புதன், 30 டிசம்பர், 2020

போராட்டத்தில் பூத்த புத்தாண்டு! (01.01.2021)

போராட்டத்தில் பூத்த புத்தாண்டு! 

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ஆம் நாளை தாய்த்திரு அவையானது, கடவுளின் தாய் மரியா என்ற திருவிழாவினை சிறப்பிக்க அழைக்கப்படுகிறது.  
ஏன் வருடத்தின் முதல் நாளை தாய்க்கு சிறப்பிடவேண்டும் என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்.  
இயேசு என்ற மனிதர் இம்மண்ணுலகில் அவதரிக்க காரணமாயிருந்தது இந்தக் கன்னி மரியாள்.  ஆண்டவரின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஆம்! என பதில் கூறி,  ஆண்டவரின் விருப்பத்திற்கு தன்னை அளித்தவர் இந்த அன்னை மரியாள்.  இந்த அன்னை மரியாவை வருடத்தின் முதல் நாளில் நினைவு கூர்வது என்பது சாலச் சிறந்ததாக திருஅவை கருதுகிறது.  அதன் அடிப்படையில்,  இன்று நாம் அனைவரும் இணைந்து "கடவுளின் தாய் மரியாள்" என்ற திருநாளை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். 

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டை போராட்டத்தில் பூத்த புத்தாண்டு எனக் கூறலாம். ஆம்!  ஒரு பெண்ணின் வாழ்வு போராட்டங்கள் நிறைந்தது. மரியாவை நாம் நினைவு கூர்கிறோமே!  மரியாவின் வாழ்வு போராட்டங்களால் சூழப்பட்டது.  

பல்லாயிரம் ஆண்டுகளாக பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். ஒரு பெண் ஏன் அடிமையானாள் என்ற கேள்வியை பெரியாரின் புத்தகங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக வரலாற்று அடிப்படையில் விளக்குகின்றன.  நாம் அனைவரும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. 
ஒரு இடத்தில் ஒரு பெண்ணானவள் குழந்தையாகிறாள்.
இன்னொரு இடத்தில் அவள் சகோதரி ஆகிறாள். 
இன்னொரு இடத்தில் தோழியாகிறாள்.  
இன்னொரு இடத்தில் மனைவியாகிறாள். 
இன்னொரு இடத்தில் தாயாகிறாள். 
இன்னொரு இடத்தில் பாட்டியாகிறாள். 


எந்த ஒரு பெண்ணும்  தனது கணவனின் மரணத்திற்கு பிறகு தன் மரணம் நிகழ வேண்டுமென எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஏன்?  என்று கேள்வியை எழுப்பிப்பார்த்தால்,  பல பெண்கள் கூறும் பதில், எனது கணவர் வயதான காலத்தில் அவரை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.  என் உயிர் உள்ளவரை அவரை நான் பாதுகாக்க வேண்டும்.  அவருக்கு பிறகு தான் நான் இறக்க வேண்டும் என்று கூறுவார்கள். தாரத்தை இழந்தவன், தரணி இழந்தவன் என்று கூறுவார்கள். ஒரு பெண்ணானவள் தனது வாழ்நாள் முழுவதும் அடுத்தவருக்காக  அர்ப்பணிக்கப்படுகிறாள். அடுத்தவருக்காக உழைக்கிறாள். பல இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியிலும், சவால்களுக்கு மத்தியிலும் அந்தப் பெண்ணானவள், அடுத்தவரின் நலனை முன் நிறுத்துகிறாள். தான் உறங்கா விட்டாலும் தன் குழந்தை உறங்க வேண்டும் என அமர்ந்திருப்பவள் தாய். வயிற்றில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது திரும்பி படுத்தால்,  அந்தக் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்பதற்காக, திரும்பாது படுத்திருந்தவள் தாயானவள். வாழ்க்கையில் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி நம்மால் ஈடுகொடுக்க முடியாத ஒன்று உண்டென்றால் அது ஒரு  தாயின் கருவறையாகத்தான் இருக்கும்.குழந்தையை பெற்றெடுப்பதற்கு ஒரு தாய் படக்கூடிய வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. 

போராட்டங்களால் சூழப்பட்டது தான் ஒரு பெண்ணின் வாழ்வு.  அது போலத்தான் இன்று நாம் வாழும் இந்த உலகிலும் திரும்பும் திசையெங்கும் பலவிதமான போராட்டங்கள்.  எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு போராட்டம். 

 ஒரு புறம் சட்டத்தின் பெயரால் மக்கள் நசுக்கப்படுவதும்,  
மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொடிய நோயின் காரணமாக மக்கள் அஞ்சி வீட்டுக்குள் முடங்கி இருப்பதும்.  
இன்னொரு புறம் வேலையில்லாத் திண்டாட்டமும். 
இன்னொருபுறம் சாதியக் கொடுமைகளும். 
இன்னொரு புறம் ஆண் பெண் வேறுபாடு என பல பிரச்சனைகள்,  சூழ்ந்துகொண்டு கொண்டிருக்கக்கூடிய இந்தச் சமயத்தில்,  நம்மைச் சூழ்ந்துள்ள பல போராட்டங்களுக்கு மத்தியில் புதிதாகப் பூத்திருக்கிறது இந்த புத்தாண்டு.  பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? என சிந்திக்கும் போது,  எப்படி ஒரு பெண்ணானவள் போராட்டத்தின் மத்தியிலும் இருந்து செயல்படுவது போல பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நாமும் வீறு கொண்டு செயல்பட அழைக்கப்படுகிறோம்.  
அன்னை மரியா அன்று யூத சமூகத்தில் வாழ்ந்த போது ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக கருவுற்றால் பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் சட்டம் இருந்தது. ஆனால் அன்னை மரியா ஆண்டவரின் திட்டத்திற்கு தன்னை கையளித்து, ஆண்டவர்   இயேசுவை தன் திருவயிற்றில் சுமந்த வீர மங்கையாக திகழ்கிறாள்.  அந்தஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒரு பெண்ணானவள் குழந்தையை பாதுகாப்போடு வளர்த்து வரவேண்டும். அன்னை மரியாவும் தன்னுடைய குழந்தை இயேசுவை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.‌ இந்த அன்னைைமரியாவை பற்றி பலரும் பலவிதமாக புரிதல்களை கொண்டிருக்கிறார்கள். சிலர் கூறுவார்கள்,மரியாவுக்கு நாம் வணக்கம் செலுத்த தேவையில்லை என்று கூறுவார்கள். நாம் வணக்கம் செலுத்துவது அன்னை மரியாவுக்கு.  ஆனால் நமது வழிபாடுகள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவுக்கு இருக்கின்றன.  
ஒரு முறை திருச்சியில் இருக்கக்கூடிய கிட்னி பார்க் மருத்துவமனையில் பணியாற்ற கூடிய ஒரு இந்து மருத்துவர் ராஜா. அவரை சந்தித்து பேசியபோது, அவர் கூறினார்! நீங்கள் மரியாவை வணங்கக் கூடியவர்களா?  என்று கேட்டார். ஆம் என்று கூறினேன்.  உடனே அவர் எங்களிடம், மரியாவை வணங்குங்கள்.  இயேசுவை ஒரு பெண் வயிற்றில் சுமந்து இருக்கிறார் என்றால்,  அந்த பெண் கண்டிப்பாக கடவுளாகத்தான் இருக்க முடியும், என்று கூறினார். 
நாம் மரியாவை கடவுளாக பார்க்க வில்லை. மாறாக மரியாவின் வழியாக கடவுள் உலகத்திற்குள் அவதரித்தார்.  கடவுளே இப்பெண்ணின் வழியாக இவ்வுலகிற்கு வருகிறார் என்றால்,  அதற்கேற்ற வகையில் அந்தப் பெண்மணி தூய்மையும்,நேர்மையும் உண்மையும், சத்தியமும் வாய்ந்தவராக இருந்திருக்கிறாது என்பது உண்மையாகிறது. எனவே, அந்தப் பெண்மணி வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து மண்ணிற்கு வந்திருக்கிறார். எனவே அந்தப் மரியாவை எள்ளி நகையாடாதீர்கள். ஒருபோதும் விட்டு விலகாதீர்கள், என்று அந்த நபர் கூறினார்.  இன்று அன்னை மரியாவை வைத்துக்கொண்டு பலரும் பலவிதமான சர்ச்சைகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.  

ஆண்டவர் இயேசுவை தேடி வந்த அன்னை மரியாவும் சீடர்களும் வெளியே காத்துக் கொண்டிருக்கையில்,  ஒருவர் ஓடிச்சென்று உன்னை காண்பதற்காக உன் தாயும் சகோதரர்களும் காத்திருக்கிறார்கள் எனக் கூறியபோது, யார் என் தாய்?(மத்தேயு 12:48) என இயேசு கேட்டார். மரியாவுக்கு இயேசு முன்னுரிமை தரவில்லை என்கின்றனர் பலர் ஆனால், யார் என் தாய்?  என்று கேட்ட இயேசு அத்தோடு நில்லாமல், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். (மத்தேயு ந 12:50)
 என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று கூறினார் .  

தந்தையின் திருவுளம் என்பது எது?

கபிரியேல் என்னும் வானதூதர்  அன்னை மரியாவின் முன்பாக வந்து  அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! (லூக்கா 1:28) என்று கூறி, இயேசுவின் பிறப்பு செய்தியை அறிவித்தாரே!  அந்த தந்தையின் திருவுளத்தை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் தான் அன்னை மரியாள்.  இதனை உணர்ந்து கொள்ளாத,  புரிந்துகொள்ளாத பல பிரிவினை  சபையைச் சார்ந்தவர்கள்,  அன்னை மரியாவை இயேசு அவமதித்து விட்டார். அவரை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் தவறுதலாக பரப்பிக் கொண்டு,  தங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்காகவும் நம் தாய் அன்னை மரியாள், பரிந்து பேசுவார் என்பது உண்மை. ஏனென்றால், அந்த அன்னை மரியா அனைவரையும் தன் பிள்ளைகளாக பார்க்கிறார். பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் அது யாராக இருந்தாலும் அவர் பரிந்து பேசுவார். 

ஒரு பெண்ணானவள் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பொழுது அந்த குழந்தை எதைக் குடித்து வளர்கிறது? தாயின் இரத்தத்தை உணவாக உட்கொண்டு வளர்கிறது. குழந்தை பிறந்த பிறகு தாயின் இரத்தத்தை பாலாக உண்கிறது. இயேசுவும் அன்னை மரியாவின் வயிற்றில் இருந்தபோது அன்னை மரியாவின் இரத்தத்தை உணவாக உட்கொண்டு இருப்பார். குழந்தையாக மண்ணில் தவழ்ந்து போதும் அன்னை மரியாவின் இரத்தத்தையே பாலாக அருந்தி இருப்பார். நமது உடலில் ஓடக்கூடியது நமது தாயின் இரத்தம் என்று மார்தட்டுகிறோமே! இயேசுவின் உடலில் ஓடுவதும் அவரது தாயின் இரத்தமே! அவர் கல்வாரியில் சிந்தியதும் அத்தாயின் இரத்தமே! என்றால் அது மிகையாகாது. 
நமது வாழ்க்கையில் அன்னை மரியாவை நமது பாதுகாவலாக கொண்டிருக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. திருஅவை மட்டும் அழைக்கவில்லை. 
இயேசுவே கல்வாரியில் தொங்கியபோது மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8: 20) என்று கூறிய அந்த இயேசுகிறிஸ்துவும், கல்வாரி மலையில் சிலுவையில் குற்றுயிரும் குலையுயிருமாக தொங்கிக் கொண்டிருந்தபோது,  தன்னிடமிருந்த ஒரே சொத்தான  தனது தாயான அன்னை மரியாவை,  இவரே உன் தாய்  (யோவான் 19: 27) என்று நமக்கு தாயாக கொடுத்துவிட்டுச் சென்றார்.  யாரோ ஒரு சிலர் அமர்ந்து பேசி நமக்கு தாய் அன்னை மரியாள் என்று கூறவில்லை. கடவுளே, இயேசுவே நமக்கு தாயாக கொடுத்தவர்தான் அன்னை மரியாள். இந்த அன்னை மரியாவை தான் இன்றைய நாளில் தாய்த்திரு அவையானது, நினைவு கூர்கிறது.  

போராட்டங்களுக்கு மத்தியில் இறைவனின் திட்டத்தில் பங்கெடுத்து இறைமக்கள் பலரின் எழுச்சிக்காக, தன் ஒரே மகனை கையளித்த அன்னை மரியாவை போல, நாமும் நமது வாழ்வை நம்மால் முடிந்த மட்டும், அடுத்தவருக்கு உதவி செய்வதற்கும்,  அடுத்தவருக்கு நமது வாழ்வை வழங்குவதற்கும், இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். போராட்டத்தின் மத்தியில் வீறுகொண்டு சிறப்போடு செயலாற்றி வரக்கூடிய, ஒவ்வொரு தாய்மார்களை போலவே, போராட்டத்தின் மத்தியில் பிறந்து இருக்கக்கூடிய இந்த புதிய ஆண்டும், நமக்கு சவால் மிக்கதாக அமைந்திருக்கிறது. பல விதமான சவால்களை நாம் எதிர்கொள்ளவும், பெண்மையிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள அழைக்கிறது. சவால்களுக்கு மத்தியிலும் அன்னை மரியாள் வீரமங்கையாக செயல் பட்டது போல எந்தவித போராட்டங்கள் நம்மை சூழ்ந்தாலும் போராட்டங்களைக் கண்டு அஞ்சாமல், வீறு கொண்டவர்களாக பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில், இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், நமது வாழ்வை அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாக, உருவாகிட அழைப்பு தருகிறது இந்த போராட்டத்தில் பூத்த புத்தாண்டு. எனவே இந்தப் புத்தாண்டில் இறை விருப்பத்தை நம் விருப்பமாக கொண்டு, சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் அயராது அஞ்சாது பணி செய்து, இறைத் திட்டத்தை நிறைவேற்ற இணைந்து பயணிப்போம்.

மீட்புத்திட்டத்தில் இறைவனின் தாய் அன்னை மரியா! (01.01.2021)

மீட்புத்திட்டத்தில் இறைவனின் தாய் அன்னை மரியா! 
 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  உங்கள் அனைவரோடும் இன்றைய வாசகங்களின் வழியாக இறைவார்த்தையினை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  
ஒருமுறை பள்ளியில் குழந்தைகள் இடத்தில் சென்று வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பிய போது,

 ஒரு குழந்தை சொன்னது,  
பிறப்பும் இறப்பும் தான் வாழ்க்கை என்றது.
 
இன்னொரு மாணவன் கூறினான்,  

அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்வது தான் வாழ்க்கை என்றான். 
 விளக்கமாக கூற கேட்டேன் 
ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு செல்வது தான் வாழ்க்கையா? என்றேன்.  
அதற்கு அவன் கூறினான்,  

நான் அந்த அறை இல்லை. கருவறையிலிருந்து கல்லறை செல்வது தான் வாழ்க்கை என்றான். 

இன்னும் ஒரு சிலரிடம் கேட்டபோது 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை என்றார்கள்.  

வாழ்க்கையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிதல்களை கொண்டிருப்பதை உணர முடிந்தது.  

நாம் இன்று இம்மண்ணில் வாழ்கிறோம் என்றால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டமானது இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நிறைவேற்றும்  கருவிகளாகத் தான் இவ்வுலகத்தில் நாம் இருக்கிறோம் என எண்ணலாம்.  அன்னை மரியாவின் பிறப்பு,  அன்னை மரியாவின் வாழ்வு, இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.   

பெண் என்றாலே பொதுவாக சமுதாயம்  ஆணுக்கு கீழாக கருதுகிறது.  ஆனால் வரலாற்றை சற்று ஆழமாக திருப்பி பார்க்கும் பொழுது, பெண்தான் முதலில் ஆதிக்கச் சக்தியாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 
ஆம்!  அன்புக்குரியவர்களே!
 நாடோடி சமூகமாக வாழ்ந்த போது பெண்கள்  குடும்பத்தை நடத்தக்கூடிய தலைவர்களாக இருந்தார்கள்.  நாகரீக வளர்ச்சி, ஆணை மையப்படுத்தி ஆணுக்கு கீழானவள் பெண் என்ற பார்வையை வளர்வதற்கு வித்திட்டது.  இன்று ஆணும் பெண்ணும் சமம் என்ற பார்வையானது நிலவிக் கொண்டிருக்கிறது.  

முதன்முதலில் ஆணுக்கு பெண்ணின் மீது வெறுப்பு வருவதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் , ஒரு பெண்ணால் ஒரு உயிரை சுமந்து பெற்று கொடுக்க முடிகிறது. தன்னால் இயலாத ஒன்றைச் செய்யக் கூடிய வலிமை வாய்ந்த பெண்ணின் மீது பொறாமை கொண்டான் ஆண். எனவேதான் பெண்ணை தனக்கு கீழாக என்ற அடக்குமுறையானது, நாகரிக வளர்ச்சியில் உதயம் ஆனது என்பது நாம் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளுகிறோம்.       

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் இந்த அன்னை மரியாவும் யூத சமூகத்தில்  வாழ்ந்து வந்தார். பெண் என்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியவள். ஆணுக்கு  இணையாக மதிக்கப்படாதவள்.  பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு காலம் இப்படிப்பட்ட காலத்தில் ஆங்காங்கே சிலர் மட்டுமே பெண்ணுக்கு உரிமையும் நீதியும் கொடுத்திருந்தார்கள்.  இப்படிப்பட்ட சூழலில்  அன்னை மரியா ஆண்டவரின் திட்டத்திற்கு தன்னை ஆகட்டும் எனக்கூறி கையளிக்கின்றார்.  அன்னை மரியா தன்னை கையளித்ததன்  வெளிப்பாடுதான்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்மண்ணில்  உதயமாகிறார்.

 ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக கருவுற்றால், அவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதச் சமூகத்தில் மோசே வழியாக கொடுக்கப்பட்ட கட்டளை.  இதனை அங்கு இருந்த ஆண்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, பெண்ணானவள் நன்கு அறிந்திருந்தாள்.  இருந்தபோதும் திருமணத்திற்கு முன்பாக இறைவனுடைய தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப,  அவ்வார்த்தைகளை கடவுளிடமிருந்து வந்தது என்பதை கண்டு கொண்டதன் அடிப்படையில், நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என கூறி, இறைவனின் திட்டத்திற்கு தன்னை கையளித்தார் அன்னை மரியா.  இறைவனின் திட்டத்திற்கு முழுமையாகக் கையளித்ததன் விளைவாக,  இறைவன் சூசை வழியாக அவரை காத்து வந்தார்.  இந்த அன்னையை கடவுளின் தாய் என திருஅவை அறிமுகப்படுத்தியது.  

தொடக்க காலத்தில் மரியா இயேசுவினுடைய தாய். ஏசு என்பவர் மனிதன் மட்டுமே. கடவுள் அல்ல. கடவுளுக்கு எப்படி ஒரு பெண் தாயாக இருக்க முடியும்?  என்ற தப்பரை கருத்துக்களை முன்வைத்து 
 இயேசுவின் மனித உடலுக்கே மரியா தாய்.  கடவுளுக்கு அல்ல என தப்பறை கொள்கைகள் பரவிய சூழலில்,  திருஅவை இணைந்து அமர்ந்து பேசி,   இயேசு  கடவுள் நிலையிலிருந்து மனிதனாக இந்த மண்ணிற்கு வந்தவர் என்பதை வெளிகாட்டும் வகையிலும், விவிலியத்தில் எலிசபெத்தம்மாளை அன்னை மரியாள் சந்தித்தபோது, என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்ற வார்த்தைகளின் அடிப்படையிலும், ஆண்டவரின் தாய் அன்னை மரியா என்பதை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தியது தாய் திருஅவை. அதன் விளைவே ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளையும் மரியா கடவுளின் தாய் என்ற விழாவினை நாம் சிறப்பிக்கின்றோம்.  

மரியா கடவுளுக்கு மட்டும் தாய் அல்ல!  
மரியா கடவுளின் குழந்தைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் தயாகிறார். அன்னை மரியாவின் வாழ்வு ஆயிரம் அர்த்தங்களை சொல்லக்கூடிய ஒரு வாழ்வு.  
அன்னை மரியா ஒரு வீரப்பெண் எனக் கூறலாம். 
அன்னை மரியாவை ஒரு தாழ்ச்சியின் வடிவம் எனக் கூறலாம்.  
அன்னை மரியாவை விடியற்காலத்தின் விண்மீன் எனக் கூறலாம். 

இன்னும் பல வழிகளில் , பல வார்த்தைகளால் அன்னை மரியாவை நாம் புகழ்ந்து பேசலாம். 

தாய்மை என்பது சாதாரண ஒரு செயல் அல்ல.  ஒரு பெண் தாய்மை நிலையை அடையும்போது,  அடையக்கூடிய மகிழ்ச்சி இவ்வுலகத்தில் எதற்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. வீடுகளில் பொதுவாக கூறுவார்கள்,  கடவுள் இந்த பூமிக்கு வருவதில்லை. மாறாக தாய்மார்களை அனுப்பி வைக்கிறார் என்று. ஒவ்வொரு தாயும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கெடுக்கிறார்கள்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை மீட்க வேண்டுமென்று மீட்புத் திட்டத்தில் முதன்முதலாக தன்னை கையளித்தவர் இந்த அன்னைமரியா.

 மீட்புத் திட்டமா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி எழலாம் உள்ளத்தில். ஆம்!  அடுத்தவருக்காக வாழ்வை அர்ப்பணிப்பதே மீட்பு திட்டமாக கருதப்படுகிறது. இயேசுவின் பிறப்புக்காக இன்னல்களுக்கு மத்தியிலும்,  சவால்களுக்கு மத்தியிலும்,  அன்னை மரியாள் தன்னை கையளித்தார்.  அவரிடமிருந்து பிறந்த ஆண்டவர் இயேசுவும் அடுத்தவரின் நலனுக்காக இச்சமூகத்தில் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். இறுதியில் பலரின் மீட்புக்காக அவர் கொல்லப்பட்ட போது கூட சாவை  இன்முகத்தோடு ஆண்டவரின் திட்டம் என்று ஏற்று,  நம் அனைவரையும் பாவத்தில் இருந்து விடுவித்தார். நாமும் இன்றைய நாளில் இறைவனது மீட்புத் திட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம்.  

பொதுவாக கூறுவார்கள், ஒரு குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டும் தான் தெரியும் வலியும் வேதனையும் என்பார்கள். ஆனால் இந்த நேரத்தில் நாம் நமது தந்தையர்களை மறந்து விடவும் கூடாது. அன்னை மரியாவுக்கும் இயேசுவுக்கும் பாதுகாப்பாய் நின்று,  அவர்களை காத்து வந்தவர்,  புனித சூசையப்பர்.  அதுபோல தான் இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஒவ்வொரு தந்தையரும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்புடன் வழி நடத்துவதற்கு பாதுகாப்புடன் இருப்பதற்கு பலவிதமான இன்னல்களை சுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.  பெற்றோர் செய்யும் தியாகத்தை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.  தாய்க்குத் தான் பிரசவ வலி தெரியும் என்று கூறுவார்கள். ஆம்!  ஒரு தந்தைக்கும் பிரசவ வலி தெரியும்.  அவர் குழந்தையை பெற்றெடுப்பது இல்லை. மாறாக தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் படக்கூடிய மனவேதனையை அவரை அன்றி வேறு எவராலும் அறிய இயலாது.

இன்று நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இந்த புதிய வருடமானது அன்னை மரியாளை நமக்கு  கடவுளின் தாய் எனச் சுட்டிக் காட்டுவதன் நோக்கம், நாம் அனைவரும் அன்னை மரியாவை போல, நமது பெற்றோர்களைப் போல, ஒருவர் மற்றவருக்காக, ஒருவர் மற்றவரின் நலனுக்காக, நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறந்த கருவிகளாக பயணிக்க வேண்டும், என்பதன்அடையாளம் ஆகும். எனவே அன்புக்குரியவர்களே!  பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் நடந்தவைகளை எல்லாம் மறந்து கடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் பாடமாக மனதில் இருத்தி,  அன்னை மரியாள் எப்படி நிகழ்ந்த அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோமோ,  அவ்வார்த்தைகளுக்கு ஏற்ப நாமும் கடந்த வருட அனுபவங்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் பதிய வைத்து அதனை பாடமாகக் கொண்டு,  பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில்,  ஒருவர் மற்றவரின் நலனை முன்னுரிமைப்படுத்தி, ஒருவர் மற்றவருக்காக உழைக்கவும், ஒருவர் மற்றவருக்காக வாழவும்,  ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும்,  பிறந்திருக்கும் இப்புதிய நாளில் செயலாற்றிட இறையருளை வேண்டி, தொடர்ந்து இணைவோம் இந்த திருப்பலியில்,  இறை ஆசிர் பெற்றுக் கொள்வோம்.

ADORATION SERVICE ( 31st December 2020 )

 

 


                    ADORATION SERVICE

                      31st December 2020

 

Bhajan

 

C. Bless and praise every moment...

   Glory be...

 

(Background music / all seated)

 

The sequence of events and the passing of days mark the growth of our existence.  Liturgy is the consecration of time in an era of salvation.  At the end of every year, we are exhorted to take stock of ourselves.  For us, individuals and communities, this demands an examination of conscience and a revision of life.  It is a partial assessment which puts individuals and communities face to face with the salvific plan of God.  On the one hand, there is the awareness of one's own inadequacies, of the lack of response to community needs, and of one's personal sins; on the other, there are the manifold graces bestowed by the Lord during the year of grace which is now drawing to a close. Let us with sentiments of sorrow, but above all of praise and thanksgiving entrust everything to the Lord in a spirit of humility and gratitude.

 

Gathered together before the Lord on this last day of the year, let us, as individuals and as a community, ask pardon for the time spent in a manner not befitting a Christian and a Salesian.

 

C.  O benevolent and merciful God, help us to acknowledge our sinfulness, and to discern in the circumstances of our daily life, the project of liberation you have traced out for each one of us.  Foster our desire for conversion, so that we may ask you, the author of life, pardon for all that has been an obstacle to our journey towards the fullness of our being.  We make this prayer through Jesus Christ our Lord. Amen.


Let us praise and thank the Lord for the gifts he has bestowed on us during this year 2019.  Let us thank him for coming into our midst, for the gift of the Christian and Salesian vocation and for calling us to follow him in humility of spirit, purity of heart and poverty of life.

Individuals are welcome to express their sentiments of praise and thanksgiving

Let us sum up all our feelings of thanksgiving for all that the good Lord has done for us during the past years, through the song played on the tape.

