இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் அமட்ச்சியா என்பவர் இறைவாக்கினர் ஆமோஸ் உரைப்பதை, இறைவாக்கு அல்ல- தனது பிழைப்புக்காக அவர் இவ்வாறு இறைவனது வார்த்தைகள் எனக் கூறி பலவற்றை உரைக்கிறார் என குறிப்பிடுகிறார். அதற்கு ஆமோஸ், நான் இறைவாக்கினரும் அல்ல, இறைவாக்கினர் குழுவிலும் இடம் பெறவில்லை. ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பதே என் தொழில். ஆனால் என்னை இறைவன் அழைத்து இப்பணியை செய்யச் சொன்னார். எனவே நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறி, இறைவாக்கு உரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, முடக்குவாதமுற்ற ஒரு மனிதனைப் பார்த்து, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றதுமே, அங்கிருந்த திருச்சட்ட அறிஞர்களும் பரிசேயர்களும் சதுசேயர்களும் இறைவனைத் தவிர பாவத்தை மன்னிக்க எவராலும் இயலாது. இவர் பாவங்களை மன்னிக்கிறார் என்றால், இவர் இறைவனை அவமதிக்கிறார் கூறி இயேசுவின் பெயரில் குற்றம் சாட்டக்கூடிய நண்பர்களாக இருந்தார்கள்.
ஆனாலும் இயேசு அவர்களை பார்த்து நோயற்ற ஒருவரின் பாவத்தை மன்னிப்பதே சிறந்தது என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட நிகழ்வும், நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது செய்தி போது வாழ்வில் நாம் நல்ல செயல்களை முன்னெடுக்கின்ற போது
அல்லது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, பலவிதமான எதிர்ப்புகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாது மற்றவரின் பேச்சுக்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்து நமது அறச்செயல்களையும் நிறுத்தி விடாது தொடர்ந்து இறைவனது பணியை ஆற்ற, இறைவன் காட்டுகின்ற பாதையில், தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்ற மையச் சிந்தனையினை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ளுகிறோம். நாம் உணர்ந்து கொண்ட இந்த வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். எதிர்ப்புகள் பல வந்தாலும், ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதில் நிலைத்திருக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக