வியாழன், 30 செப்டம்பர், 2021

தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட...(1.10.2021)

தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட...


இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இயேசுவை பின்பற்றி கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த கிறிஸ்தவர்களின் இறையியல் என்பதை கோழிக்கஞ்சு இறையியல் என குறிப்பிடுவார்கள்.

அதாவது, ஒரு கோழியானது தனது குஞ்சுகளோடு இரையைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என தெரிந்தால், தாய்க்கோழி குரலெழுப்பும். தாயின் குரல் ஓசையை புரிந்துகொண்டு அனைத்து குஞ்சுகளும் ஓடிவந்த தாய்க்கோழியின் இறக்கைகளின் அடியில் தங்களை மறைத்துக் கொண்டு பாதுகாப்பை பெரும். அதுபோலவேதான் கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரும் வாழ்வில் அறநெறி தவறி நடக்கின்ற போது அவர்களின் வாழ்வு தவறானது என்ற செய்தியானது இறைவனால் பல நபர்கள் வழியாக வழங்கப்படுகிறது. அதை உணர்ந்து கொண்டு தங்கள் வாழ்வை சரி செய்து கொண்டு அந்த ஆண்டவரிடத்தில் வந்து தங்களை முழுமையாக சரணாகதி அடைந்து, பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற இறையியல் கருத்தானது கிறிஸ்தவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் தாய் போல நம்மை தேற்றுவதாக குறிப்பிடுகின்றார். தாயாக இருந்து நம்மை பாதுகாக்கவும், பராமரிக்கவும், நமது குற்றம் குறைகளை மன்னித்து, நம்மை நேரிய வழியில் நடக்கவும், வழிகாட்டக்கூடிய பணியினை இறைவன் ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் வழியாக செய்து வருகிறார். 
தவறு செய்கின்ற ஒரு குழந்தையை தாயானவள் கண்டிக்கவும், தவறான வழியை சுட்டிக்காட்டவும், சரியான வழியில் நடக்க அறிவுறுத்தும், அவ்வழியில் அழைத்துச் செல்லவும் முயல்வது போல, இறைவனும் நமது வாழ்வில் நாம் நல்ல மனிதர்களாக, இறைவன் விரும்பக் கூடியவர்களாக, ஒரு தாய் விரும்பக்கூடிய பிள்ளையை போல், இந்த உலகத்தில் இறைவன் விரும்பக்கூடிய மனிதர்களாக நாம் வளர வேண்டும் என்பதற்காக இறைவன் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக பல வழிகாட்டல்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் வழிகாட்டல்களை கண்டு கொண்டு வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரது பாதையில் பயணிக்க கூடிய குழந்தைகளாக நாம் மாறிட வேண்டும். 

 குழந்தைகள் எப்படி அடித்தாலும் அடித்தவரிடமே  சென்று ஒட்டிக் கொள்கிறதோ, அது போல நமது வாழ்வில் ஏதேனும் துன்பங்கள், துயரங்களை நாம் சந்திக்கின்ற போதெல்லாம், நம் துன்ப துயரங்களில், நம்மைவிட அதிகம் துயர் அடைவது...  நம் தாயாக இருக்கும் இறைவனே என்பதை உணர்ந்து கொண்டு அந்த தாயின் வழிகாட்டலின் அடிப்படையில் செயல்பட்டு, வாழ்வில் நல்ல மனிதர்களாக இயேசு விரும்பக்கூடிய நல்ல சீடர்களாக, பணியாளர்களாக தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
நமது வாழ்வு முறையை சீர்தூக்கிப் பார்த்து, தாயாம் இறைவன் காட்டுகின்ற வழியில் அவரைப் பின்பற்றி, வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி, சொல்லிலும், செயலிலும்  தாய்க்கு நல்ல குழந்தைகள் நாம் என்பதை வெளிக்காட்ட கூடியவர்களாக மாறிட இறையருள் வேண்டும

புதன், 29 செப்டம்பர், 2021

ஆட்கள் தேவை.....(30.9.2021)

ஆட்கள் தேவை.....

 அன்புக்குரியவர்களே.....
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அறுவடைக்கு ஆட்களை அனுப்புமாறு இறைவனிடம் மன்றாடுங்கள்....

இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், நற்செயல் செய்வதற்கும், ஆண்டவர் இயேசுவின் சீடர்களால் அவரது விழுமியங்களின் படி வாழ்வதற்கும் இன்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இதுநாள் வரை பலர் இவ்வேலைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முழுமையாக கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பும் பொழுது, அறுவடைக்கு வந்தவர்கள்தான் ஆனால் அறுவடை செய்யாது அடுத்தவர் மீது குறை காண்பவர்களாக குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக், குறைகளைச் சுட்டிக் காண்பித்து தங்களது வாழ்வை நகர்த்துபவர்களாகத் தான் அதிகம் இருக்கிறார்கள்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது குறைகளை சுட்டிக் காண்பித்தார். ஆனால் அதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை... பிறர் எப்படி வாழவேண்டும்? என்பதை தன் வாழ்வால் வாழ்ந்து காட்டினார். இன்று அவரை பின்பற்றி அவரது பணியில் தங்களை இணைத்துக்கொண்டு இருக்கக்கூடியவர்கள், வருகின்ற காலத்தில் அறுவடை பணியில் இணைத்துக் கொள்ள வருகின்றவர்களும், அடுத்தவரின் குறைகளை பெரிது படுத்துவதையும், சுட்டிக்காட்டுவதையும் விட தங்களது வாழ்வால்  இயேசுவைப் பல சாட்சிய வாழ்வு வாழ இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
அறுவடை மிகுதி வேலையாட்கள் குறைவு..... குறை சொல்பவர்கள் அதிகம் நிறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மிகவும் குறைவு. 

நாம் குறைகளை மட்டும் பெரிதுபடுத்திக் குற்றம்சாட்டி, குற்ற உணர்வோடு வாழ மக்களை தூண்டுவதை விட, நிறைகளை பெரிதுபடுத்தி பல நிறைகளை, நல்லவற்றை நமது வாழ்வில் நாமும் செய்து நமது வாழ்வால் பிறரும் இந்த அறுவடை பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும் என்பதை மனதில் இருத்தியவர்களாய் இனி வருகின்ற நாட்களில் நல்ல பணியாளர்களாய் ஆண்டவரின் அறுவடையில் பங்கேற்கக் கூடியவர்களாய் மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம் இன்றைய நாளில்....

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

வானதூதர்களைப் போல வாழ்வு....(29.9.2021)

வானதூதர்களைப் போல வாழ்வு....

இறைவன்  இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று நம் தாய் திருஅவையானது அதிதூதர்களான மைக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரின் திருநாளை  நினைவு கூறுகிறது.

வானதூதர்கள் என்றால் கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள்.எப்போதும் நம்மை பாதுகாப்பவர்கள். கடவுளின் செய்தியை தாங்கி செல்பவர்கள் இந்த சிறப்பு மிகுந்த  மூன்று வானதூதர்கள்  பற்றி சிந்திக்க இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

கபிரியேல் வானதூதர்

கடவுளிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வருபவராக இவர் பார்க்கப்படுகிறார். அன்னை மரியாளுக்கு இயேசுவின் பிறப்பைப் அறிவித்தவர் இவர்தான். யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல் செய்ததும் இவர் வழியாகவே.
 இயலாத காரியம் என்று உலகம் கருதப் அவற்றை கடவுளின் ஆற்றலால் ஆகும் என பறைசற்றுவது இவரது பணியாக பார்க்கப்படுகிறது.

புனித மைக்கேல் 

கடவுளுக்கு நிகர் யார்? என்ற அர்த்தத்தில் தீய ஆவியின் பிடிகளில் இருந்தும், சாத்தானின் அழுத்தத்தில் இருந்தும் நம்மை காக்க இறைவனால் படைக்கப்பட்ட வானதூதர் இவர். அமைதி தூதர் என்ற என்ற பார்வையும் நிலவுகிறது.

தூய ரபேல்

குணமாக்கும்  கடவுளின் வல்லமை தூய ரபேல்  வானதூதர் வழியாக வெளிப்படுகிறது. ஒரு இளைஞர் வடிவிலாக தூதரை அனுப்பி  தோபித்துக்கும் அவரின் மருமகள் சாராவிற்கும் உடல்நலன் அருள்கிறார் ஆண்டவர்.

இந்த மூன்று வானதூதர்களுமே இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற பாடம் என்னவென்று சந்திக்கின்ற போது இவர்கள் மூவருமே இறைவனுக்கு சாட்சிகளாக, இறைவனது வார்த்தைகளை தாங்கி வருபவர்களாக, வார்த்தைகளுக்கு சான்று பகர்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த மூன்று வானதூதர்களைப் போலவே, நாமும் நமது வாழ்வில் இறை வார்த்தைக்கு சான்று பகர கூடியவர்களாகவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாகவும், ஒருவர் மற்றவரை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கடமைப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக  உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு தரப்படுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகளை கண்டு நத்தானியல் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை ரபி என்று அழைக்கின்றார். ஆண்டவரின் வார்த்தைகள் ஐயங்களை நீக்கி, அச்சங்களை தவிர்த்து, ஆற்றலை தரவல்லது இதற்கு உதாரணமாக தான் இன்றைய நாளில் நாம் நினைவு கூறுகின்ற வானதூதர்கள்  புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோர் விளங்குகின்றார்கள். இவர்களைப் போல நாமும் இறைவார்த்தை சான்று பகர கூடியவர்களாக, இறைவனது வார்த்தைகளை தாங்கி செல்பவர்களாக, இச்சமூகத்தில் வலம் வரவும், இறைவார்த்தையின் அடிப்படையில் பல நல்ல உள்ளங்களை இறைவன்பால் கொண்டு வரவும் இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

ஏற்பும் நிராகரிப்பும்....(28.9.2021)

ஏற்பும் நிராகரிப்பும்....