(Words of the song is displayed on the wall through overhead projec­tor)

 

As we are on the eve of the solemnity of Mary the Mother of God and the New Year let us entrust the New Year to the protection of Mary Most Holy and ask the Lord through the intercession of Mary to bless us with all the graces we will be in need of in the coming year 2020.


New Year reminds us of fresh beginnings and the desires to start anew whatever task we are going to undertake.  Let whatever we undertake begin from God and be geared towards His greater glory. Let's express this desire through the song "Let me start again".

 

Bhajan (Adoration hymn)

 

Blessing

 

Final Hymn

செவ்வாய், 29 டிசம்பர், 2020

சான்று பகர்வோம்....(31. 12.2020)

சான்று பகர்வோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உ
ங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 இன்றைய முதல் வாசகத்தில் நாம் அனைவரும் தூய ஆவியாரால் அருள்பொழிவு பெற்றவர்கள் என யோவான் குறிப்பிடுகிறார். இந்த தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டு திருமுழுக்கு தர இருக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நபராக திருமுழுக்கு யோவான் இருப்பதை, இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நாம் அறிகிறோம்.

 தொடக்கத்திலிருந்தே ஆண்டவரிடம் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வார்த்தையான இறைவன் வார்த்தை வழிகளில் பலவிதமான அற்புதங்களை இம்மண்ணில் நிகழ்த்தினார்.  இந்த வார்த்தையான இறைவனை முன்னறிவிக்கக்கூடிய சுட்டிக் காட்டக்கூடிய நபராக திருமுழுக்கு யோவான் இன்று நம்மிடையே செயலாற்றுகிறார். திருமுழுக்கு யோவான் இந்த வார்த்தையான இறைவனை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். இந்த வார்த்தையான இறைவனாகிய இயேசு கிறிஸ்து ஒளியானவர்.  இவர்தான் உலகிற்கு ஒளி கொண்டு வந்தவர். இவர்தான் தூய ஆவியாரால் நமக்கு திருமுழுக்கு அருளவிருப்பவர் என இயேசுவை குறித்து சான்று பகர கூறியதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்கிறோம்.  திருமுழுக்கு என்னும் அருள்சாதனம் வழியாக தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே இயேசுவை குறித்து சான்று பகர இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  திருப்பலியில் ஒவ்வொரு நாளும் இது விசுவாசத்தின் மறைபொருள் என்று குருவானவர் கூறும்போது,  "ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.  உமது உயிர்ப்பினை எடுத்துரைக்கின்றோம்" என பதில் மொழி கூறுகிறோம்.  ஆனால், இதனை நடைமுறையில் நாம் செய்கின்றோமா?  என்ற கேள்வியை இன்றைய நாளில் எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். 
வெறுமனே வாய் வார்த்தைகளாக நமது செபங்கள் இருப்பது ஏற்புடையது அல்ல. .  நம்முடைய ஜெபங்கள் இருக்குமாயின் அது ஏற்புடையது அல்ல. மாறாக நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு சொல்லும் செயல்வடிவம் பெற வேண்டும்.  ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையின்றோம்! உயிர்ப்பினை எடுத்துரைக்கின்றோம் என்ற ஜெபத்தை சொல்லக்கூடிய நாம் ஒவ்வொரு நாளும் முடிந்த மட்டும் முடிந்த நபர்களிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பை பற்றியும் அவரது உயிர்ப்பை பற்றியும் சான்று பகர கடமைப்பட்டிருக்கிறோம்.  ஆனால் சென்ற பகறாமல் நாம் மேலோட்டமாக இருக்கும் பொழுது, அது உண்மையான அர்த்தமான வாழ்வாகவும் ஜெபம் ஆகவும் இருக்காது. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்பட்டது என நாம் வாசிக்க கேட்கிறோம்.  

பரபரப்பான இந்த உலகத்தில், பலவிதமான பணிகளுக்கு மத்தியில் எப்போதும் வேகவேகமாக ஒருவிதமான பதட்டத்தோடு நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் அனைவரும், இன்றைய நாளில் ஒரு நிமிடம் அமைதியாக நம்முடைய செயல்பாடுகள் குறித்து சிந்திக்கவும், நாம் உண்மையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் சான்று பகரக்கூடியவர்கள் தானா என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்க்கவும் இன்றைய வாசகங்கள் அமைய அழைப்பு விடுக்கின்றன.  தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டது போல,  தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானை போல,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை பறைசாற்றக் கூடிய, சான்று பகரக் கூடிய பணியினைச் செய்ய அழைக்கப்படுகிறோம். 

எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை ஒருவர் மற்றவரோடு பகிரவும், இயேசுவுக்குச் சான்று பகரவும் நமது வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக அமைத்துக்கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்றவண்ணம் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றுவோம்! (30.12.2020)

இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின்  அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் தீய வழிகளிலிருந்து,  நல்ல வழிகளில் அதாவது இருளுக்குரிய செயல்களில் இருந்து,  ஒளிக்குரிய செயல்களில் வாழக்கூடிய இளைஞர்கள்,  சிறுவர்கள் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, அவர்களுக்கான வாழ்த்துச் செய்தியாக யோவான் இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிடுகிறார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில்,  அன்னா என்ற 84 வயது பெண்மணி,  கணவனை இழந்த பிறகு ஆலயத்திலேயே தங்கி இருந்து ஆண்டவருக்கு திருப்பணி செய்யக்கூடியவராக இருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாலன் இயேசுவை கண்டு கொண்டு,  அந்த பாலகனை பற்றிய செய்தியை சுற்றி இருந்தவர்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார், என வாசிக்கிறோம். குழந்தை இயேசுவும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய்,   இருந்தார் என விவிலியத்தில் கூறப்படுகிறது. இன்றைய வாசகங்கள்  நாம் அனைவரும் இருளைச் சபிப்பதை விட ஒளியை ஏற்ற கூடியவர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றன. ஆம்! வாழ்க்கையில் கணவன் இறந்த பிறகு ஒரு பெண்மணியின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிறது. ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்ட,  அன்னா என்ற பெண்மணி கணவனை இழந்த நிலையிலும்,  ஆண்டவருக்கு திருப்பணி செய்வதை, தலைமேற்கொண்டு அப்பணியை முழு ஈடுபாட்டோடு செய்து வந்தார். பல நேரங்களில் நாம் நமது வாழ்க்கையில் துன்பங்கள் நேரும் போது, அனைத்தும் முடிந்துவிட்டது. இனி வாழ்வே இல்லை என்ற எண்ணத்தோடு எந்த வேலையிலும் ஈடுபடாமல், முடங்கிப்போய் இருக்கின்றோம். அப்படியே முடங்கிப் போய் இருளுக்குள் நாம் இருப்பதை விட, ஒளி ஏற்றக் கூடிய அன்னாவாக நாமிருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. தீய வழிகளில் இருந்து தங்களை சரி செய்து கொண்டு வாழ்ந்த, இளைஞர்களையும் சிறுவர்களையும் யோவான் குறிப்பிட்டு, எழுதிய கடிதம் போலவே, யோவான் குறிப்பிட்டு அவர்களுக்காக எழுதிய இந்த மடல் நாமும் இருளுக்குரிய செயல்களான, தீமையை விட்டு விட்டு ஒளியை ஏற்றக் கூடிய ஒளிக்குரிய மக்களாக இருக்கும்போது, நாமும் முன்னுரிமைப்படுத்தப்படுவோம் என்ற செய்தியினை நமது இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இயேசு வளரும்போது வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய், இருந்தார் என்ற வாசகப் பகுதிகள், நாமும் வளரும் போது, வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வதற்கு அழைப்பு தருகின்றன. இறைவார்த்தை வழியாக இறைவன் கொடுக்கக்கூடிய அழைப்பினை உணர்ந்து கொண்டவர்களாக, இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றக் கூடிய ஒளியின் மக்களாக இருந்து, பிறருக்கு ஒளி வீசிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

நன்றி வழிபாடு! (31.12.2020)

நன்றி வழிபாடு!

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
(இப்பொழுது நற்கருணையானது நமது முன்பாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்.  எனவே அனைவரும் இணைந்து....)
நிலையான புகழுக்குரிய.... என்ற நற்கருணை பாடலை மூன்று முறை  பாடவேண்டும்.
பாடல் பாடி முடித்த பிறகு ஆராதிக்கின்ற பாடலாகிய ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்..., என்ற பாடலை முழுமையாக பாட வேண்டும்.  
(பாடல் வரிகள் நிறைவு பெற்றதும் அனைவரும் எழுந்து நிற்போம்), 
மாற்கு நற்செய்தி 3:13-19  வரையுள்ள வசனங்களை ஒருவர் வாசிக்கவேண்டும்.
 
"இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....





