்(10.6.2022)

எண்ணங்கள் சிறக்க வேண்டும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இதை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில்  இறைவன் தன்னை எலியா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்துவதாக கூறுகிறார்.

குகையிலிருந்து வெளியே வந்த எலியா இறைவாக்கினர் பெரும் இரைச்சலில் கடவுளை காண முயல்கிறார் ஆனால் கடவுள் அந்த இறைச்சலில் இல்லை. பெரும் இடிமுழக்க சத்தம் கேட்கிறது அதில் கடவுள் இருப்பதாக எண்ணுகிறார் அதிலும் கடவுள் இல்லை.  ஒரு மெல்லிய காற்றின் வழியாக கடவுள் தன்னை எலியாவுக்கு வெளிப்படுத்துகிறார். 
 

எண்ணங்களின் தொகுப்பாக விளங்குகின்ற மனித வாழ்வில் எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 


விடுதலைப்பயணம் 20: 14 ல் கூறுகிறது : “விபச்சாரம் செய்யாதே” என்று. லேவியர் 20: 10 விபச்சாரத்தைக் கடுமையாகச் சாடுகிறது, “அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும், அந்தப்பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்”. ஆனால், இயேசு அதனைவிடக் கடுமையான வார்த்தைகளைக் கையாளுகிறார், “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்கிறார்.


சொல்லும் செயலும் பிறப்பதற்கு ஊற்றாக இருப்பது சிந்தனை. நம் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுகின்ற போது அந்த எண்ணம் நம் கற்பனையோடு கலந்து நம் மனக் கண் முன்னே ஒரு காட்சியையே சித்தரிக்கும் தன்மை வாய்ந்தது. 

எண்ணம் முதலில் எழும்; செயல் அதைத் தொடரும். ஒரு செயலின் தொடக்கத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் இன்று நமக்குத் தருகின்றார்.

நமது எண்ணங்கள் சிறப்பானதாக அமைகின்ற போது நமது செயல்களும் சிறப்பானதாக மாறுகிறது. 

நமது எண்ணங்களை குறித்து சந்திப்போம் நமது எண்ணங்கள் நேர்மையானதாக இறைவனின் விருப்பத்திற்கு உகந்ததாக இந்தச் சமூகத்தில் நன்மைகளை மட்டுமே முன்னெடுப்பதாக இருக்குமாயின் இறைவனுக்கு நன்றி கூறுவோம்....

இல்லை நமது எண்ணங்களில் மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகுமானால்  இறைவனின் துணையை நாடுவோம்... 


புதன், 8 ஜூன், 2022

உடன்பிறப்புகளோடு இணைந்த வாழ்வு...(9.6.2022)

உடன்பிறப்புகளோடு இணைந்த வாழ்வு...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனிதர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்த விலை மதிப்பில்லாத பரிசு நமது உடன்பிறப்புகள். இந்த உடன்பிறப்புகளோடு இன்பம் துன்பம் என எல்லா சூழ்நிலையிலும் உடனிருந்து பயணிக்கவேண்டும், இணைந்து பயணிக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம். ஆனால், இன்று நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் தன் பெண்டு தன் பிள்ளை தன் வீடு சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்று வாழ்வோரெல்லாம் கடுகு உள்ளம் கொண்டோன் என்ற பாரதிதாசனின் வார்த்தைகளுக்கு ஏற்ப, உறவுகளோடு இணைந்து வாழாமல் தான் என்ற மனப்பான்மையோடு தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றனர்; தனது நலனை மட்டுமே நாடுகின்ற மனிதர்களாக பலர் மாறுகிறார்கள். ஆனால், உடன்பிறப்புகளோடு இணைந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதையே இறைவன் இன்று நமக்கு வலியுறுத்துகிறார். வார்த்தைகளாலும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் உறவுகளை சிதைத்து கொண்டு வாழுகின்ற தன்மையில் இருந்து விடுபட்டு, உறவுகளோடு இணைந்து தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

செவ்வாய், 7 ஜூன், 2022

கடவுளின் திருவுளத்தை அறிவதே திருச்சட்டம்....(8.6.2022)