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
40 வீடுகளைக் கொண்ட ஒரு அழகிய கிராமம் அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே வறுமையில் வாடுபவர்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தால் அவர்கள் அனைவரும் ஏழைகள் என சித்தரிக்கப்பட்டு இருந்தனர்.
தாண்டவமாடிய தானே புயலால் இவர்களது கிராமத்தில் சில வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த கிராம வாசிகளும் பாதிக்கப்பட்டார்கள் என  அரசு அறிவித்தது நலத்திட்ட உதவிகளை செய்தது. ஆனால் அங்கு பணியாற்றிய பங்கு பணியாளர் பாதிக்கப்பட்ட வீடுகளை மட்டும் கணக்கிட்டு அந்த வீடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் உதவி எங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். எங்களில் ஒரு சிலருக்கு மட்டும் என்பதை எங்களால் ஏற்க இயலாது எனக் கூறி ஊரிலிருந்து யாரும் சென்று அந்த உதவியை வாங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களையும் வாங்க விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். நிலைமையை அறிந்த போது அங்கு சமரசத்தை உருவாக்கும் முயற்சியில் சில வழிமுறைகளை பரிந்துரைத்த போதும், எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். இல்லை என்றால் யாருக்கும் செய்ய வேண்டியது இல்லை என்று கூறி தங்களுடைய வாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இறுதியில் பங்கு பணியாளர் வேறு ஒரு பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு அந்த உதவிகளை செய்வதாக தனது முடிவை மாற்றிக் கொண்டார.
மண்ணில் பிறந்த மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நமது துயரத்தை போலவே அடுத்தவர் வாழ்விலும் துயரமானது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தன் குறையை போக்க, தன் துயரத்தை நீக்க பலர் உதவி செய்ய வேண்டும் என எண்ணுவது போல, அடுத்தவரின் துயரத்தை நீக்க  உதவி செய்ய வேண்டுமென எண்ணுவதற்கு பதிலாக, எனக்கு உதவாதவர்கள் யாருக்கும் உதவக்கூடாது என்ற எண்ணத்தில்  பயணம் செய்து கொண்டிருக்கிறரர்கள்.

 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் உங்களோடு இருக்கிறார் எனவே  நாங்களும் உங்களோடு வருகிறோம். அந்த ஆண்டவரை புகழ்ந்து, போற்றி, வழிபடுகிறோம் என்று கூறி மக்கள் ஒன்றிணைந்தனர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உயிர்த்த பிறகு எருசலேமுக்குச் செல்கிறார். எனவே சீடர்களை முன்கூட்டியே அங்கு செல்ல அவர் அறிவுறுத்திய போது இயேசுவின் வார்த்தைகளை கேட்டு எருசலேம் நோக்கி சென்று கொண்டிருந்த சீடர்கள் சமாரியா பகுதி வழியாகச் சென்றார்கள். 

சமாரியா பகுதி என்பது சமூகத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கக்கூடிய பகுதியாக பார்க்கப்பட்டது.  இன்று நிலவுகின்ற சாதிய தீண்டாமைக்கு வேராக இருந்தது தான்  யூதர் - சமாரியர் பிரச்சனைகள்...

யூதர்கள் சமாரியரை ஏற்றுக்கொள்வதில்லை. யூதர்கள் தங்களை புனிதர்கள் எனவும், சமாரியர்கள் தீட்டானவர்கள்  எனவும் கருதினர். எருசலேம் தேவாலயத்திற்கு செல்வதற்கு சமாரியா வழியாகச் சென்றால் எளிதில் சென்று விடலாம். ஆனால் தீட்டான மக்கள் இருக்கின்ற பகுதி எனக்கூறி அந்த மக்கள் இருக்கின்ற பகுதி வழியாக செல்லாமல் யோர்தான் ஆற்றை கடந்து பல மைல் தூரம் பயணம் செய்து எருசலேம் ஆலயத்தை சென்றடைய கூடியவர்களாக தான் யூதர்கள் இருந்தார்கள். யூதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக்  கருதினார்கள்.

இந்த சமாரியர்கள் இறைவனின் மக்கள்,  இறைவனால் படைக்கப்பட்டவர்கள், இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் வண்ணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து யூதர்கள் செல்ல தயங்கிய சமாரியா பகுதிக்குச் சென்று அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு உரையாடி அவர்களுக்கு இறைவார்த்தை வழியாக வழிகாட்டியவர். பல வல்ல செயல்களை அவர்களிடத்தில் நிகழ்த்திக் காட்டியவர். இந்த இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக எருசலேமுக்கு செல்கிறார். எனவே அவரை அங்கு சென்று காண்பதற்காக பயணப்பட்டுக் கொண்டிருந்த சீடர்கள் சமாரியா பகுதிக்கு வந்தபோது நீங்கள் எருசலேமுக்குச் செல்ல இருக்கிறீர்கள். எனவே உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறி அவர்களை உதாசீனப் படுத்த கூடிய பணியில் ஈடுபட்டார்கள்.

 இந்த சமூகத்தில் துன்புற கூடிய மக்களின் சார்பாக நிற்கின்ற போது நாம் யாருக்காக நிற்கின்றோமோ அவர்களே நமக்கு எதிராக இருக்கக் கூடிய சூழ்நிலை இன்று எதார்த்தமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தான் இறைவன் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

சமாரியர்கள் தங்களை ஏற்றுக்கள்ளவில்லை என்று எண்ணியதும். இவர்களை தீயினால் அழித்து விடுமாறு இறைவனிடத்தில் சீடர்கள் மன்றாடியபோது கடவுள் அவர்களை அடுத்த பணியை செய்வதற்கு செல்லுங்கள் என்று கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பினார்.

 கடவுள் நினைத்திருந்தால் இந்த மக்களுக்காகவும் தானே நான் என் உயிரைத் தியாகம் செய்தேன். இவர்களையும் கடவுளின் பிள்ளைகள் என அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே கற்பித்தேன். இவர்களோடு ஒருவராக தானே நான் என்னையும் இணைத்துக் கொண்டேன். ஏன் இவர்கள் என் பெயரால் வருபவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை? என்று கூறி அவர்கள் மீது கோபம் கொள்ளக் கூடியவராக இருந்திருக்கலாம். ஆனால் இறைவன் அப்படியல்ல, ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் நலமான நல்ல பணிகளை, சமத்துவமான சமூக நீதிக்கான பணிகளை இம்மண்ணில் விதைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என இயேசு தன் சீடர்களுக்கு கற்பித்தார். அதே பாடத்தை தான் இன்று நமக்கும் கற்பிக்கின்றார்.

 அனுதினமும் பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்ற பல நேரங்களில் சிலரின் நீதிக்காக, சிலரின் துயரத்தைத நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் பொழுது அதை கண்டு கொள்ளாது, நம்மை அவர்கள் நிராகரித்தாலும் நாம் அவர்களை நிராகரிக்காது, இந்த மக்களை என்னை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் இவர்களுக்கான பணியினை செய்து கொண்டே செல்வேன் என்று  ஆண்டவர் இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் நமது வாழ்விலும் நாம் நல்லதையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் இம்மண்ணில் நிலைநாட்டக் கூடிய இயேசுவின் பணியாளர்களாய்தொடர்ந்து...... நிராகரிப்பவர்களுக்கு மத்தியில் பயணம் செய்ய இறைவன் அழைப்பு தருகின்றார்.  
அழைப்பை உணர்ந்து கொண்டு வாழ்வில் சொல்லில், செயலில் மாற்றத்தைக் காண கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.... ஏற்றாலும் நிராகரித்தாலும் நாம் அனைவரையும் ஏற்பவர்களாகவே இருப்போம்....

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாது...(27.9.2021)

தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாது

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாதது எது? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்த்தால் அன்பு என்பதே அதற்கு சரியான பதிலாக இருக்க முடியும் என எண்ணுகிறேன்.

ஒருவருக்கு எப்போது காதல் வரும் என்பது யாருக்கும் தெரியாது... ஏன் காதல் வந்தது என்றாலும் தெரியாது...

எப்போது? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத ஒன்று தான் காதல் என்பார்கள். 
காதலின் பெயரால் உருவாகின்ற இந்த அன்பு உறவில் சில நேரங்களில் அன்பு என்பது மிகவும் கடுமையான ஒன்றாக இருக்கும்.  அன்பின்  மிகுதியால் சில இடங்களில் வன்முறைகளும், கொலைகளும் நடந்தேறுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.... அது உண்மையான அன்பு அல்ல...

உண்மையான அன்பு என்பது நம் விருப்பப்படி அனைவரும் இருக்க வேண்டும் என்பது அல்ல மாறாக மற்றவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பாகும்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் என்பதற்கு ஏற்ப.... ஆயிரம் அணு ஆயுதங்களால் சாதிக்க முடியாததையும் அன்பு என்ற ஒற்றை சொல்லை கொண்டு சாதிக்க முடியும்.... அன்புக்கு ஆக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும்... என பலர் கூறுவது உண்டு.

ஆனால் அன்பு என்பது அழிவுக்கான ஒன்று அல்ல, இது ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒன்று. இன்று நிலவும் இந்தச் சூழ்நிலைகளில் சில நேரங்களில் அன்பைக் கொண்டு பல இதயங்களை காயப்படுத்தும் நிகழ்வானது அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த அன்பு வெறி என்பது நம் உள்ளத்தை இருத்தலாகாது என்பது இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.
 அன்பு எப்போதும் அனைவரையும் அரவணைக்க கூடிய ஒன்றாகவே இருக்க வேண்டும்  அன்பு என்பது நானா? நீயா? என்ற போட்டிக்கு இடம் தரக் கூடாது.  நாம் என்ற உணர்வோடு பயணிக்க வேண்டும். அன்பு என்பது குறைகளை பெரிது படுத்தாது நிறைகளை மட்டுமே முன்னிறுத்தி நலமான நல்ல உறவினை ஒருவர் மற்றவருக்கு இடையே உருவாக்க வேண்டும். இத்தகைய பண்புகளை கொண்டவர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர வேண்டும் என்பது இறைவனது விருப்பம். எனவே தான் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி இயேசுவுடன் இல்லாதவர்களை கண்டு இயேசுவின் சீடர்கள் பொறாமை கொண்ட போது அங்கு பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை மாறாக அன்பு கொள்ள வேண்டும் என்ற செய்தியினை இறைவன் முன் நிறுத்துகிறார். அது போலவே தங்களில் யார் பெரியவர்? என்ற விவாதத்தில் ஈடுபடும் போது கூட ஒரு சிறு குழந்தையை முன்னிறுத்தி இந்த குழந்தையை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார் என்று அன்பு உயர்வு தாழ்வு கருதாது அனைவரையும் ஒன்றாக கருத வேண்டிய ஒன்று என்ற வாழ்க்கை பாடத்தை இயேசு கற்பிக்கிறார்...

இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகின்ற நாம் இந்த அன்பு என்பதைக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் செய்கின்ற பணிகள் என்ன? என சீர்தூக்கிப் பார்ப்போம். அன்பின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர்களாக நமது பாதை இருக்கிறதா? அல்லது அன்பின் பெயரால்  ஏமாற்றுபவர்களாகவும், போலி அன்பு கொண்டவர்களாக நாம் பயணம் செய்து கொண்டு இருக்கின்றோமா? கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பார்ப்போம்.

அன்பு தன்னலம் கருதாது பிறர் நலத்தை முன்னிறுத்துவது... அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தரக்கடிய வகையில் நமது வாழ்வு அமைய இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்....

சனி, 25 செப்டம்பர், 2021

எதிர்பார்ப்பு இல்லை என்றால் கைமாறு உண்டு...(26.9.2021)

எதிர்பார்ப்பு இல்லை என்றால் கைமாறு உண்டு...

அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒருமுறை ஒரு பேருந்தில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த ஒரு 18 வயது மிக்க ஒரு பெண் எழுந்து நின்று அந்த வயதான மூதாட்டி அமர்வதற்கு இடம் கொடுத்தார். அதை பார்த்த அந்த பேருந்தில் இருந்த இன்னொரு மூத்தவர் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து நின்று அந்தப் பெண்மணிக்கு அமர்வதற்கு இடம் கொடுத்தார். 

இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது உள்ளத்தில் ஒருவிதமான உணர்வு எழுந்தது... எந்தவித பயனும் இன்றி நாம் அடுத்தவருக்கு செய்கின்ற சின்ன  உதவிக்கு நமக்கு கண்டிப்பாக  கைமாறு கிடைக்கும் என்பதாகும். 

தனக்கு மற்றவர் இடம் தருவார் என்ற எண்ணத்தோடு இந்த பதினெட்டு வயது நிரம்பிய பெண் இடம்  தரவில்லை அந்த மூதாட்டிக்கு....அதுபோலவே 40 வயது மிக்க அந்த  பெரியவரும் இந்த சிறுமிக்கு இடம் கொடுக்கும் பொழுது தனக்கு கைமாறு கிடைக்கும் என்று எண்ணவில்லை..... எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்கின்ற உதவியினால் கைமாறி நிச்சயம் கிட்டும் இதையே இன்றைய நாள் வாசகங்களில் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காக யாரேனும் ஒருவர் ஒரு குவளை நீர் கொடுத்தாலும் அவர் கைமாறு பெறுவார் என்கிறார். 
முன்பெல்லாம் நமது வீடுகளில் ஒரு வழக்கம் இருந்தது யாரேனும் உதவி வேண்டி வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளிடம் சிறிதளவு தொகையையும் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது உணவை கொடுத்து அவருக்கு தானமாக கொடுக்க சொல்லுவோம் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை சிறுவர்களுக்கு கற்பிப்பது உண்டு. என்றும் என் நிலை பல இடங்களில் தொடர்கிறது....

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தகைய பண்பை தான் நம் ஒவ்வொருவரிடத்திலும் எதிர்பார்க்கின்றார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் அடுத்தவருக்கு செய்கின்ற உதவியினால் கண்டிப்பாக இறைவன் மன மகிழ்ச்சி கொள்வார் என்பது உண்மையாகிறது. 

இயேசு கிறிஸ்துவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது தன் முன் பின் அறியாத, யாரென்றே தெரியாத பலருக்கு தன்னிடம் கேட்கிறார்கள் என்பதற்காகக் தன்னால் இயன்றதை அவர்களுக்கு செய்தார், மற்றவர்களையும் அவர்களுக்கு உதவி செய்ய கற்பித்தார். இன்று ஆண்டவர் இயேசுவின் பெயரால் அவரது பணியை செய்கின்றோம் என்ற பெயரில் இந்த உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரைப் போலவே இந்த சமூகத்தில் உள்ள  ஒருவர் மற்றவருக்கு நம்மிடம் இருப்பதை பகிரவும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் மனித உறவுகளோடு நல்லதொரு உறவினை வளர்த்துக் கொள்ளவும் அழைக்கப்படுகிறோம்.
ஆனால் இன்று பெரும்பாலும் கடவுளின் பெயரை வைத்து நிறைய பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது.

மக்களுடைய எளிய நம்பிக்கை எல்லாம் என்று வியாபாரப் பொருளாக மாற்றப்படுகிறது.

கடவுளை விட காசு முதன்மையானது என்ற எண்ணமானது மேலோங்கி காணப்படுகிறது. 

ஆனால் மனித மனங்களில் முதன்மையானதாக இருக்க வேண்டியது மனிதநேயமே.

இந்த மனித நேயம் மட்டுமே நம்மை ஆண்டவர் இயேசு உண்மைச் சீடராக மாற்றும். இந்த மனித நேயம் மட்டுமே யாரென்று தெரியாதவருக்கு இருப்பதை பகிர்ந்து கொள்ள நம்மை தூண்டும். இந்த மனித நேயம் மட்டுமே பார்க்கின்ற ஒவ்வொரு உறவுகளிடமும் கடவுளை கண்டு கொள்ள உதவி செய்யும். 

மனித நேயம் என்பது இன்று குறைந்து கொண்டே வருகிறது. நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகள் கூட இந்த மனித நேயத்தை நாம் நமக்கு நாமே திருப்பிப் பார்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் செய்கின்ற உதவிக்கு கைமாறு கிடைக்கும் என்கிறார். ஆண்டவர் கூறுவதை உள்ளத்தில் இறுத்துக்கொண்டு எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆண்டவரை மனதில் நிறுத்தி, மனிதநேயத்தை மனதில் நிறுத்தி.... கண்ணால் காணக்கூடிய சக மனிதனையும் கடவுளாக பாவிக்க கூடியவர்களாக நாமும் மாறி நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொண்டு, எப்போதும் அன்போடு, அறத்தோடு, சகோதரத்துவத்தோடு நமக்குள் இருக்கக்கூடிய போட்டி, பொறாமை போன்றவற்றை அகற்றி.... மனிதனை மனிதனாக மதித்து. .  நாம் அனைவரும் சமம்..... கடவுளின் பிள்ளைகள் நாம்... என்பதை நமது செயல்கள் மூலம் வெளிக்காட்டி.... கைமாறு கருதாது உழைக்கின்ற இயேசுவின் பணியாளர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஆண்டவர் நம் பக்கம் இருக்க அச்சம் எதற்கு?...(25.9.2021)

ஆண்டவர் நம் பக்கம் இருக்க அச்சம் எதற்கு?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளில் வாசிக்கப்பட கூடிய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவர் நம் சார்பாக நம்மோடு இருக்க நமக்கு அச்சம் எதற்கு? என்ற கேள்வி தான் உள்ளத்தில் எழுகிறது.
இன்றைய முதல் வாசகம் ஆனது நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீது இறைவன் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வண்ணமாய அஅமைந்துள்ளது.
தன்னை நம்பி வந்த மக்களுக்கு ஆண்டவர் தருகின்ற அறிவுரைகளும், துன்ப நேரத்தில் அவருடைய உடன் இருக்கும் அந்த மக்களுக்கு உந்து சக்தியாக அமைந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடன் பயணித்த தன் சீடர்களுக்கு தன் இழப்பை அறிவித்தபோது அவர்களால் அதனை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து தன்னுடன் இருந்த சீடர்களிடம் எதையும் மறைக்கவில்லை மரணத்தையும் அவர்கள் மனதில் பதியுமாறு முன்பே அறிவித்தவர் இந்த இயேசு. 

தன் வாழ்வில் தான் துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அகிலத்தின் நன்மை எது அகிலத்தின் உண்மையான மகிழ்ச்சி எது என்பதனை தன்னுடன் இருந்த சீடர்களுக்கு கற்பித்து அதனை அனைவரும் அனுபவிக்கும் வகையில் உங்கள் வாழ்வு எடுத்துக்காட்டான ஒரு வாழ்வாக அமைய வேண்டும் என்ற பாடலை ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்து தன் அனுபவங்கள் வழியாக சீடர்களுக்கு கற்பித்தார். இந்த படிப்பினைகள் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு பிறகாக இயேசுவுடன் பயணித்த சீடர்களை இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழவைத்தது அவர்களைப் பின்பற்றி பலரை வாழவும் தூண்டியது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு ஆண்டவர் இருக்கின்றார் அவர் நம்மோடு இருக்க அச்சம் நமக்கு தேவையில்லை என்ற சிந்தனையை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகிறது.

ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை (தி.பாடல் 23:1)
ஆண்டவர் நம்மோடு இருக்க அச்சம் எதற்கு?... 

வியாழன், 23 செப்டம்பர், 2021

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனை புரியலாம்...(24.9.2021)

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனை புரியலாம்

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனைகள் புரியலாம் என்பதற்கு ஏற்ற வகையில் இன்றைய முதல் வாசகத்தில் ஆகாய வழியாக திருக்கோவிலை கட்டுவதற்கான அழைப்பு தரப்பட்டு பல தடைகளை சந்திக்கின்ற போதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கிறார் அவர் நம்மை வழிநடத்துவார் நம்மில் தொடங்கிய நற்செயலை அவர் நிறைவு பெறச் செய்வார் என்ற வகையில் அவர்களை ஊக்கமூட்டி எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து கொண்டு செய்யக்கூடிய பணியினை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை யார் என்ற கேள்வியை எழுப்புகிறார் பலரும் பலவற்றைச் சீமோன் பேதுரு இயேசுவை மேசியா என அறிக்கை விடுகிறார் சீமோன் பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவரை வாழ்த்துகிறார் அதேசமயம் தன் வாழ்வில் தான் படுகின்ற துன்பங்களை அறிவிக்கின்ற போது மனித இயல்புக்கு உரிய முறையில் பேதுரு துன்பங்கள் உனக்கு தேவை இல்லை என்று கூறும் போது இயேசு சீமோன் அறிந்துகொள்ளக்கூடிய தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் இரண்டுமே நமக்குத் தருகின்ற பாடம் தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது இந்த சமூகத்தில் பலவிதமான சாதனைகளை படைப்பதற்கான வழி என்பதாகும் தன்னுடன் இருந்த இறைவனை அறிந்து கொண்டிருந்தார் அந்த இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைதான் மக்களை ஒருங்கிணைத்து ஆண்டவருக்காக ஆலயத்தை கட்டுவதற்கான முயற்சியில் அவரை ஈடுபட வைத்தது அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற பேதுருவும் தன்னுடன் இருந்த ஆண்டவரை யாரென அறிந்திருந்தார். எனவேதான் இயேசுவை மெசியா என அறிவித்தார் அதேசமயம் மெசியாவின் துன்பத்தை ஏற்றுக் கொள்ள இயலாத மனித இயல்புக்கு உரிய முறையில் உமக்கு துன்பங்கள் தேவையில்லை எனவும் கூறினார். 

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்போதுமே  எதையோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கக்கூடிய நாம் சற்று நிதானமாக நின்று நாம் எதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நாம் யார் என்பதையும் நம்முடன் இருப்பவர்கள் யார் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவுடன் இருந்த சீடர்கள் இயேசுவிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டார்கள் நம்முடன் இருந்து நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர்கள் நம்மிடம் இருந்து வருகின்ற நன்மைகள் என்ன சிந்தித்துப் பார்ப்போம் நம்மை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே நம்முடன் இருக்கும் ஆண்டு வரை அறிந்து கொள்ள மட்டும் தன்னை அறிந்து கொண்டதன் அடிப்படையில் தான் அகாய் ஆண்டவரின் ஆலயத்தை எழுப்புவதற்கு முயற்சியில் ஈடுபட்டார் அதுபோலவே தன்னை முழுமையாக அழிந்து கொண்டிருந்த காரணத்தினால் தான் விரும்பும் ஆண்டவரை மேசியா என அறிவிக்கக் கூடியவராக இருந்தார் நாம் நம்மை யார் என அறிந்து கொள்வோம் நம்மை அறிவது தரணியில் சாதனைகள் பல புரிவதற்கான படிக்கற்கள் என்பதை உணர்ந்து கொண்டு இனி வருகின்ற நாட்களில் எல்லாம் நம்மை அறிந்து கொண்டு நம் வழியாக இச்சமூகத்தை அறிந்து கொள்ள இறை அருளை இணைந்து வேண்டுவோம்.