வழி நடத்தக் கூடியவர்:
இறைவன் இயேசுவில்,  அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் ஆண்டின் இறுதி நாளில்,  ஆண்டவரை நோக்கி வந்திருக்கிறோம்.  நாம் அனைவரும்,  ஆண்டவரை நோக்கி வந்திருப்பதன் நோக்கம் "நன்றி கூற" என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நாம் நன்றி கூறவும், நமது கடந்த வருட நிகழ்வுகளை எல்லாம் திருப்பிப் பார்த்து, நாம் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தவும், கடந்த வருடம் முழுவதும் காத்த இறைவனுக்கு நன்றி கூறவும், வருகின்ற வருடத்தில் இறைவன் நம்மை காத்தருள வேண்டும் என ஆராதிக்கவும், ஜெபிக்கவும், இங்கே கூடியிருக்கிறோம். 
இன்றையநன்றி வழிபாட்டின் நற்செய்தி வாசகமாக,  மாற்கு நற்செய்தி 3 அதிகாரம், 13 வது வசனத்தில் நாம் வாசிக்க கேட்டோம்,  அவர், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரவழைத்தார் என்று. ஆண்டின் இறுதி நாளில், நம்மை எல்லாம் இறைவன் இன்று ஆலயத்தில் ஒன்றிணைத்து இருக்கிறார் என்றால்,  அவர் நம்மை விரும்புகிறார்.  நம்மீது விருப்பம் கொள்கிறார்.  நம்மீது அவர் கொண்ட அதீத அன்பின் காரணம் தான் இன்று நாம் அனைவரும் அவரைத் தேடி வந்திருக்கிறோம். 
எண்ணிக்கை 18 : 20.
ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே" என்று. இந்த உலகத்தில் நிலையான சொத்து என்பது ஆண்டவர் மட்டுமே. அந்த சொத்தை பிடித்துக் கொள்வதற்காக,  இன்றைய நாளில் நாம் அனைவரும் ஆண்டவரை நோக்கி வந்திருக்கிறோம். கடந்த வருடத்தை பற்றி நினைத்து பார்க்கும் பொழுது, யாரும் எளிதில் மறந்துவிட இயலாத ஒரு வருடமாக அது அமைகிறது. வீட்டுக்குள் முடங்கி போன வாழ்வு.  கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸின் தாக்கம், உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களையும் கட்டிப்போட்டுவிட்டது. பணம் படைத்தோர், ஏழை என்ற பாகுபாடு ஏதும் இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸானது உலுக்கிவிட்டது.  
இன்று மனித மனங்களில் அச்சம் ஆழமாக குடிகொண்டுள்ளது. எப்போது மரணம் என்பதை யாரும் அறியாது இருப்பதுப்போல, எப்போது யார், நோயினால் தாக்கப்படுவார்கள் என்று தெரியாத சூழல் நிலவுகிறது.  தொடக்க காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் போது,  பலவிதமான இன்னல்களை தொடக்ககால கிறிஸ்தவர்கள் சந்தித்தது போல, நோய் தாக்குதலால் ஆண்டவரிடம் சென்று நமது உள்ளக் குமுறல்களை வெளியிடலாம் என்று, ஆலயத்திற்குச் செல்ல முயன்றால் கூட,  அதுவும் கட்டுப்பாடுகளோடு தடுக்கப்பட்டது. மனிதனின் உயிர் காப்பது மட்டுமே முதன்மை என்ற நோக்கமானது நிலவியதால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் உயிரைக் காத்துக் கொள்வதற்காக வீடுகளில் முடங்கிப் போனோம். முடங்கிப்போன நாம் அனைவரும், ஆண்டவர் இயேசுவை பற்றியும், நாம் கொண்டிருக்கக்கூடிய இறைநம்பிக்கையை பற்றியும் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக, இவ்வருடம் முழுவதும் அமைந்திருக்கிறது. இந்த வருடத்தின் இறுதி நாளில் நாம் அனைவரும் இன்று இணைந்து ஆண்டவரிடம் அமர்ந்து ஜெபிக்கிறோம் என்றால், இறைவன் நம்மை எல்லா விதமான தீங்குகளில் இருந்தும் காத்து இருக்கிறார், என்பதுதான் முற்றிலும் உண்மையாகிறது.  நம்மை காத்த இறைவனுக்கு நன்றி கூறிட இங்கு நாம் கூடியிருக்கிறோம். நன்றி வார்த்தைகளால் மட்டும் அல்ல, என்பதை உணர்ந்தவர்களாக அனைவரும் இணைந்து மகிழ்ந்து கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்த்து பாடகர் குழுவோடு இணைந்து பாடுவோம்.

"கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்" என்ற பாடலானது இப்பொழுது பாடப்படும். (பாடல் முடிவில்),  

2020 வருடத்திற்கான நன்றிகள்
புதில் : எங்களை பாதுகாத்த இறiவா உமக்கு நன்றி
    1. இயேசுவே இந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணின் மணி போல, உமது உள்ளங்கையிலே எங்கள் பெயரை எழுதிப்பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

2. கொரோனா என்கிற கொடிய நோயிலிருந்து எங்களை உமது தூய இரத்தக்கோட்டைக்குள் வைத்து பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

3. எண்ணற்ற மக்கள் வேலை இழந்து வந்தபோதிலும் எங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நீர் மிகவும் சிறப்பாக வழிநடத்தி சென்றதற்காக நன்றி கூறுகிறோம்.


4. கொரோனா நோயின் காலத்தில் பொருளாதார தேவையில் உழலும் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய கிருபையை தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம்.
5. கொரோனா நோயினால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது நீர் எங்களோடு கூட இருந்து ஆறுதல் தந்தமைக்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
6. இந்த கொள்ளை நோயை எங்கள் மீது அனுப்பி எங்களை, எங்கள் இதயத்தை, உன் வசம் திருப்ப செய்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
7. திருப்பலி காண இயலாத நிலையில் எங்களுடைய தனிப்பட்ட ஜெபம்  உம்முடனான உறவை அதிகரிக்கச் செய்ததற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.                                                                               
8. உலகெங்கிலும் கொரோனா நோயினால் இறந்த எங்கள் உறவுகளை நீர் விண்ணகம் எடுத்து சென்றதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
9. நிவர் புயல், புரவி புயல், போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து எங்களை பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
10. இவ்வருடத்தில் எங்கள் பகைவர்களையும் நேசிக்க கற்றுத் தந்த கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இயேசுவே இன்னும் எத்தனை எத்தனையோ நேரங்களில், காரியங்களில் நீர் எங்களுக்கு செய்த எண்ணிலடங்கா உதவிகளுக்காக உமக்கு கோடான கோடி நன்றிகளை எந்நேரமும் ஏறெடுக்க ஆசையாய் இருக்கிறோம். வரவிருக்கும் புதிய ஆண்டில், இன்னும் அதிகமாய் உண்மை அன்பு செய்யவும், இன்னும் அதிகமாய் உண்மை நேசிக்கவும், இன்னும் அதிகமாய் உன் வழியில் நடக்கவும், எங்களை வழி நடத்தவும் உள்ள உமது அன்பிற்காக நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.
பாடல்: நன்றி என்று சொல்லுகிறோம் நாதா…



மன்னிப்பு வழிபாடு
யாக்கோபு எழுதிய திருமுகம்,  5:13 -16 வாசிக்கப்படும்.
உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.
ஆகவே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