கடவுளின் திருவுளத்தை அறிவதே திருச்சட்டம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே


இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா உண்மையான தெய்வம் யார்? யாவே இறைவனா? அல்லது பாகால் தெய்வமா? என்ற  வகையில் அவர் மெய்யான தெய்வத்தை உணர்ந்து கொள்ள தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிக்க முயலுகிறார்கள் அதில் வெற்றியும் கண்கிறார்.  வரலாற்றின் அடிப்படையில் இந்நிகழ்வு நிகழ்ந்ததா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மதத்தின் பெயரால் பரப்பப்பட்ட பல தப்பறை கொள்கைகளுக்கு கொள்கைகளுக்கு மாற்றாக யாவே இறைவனை வழிபட கூடியவர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.  எனவே தான் உண்மையான இறைவனை நிரூபிக்க அவர்களால் இயன்றது.  இன்றும் இந்த நிகழ்வு நிகழ்ந்த இடமாக கார்மேல் மலை அடையாளம் காட்டப்படுகிறது. 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலகத்திற்கு வந்ததாக, இயேசு சொல்கிறார். 


திருச்சட்டம் என்பது மோசே வழியாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை குறிக்கும்.

இத்திருச்சட்டம் என்கிற மோசேயின் சட்டத்தினை, கடவுள் கொடுத்திருந்தாலும், அதனுடைய முழுமையான புரிதல், அதனை விளக்கக்கூடிய பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இல்லை. அவர்கள் அதனை தவறாகத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். அதனுடைய உண்மையான அர்த்தத்தை போதிக்கவில்லை.  ஆனால், இயேசு அந்த புரிதலை தனது போதனையின் மூலமாக முழுமைப்படுத்துகிறார். அந்த முழுமையை, உண்மையென பரிசேயர்களாலும், மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருச்சட்டம் பற்றிய இயேசுவின் பார்வை... நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து செய்ய வேண்டும். அவரின் திருவுளத்திற்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். 

இந்த இறைவார்த்தை பகுதி வழியாக இறைவன் இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் அனுதினமும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் இந்த இறைவனின் திருவுளத்திற்க்கு ஏற்ற செயல்களா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க நமக்கு அழைப்பு தருகிறது.  நமது செயல்கள் அனைத்துமே கடவுளுக்கு ஏற்றது என நாம் எண்ணுகிறோம் என்றால் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி கூறவும் ஒருவேளை நமது செயல்களில் பல நேரங்களில் கடவுளின் திருவுளம் செயல்படுவது போல இல்லை என்ற எண்ணம் இதயத்தில் உருவாகிறது என்றால் இனி வருகின்ற நாட்களில் கடவுளின் திருவுளம் எது என்பதை அறிந்து செயல்படுகின்ற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் ....


நமது இதயத்தை எண்ணங்களை ஆய்ந்து அறிகின்ற இறைவன் நம்மை நல் வழி நடத்துவார் எனும் நம்பிக்கையோடு இன்றைய நாளை இனிய நாளாக தூங்குவோம் ...

திங்கள், 6 ஜூன், 2022

நமது வாழ்வு அடுத்தவருக்கு பயன் தரவே...(7.6.2022)

நமது வாழ்வு அடுத்தவருக்கு பயன் தரவே....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை. மற்றவர்களின் வாழ்விற்கு, உப்புபோல சுவை தரக்கூடிய வாழ்க்கை. அப்படி வாழவில்லை என்றால், நமது வாழ்வால் பயன் ஒன்றுமில்லை. 

உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு கூறுகிறார். 


 இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார் என சிந்திக்கும் போது? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம்.