புதன், 22 செப்டம்பர், 2021

நல்லது செய்ய வாருங்கள்(23.9.2021)

நல்லது செய்ய வாருங்கள்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய முதல் வாசகம் சரி, நற்செய்தி வாசகம் சரி நன்மை செய்ய நமக்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்து அதாவது இறைவன் செய்த அனைத்து விதமான நன்மைகளையும் நினைத்து பார்த்து அந்த ஆண்டவருக்கு அழகிய ஒரு ஆலயம் கட்டி எழுப்புவதற்கு அனைவருக்கும் அழைப்பு தரப்படுகிறது. தரப்படுகின்ற அழைப்பை உணர்ந்து கொண்ட மக்கள் தங்களிடமிருந்தவற்றை எல்லாம் கொடுத்து ஆண்டவருக்கு அழகிய ஆலயத்தை கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை வாசிக்க கேட்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பணியை இந்த மண்ணிலே அவருக்கு முன்பாக வந்து, அவருக்கான பாதையை ஏற்படுத்தும் வண்ணமாக ஆண்டவர் இயேசுவின் கை வன்மையை பெற்றிருந்த திருமுழுக்கு யோவான் இறையாட்சியின் விழுமியங்களை உள்ளத்தில் என்றவராய் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அஞ்சாது அவர்கள் வாழ்வில் நிகழ்கின்ற தவறுகளை சுட்டிக் காண்பித்து சரியான பாதையில் பயணம் செய்ய அழைப்பு தருகின்றார். அதன் விளைவாக தனது இன்னுயிரையும் அவர் இழந்தார். இவரை கொலை செய்ய செய்த ஏரோது இந்த திருமுழுக்கு யோவானை போலவே இந்த சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை செய்து கொண்டிருந்த இயேசுவைக் கண்டு தான் கொலை செய்த யோவான் தான் உயிரோடு எழுப்பப்பட்டார்  என அச்சம் உற்றான்.

நல்லதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற போது தவறிழைத்த உள்ளங்கள் ஒவ்வொன்றுமே தங்களின் செயல் குறித்து அஞ்சுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய நாள் வாசகங்கள் அமைகின்றன. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி அவரது பணியை செய்வதற்காக அனுதினமும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கடிய நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே மனதில் நிறுத்தி, நல்ல பணிகளை ஒவ்வொரு நாளும் முன்னெடுக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்த்து அழகிய ஆலயம் எழுப்புவதற்கு ஒன்றிணைந்த மக்களை போல நாம் நல்ல பணிகளை செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும் என்ற செய்தி  இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.

நல்ல பணிகளை செய்கின்ற போது வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கின்ற சூழல் ஏற்படுமாயின், சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சாது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி தொடர்ந்து நல்ல செயல்களை செய்வதில் நாம் கருத்தாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படுகின்ற போது சமூகத்தில் தவறாக எண்ணுவோர் உள்ளத்தில் குழப்பமும், கலக்கமும் ஏரோதின் உள்ளத்தில் எழுந்தது போல எழலாம். ஆனால் நாம்  ஆண்டவரை நம்பி அனுதினமும் நல்ல பணிகளைச் செய்ய இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

நம்பிச் சென்றால் ஏற்கப்படுவோம்!... (22.9.2021)

நம்பிச் சென்றால் ஏற்கப்படுவோம்!

 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டு, எந்தச் செயலையும் செய்யவேண்டும் என்ற செய்தியினை நமக்குத் தருகின்றது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களாக பன்னிருவரை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு பேய்களை ஓட்டவும், வல்ல செயல்களை நிகழ்த்தவும் அதிகாரங்களை வழங்கினார்.  தான் அவர்களுக்கு கொடுத்த அதிகாரங்களின் அடிப்படையில் அவர்களை மக்களிடம் சென்று பணியாற்ற அனுப்பி வைத்தார். butஅப்படி மக்களிடையே பணி செய்யச் செல்லுகின்றவர்கள்,  ஆண்டவரை முழுமையாக நம்பிச் செல்ல வேண்டும்.  மற்றவற்றை நம்பிச் செல்ல வேண்டியதில்லை என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார்.  ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் பயணத்தில் ஈடுபட்டவர்கள் பல விதமான வல்ல செயல்களை செய்து வந்தார்கள் என்பது தான் இயேசுவுடன் இருந்த சீடர்களின் வாழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. இன்று இயேசுவை பின்பற்றுகிறோம் என்ற பெயரில், அவரது பணியை செய்கின்றோம் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய நாம், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான உறுதியான நம்பிக்கையோடு பயணம் செய்கிறோமா? அவரை உறுதியாகப் பற்றிப் படித்துக் கொண்டவர்களாய் நல்ல செயல்கள் செய்வதில் ஈடுபடுகிறோமா? அல்லது நமது சுய லாபத்திற்காக அவரை பயன்படுத்துகிறவர்களாக நாம் இருக்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். 
              ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு,  நாம் எந்தச் செயலையும் செய்ய முன்வரும் போதும் கண்டிப்பாக அச்செயலானது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.  நம்பிச் செல்லும் பொழுது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே, அழைத்த ஆண்டவரின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் தொடர்ந்து அவரது பாதையில் பயணம் செய்து அவரது பணியினை  இம்மண்ணில் மலரச் செய்ய இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

அழைத்தவரின் பாதையிலா நமது பயணம்?(21.9.2021)

அழைத்தவரின் பாதையிலா நமது பயணம்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்று திரு அவையானது புனித மத்தேயு தூதரை நினைவு கூருகின்றது.  இந்த மத்தேயு திருத்தூதரை, "என்னைப் பின்பற்றி வா" என இயேசு அழைத்ததை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.

 இன்றைய நாளின் முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்கென அழைத்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறார். அழைத்த இறைவனை எப்படி பற்றிக் கொண்டிருப்பது? அவரை முன்னிறுத்தி எப்படி இந்த உலகத்தில் பணி செய்வது? என்பதை தன் வாழ்வு அனுபவங்களின் அடிப்படையில் பவுல் எடுத்துரைக்கின்றார். பவுலும் இயேசுவால் அழைக்கப்பட்டவர்,  மத்தேயுவும் இயேசுவால் அழைக்கப்பட்டவர். இவர்கள் இருவருமே பாவிகள் என சமுதாயத்தால் கருதப்பட்டவர்கள். 

   ஆம்! இன்று நாம் நினைவு கூருகின்ற மத்தேயு, சுங்கச்சாவடியில் அமர்ந்து வரி வசூலிக்கும் பணியை செய்து கொண்டிருந்தவர். சுங்கச்சாவடியில் அமர்ந்திருப்பவர் என்றால் அரசுக்கு இணங்கிப் போகக் கூடியவர். அரசின் சார்பாக நிற்கக் கூடியவர். அன்றைய யூத சமூகத்தில் நிலவிய அரசானது, மக்களை அதிகமான வரிகளை வசூலித்தும் சட்டங்களின் பெயரால் அடிமைப்படுத்தியும் கொண்டிருந்த ஒரு அரசு.  இந்த அரசோடு இணைந்து ஒருவர் பதவியில் இருக்கிறார் என்றால், அவர் அரசுக்கு இணங்கிப் போய் அரசோடு இணைந்து மக்களைத் துன்புறுத்தக் கூடியவராகத் தான் இருப்பார் என்ற பார்வை நிலவியது.  தங்களை துன்புறுத்துகின்ற அரசையும் அரசு சார்ந்த அதிகாரிகளையும், மக்கள் அறவே வெறுத்தார்கள். 

      எனவேதான் மத்தேயுவை அழைத்தபோது,  இவர் என்ன பாவிகளை எல்லாம் அழைக்கின்றாரே என்ற எண்ணமானது,  அங்கு பேசப்பட்டது.  ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒன்றெனக் கருதுகிறார்.  நாம் ஒவ்வொருவருமே அவரது பிள்ளைகள், அவரால் படைக்கப்பட்டவர்கள்.  நம் படைப்பின் நோக்கம் என்னவென்பதை நாம் கண்டு கொள்வதற்காக இந்த உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை ஒன்றெனக் கருதியதன் காரணமாகத் தான், கடலில் வலை வீசிக் கொண்டிருந்தவரையும் தன் பணிக்கு அழைத்தார். அரசோடு இணைந்து பணி செய்கின்றவரையும் தன் பணிக்கென அழைத்தார்.  சமூகத்தில் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் தன் பணிக்கென அழைத்தார்.  ஆண்டவரின் பார்வையில் அனைவரும் சமம். எது நல்லதோ, எது சமத்துவமானதோ,  எது நீதியானதோ,  அதை செய்வதற்கு இயேசு எந்தவித பாரபட்சமும் இன்றி, சமத்துவத்தோடு அனைவரையும்  ஒன்றெனக் கருதி,  தன் பணிக்கென அழைத்தார்.  அவரது அழைப்புக்கு செவி கொடுத்து அவரைப் பின் தொடர்வதற்காக வந்திருக்கின்ற நாம், ஒவ்வொருவருமே எத்தகைய மன நிலையோடு இந்த சமூகத்தில் பயணம் செய்கிறோம்?  ஆண்டவரால் அழைக்கப்பட்டோம் எனவே, நாம் அவரை பின்பற்றி வந்துவிட்டோம். வந்த நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொண்டோமா?  என்ற கேள்வியை நமக்குள்ளாக  எழுப்பி பார்ப்போம்.  நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை என்கிறார் இயேசு. பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார் இயேசு.  இந்த இயேசு விரும்பக்கூடிய இரக்கத்தை பொழிகின்ற, தேவையில் இருப்போருக்கு தேவையானதை செய்கின்ற ஒரு பணியாளராக, அவரை பின்பற்றக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோமா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்புவோம்.  நமது வாழ்வு எத்தகைய பாதையில் பயணம் செய்கிறது? நமது வாழ்க்கை என்னும் பாதையில் நாம் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்? என சிந்தித்துப் பார்ப்போம்.
 உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நலமான நல்ல பணிகளில் ஈடுபட ஆண்டவர் அழைத்திருக்கிறார்.  அவர் அழைப்புக்கு ஏற்ற வகையில் நம்மைத் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள,  இன்றைய நாள் வாசகங்கள் வழியாகவும்,  இன்று நாம் நினைவு கூருகின்ற புனித மத்தேயு திருத்தூதரின் வாழ்வும் நமக்கு அழைப்பு தருகின்றது.  இயேசுவின் அழைப்புக்கு செவி கொடுத்து வந்த மத்தேயு, அழைத்தவரின் எண்ணத்திற்கு ஏற்ப, தன் எண்ணங்களை செதுக்கிக் கொண்டு, அவரது பாதையில் பயணம் செய்து ஒரு சாட்சிய வாழ்வு வாழ்ந்தார்.  இன்று இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே, பல்வேறு பணிகளில் இருக்கலாம். குடும்பங்களிலோ, குருத்துவப் பணியிலோ,  ஆசிரியப் பணியிலோ,  ஏதோ ஒரு பணியில் இந்த சமூகத்தில், இந்த உலகத்தில், ஏதோ ஒரு பணியில் பொறுப்பில் நாம் இருந்து கொண்டிருக்கலாம்.  நாம் இருக்கின்ற பொறுப்புகளுக்கு தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக் கொண்டோமா?  ஆண்டவர் விரும்புகின்ற பணியை செய்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நல்ல சீடர்களாய் அவரைப் பின்பற்றிட, இறையருளை இன்றைய நாளில்  இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