"முகவரி இல்லாத கடிதம் ஊர் போய் சேராது " என்பார்கள். நமக்கு நாம் தான் நமது முகவரியை எழுதவேண்டும். இந்த ஒரு வருட காலமாக, கடுமையான, இக்கட்டான பல சூழல்களை நாம் சந்தித்திருந்தாலும், பலவிதமான துன்பங்களை நாம் பட்டிருந்தாலும், பல நேரங்களில் பாவத்தில் மூழ்கி இருந்திருக்கிறோம். பாவத்தோடு நாம் பயணித்த நேரங்களை நினைத்துப் பார்ப்போம். அந்த நிலையிலிருந்து மனம் மாறிட இறையருளை நற்கருணை நாதரிடம் வேண்டுவோம்.
அன்புக்குரியவர்களே! பாவம் செய்த நம்மால் மட்டுமே நாம் செய்த பாவத்தை கண்டுகொள்ள முடியும். கடந்த வருடம் முழுவதும், பலவிதமான பாவங்களை நாம் செய்திருக்கலாம். செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் செய்த பாவங்களை மறந்துவிடுகிறோம்.  பாவங்கள் என்றாலே கடவுளின் திட்டத்திற்கு எதிரானது தான் பாவம் என எண்ணுகிறோம். கடவுளின் திட்டத்திற்கு எதிரானது மட்டும் பாவமல்ல. கடவுளின் திட்டத்தை செய்யாமல் இருப்பதும் பாவம்தான்.  உதாரணமாக ஒரு ஏழை ஒருவன் துன்பப்படுகிறான். அவன் துன்பப்படுவதை கண்டும் காணாமல் செல்வதும் பாவம் தான். அவனுக்கு உதவி செய்யாமல் இருப்பதும் பாவம்தான். அவன் துன்பத்தை பற்றி பேசாமல் இருப்பதும் பாவம் தான்.  இன்று நம்மைச் சுற்றி நிகழக்கூடிய பல இக்கட்டான சூழ்நிலைகளில்,  நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலர், தன்னார்வத்தோடு மனமுவந்து உதவினார்கள். 
நாம் செய்த உதவி என்ன? என சிந்திப்போம். 
துன்பப்படுபவர்களுக்காக நாம் ஏங்கேனும் பரிந்து பேசினோமா?  
நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தாயா?  என்ற இறை வார்த்தைகளின் அடிப்படையில்,  நோயுற்றவர்களை பார்க்கச் சென்றோமா?  அல்லது நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்து,  அடுத்தவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தோமா?  
நமது உடல் நலன் முக்கியம் என்ற நோக்கத்தோடு, அடுத்தவரின் உடல் நிலை குறித்து கவலை கொள்ளாமல் இருந்தோமா?   
பல நேரங்களில் பலர் தங்கள் உயிரையும் துச்சமென கருதாது,  அடுத்தவரின் உயிர் காக்க வேண்டும். அடுத்தவருக்கு நலமான பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல நல்ல பணிகளை முன்னெடுத்த, செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், இவர்களுடைய துன்பத்திலும் இன்பத்திலும் நாம் பங்கு கொண்டோமா?  
இவர்களை பாராட்டி,  ஊக்கப்படுத்தினோமா?  சிந்தித்துப் பார்ப்போம்.
 நாம் அறிந்தும் அறியாமலும் பலவிதமான பாவங்களை யாரும் நம்மை கவனிப்பதில்லை என்ற நோக்கத்தோடு செய்திருப்போம். செய்த பாவங்களை எல்லாம் நினைவு கூர்ந்து,  மனம் வருந்தி,  இறைவனிடத்தில் மனதார அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். ஆண்டின் இறுதியில் நம்மை இறைவன் இன்று அவர் முன்பாக கூட்டிச் சேர்த்திருக்கிறார், காரணம்,  நாம் அவருக்கு உரிமைச் சொத்து. அவர் மீது நாமும் நம்மீது அவரும் உரிமை கொண்டவர்கள். நாம் அவருக்கு உரியவர்கள்.  அவர் நம்மை ஏற்றுக் கொள்வார், நம் பாவங்களை மன்னிப்பார், வருகின்ற வருடத்தில் அவர் நம்மை காப்பார், வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு இன்று அவர் முன்பாக நாம் அமர்ந்திருக்கிறோம். எனவே,  நமது குற்றங்குறைகளை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். முடிந்தவர்கள்,  அருள்தந்தையை அணுகி பாவ அறிக்கை செய்து,  ஒப்புரவு அருள்சாதனம் பெற்றுக்கொண்டு, புதிய ஆண்டினை துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை மன்னிக்க கூடியவராக இருக்கிறார்.

(அமைதி….)
மன்னிப்பு பாடல்: 
(அல்லது)
திருப்பாடல் 63:அடிப்படையில்...

கடவுளே! நீரே எங்கள் இறைவன்! 
உம்மையே நாங்கள் நாடுகின்றேன்; 
எங்கள் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; 
நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல 
எங்கள் உடல் உமக்காக ஏங்குகின்றது. 
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து 
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றோம்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; 
எங்கள் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
எங்கள் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவோம்; 
கைகூப்பி உமது பெயரை ஏத்துவோம்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல 
எங்கள் உயிர் நிறைவடையும்; 
எங்கள் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.
நாங்கள் படுத்திருக்கையில் உம்மை நினைப்போம்; 
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்போம்.
ஏனெனில், நீர் எங்களுக்குத் துணையாய் இருந்தீர்; 
உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றோம்.
நாங்கள் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டோம்; 
உமது வலக்கை எங்களை இறுகப் பிடித்துள்ளது.
(பாடலை தொடர்ந்து)

புகழ்ச்சி பகுதி
 1 தெசலோனிக்கர் 5:16-18 
"எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே".
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

அன்புக்குரியவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.  இடைவிடாது ஜெபியுங்கள். என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.  பிறக்கவிருக்கும் இந்த புதிய ஆண்டிலே நாம் அனைவரும், எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், இடைவிடாது இறைவனிடம் வேண்டவும், எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறவும்,  இங்கே கூடியிருக்கிறோம். எனவே, ஆண்டவர் இயேசுவை,  வருகின்ற வருடங்களில் நம்மை காக்கு இருக்கக்கூடிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அனைவரும் இணைந்து.....
 பாடல் : நன்றியால் துதிபாடு என்ற பாடலை பாடுவோம்.
 திருப்பாடல் 100. 
 பல்லவி: அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! 
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

அன்புக்குரியவர்களே 1 குறிப்பேடு 13:8 ல் வாசிக்கின்றோம்...
"தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்". என்று...
இணைச்சட்டம் 6: 5. கூறுகிறது…
"உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" என்று.
நாமும் நம் முழு உள்ளத்தோடும், முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், இறைவனை அன்பு செய்ய வேண்டும். இதுதான் இறைவன் இன்று நமக்கு தரக்கூடிய செய்தி.  பாடகற்குழுவோடு இணைந்து நாம் அன்பு கூறுவோன் என்ற பாடலை பாடி இறைவனை ஆராதிப்போம்.
பாடல் : அன்பு கூறுவோன்…
நாம்  ஒருவர் மற்றவரை அன்பு செய்யும் போது இறைவனை அன்பு செய்ய தொடங்குகிறோம். இறைவனை அன்பு செய்யத் தொடங்கும்போது, வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை, கஷ்டங்களை, நாம் சந்திப்பது போல தோன்றலாம். ஆனால் எதையும் கண்டு, உங்கள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதுதான் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி.
பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில், நாம் நம்பிக்கையோடு இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். 


1 பேதுரு,5: 6-11 வரை உள்ள வசனங்களில் நாம் வாசிக்கலாம்
"கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

பிறக்கவிருக்கும் 2021 ஆம் வருடம் முழுவதும் நமது நம்பிக்கையை இழக்கும் விதமாக,  நமது நம்பிக்கையை சோதிப்பதற்காக உருவாகக்கூடிய, அனைத்து விதமான இன்னல்களையும் கண்டு அஞ்சாது, துணிவோடு, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய், ஆண்டவர் இயேசுவை,  இறுகப்பிடித்து கொண்டவர்களாய்,  தொடர்ந்து பயணித்து, புதிய ஆண்டினை துவங்கிட இறையருளை வேண்டி அனைவரும் இணைந்து மாண்புயர் கீதம் இசைப்போம்.

 மாண்புயர் கீதம் பாடல்.


புத்தாண்டு திருவிழிப்புத் திருப்பலி - 1 (1.1.2021)

புத்தாண்டு திருவிழிப்புத் திருப்பலி


திருப்பலி முன்னரை:

அன்புக் குழந்தை இயேசு பாலனின் அருள் நாடி, உறக்கம் களைந்து ஓடிவந்து ஒன்றாய் கூடியிருக்கும் பாசமிகு சகோதர சகோதரிகளே! மாற்றம் ஒன்றே மாறாத இந்த உலகில் எப்போதுமே பழையன கழிதலும் புதியன புகுவதுமாய் உள்ளது. புதுமையை நாடி எந்நாளும் ஓடிக்கொண்டிருக்கும் மாறாத இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் மாற்றங்களைத் தேடி விடாபிடியாய் ஓடிக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய மாற்றம் நிறைந்த இவ்வுலகில் கடந்து போகும் ஒவ்வொரு கனமும் மாற்றம் காணும் சூழலில், இன்னும் ஒருசில மணித்துளிகளில் நாம் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கின்றோம். “எதுவும் மறந்து போகும் எல்லம் கடந்து போகும்”என்ற எண்ணத்தில் வருகின்ற இந்தப் புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? அல்லது வழக்கமாக இல்லாமல், நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் முன்னேற்றத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் தகுந்த தயாரிப்புடனும் நாம் இந்த புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? 1சாமூவவேல் 16:7ஆம் வசனத்தில் கொடுக்கப்டட்டுள்ள,“ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தை பார்க்கிறார்” என்ற இந்த வசனம்,“ஆண்டவர் நம் முக மாற்றத்தை அல்ல, அக மாற்றத்தையே எதிர்பார்க்கிறார்” எனற கருத்தை நமக்கு உணர்த்துகிறது. முனதளவில் மாற்றம் கண்டு மகிழ்ச்சி நிறை புது வாழ்வை படைத்ததிட இன்றைய வாசகங்களும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. புலரப்போகும் புதிய ஆண்டில், இப்புவியில் புதிய மனிதராய் வாழவும், புது உலகம் படைத்திடவும், புத்துணர்வோடு, புதிதாய் பிறந்திருக்கும் இயேசு பாலனிடம் மன்றாடுவோம். இறைவனின் அன்பையும், அருளையும், இறக்கத்தையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டு ஒரு குடும்பமாய் உலகை மாற்ற புறப்படுவோம் இப்புதிய ஆண்டில். 