அதுப்போலவே “மிதிபடும்“ என்கிற வார்த்தை பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே . யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் யூதர்களுக்கு, மனம்மாறியதற்கு அடையாளமாக,  தாய்மதத்திற்கு திரும்பிய யூதர், தொழுகைக்கூடத்தின் நுழைவாயிலில், மக்கள் நுழையும் வாயிலருகில், நெடுஞ்சாண்கிடையாக படுத்துக்கிடக்க வேண்டும். தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள் அவர் மீது மிதித்துச்செல்வர். இதனுடைய பொருள்: நம்பிக்கைக்குரிய வாழ்வை வாழ மறுத்த என்னை தண்டியுங்கள் என்பதாகும். இந்த பிண்ணனியில், இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கலாம்.


மொத்தத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை. சாரிபாத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண் தனக்கும் தன் பிள்ளைக்கும் அடுத்த வேலைக்கு வழியில்லை என்ற நிலையிலும் கூட இறைவாக்கினரின் வார்த்தைகளை இதயத்திலிருந்து அவரின் பசியைப் போக்க முயன்றார் ஆண்டவரும் அவரது வாழ்வில் புதுமை நிகழச் செய்தார் என முதல் வாசகத்தில் நம் வாசிக்க கேட்டோம்.   மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் நமது வாழ்வு அமைகிறது என்றால் நமது வாழ்வு மலைமீது உள்ள நகர் போலவும், உப்பாகவும், விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கு போலவும் பலருக்கு பயன் தரும் இத்தகைய வாழ்வை நமது வாழ்வாக்கி கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இன்றைய நாளில்....


ஞாயிறு, 5 ஜூன், 2022

திருச்சபையை வழிநடத்தும் அன்னை....(6.6.2022)

திருச்சபையை வழிநடத்தும் அன்னை....

இறைவனை இயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
2018 ஆம் ஆண்டு நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய தூய ஆவியாரின் பெருவிழாவிற்கு அடுத்த நாளாகிய திங்கள் கிழமையை மாதா திருஅவையின் தாய் என்ற விழாவாக நினைவுகூர்ந்து கொண்டாட அழைப்பு விடுத்தார் அழைப்பின் அடிப்படையில் என்று நம் தாய் அன்னை மரியா திருஅவையின் தாய் என்பதை மகிழ்வோடு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் ...


அன்று இயேசு சிலுவையில் தொங்குகிற போது இதோ உன் மகன் என அன்னை மரியாவை பார்த்து இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் மரியா திருஅவையின் தாயாக மாறினார்.

ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என்றதொரு அவை பல நேரங்களில் பலவிதமான எதிர்மறையான மனநிலை கொண்ட மனிதர்களை சந்தித்தது அப்படி சந்தித்த தருணங்களில் எல்லாம் திருவிளக்கு படுவதற்கான சூழல்கள் பல உதயமாயின அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் திருஅவை அன்னை மரியாவின் பரிந்துரையை நாடியது ...மரியாவின் பரிந்துரை வழியாக திருஅவை சந்தித்த பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டு வந்தது.

அன்று உயிருக்கு பயந்து அஞ்சி நடுங்கி அவர்களை எல்லாம் அழைத்து மாடி அறைக்குள் அமர்த்தி இறைவனிடம் மன்றாட காரணமாயிருந்த அன்னைமரியா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் துணிவோடு பணிசெய்ய திருஅவையின் பாதுகாவலாக இருந்து வழி நடத்தி வருகிறார் ..... 


நம்பிக்கையோடு இந்த அன்னையை நோக்கி நமது மன்றாட்டுக்கள் எழுப்புகிற போது நாம் நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவர்களாக திருஅவை வழிநடத்தும் அன்னையோடு இணைந்து திருஅவையின் மரபுகளையும் கற்பிக்கும் பாடங்களையும் மனதில் இருத்தி நல்லதொரு பயணத்தில் ஈடுபட்டு திருஅவையின் வளர்ச்சிக்கு உதவிட திருச்சபையை வழிநடத்தும் அன்னையோடு இணைந்து பயணிப்போம். 

சனி, 4 ஜூன், 2022

வாக்கு மாறாதவர் கடவுள்...(5.6.2022)

வாக்கு மாறாதவர் கடவுள்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான். உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது, இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்! இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள். அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான். குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான். இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது. ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இக்கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு  வைத்த பெயர், "ஒரு மனிதன் பிறந்தான்".

      மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதும் தீயதும் குடி கொண்டிருக்கிறது. சூழலுக்கேற்ப மனிதன் மாறுபடுகிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், நாம் வாழக்கூடிய சமூகத்தில், அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக நாம் சித்தரிக்கக் கூடிய மனிதனுக்குள்ளும் தூய ஆவியானவர் இறங்கி செயலாற்றுகிறார். அவனுக்குள்ளும் நன்மைத்தனங்கள் இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்து கொள்ள நமது வாழ்வில் நன்மை தீமையை அறிந்து ஏற்றுக்கள்ள கடவுள் நமக்கு தூய ஆவியாரை தருவதாக வாக்களித்தார்.

      வாக்கு மாறாதவர் கடவுள். கடவுள் தான் சொன்னதை சொன்ன நேரத்தில் நிறைவேற்றக் கூடியவர். இவ்வுலகின் மீட்புக்காக  தன் மகனை அனுப்புவதாக வாக்களித்தார்.  அவ்வாக்கை நிறைவேற்றினார்.  இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது,  ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். தான் கற்பித்தவைகளை தன் வாழ்வாக மாற்றினார்.  தான் இறப்பேன் என்பதை முன்னறிவித்தார். இறந்த அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று அறிவித்தார். தான் அறிவித்த வார்த்தைகளுக்கு ஏற்ப அனைத்தையும் செயல்படுத்தியவர் இறைவன். உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் உங்களோடு இருக்க  ஒரு துணையாளரை தருவேன் என வாக்களித்தார். இதையே நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்டோம்.  அந்த துணையாளரே தூய ஆவியானவர். 

      இந்த துணையாளர் நம்மிடம் வருகிற போது நாம் பலவிதமான, அளப்பரிய காரியங்களை முன்னெடுக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணமாக இன்று அமைவதே இன்றைய முதல் வாசகம். அன்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்கி பயந்து போய், மாடி அறைக்குள் முடங்கிப் போய் கிடந்த சீடர்கள் எல்லாம்,  தூய ஆவியாரின் வருகைக்கு பிறகாக, துணிவோடு வந்து, யாரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்களோ, அவர்களுக்கு மத்தியில் போய் நின்று,  ஆண்டவர் இயேசுவின் இறப்பு உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.
நாசரேத்து இயேசுவைக் கொன்றவர்கள் நீங்கள் என்று சாட்சி கூறினார்கள். அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 
அதற்கு நாங்கள் சாட்சிகள் என்று சான்று பகரக் கூடிய மனிதர்களாக மாறினார்கள். 

          தோல்வியில் துவண்டு போய்,  நம்பிக்கை இழந்து போய்,  மூடிய அறைக்குள் முடங்கிக் கிடந்த மனிதர்களுக்கு தூய ஆவியானவர் துணிவூட்டினார்.  அந்த தூய ஆவியானவர் இன்று நம்மோடு இருக்கின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து நன்மை தீமைகளை எடுத்துரைக்கிறார். 

இந்தத் தூய ஆவியானவர்  இதயத்தில் தங்குகிறார் என்றால்,  நமது உடலாகிய ஆலயம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.  இந்த உடலைக் கொண்டு,  நாம் ஊனியல்புக்கு ஏற்ற வகையில் பாவ வழியில் ஈடுபடக்கூடாது என்பதை, இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக வலியுறுத்துகிறார். துணையாளரை அனுப்புவதாக வாக்களித்த இறைவன், தன் வாக்கிற்கு ஏற்ப துணையாளரை அனுப்பினார். 

