செவ்வாய், 14 மே, 2019

திருமண திருப்பலி முன்னுரை

திருமண திருப்பலி முன்னுரை
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
    இல்வாழ்க்கையில் அன்போடும் அறத்தோடும் விளங்கினால் அவ்வாழ்க்கையே பண்பாகவும் பயனாகவும் அமையும் என்பது இத்திருக்குறளின் விளக்கம்…
    அன்போடும், அறத்தோடும் வாழ இல்வாழ்க்கையில் புகவிற்கும் செல்வன். ............ மற்றும் செல்வி......... இவர்களின் திருமண நிகழ்வில் பங்கெடுத்து கடவுளின் ஆசியையும், தங்களின் ஆசியையும் வழங்க வந்துள்ள அருட்தந்தையர்கள், உறவினர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
    ஒருவருக்கு வாழ்வு கொடுப்பதல்ல திருமணம். ஒருவருடன் ஒருவர் வாழ்வை பகிர்வதே திருமணமாகும். அவ்வகையில் இந்நாள் வரை தங்களுக்காக வாழ்ந்த இவர்கள் இத்திருச்சடங்கின் மூலம் ஒருவர் மற்றவருக்காக வாழவிருக்கிறார்கள். இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நின்று பாசத்தை மாறா நேசத்தோடு பகிர்ந்து வாழ நாம் அனைவரும் இவர்களுக்காக இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்…
    இந்நாள் வரை செல்வன்.......
மற்றும் செல்வி.......... என்று அழைக்கப்பட்ட நீங்கள் இத்திருச்சடங்கின் மூலம் திரு. ........ மற்றும் திருமதி. ...
.. என்று அழைக்கப்படவிருக்கிறீர்கள் இச்சடங்கின் மூலம் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும், பொறுப்பும் அதிகரிக்கின்றது. எனவே இந்த மங்கல நாளில் திருவிவிலியத்தில் காணப்படும் திருமண தம்பந்தியராகிய தோபித்து மற்றும் சாரா ஆகிய இருவரும் தங்களின் திருமண வாழ்வை தொடங்கும் முன் “நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்” (தோபித்து 8:7) என்ற செபத்துடன் திருமண வாழ்வை தொடங்கினார்கள். என்று தோபித்து நூல் அதிகாரம் 8 வசனம் 7 கூறுவதைப் போலவே நீங்களும் இணைந்து இணைபிரியாது வாழ இத்திருப்பலியில் செபியுங்கள்.
    எல்லா அருளும் நிறைந்த இறைவன் தன் ஆசியால் இவர்களையும், நம்மையும் நிரப்ப அருட்தந்தையர்களோடு இணைந்து செபித்து இறையாசீரை பெற இத்திருப்பலியில் அனைவரும் பக்தியோடு பங்கொடுப்போம்.
நன்றி

திருமண ஓப்பந்தம்:
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. (மத்தேயு 1:18)
இணைப்பு: இரண்டு வீட்டு நபர்கள், கணவன் மனைவி…
தொடர்பு: திருகுடும்பமாக வாழ…

5 கருத்துகள்:

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...