நம் மனநிலை என்ன...?(20.9.2021)

நம் மனநிலை என்ன...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஓர் ஆலயத்தில் ஒரு குடும்பத்தினர் 28 வகை காணிக்கைகளைool அருள்பணியாளரிடம் திருப்பலி நேரத்தில் காணிக்கை வழிபாட்டின்போது காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதனைக் கண்ட பலர் பலவிதமான முனுமுனுப்புக்களைo கொடுத்தார்கள்.

ஒருவர்:   பணம் இருக்கிறது என்பதை காட்டுகிறார்கள்.
 ஒருவர்:  இவ்வளவு பொருட்களை கொடுக்க வேண்டியது அவசியம்தானா? என்றார். 
 ஒருவர்:   ஏன் இவர்கள் இவ்வளவு வீண் செலவுகளை செய்கிறார்கள். 
ஒருவர்:   இறைவனுக்கு கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள் இது பாராட்டுக்குரியது என்றார்.  

இச்செயலில் நமது மனநிலை என்னவாக இருக்கும் என்பதை விட கொடுப்பவரின் மனநிலை என்ன என்பதே அவசியம் ?....

மனம் என்பதை குரங்குக்கு ஒப்பிடுவார்கள.  குரங்கு கிளைக்கு கிளை தாவி கொண்டே இருப்பது போல மனமானது ஒரு ஆசையில் இருந்து மற்றொன்றுக்கு என தாவி கொண்டே இருக்கும். 
ஆசை கொண்ட மனம் நிராசை அடையும்பொழுது நிராசை அடைந்து மனதில் போராட்டம் துவங்குகிறது எப்படியாவது எதையாவது செய்து தன் ஆசையை ஈடேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுகிறது. அந்த ஆசையை நிறைவேற்றப்படும் பொழுது மற்றொன்றின் மீது ஆசை கொண்ட மனம் தயாராகிறது. இதுவே வாழ்வின் எதார்த்தமாக இருக்கின்றது. ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நமது மனநிலையை குறித்து ஆராய்ந்திட அழைப்பு தருகின்றன.

எங்களுக்கு வகுப்பு எடுத்த அருள்பணியாளர். சிங்கராயர் (தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உலக நாதபுரம் என்ற பங்குகில் இருக்கின்றார்). இவர் எப்போதும் எங்களிடத்தில் கூறுவது  எதை செய்கிறோம் என்பதைவிட எந்த மனநிலையோடு செய்கிறோம் என்பதே முக்கியமானது எனக் கூறுவார். தந்தை அவர்களின் வார்த்தை எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது மிகப்பெரிய தாக்கத்தை எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். எதை செய்கிறேன் என்பதை விட எந்த மனநிலையோடு செய்கின்றேன்? என்ற கேள்வி அடிக்கடி என்னையும், என் வாழ்வையும், என் செயல்பாடுகளையும் திருப்பிப் பார்க்க உதவியாக உள்ளது.


இன்றைய முதல் வாசகத்தில் சைரஸ் மன்னன் ஆண்டவருக்கு ஆலயம் எழுப்ப எண்ணுகிறார். அதற்கான பொருளாதார உதவியை மக்களிடம் நாடிய போது மக்கள் மனமுவந்து தங்களிடமிருந்த பொன், வெள்ளி என அனைத்தையும் கொடுத்து உதவினார்கள் என முதல் வாசகம் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒளியை ஏற்றி மறைவான இடத்தில் வைப்பதற்கு பதிலாக, பலரும் பயன்பெறக்கூடிய வகையில் உயரத்தில் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். நாம் நமது வாழ்வில் அனுதினமும் ஓடி ஓடி சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாம் எதற்கு என்ற கேள்வியை சிந்திக்கின்ற போது அரை சாண் வயிற்றுக்காக தான் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து சேர்த்து வைக்கின்றோம். சேர்த்ததை இல்லாத உறவோடு பகிர்ந்து கொள்ள முன்வரும் போது மட்டுமே மனநிறைவானது சாத்தியமாகும். இல்லை என்றால் ஆசைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பயனித்து கொண்டிருக்குமே ஒழிய மனநிறைவு அடையக் கூடியவர் களாக மாற இயலாது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு வாழ அழைப்பு தருகின்றன. 

இருப்பதை பகிர்வது என்பது ஆடம்பரத்தை மையமாகக் கொண்டா அல்லது பெயருக்காகவும், புகழுக்காகவுமா? அல்லது உண்மையான நற்செயல் புரிய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலா? கேள்வியை நாம் நமக்குளாக எழுப்பி பார்ப்போம். நாம் எதை செய்தாலும்  எந்தவித மனநிலையோடு அதனை செய்கின்றோம் என சிந்திப்போம். 

இயேசுவைப் போல எந்தவித எதிர்பார்ப்புமின்றி அடுத்தவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு இருப்பதை இல்லாதவரோடு பகிரவும், இருப்பதில் நிறைவு காணவும், செய்கின்ற செயலை கடமைக்காக செய்யாது, மனநிறைவோடு, நல்லெண்ணத்தோடு நல்மனதோடு செய்திடவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகிறது. எனவே எதை செய்கிறோம் என்பதைவிட எந்த மனநிலையோடு ஒரு செயலை செய்கிறோம் என்ற கேள்வியை அடிக்கடி உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய இறையருளை வேண்டுவோம்.....

சனி, 18 செப்டம்பர், 2021

விதைப்பவருக்குத் தெரியும்!....(18.9.2021)

விதைப்பவருக்குத் தெரியும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
         எங்கு விதைத்தால் விதை நன்கு முறைக்கும் என்பது விதைப்பவருக்கு தெரியும். அனைத்தையும் நன்கு அறிந்த அவரின் விதைகளை, பாறைகள் மேலும் விதைக்கிறார், முட்செடிகளும் விதைக்கிறார், பாதையோரங்களிலும் விதைக்கிறார், நல்ல நிலத்திலும் விதைக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று சற்று ஆழமாக சிந்தித்து பார்க்கின்ற பொழுது, விதைப்பவரின் நோக்கத்தை நாம் கண்டுகொள்ள முடியும். 

         விதைப்பவரின் நோக்கம் விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதே. அந்த விளைச்சல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது  அது விழக்கூடிய இடத்தை பொறுத்து தான் இருக்கிறது. 

      இறைவார்த்தை என்பதும் நற்சிந்தனை என்பதும் நன்மைத்தனம் என்பதும், நல்ல செயல்கள் என்பதும் நம் அனைவரிடத்திலும் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. 
இங்கு இறைவார்த்தை ஆனது, இந்த உலகத்திலேயே தீமையின் உருவமாக இருக்கக் கூடிய அயோக்கியத் தனம் நிறைந்த மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, மிக நல்லவன் என்று போற்றப்படக் கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, வறுமையிலும் ஏழ்மையிலும் உழலக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. 

             இதனை ஒவ்வொருவரும் எவ்வாறாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அவரவருடைய வளர்ச்சியானது அமைக்கப்படுகிறது. ஏதோ சொல்கிறார்கள்! அதனைக் கேட்டு விட்டு நாம் நகர்ந்து விடுவோம்! என்று நினைத்து வாழக்கூடிய மனிதனிடத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இருக்காது. இந்த இழை வார்த்தையானது உள்ளத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது, அது தான் வாழ வேண்டிய அறநெறியினைக் காட்டுகிறது, அதற்கு நாம் செவி கொடுத்து வாழ்வோம் என நினைக்கக்கூடிய மனிதனிடத்தில் நிச்சயம் வளர்ச்சியைக் காண முடியும். 

                 இவன் என்ன சொல்வது? அதை நான் என்ன கேட்பது? என்ற மனநிலையோடு இருப்பவனிடத்தில் வளர்ச்சி இருக்காது. இவன் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறான். அதற்கு செவி கொடுத்து தான் பார்ப்போமே! என்று இசைந்து போகக்கூடிய மனிதனின் வாழ்வில் நிச்சயம் வளர்ச்சி என்பது இருக்கும். 

            இறைவனது பார்வையில் இறைவன் அனைத்து மனிதரையும் நேசிக்கக் கூடியவராக, அன்பு செய்யக் கூடியவராக, இருக்கிறார். அவர் எல்லோருக்குமான கடவுளாக இருக்கின்றார். ஒரு குறிப்பிட்ட  இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ மட்டும் உரியவர் என அவரை சுருக்கிவிட முடியாது.  

           அந்தக் கடவுள் வழங்கக் கூடிய சட்ட திட்டங்களாக இருக்கட்டும், அவர் கொடுக்கக்கூடிய நல்ல விஷயங்களாக இருக்கட்டும், அவை எல்லோருக்கும் பொதுவானது.  அவ்வாறு எல்லோருக்குமானது என இறைவனிடத்திலிருந்து வரக் கூடிய நன்மைத்தனங்கள் ஒவ்வொன்றையும் நமக்கானது என ஏற்றுக் கொண்டு, அதனைப் பற்றிப் பிடித்துக்கண்டு நாம் செயல்படும் பொழுது, நாம் நல்ல நிலத்தில் விழுந்து, நூறு மடங்கு விளைச்சலைத் தரக்கூடிய நல்ல விதைகளை போல நாம் மாறலாம். 