         துணையாளரும் வந்திருக்கிறார்; நம்மோடு இருக்கிறார்; நமக்குள்ளாக இருக்கிறார். நமது ஊனியல்புக்கு ஏற்ற செயல்களால், பல நேரங்களில் நாம் அவரை உணர்ந்து கொள்ள மறுக்கிறோம். ஆனால் ஊனியல்புக்கு ஏற்ற செயல்களையெல்லாம் புறம்தள்ளி, தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து, அவர் காட்டும் பாதையில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

வெள்ளி, 3 ஜூன், 2022

சாட்சிய வாழ்வு வாழ.....(4.6.2022)

சாட்சிய வாழ்வு வாழ.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் யூதர்கள் பலரை அழைத்து அவர்களிடத்தில் தன் நிலை குறித்து உரையாடுகிறார் பவுலின் இந்த உரையாடல் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல மாறாக கடவுளின் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தும் வண்ணமாகவே அமைந்திருந்தது.

அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானை குறித்து அவரின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும்  இயேசு கூறியவற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்று திருஅவை வரலாற்றில் பல நேரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது உண்டு.... இயேசுவால் அழைக்கப்பட்ட அவரது பன்னிரண்டு சீடர்களுக்கும் இறுதியாக மரணத்தை சந்தித்தவர் இந்த இயேசுவின் அன்புச் சீடரான  யோவான்...

இயேசுவினுடைய சீடர்கள் அனைவருமே இயேசுவின் வார்த்தைகளை பாரெங்கும் சென்று அறிவித்து அதன் விளைவாக சிலர் தனது இன்னுயிரை இயேசுவுக்காக தியாகம் செய்தார்கள். அவர்களின் வரிசையில் இந்த திருத்தூதரான யோவான் இயேசுவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றிக் கொண்டு தனது வாழ்வால் மற்றவருக்கு ஒரு சான்று பகர்கின்ற வாழ்வினை வாழ்ந்தார்.   காட்சிகள் மூலமாக இறைவனின் திட்டம் என்ன என்பதை மக்களுக்கு எடுத்துரைத்த ஒரு மாமனிதராக வாழ்ந்து இறந்து போனார் என்பது வரலாறு இவரை குறித்து நமக்கு கொடுக்கின்ற பாடமாக உள்ளது...

இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் இயேசுவின் வார்த்தைகளுக்கு சான்று பகர கூடிய மனிதர்களாக இருக்க இந்த நாளில் அழைக்கப்படுகின்றோம் நமது வாழ்வு இயேசுவின் வார்த்தைகளின் படி அமைந்திருக்கிறதா? அல்லது தனது மனம் போன போக்கில் வாழ்வானது நகர்கிறதா கேள்வியை இதயத்தில் இருத்துவோம். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வு சான்று பகர்கின்ற சாட்சிய வாழ்வாகிட இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.


புதன், 1 ஜூன், 2022

நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட ...(3.6.2022)

நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட ...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
                    இன்றைய முதல் வாசகத்தில் பவுல் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்படி அகிரிப்பா என்பவர் பெஸ்து என்பவரிடம் கூறியபோது, அவர், குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதன் தனது குற்றத்தை பற்றி விளக்குவதற்கான வாய்ப்பை நாம் தர வேண்டும் எனக் கூறுகின்றார். அது அவரின் இதயத்து எண்ணத்தையும் வாழ்வில் அவர் பின்பற்றிய அறத்தையும் வெளிக்காட்டுகிறது.

              இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவைப் பார்த்து என்னை நீ அன்பு செய்கிறாயா? என மும்முறை கேள்வி எழுப்புகிறார். இருமுறை, "ஆம்! அன்பு செலுத்துகிறேன்!" என பதில் கூறிய பேதுரு, மூன்றாம் முறை,  ஆண்டவரே எல்லாம் உனக்கு தெரியுமே எனக்கூறி, தன் உள்ளத்து எண்ணத்தையும் தன் வாழ்வில் அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்துகின்றார் .

                 பேதுருவின் வாழ்வில் இயேசுவோடு நடந்த இந்த உரையாடல் பேதுருவின் எண்ணத்தை,  அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அனைத்து சீடர்களுக்கும் வெளிகாட்டும் வகையில் உருவான ஒரு உரையாடல் என்றுதான் நாம் பார்க்கவேண்டும். இயேசுவின் சீடர்களுள் அறிவில் சிறந்தவரான யோவான் போன்ற திறமையானவர் அல்ல இந்த பேதுரு. பவுலைப் போல படித்த, திறமையோடு இறைவார்த்தையை அறிவிக்கும் புலமை பெற்றவர் அல்ல இந்தப் புனிதப் பேதுரு... ஆனால், இந்தப் பேதுருவை தான் இயேசு திரு அவையின் தலைவராக உருவாக்கினார். இந்தப் பேதுருவின் இறுதிநாட்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு இன்றைய இறைவார்த்தை வழியாக பேதுருவுக்கு முன்னறிவித்தார்.  

               நாம் பார்ப்பது போல இந்த இறைவன் மற்றவரை பார்ப்பவர் அல்ல ....நமது இதயங்களை ஆய்ந்து அறிந்துள்ள இறைவன் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் இதயத்தில் இருத்தியுள்ள அறம் சார்ந்த செயல்களையும், ஆண்டவர் மீதான அன்பையும் குறித்து இன்றைய நாளில் ஆழமாக சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றார்....

          வெறும் வார்த்தையின் வடிவில் மட்டும் நான் உம்மை அன்பு செய்கிறேன் எனச் சொல்லி விட்டு சென்றவர் அல்ல, இந்தப் பேதுருவும். தனது வார்த்தையை வாழ்வாக்கியது போன்று நம்மையும் வாழ்வாக்க அழைப்பு விடுக்கின்றார்.

      நாம் இறைவன் மீது எத்தகைய அன்பு கொண்டவர்கள் என்பதை இந்தச் சமூகத்தில் நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட நாமும் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

எல்லோரும் இணைந்த வாழ்வு...(2.6.2022)

எல்லோரும் இணைந்த வாழ்வு...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை குறித்த நற்செய்தியை பறைசாற்றுகிறார் ஏற்கனவே ஆண்டவர் இயேசுவை குறித்த நற்செய்தியை பறைசாற்றிய காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தலைமைக் குருக்களின் முன்பாக அழைத்து விசாரிக்கப்பட்ட போது அஞ்சாது துணிவோடு ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்க கூடியவராக இருக்கின்றார் அவரின் போதனை உயிர்ப்பை நம்புகின்ற பரிசேயருக்கும் உயிர்ப்பை நம்பாதது சதுசேயக்கும் இடையே குழப்பத்தை உருவாக்குகிறது. 
அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இயேசுவின் வார்த்தைகளும் இந்த வார்த்தைகளை வாழ்வாக்குவது எப்படி என சிந்திக்க நம்மை அழைக்கின்றது.

கடவுள் தம் உருவில் மானிடரைப்* படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
தொடக்க நூல் 1:27 குறிப்பிடுகிறது ... 

கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டு இருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள். நம்மிடையே சாதி, மத, இன பாகுபாடுகளை பலர் விதைத்து இருந்தாலும் அன்பு என்ற ஒற்றை குடையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றித்து வாழ முயல வேண்டும். என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் என்று நமக்கு உணர்த்துகிறார்.

நாம் வாழ்வில் தோல்வியை சந்திக்கின்ற போதும், துன்பங்களை சந்திக்கின்ற போதும் எப்படி ஒருவர் மற்றவர் நம்மை ஊக்கம் ஊட்டவேண்டும், நமக்கு உதவ வேண்டும் என எண்ணுகிறோமோ அது போலவே ஒவ்வொருவருமே எண்ணுகிறார்கள்... 

நம்மை படைத்த இறைவன் நாம் எல்லோரும் இணைந்து இருப்பதையே விரும்புகிறார். நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து இருப்பதுதான் இறைவனோடு இணைந்து இருப்பதற்கான வழி என்பதை உணர்ந்து கொண்டவர்களாக.

இயேசுவின் இறையாட்சி இம்மண்ணில் மலர எல்லோரும் ஒன்றித்து வாழ, பாகுபாடுகளை கடந்தவர்களாய்  மாற்றத்தின் முதல் விதையாய் நாம் இருக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார் ....

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...