முதல் வாசக முன்னரை: (எண் 6: 22-27)

அன்பு இறைக்குலமே! இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக இவ்வாறு சொல்கிறார். “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! அவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”எனவே, அதே ஆசீரை பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் கடவுள் நமக்கு அளித்திட, அவ்வருளை நாம் பெற்றிட நமக்கு அழைப்பு விடுக்கும் இம் முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலின் வழியாக வெற்றுச் சட்டத்திற்கு அடிமைகளாய் இருந்த நம்மை மீட்டு தம்முடைய பிள்ளைகளாக்குமாறு தம் ஒரே மகனை பெண்ணிடம் பிறந்தவராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அது மட்டுமல்லாமல், நாம் கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும் உரிமையையும் அவர் மூலம் நமக்குத் தந்தருளினார் என்ற சிந்தனையோடு செவிமெடுப்போம், இரண்டாம் வாசகத்திற்கு. 

மன்றாட்டுகள்: 

1. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! புpறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக உம்மிடம் மன்றாடுகின்றோம். நீரே அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, தேர்வை நல்ல முறையில் எழுதவும், நல்ல மதிப்பெண் பெறவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. தலைவர்களுக்கெல்லாம் தலைவரே எம் இறைவா! ஏம் திருச்சபையை வழிநடத்தும் தலைவர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்;, துறவியர் கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் ஆசீர்வதியும். நீரே அவர்களுக்கு உமது ஆசியைப் பொழந்து, அவர்களோடு இருந்து, எங்களை வழிநடத்த வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. ஆறுதலின் பிறப்பிடமே எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எல்லாவற்றிலும் எங்களை வழிநடத்தியதற்கு நன்றியாகவும், வரக்கூடிய புதிய ஆண்டில் எங்கள் சொல், செயல்,சிந்தனை அனைத்திலும் ஆறுதலாய் எங்களுடன் இருந்து எங்களை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்பு ஆண்டவரே! ஏம் பங்கு மக்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இப்புதிய ஆண்டில் அனைவருக்கும் உடல், உள்ள ஆன்ம சுகம் தந்து, அவர்கள் செய்யும் தொழில் சிறக்கவும் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையவும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. மருத்துவருக்கெல்லாம் மருத்துவரே எம் இறைவா! பரவிவரும் பல்வேறு நோய்களிலிருந்தும், இயற்கைப் பேரிடர்களிடமிருந்தும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் அனைத்து மக்களையும் காக்கவும், நீரே அவர்களுக்கு உற்ற துணையாய் இருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


கன்னி மரியாள் இறைவனின் தாய் (புத்தாண்டு திருப்பலி) - 3 (01. 01.2021)

 கன்னி மரியாள் இறைவனின் தாய் முன்னுரை

வரங்களையும் வளங்களையும் நமக் கீந்து

முதிர்மனங் கொண்ட முன்மாதிரி மனிதராய் - நமைமாற்ற

அனுபவங்கள் பல நிறைவாய் தந்துவிட்டு

சென்றிருக்கிறது 2020 ஆம் ஆண்டு

புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு

இறைவன் நமக்களித்த இனிய வாழ்த்து

அவர் உலகினோர்க்கு வழங்கிய அன்பு பரிசு


இந்த புதிய ஆண்டிலே இறைவனது இரக்கமிகு அருட்கொடையிலும், நிலைசாயா நம்பிக்கையிலும் அசைக்க முடியா விசுவாத்திலும் ஒன்றித்து வாழ அழைக்கப்படுகிறோம்.

புத்தாண்டையே பரிசாக கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார் இதை உணர்ந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.


பழையன கழிவோம் - தீமைகளை மட்டும்

புதியன புகுவோம் - நன்மைகளால் நிறைவோம்.


மேலும் இன்று நாம் அன்னை மரியால் இறைவனுடைய தாய் என்று திருஅவையால் அறிவிக்கப்பட்ட விழாவை கொண்டாடுகிறோம். கிறிஸ்து பிறப்பு நமக்குள் ஒளியை ஏற்றுகிறது. இந்த ஒளி இந்த புதிய ஆண்டு முழுவதுமாக நம்மில் ஒளிர, ‘நம்பிக்கை’ என்னும் எண்ணெயை நம் மனதில் விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நம்பிக்கை என்னும் வேர் காய்ந்து போனால், வாழ்க்கை என்கிற மரம், பட்டுப்போகும். அன்னை மரியாள் இயேசுவின் வாழ்வுக்கு வேராக இருந்தவள். அவளின் தாழ்ச்சி, எளிமை, தூய்மை, பக்தி யாவுமே தாய்மைக்கு மணிமகுடம். மரியாள், இயேசு என்னும் சிற்பத்தை பக்குவமாய் செதுக்கிய சிற்பி. காணாமல் போன போதும், கல்வாரி மலையிலும் தன் மகனுக்காய் பதறிய இதயம். தன் வாழ்வு முழுவதும் இறைவனுக்கும், அவர் சித்தத்திற்கும் அர்பணித்த தியாகச் செம்மல். துன்பமும் துயரமும் வாட்டும்போது, இவ்வுலகிற்கு அமைதி செய்திச் சொன்ன சமாதானப்புறா. இதனால்தான் இன்று ‘மரியாள் இறைவனின் தாயானால்’. ‘இதோ உன் தாய்’ என்று, இயேசுவும் தாய்மைக்கு மணிமுடி சூட்டுகிறார். தவறுகளையேல்லாம் மன்னிக்கும் இதயம் தாயின் இதயம் ஒன்றே. எனவே, இப்புத்தாண்டு தினத்தில் இத்தாயின் வழி செல்வோம், இறையருளைப் பெற்று, இந்நம்பிக்கை ஆண்டை வெற்றியுடன் துவங்குவோம். அதற்கான வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்!


புத்தாண்டு திருப்பலி - 2 (1.1.2021)

 புத்தாண்டு திருப்பலி 


முன்னுரை


குழந்தை இயேசுவின் அன்பில் இறை சமூகமாய் ஒன்று கூடியிருக்கும் சகோதர, சகோதரிகளே!

பழையன கழிதலும், புதியன புகுதலும் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தமாகி விட்டன. எதை எடுத்துக் கொண்டாலும் புதுமையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த உலகம். மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகில் நாமும் மாறிக்கொண்டு தான் இருக்கிறோம். மனித உறவுகளையும் மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றோம். இத்தகைய சூழலில் இன்னும் சில மணித்துளிகளில் நாம் 2021 என்னும் புதிய வருடத்தில் காலடி வைக்க போகின்றோம். பத்தோடு ஒன்று பதினொன்றாய் இந்த வருடத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோமா? அல்லது நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் நம்மை முன்னேற்;றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்நோக்கி இங்கே வந்திருகின்றோமா? சிந்தித்துப் பார்க்க அழைக்கின்றது இப்பெருவிழாத் திருப்பலி…

வண்ண ஆடை, அணிகலன்களை மட்டும் புதிதாக மாற்றிக் கொண்ட நாம், நமது உள்ளத்தையும் புதிதாக மாற்றி அமைத்து, தந்தையாம் இறைவனுக்கு நன்றிச் செலுத்திடவும், இறைவனின் தாயான கன்னி மரியாளின் பரிந்துரைச் செபத்தைக் கேட்டிட, இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. வெளி ஆடம்பரங்களை மட்டும் விரும்பும் நமக்கு “ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தைப் பார்க்கிறார்” (1சாமு 16:7) என்கிற இறைவார்த்தை நம்மை புதிய மனிதர்களாய் வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி, இறைவன் தங்கும் ஆலயமாக வாழவும் பணிக்கிறது.

புலரவிருக்கிற இந்த புதிய ஆண்டிலே நாமும் நம்முடைய பழைய வாழ்க்கையின் குறைகளை அகற்றுவோம். நமது உறவுகளிலே புரிதலும், உண்மையும் கொண்டு புது உலகம் படைத்திட விழைவோம். நமது செயல்பாடுகள் பிறருக்கு ஊக்கம் தருகிற உரமாக அமைய முற்படுவோம். புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்வது போல நம்மிடையே எந்த வேறுபாடும், பாகுபாடும் இல்லாமல் இறைவனின் அன்பைச் சுவைக்கும் மக்களாய் வாழ முயலுவோம். புது மனிதர்களாய் புது பிறப்படைந்த கிறிஸ்தவர்களாய் வாழ இறைவனின் அருளை இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

ஒருவர் மற்றவருக்காய் செபிப்போம்!


முதல் வாசக முன்னுரை 

எண் 6:22-27

கடவுளின் சேவர்கள் மக்களுக்கு எவ்வாறு ஆசி வழங்க வேண்டும் என்று முதல் வாசகம் நமக்கு கூறுகிறது. அவர்கள் ஆசி வழங்கும் போது ஆண்டவர் மக்களை காக்கின்றார் என்றும், ஆண்டவருடைய திருமுகம் என்றென்றைக்கும் மக்கள் மேல் ஒளிர்கிறது என்று கூற வேண்டும் என கூறும் இவ்வாசகத்திற்கு செவி மடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை 

கலா 4:4-7

உலக மீட்பர் இயேசு கிறிஸ்து வழியாக ஆண்டவருடைய ஆவி நம்மில் குடிகொண்டிருக்கிறது. அந்த ஆவி கடவுளை அப்பா தந்தையே என அழைக்கும் உரிமையை கொடுத்துள்ளது. ஆக இனி நாம் அனைவரும் அடிமைகளல்ல. மாறாக இறைவனின் பிள்ளைகள் என கூறும் பவுல் அடிகளாரின் மடலுக்கு செவிமடுப்போம்.