            அப்படிப் பிடித்துக் கொள்ளாத போது, நாம் முட்செடிகளில் விழுந்த விதைகளைப் போலவும், வழியோரம் விழுந்த விதைகள் போலவும், பாறையில் விழுந்த விதைகள் போலவும், சில நாட்கள் மட்டுமே இறைவார்த்தையை பிடித்துக் கொண்டு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறோம். 
           எனவே இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற பார்வை, அனைவருக்குமான இறைவன் அனைவருடைய நலவாழ்விற்கும் வழிகாட்டுகிறார். அவர் காட்டுகின்ற வழியை பின்பற்றி, அவரது பாதையில் பயணம் செய்து, நல்ல விளைச்சல் தரக்கூடிய, கனிகளைத் தரக்கூடிய பலன் பெருக்கக்கூடிய நபராக வாழ்வது நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது.  எனவே நமது வாழ்வின் அர்த்தம் உள்ள நல்ல விளைச்சலைத் தரக்கூடிய ஒன்றாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

அணுபவங்கள் சீடராக நெறிப்படுத்தட்டும்...(19.09.2021)

அணுபங்கள் சீடராக நெறிப்படுத்தட்டும்...

இயேசுவின் அன்பு நண்பர்களே...



கவிஞர் கண்ணதாசன் இறைவனிடத்தில் இவ்வாறு உரையாடியதாக எழுதிவைத்தார்.

மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன், மணந்து பார் என்றார் இறைவன். நட்பு யாதெனக் கேட்டேன், பழகிப் பார் என்றார் இறைவன். அனைத்தையும் நான் தான் ஆய்ந்து அறிந்து அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீ எதற்கு? என்றேன். அதற்கு இறைவன் என்னை கூர்ந்து பார்த்துச் சொன்னார், அந்த அனுபவமே நான் தான் என்று 

கண்ணதாசனின் இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப, அனுபவம் கற்றுத் தருகின்ற பாடத்தை ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்தாலும் கற்றுத் தர இயலாது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.

கல்வி என்பது ஏட்டில் இருப்பதை மட்டும் இதயத்தில் இணைப்பது அல்ல மறாக நமக்குள் இருப்பதை வெளிக் கொண்டு வருவதாகும். இதற்க்கு நாம் தங்கியுள்ள இந்த இல்லம் பல வாய்ப்புகளை வழங்குகிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை கொண்டு அணுபவங்கள் பல பெற்று அந்த அனுபவத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆழமாக அறிந்து கொள்ள இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது   தன்னுடைய சீடர்களுக்கு அனுபவத்தின் வாயிலாக பலவற்றை கற்றுத்தந்தார். 

லூக்கா நற்செய்தி 6 அதிகாரம் 1 லிருந்து 5 வசனங்களில் நாம் வாசிக்கனலாம்.  இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளை சட்டத்தை கடைப்பிடிக்காது கதிர்களைக் கொய்து கசக்கி அதனை உண்டு கொண்டிருந்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டனர். ஆனால் இயேசு ஓய்வுநாள் சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை எடுத்துரைத்தவராய் சட்டத்தை விட மனித நேயம் மதிப்புமிக்கது என்பதை தன் அனுபவத்தின் வழியாக சீடர்களும் அனுபவித்து புரிந்து கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தார். 

மேலும் மாற்கு நற்செய்தி 7; அதிகாரம் 5 முதல் 20 வசனங்களில் இயேசுவின் சீடர்கள் மூதாதையரின் மரபை பின்பற்றாது விருந்து உண்பதற்கு முன்பாக கைகளை கழுவாமல் விருந்து உண்கிறார்கள் என பரிசேயர் சதுசேயர் குற்றம் சாட்டிய போது எழுத்துக்களால் எழுதப்பட்டதை தூக்கிக் கொண்டு வெளிவேடம் தரிப்பதை விட உண்மையான உள்ளார்ந்த மாற்றமே அவசியமானது என்று  வாழ்வுக்கான பாடத்தை அணுபவ வழியில் தந்தவர் இந்த இயேசு.

மேலும் லூக்கா நற்செய்தி 5; அதிகாரம் 33 லிருந்து 39 வரை உள்ள வசனங்களில் நாம் வாசிக்க கேட்கலாம். இயேசுவின் சீடர்கள் நோன்பு இருக்கவில்லை என்பதை குற்றம்சாட்டி உன்னுடைய சீடர்கள் மூதாதையரின் சட்டங்களை மதிக்கவில்லை என குற்றம் சாட்டிய போது மகனோடு இருக்கும் பொழுது மன விருந்தினர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் அல்ல என எடுத்துரைத்து நோன்பின் உண்மையான நோக்கம் என்ன என்பதை வாழ்வின் தொர்த்தத்தை எடுத்துக்கூறி அணுபவ வழியில் அறிவு புகட்டியவர் இந்த இயேசு.

இன்று நாம் வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசு தன்னுடைய சவை முன் அறிவித்த போது அவர் அறிவித்ததை காதில் பெரிதாக எடுத்துக் கொள்ளாது தங்களுக்குள்ளாக தங்களில் யார் பெரியவர்? என்ற விவாதத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.  இயேசு நினைத்திருந்தால் அந்த நிமிடமே அவர்களிடத்தில் உங்கள் முதல்வனாக இருக்க வேண்டும் இருக்க விரும்புபவர் அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும் எனக் கூறி இருக்கலாம். ஆனால் இயேசு அவ்வாறு செய்யவில்லை மாறாக அவர்களை உரையாட விட்டு பின் உள்ளத்திற்க்கான  பாடத்தை கற்பித்தார்.  முதன்மையான இடம் என்பது பெருமை கொள்வதற்கு அல்ல மாறாக மற்றவருக்கு பணியாற்றுவதற்கு என கற்பித்தார். இயேசுவின் இந்த பாடத்தை புரிந்துக் கொள்ளயாத பலர்  பணியாளனாக பணி புரியவதை மறந்து பதவியில் இருப்பது கொண்டு அடுத்தவரை தனக்கு பணி புரிய வைப்பவர்களாகவே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். 

வாழ்வில் நாமும் பலவிதமான நிலைகளைக் கடந்து வந்திருப்போம். ஏன் குருமடத்தில் கூட பல விதமான பொருப்புகளில் தலைமை வகித்திருப்போம். நாம் கடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும் நமக்குப் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தந்திருகின்றன. நாம் பெற்ற  அனுபவங்கள் எல்லாமே நம்மை நலமான வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்கு வழி காட்டவேண்டும். இயேசுவோடு இருந்தபோது இயேசுவின் சீடர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான் அந்த இயேசு கிறிஸ்து மண்ணில் மரித்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பிறகும் இயேசுவின்  சீடர்களை நலமான பாதையில் இயேசுவின் சாட்சிகளாக வலம் வர வைத்தது.

இன்று இயேசுவை நமது முன்மாதிரியாகக் கொண்டு, நமது அணுபவங்களின் அடிப்படையில் அவரை பின்பற்றக்கூடிய நமது செயல்களை சீர்தூக்கி பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

ஒருமுறை ஒரு சாலை ஓரத்தில் ஒருவன் குழி வெட்டிக் கொண்டே சென்றான். மற்றொருவன் அந்த குழியை மூடி கொண்டே வந்து கொண்டிருந்தான். அதை வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்த ஒரு பெரியவர் குழியை மூடுபவனை கூப்பிட்டு கேட்டாராம்.  என்னப்பா தம்பி அந்த பையன் குழியை வெட்டி விட்டு போகிறான். நீ அதை மூடிகிட்டே போகிறியே ஏன் என்று கேட்டாராம். அதற்கு குழியை மூடுபவன் சொன்னான்.  குழி வெட்டுவது அவனுடைய வேலை. மரம் வைப்பது இன்னொருவனுடைய வேலை. குழியை மூடுவது என்னுடைய வேலை. இன்று மரம் வைப்பவன் வேலைக்கு வரவில்லை. அதற்காக நான் என் வேலையை நிறுத்தி விடக்கூடாது அல்லவா எனவே தான் என் வேலையை நான் பார்க்கிறேன் என கூறினாறாம்.

பல நேரங்களில் நமது பணியும் இந்த குழியை மூடுபவனின் பணியை போலத்தான் இருக்கின்றது. கடமையை செய்கின்றோம் என்ற பெயரில் பல நேரங்களில் கடமைக்காக செயல்படுவார்கள் தான் நாம் இருக்கின்றோம். 
வகுப்பில் ஒருவர் கேள்விகளை எழுப்புகிறார் என்றால் வகுப்பை திசை மாற்றுவதற்காக அல்ல மாறாக தெளிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இங்கும் அதற்கான வாய்ப்புக்கள் பல கொடுக்கப்படுகின்றன. எதையும் செய்வதற்கு முன்பாக ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் நமக்குள்ளாக எழுப்பி பார்த்து தெளிவுகளை பெற்றுக்கொண்டு அணுபவங்களின் அடிப்படையில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும். அனுபவங்களின் அடிப்படையில் முதல்வனாக இருந்து பணியாளருக்கு உரிய பணிகளை  நாம் செய்கின்ற போது இந்த சமூகத்தில் சிலர்; பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படலாம். எள்ளி நகையாடப்படலாம். இன்றைய முதல் வாசகமான  சாலமேனின் ஞான நூல் இதையே வழியுருத்துகிறது. பொல்லார் நீதிமான்களின் செயலை எள்ளி நகையாடி  பலவிதமான இன்னல்களை உருவாக்குவார்கள் என்று. இந்த சூழ்நிலைகளில்  நாம் வாழ்வில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக யாக்கோபு கூறக்கூடிய கட்சி மனப்பான்மை, போட்டி, பொறாமை போன்றவைகளை விட்டுவிட்டு  விண்ணகம் சார்ந்த நற்பண்புகளான  அமைதி, பொறுமை,  அனைத்திலும் சமநிலை, அடுத்தவருக்கு உதவுதல், இரக்கம் காட்டுதல் போன்ற பண்புகளோட  இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் பயணம் செய்து இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் திகழ வேண்டும். 




இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட வேண்டும் என்றால் நாம் அவரை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆவரை ஏற்றுக்கொள்வத என்பது நம்மையே நாம் முதலில் ஏற்றுக் கொள்வதாகும். இதையே இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக  “சிறு குழந்தையை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என் தந்தையை ஏற்றுக் கொள்கிறார் என்று கூறுப்பிடுகிறார்.  குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனென்றால் குழந்தையிடம் காணப்படக்கூடிய அன்பு, இரக்கம், கனிவு, கள்ளம் கபடம் அற்ற நிலை போன்றவைகள் எல்லாம் இறைவனது பண்புநலன்களாகக் கருதப்படுகின்றன. இத்தகைய பண்புகள் குழந்தைகளாக இருந்து இன்று இளைஞர்களாகவும் மூத்தவர்களாகவும் வளர்ந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தவைகள்தான். வளர்ச்சி என்ற பெயரில் இந்த பண்புகளை எல்லாம் நாம் வளர்ப்பது விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக கருதப்படுகின்ற கட்சி மனப்பான்மை, போட்டி, பொறாமைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சியை இறைவன் விரும்புவது அல்ல மாறாக சிறு குழந்தைகளுக்கே உரிய பண்புகளான கள்ளம் கபடமற்ற நிலையையும், அன்பும், இரக்கமும், சமத்துவமும் தான் இறைவன் விரும்புவனவாகும். இவைகள் எங்கோ இருப்பவை அல்ல நாம் குழந்தைகளாக இருந்த போது நம்மில் இருந்தவை. நமக்குள் வளர்ச்சியற்று இருக்கும் இப்பண்புகளை நம் அனுபவங்களின் அடிப்படையில் வளர்த்துக்கொண்டு இந்தச் சமூகத்தில் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட இறைவனது அருளை  வேண்டுவோம். இறைவன் தம் தூய ஆவியாரின் கனிகள் வழியாக நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்
 




வெள்ளி, 17 செப்டம்பர், 2021

விதைப்பவருக்குத் தெரியும்!....(18.9.2021)

விதைப்பவருக்குத் தெரியும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
         எங்கு விதைத்தால் விதை நன்கு முறைக்கும் என்பது விதைப்பவருக்கு தெரியும். அனைத்தையும் நன்கு அறிந்த அவரின் விதைகளை, பாறைகள் மேலும் விதைக்கிறார், முட்செடிகளும் விதைக்கிறார், பாதையோரங்களிலும் விதைக்கிறார், நல்ல நிலத்திலும் விதைக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று சற்று ஆழமாக சிந்தித்து பார்க்கின்ற பொழுது, விதைப்பவரின் நோக்கத்தை நாம் கண்டுகொள்ள முடியும். 

         விதைப்பவரின் நோக்கம் விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதே. அந்த விளைச்சல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது  அது விழக்கூடிய இடத்தை பொறுத்து தான் இருக்கிறது. 

      இறைவார்த்தை என்பதும் நற்சிந்தனை என்பதும் நன்மைத்தனம் என்பதும், நல்ல செயல்கள் என்பதும் நம் அனைவரிடத்திலும் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. 
இங்கு இறைவார்த்தை ஆனது, இந்த உலகத்திலேயே தீமையின் உருவமாக இருக்கக் கூடிய அயோக்கியத் தனம் நிறைந்த மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, மிக நல்லவன் என்று போற்றப்படக் கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, வறுமையிலும் ஏழ்மையிலும் உழலக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. 

             இதனை ஒவ்வொருவரும் எவ்வாறாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அவரவருடைய வளர்ச்சியானது அமைக்கப்படுகிறது. ஏதோ சொல்கிறார்கள்! அதனைக் கேட்டு விட்டு நாம் நகர்ந்து விடுவோம்! என்று நினைத்து வாழக்கூடிய மனிதனிடத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இருக்காது. இந்த இழை வார்த்தையானது உள்ளத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது, அது தான் வாழ வேண்டிய அறநெறியினைக் காட்டுகிறது, அதற்கு நாம் செவி கொடுத்து வாழ்வோம் என நினைக்கக்கூடிய மனிதனிடத்தில் நிச்சயம் வளர்ச்சியைக் காண முடியும். 

                 இவன் என்ன சொல்வது? அதை நான் என்ன கேட்பது? என்ற மனநிலையோடு இருப்பவனிடத்தில் வளர்ச்சி இருக்காது. இவன் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறான். அதற்கு செவி கொடுத்து தான் பார்ப்போமே! என்று இசைந்து போகக்கூடிய மனிதனின் வாழ்வில் நிச்சயம் வளர்ச்சி என்பது இருக்கும். 

            இறைவனது பார்வையில் இறைவன் அனைத்து மனிதரையும் நேசிக்கக் கூடியவராக, அன்பு செய்யக் கூடியவராக, இருக்கிறார். அவர் எல்லோருக்குமான கடவுளாக இருக்கின்றார். ஒரு குறிப்பிட்ட  இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ மட்டும் உரியவர் என அவரை சுருக்கிவிட முடியாது.  

           அந்தக் கடவுள் வழங்கக் கூடிய சட்ட திட்டங்களாக இருக்கட்டும், அவர் கொடுக்கக்கூடிய நல்ல விஷயங்களாக இருக்கட்டும், அவை எல்லோருக்கும் பொதுவானது.  அவ்வாறு எல்லோருக்குமானது என இறைவனிடத்திலிருந்து வரக் கூடிய நன்மைத்தனங்கள் ஒவ்வொன்றையும் நமக்கானது என ஏற்றுக் கொண்டு, அதனைப் பற்றிப் பிடித்துக்கண்டு நாம் செயல்படும் பொழுது, நாம் நல்ல நிலத்தில் விழுந்து, நூறு மடங்கு விளைச்சலைத் தரக்கூடிய நல்ல விதைகளை போல நாம் மாறலாம். 

            அப்படிப் பிடித்துக் கொள்ளாத போது, நாம் முட்செடிகளில் விழுந்த விதைகளைப் போலவும், வழியோரம் விழுந்த விதைகள் போலவும், பாறையில் விழுந்த விதைகள் போலவும், சில நாட்கள் மட்டுமே இறைவார்த்தையை பிடித்துக் கொண்டு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறோம். 
           எனவே இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற பார்வை, அனைவருக்குமான இறைவன் அனைவருடைய நலவாழ்விற்கும் வழிகாட்டுகிறார். அவர் காட்டுகின்ற வழியை பின்பற்றி, அவரது பாதையில் பயணம் செய்து, நல்ல விளைச்சல் தரக்கூடிய, கனிகளைத் தரக்கூடிய பலன் பெருக்கக்கூடிய நபராக வாழ்வது நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது.  எனவே நமது வாழ்வின் அர்த்தம் உள்ள நல்ல விளைச்சலைத் தரக்கூடிய ஒன்றாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

வியாழன், 16 செப்டம்பர், 2021

"நாம் தேட வேண்டியது எதை?" (17.09.2021)

 "நாம் தேட வேண்டியது எதை?" 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் "நாம் தேட வேண்டியது எதை?" என்று ஆழமாக சிந்திக்க அழைப்பு தருகின்றன. இன்றைய நாளின் முதல் வாசகம்,  இந்த உலகத்தில் நிலையானது என எண்ணி நாம் தேடித் தேடி சேர்க்கக்கூடிய செல்வங்கள் எல்லாம் நிலையானது அல்ல! என்ற செய்தியினை ஆழமாக வலியுறுத்துகின்றன. நிலையற்ற இந்த செல்வங்களை நிலையானது என எண்ணி,  நாம் ஓடி ஓடித் தேடி அவற்றை சேர்ப்பதில் நமது நேரத்தை செலவிடுவதை தவிர்த்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்றும் மாறாது, எப்போதும் நம்மோடு நிலையாக இருக்கக்கூடியவர்.
நிலையான இந்த இயேசு கிறிஸ்துவை தேடவும், அவரை நாம் கண்டு கொள்ளவும்,  அவருடைய மதிப்பீடுகளை நமது பண்புகளாக சேர்த்துக் கொள்ளக் கூடியவர்களுமாக நாம் மாறிட, இன்றைய நாள் வாசகங்கள்  அழைப்பு விடுக்கின்றன.  ஆண்டவர் இயேசுவைத் தேடிச் சென்று அவரை தங்களது செல்வமெனக் கருதி,   சேர்த்த பல நபர்களைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் நினைவுறுத்துகிறது. இயேசுவோடு இருந்த சீடர்கள், இயேசுவை, நிலையான
சொத்து எனக் கருதினார்கள். நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகள் அவரிடமே இருக்கிறது என உணர்ந்திருந்தார்கள். எனவே அவரைப் பின்பற்றினார்கள்.

                      அவரைத் தேடக் கூடியவர்களாக,  அவருக்கு சாட்சியம் பகிரக் கூடியவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை இயேசுவின் சீடர்களின் வாழ்வு நமக்கு வெளிக் காட்டியது. 

        அது போலவே, பல விதமான பேய்களால் பீடிக்கப்பட்டு இருந்த பெண்மணியும் சரி, மகதலா மரியாவும் சரி,  கூசாவின் மனைவி யோவன்னாவும் சரி,  சூசன்னாவும் சரி, இவர்கள் எல்லாம் ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்தவர்கள். இயேசுவின் சீடர்கள் ஆண்கள் மட்டும் என்ற ஒரு பார்வை பொதுவாகப் பார்க்கப்பட்ட சூழ்நிலையில், பெண்களும் ஆண்டவர் இயேசுவின் பணியை செய்யக் கூடிய சீடர்களாக இருந்தார்கள் என்ற சிந்தனையையும், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்றது. இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர், ஆண்களோ பெண்களோ அவர்கள் ஆண்டவர் இயேசுவையே நிலையான சொத்து எனக் கருதினார்கள்.  அவரே நிலையானவர்; அவரையே தேடவேண்டும்; அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினார்கள். எண்ணிய எண்ணத்திற்கு,  அவர்கள் வாழ்வு மூலம் செயலில் அதனை வெளிக்காட்டக் கூடியவர்களாக மாறினார்கள்.  எனவே தான் இன்றும் அவர்களை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். 

         நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த உலகத்திற்கு மத்தியில், இன்றைய நாள் வாசகங்கள், நிலையானவர் இறைவன் ஒருவரே! என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றன. இந்த நிலையான இறைவனை நமது உரிமைச் சொத்தாக மாற்றிக் கொள்ள,  நாம் நமது வாழ்க்கை என்னும் பயணத்தில் முயற்சிக்க வேண்டும்.  இத்தகைய முயற்சியை கையில் எடுக்காது நிலையற்ற செல்வங்களை எல்லாம் நிலையானது என எண்ணி, தேடி ஓடிக் கொண்டிருக்கக் கூடியவர்களாக நாம் இருந்த நாட்களை நினைத்து,  அந்த பாதையில் இருந்து மாற்றம் பெற்றவர்களாக ஆண்டவரை நிலையான உரிமையாக்கிக் கொள்ள, இயேசுவின் பாதையில் பயணத்தை தொடர இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

புதன், 15 செப்டம்பர், 2021

முன்மாதிரிகளாக விளங்கிடுவோம்...(16.9.2021)

  முன்மாதிரிகளாக விளங்கிடுவோம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் முன்மாதிரிகளை விளங்கிட நமக்கு அழைப்பு விடுக்கின்றன. ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகில் அனுதினமும் அவரிடமிருந்து அபரிவிதமான ஆசிகளையும், அனுபவங்களையும் பெற்று கொண்டு நமது வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கின்ற நாம் இன்றைய நாளில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? என சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

கடவுள் தாம் படைத்த உலகை உற்று நோக்கினார் அவை மிகவும் அழகாயிருந்தது என தொடக்க நூலில் வாசிக்கின்றோம்.

கடவுளின் படைப்புகளில் சிறந்த படைப்பாக விளங்குகின்ற மனிதர்களாகிய நாம் மனிதநேயம் மிக்கவர்களாக இந்த சமூகத்தில் நமது பேச்சாலும், நடத்தையாலும், அன்பாலும், நம்பிக்கையாலும், தூய்மையான வாழ்வு நெறியாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ இறைவன் இன்றைய நாளின் முதல் வாசகம் வழியாக நமக்கு அழைப்பு விடுகின்றார்.
 இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தில் கூட தான் பாவி என உணர்ந்த பெண் தன் பாவத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவின் பாதத்தில் சரணாகதி அடைந்ததை நாம் வாசிக்கின்றோம். ஆண்டவரின் பாதத்தில் சரணாகதி அடைகின்ற போது அனைத்து விதமான தீமைகளிலிருந்தும், தவறான வாழ்வில் இருந்தும் நாம் நம்மை மாற்றிக் கொண்டு அவரின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களாக எளிதில் மாறிவிட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்வில் நாம் ஆண்டவர் இயேசுவைப் பிரதிபலிக்க கூடியவர்களாக வாழவேண்டும். இதனை வார்த்தையால் அல்ல நமது செயல்களால் வெளிக்காட்ட வேண்டும். அவ்வாறு வாழுகின்ற போது இறைவன் முன்மாதிரியாக திகழும் நமது வாழ்வை குறித்து மன மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையோடு, நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, இனி வருகின்ற நாட்களில் முன்மாதிரியான வாழ்வினை நாம் நமது வாழ்வாகக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இறையருள் வேண்டுவோம்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

தூய கன்னி மரியாவின் துயரங்கள் (15.9.2021)

தூய கன்னி மரியாவின் துயரங்கள்



அன்புக்குரியவர்களே! இன்று நாம் தாய் திருஅவையாக இணைந்து தூய கன்னி மரியாவின் துயரங்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் உங்களோடு இறைவனது வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எண்ணிக்கையில் இஸ்ரயேல் மக்கள் மிகுதியாக இருந்ததால் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை கண்டு அஞ்சினார்கள். எனவே அவர்களை அடிமைகளாக வேலை வாங்குவதற்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் துன்பத்தை இறைவன் கண்ணோக்கினார் இன்பமாக மாற்றினார். ஏன்பது விவிலியம் அறிந்த அனைவரும் அறிந்ததே.  

விவிலியத்தில் தொடக்கநூல் 1: 28 ஆம் வசனத்தில்  “பலுகிப் பெருகி மக்கள் இனங்களை நிரப்புங்கள்” என்கிறது. இவ்வார்த்தைகளின் அடிப்படையில் கூட்டகாம இணைந்து வாழ்ந்த மனிதர்கள் சுயநலத்தால் தனித்து வாழ தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பம் தனி குடும்பமாக மாறியது. அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்த நிலை மாறி, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை உருவாகி, இன்று நாமே இருவர் நமக்கு ஏன் மற்றொருவர் என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் அன்னை மரியாவின் வியாகுலங்கள் வழியாக இன்று சமூகத்தில் குடும்பத்தின் அச்சாணியாக இருக்கும் அன்னையர் சந்திக்கின்ற சவால்களை, தியாகங்களை சிந்திக்கவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

பல வீடுகளில் உணவு சூடாக இருந்தால் கணவன் உண்பார். சுவையாக இருந்தால் மட்டுமே பிள்ளைகள் உண்பார்கள் ஆனால் பல இடங்களில் மீதம் இருந்தால் மட்டும் உண்ணக்கூடிய தாய்மார்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மண்ணில் நாம் பிறப்பதற்கு முன்பாக நமக்காக இறைவனிடத்தில் ஜெபிக்க தொடங்கியவர் நம் தாய். நம் சுகத்திற்காக தன் சுகத்தை தியாகம் செய்தவர். தியாகத்தின் மறு உருவம் ஒவ்வொரு தாயும்.

இவரே உம் தாய் (யோவான் 19:27) என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ஆண்டவர் இயேசு நமக்கு விட்டுச்சென்ற அன்பு தாயாம் அன்னைமரியா தன் வாழ்வில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தவர். அன்னை மரியாவை வியாகுல அன்னை என்று அழைப்போம். வியாகுல அன்னை என்பது கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியா தன் வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இப்பெயர் வழங்கப்படுகின்றது.

1.   சிமியோனின் இறைவாக்கு

2.   எகிப்துக்குத் தப்பி ஓடுதல் 

3.   பன்னிரெண்டு வயதில்

4.   கல்வாரி சிலுவைப் பாதையில்

5.   இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் உயிர்துறந்த போது

6.   இயேசுவின் திருவுடல் அன்னையின் மடியில்

7.   இயேசுவின் தூய உடல் கல்லறையில்

மரியாவின் இந்த 7 துயரங்களை நினைவுகூறுவதன் வழியாக அன்னையிடமிருந்து வாழ்வுக்கான பாடங்களை கற்றுக்கொள்ள திருஅவை இன்று நம்மை அழைக்கின்றது.

இயேசுவோடு இருந்தவர்களில் முதன்மையானவராக இருந்தவர் அவருடைய தாய் அன்னை மரியாள். தான் பெற்று வளர்த்த மகன் குற்றவாளி என்ற முத்திரை குத்தப்பட்டுஈ தன்னால் காப்பாற்ற முடியாத அந்நிலையை ஒரு தாய் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமையான நிகழ்வு. அன்னை மரியாள் நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நடப்பவற்றை ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய மகனின் வேதனையை பார்க்க சகிக்காது அவர் ஓடிவிடவில்லை மறாக அவரது வேதனையில் பங்கெடுக்கிறாள், பகிர்ந்து கொள்கிறாள். மற்றவரின் வேதனையில் பங்கெடுப்பது பகிர்ந்து கொள்வதும் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்பதை அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

குருத்துவ வாழ்வை மேற்கொண்டு இருக்கக்கூடிய நாம் நமது குடும்பத்தில் உள்ளவர்களோடு உரையாட, உறவாட நேரம் ஒதுக்கவும். நம்மாலான சின்னஞ்சிறு உதவிகளை அவர்களுக்கு செய்ய முயல்வோம்.

முற்றும் துறந்த முனிவராலும் துறகக்க இயலாதது தாயன்பு என்று கூறுவார்கள். குருத்துவ வாழ்வு பயிச்சியில் பார்க்கும் பல பெண்களில் பலரை அம்மா என்று அழைக்கின்றோம். அவர்கள் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் பத்து மாதம் நம்மை சுமந்து பெற்றெடுத்த தாயிடம் பத்து நிமிடம் பேசுவதற்கு தினமும் நேரம் ஒதுக்கக்கூடியவலர்களாக இருக்கின்றோமா?  சிந்திப்போம்… அன்னை மரியாவின் துன்பங்களை நினைவுகூறும் இந்நாளில் நம் பெற்றோர் நமக்காக செய்த தியாகங்களை நினைவு கூறுவோம். இயேசுவின் அனைத்து விதமான பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு அவரின் விருப்பமே தன் விருப்பம் என வாழ்ந்த அன்னை மரியாவை போல, நமது குடும்பத்தின் விருப்பமே தன் விருப்பம் என கருதி வாழும் நமது தாய்மார்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அவர்கள் செய்கின்ற தியாகங்களை உணர்ந்து கொண்டு, எப்போதும் அவர்களை நன்றியோடு நோக்கக் கூடிய நல்ல மனிதர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம் குறிப்பாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய நமது பெற்றோரின் உடல் நலத்திற்காக இறைவனிடத்தில் தொடர்ந்து இறைவேண்டல் செய்து மன்றாடுவோம்.



துன்பத்தில் பங்கெடுப்பதும் பகிர்வதுமே கிறிஸ்தவ வாழ்வின் மேன்மை...(15.9.2021)

துன்பத்தில்  பங்கெடுப்பதும் பகிர்வதுமே  கிறிஸ்தவ வாழ்வின் மேன்மை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று நாம் தாய் திரு அவையாக இணைந்து தூய கன்னி மரியாவின் துயரங்களை நினைவு கூறுகிறோம். அல்லது வியாகுல அன்னையின் திரு நாளை நினைவு கூறுகின்றோம்.

அன்னை மரியாள் ஏழுவிதமான துயரங்களை தன் வாழ்நாளில் சந்தித்ததாக திருஅவை கூறுகிறது. அதனை நினைவு கூர்ந்து நாமும் வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள திருஅவை அழைப்பு தருகின்றது இந்த நல்ல நாளில்....

1. சிமியோனின் இறைவாக்கு உன் உள்ளத்தை ஒரு வா ஊடுருவும்...
2. குழந்தை இயேசுவை தூக்கிக்கண்டு எகிப்துக்கு ஓடியது நிலை..
3. காணாமல்போன இயேசுவை தேடியது நிலை....
4. சிலுவையோடு பயணம் செய்த இயேசுவை வழியில் சந்தித்த தருணம்....
5. சிலுவையின் அடியில் எதுவும் செய்ய இயலாத நிலையில் தன் கண் முன்பாக தன் மகன் துடிதுடித்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த நேரம்....
6. இறந்த மகனின் உடலை மடியில் வைத்து புலம்பிய தருணம்...
7. தான் பெற்ற மகன் தனக்கு முன்பாக மண்ணக வாழ்வை நிறைவு செய்து கல்லறைக்குள் அடக்கப்பட்ட துயர நிகழ்வு....

இத்தகைய 7 துன்பங்களில் அன்னை மரியாவின் துயரங்களை பட்டியலிடுகிறது திருஅவை... 

அன்னை மரியாள் இயேசுவின்  வாழ்வில் நடப்பவற்றை என்னவென்று அறிந்து கொள்ள இயலாத நிலையிலும், நடக்கும் அனைத்தையும் இறைவனது திட்டம் என கருதி ஏற்றுக்கொண்டு இயேசுவோடு அவரது பாதையில் தானும் பயணம் செய்கிறாள்.

இந்த அன்னையை போன்ற தான் இயேசுவின் விழுமியங்களின் படி வாழ்வை அமைத்துக்கொள்ள வந்திருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே அடுத்தவரின் துன்பத்திற்கான காரணத்தைத் தேடி கொண்டு இருப்பதற்கு பதிலாக துன்புறும் மனிதனின் துன்பத்தில் பங்கு எடுக்கவும், அந்த துன்பத்தை பகிர்ந்து கொள்ளவும் முன் வர வேண்டும். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் மேன்மையாக கருதப்படுகிறது.

நாம் வாழும் இந்த உலகத்தில் அன்னை மரியாவை போல துன்பத்தில் வாடுகின்றவர்களின் துயரத்தில் பங்கு எடுக்கவும், அவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்ளவும் இறைவனது அருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இந்த நாளிலே...

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...