மன்றாட்டுகள்:

1. அன்பே உருவான இறைவா! திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரையும் இப்புதிய ஆண்டில் ஆசீர்வதித்து, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நீர் உம்முடைய உடனிருப்பைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. அன்பால் ஆளுகை செய்யும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், அரசு பணியாளர்கள், அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து ஊழல், லஞ்சம் தவிர்த்து உண்மையான பிறநல எண்ணத்தோடு பணியாற்றிடவும், மக்களின் நலனில் அக்கறைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



3. வளங்களின் நாயகனே எம் இறைவா! எம் பங்குத் தந்தையையும், பங்கு மக்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து இப்புதிய ஆண்டில் நாங்கள் அனைவரும் அன்பின் சமூகமாக வாழவும், நற்செய்தியின் விழுமியங்களை எங்கள் வாழ்வின்மைக்காகவும் கொண்டு புது சமூகத்தை உருவாக்க எங்கள் அனைவருக்கும் நல் மனதினை தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நிறைவாழ்வு வழங்கும் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தையும், இளையோருக்கு வேலை வாய்ப்பையும், உடல் நலமற்றோருக்கு நல்ல உடல் சுகத்தையும், மேலும் பல்வேறு கனவுகளை இதயத்தில் சுமந்து நிற்கும் உம் பிள்ளைகளாகிய எங்களின் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 





புத்தாண்டு காலைத் திருப்பலி - 4 (1.1.2021)

 புத்தாண்டு காலைத் திருப்பலி 


திருப்பலி முன்னுரை: 

“தூய கன்னி மரியா இறைவனின் தாய்”

“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபத் பணிந்ததும், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றவரே” (லூக் 1: 42) என்று கூறப்பட்டதை, இன்று நாம் விழா எடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் இறைவனின் தாய் என்று அழைக்கப்படும் அன்னை மரியாவைப் பற்றியே. இயேசுவின் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே. இன்று புத்தாண்டின் முதல் நாளாகவும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் 8ஆம் நாளாகவும், அகில உலக அமைதியின் நாளாகவும் மற்றும் இவற்றின் 

நடுவே நம் தாயாம் திருச்சபையானது தூய கன்னிமரி இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி 5ஆம் நூற்றாண்டில் மரியா இயேசுவின் தாய் தான் இறைவனின் தாய் அல்ல என்ற நெஸ்டோரியஸின் தவறான கருத்தை மக்கள் பின்பற்றினார்கள். ஆனால் இந்த தவறானக் கருத்தை உடைத்தெரிவதற்காக கி.பி 431இல் கூட்டப்பட்ட எபேசு நகர்ப் பொதுச்சங்கத்தில் மரியா இறைவனின் தாய் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுத்துக் கூறியது. எப்படி அன்னை மரியாள் இறைவனின் தாய் என்றால், திருவிவிலியத்ததின் அடிப்படையில் அன்னை மரியாள் கிறிஸ்துவின் தாய் என்று நாம் சிறு குழந்தையிலிருந்தே கேட்டிருப்போம் ஆனால் இறைவனின் தாய் என்றால் நம் அனைவருக்கும் புரியாத ஒரு கருத்தாக உள்ளது. நம் திருச்சபையானது இயேசு கிறிஸ்துவை இரண்டு தன்மைகள் வாயிலாக கூறப்படுகிறது. ஓன்று மனிதத்தன்மை மற்றொன்று இறைத்தன்மை. எனவே,அன்னை மரியாளை கிறிஸ்துவின் தாயாகவும் இறைவனின் தாயாகவும் கூறப்படுகிறது. எனவே,ஆண்டவரின் நாள் மகிழ்சியுடன் வருமளவும் பயணமாகும். இத்திருச்சபையை தாய் அன்போடு பேணி தாயகம் செல்லும் வழியில் அதனை கனிவோடு காத்து வருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரவேண்டும். இத் திருநாளின் வழியாகத் திருச்சபை நம் ஒவ்வொருவரையும் விண்ணகத் தாயின் பாதுகாப்பு என்னும் போர்வையில் வைத்து காக்கிறது. எனவே இந்த புதிய நாளிலிருந்து நாம் புதிய மனிதர்களாய் மாறவும், வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி இறைவன் தங்குமிடம் ஆலயமாக வாழவும் இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம். 

முதல் வாசக முன்னுரை: (எண் 6: 22-27)

இறை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய முதல் வாசகத்தின் மைக்கருத்து,“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!”இவ்வாறு அவர் கூறியதோடு, தமக்கு நிறைவான ஆசீரை பொழிகிறார் என்று கூறும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)

குழந்தை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய இரண்டாம் வாசகத்தில் மைக்கருத்தாக விளங்குவது,“அவர் நம் அப்பா, நம் தந்தை”. கடவுள் நமக்கு அவரை அப்பா என்று கூறும் உரிமையைக் கொடுத்துள்ளார். அன்று நாம் பெற்ற திருமுழுக்கின் போது இதை கூறிய இறைவன் இன்று அதையே கூறுகிறார். எனவே, இனிமேல் நாம் அடிமைகள்; அல்ல கடவுளின் பிள்ளைகள் எனவும், அப்பா என்று கூறுவது. நம் உரிமைய எனவும் கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 


மன்றாட்டுக்கள் :

1. மாடடைக்குடிலில் மரியின் மடியில் தவழ்ந்த இயேசுவே! நிலை வாழ்வுத் தரும் விண்ணக அரசை நோக்கி எங்களை வழி நடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவியர் உம் பிறப்பின் மகிழ்வால் உந்தப்பட்டு உம் மக்களுக்கு ஒளியாக வழியாக சாரமூட்டும் உப்பாக இருந்து எம்மை எம் மீட்புப் பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டிய வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவனிக்கு அமைதியை கொண்டுவந்த இயேசுவே உம் பிறப்பால் சாமக்காவல் காத்திருந்த இடையர்கள் மகிழ்ந்தனர். வானாக தூதர்அணி வாழ்த்திப் பாடியது. அன்று உம் பிறப்பால் எருசலேம் முழுவரும் ஆனந்தம் பொங்கியது போல் இன்றும் எங்கள் மத்தியில் உம்முடைய மகிழ்ச்சி, அன்பு, அமைதி நிலவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பாரினை பரமன் பாதையில் நடத்திட பிறந்த பாலனே, எம் பங்கு என்னும் திருச்சபையை வழிநடத்தும் எம் பங்குத் தந்தை, அன்பிய பிரதிநிதிகள் அனைவரையும் உம் ஒளியால் நிரப்பி இவர்கள் தங்களை முழுமையாக மக்கள் பணியில் ஈடுபடுத்தி மக்களை உம் மதிப்பீடுகளுக்கு ஏற்றார் போல் கட்டியெழுப்ப வேண்டிய வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மனித குலம் மீட்படைய மனுவுறுவான இயேசுவே, கீழ்த்திசை மன்னர்கள் மூவர் பொன், வெள்ளி, தூபம் அளித்து மகிழ்ந்தது போல் உம் அருள் வேண்டி ஆலவோடு உம் திருமுன் குழமியிருக்கும் எங்களையும் நிறைவாய் உந்தன் பிஞ்சுக்கரம் தொட்டு ஆசீர்வதித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மண்ணுலகில் விண்ணுலகை படைத்திட ஆவல் கொண்ட பாலனே. இன்று எம் தாய்த் திருநாடு மதவாதிகளின் பிடியில் சிக்குண்டு மக்கள் படும் வேதனையை நீ அறிவீர். பாலனே இன்று உம் பிறப்பு மதங்கள் மீது மதம் பிடித்து அலையும் எம் நாட்டுத் தலைவர்களுக்கு வேள்வியாய் அமைந்து மதசார்பற்ற மக்களாட்சி மீண்டும் தழைத்திட வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

6. அவனியை ஆண்டிட மனுவுறுவெடுத்த ஆதவனே. எங்கள் நாட்டு இளைஞர்களுக்காகவும், இளம்பெண்களுக்காகவும் மன்றாடுகிறோம். பேரிருளில் இருந்த மக்கள் ஒளியைக் கண்டதுபோல் வேலையின்றி இரவும், பகலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் அதன் வறண்டாக்களையும் உறைவிடமாக்கிக் கொண்ட இவர்களுக்கு ஒரு நல்ல பாதையைக்காட்டி இவர்கள் வாழ்விலும் ஒளியேற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திங்கள், 28 டிசம்பர், 2020

நமது வாழ்வை இறை வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்வோம். (29.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள்  வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய முதல் வாசகமானது நாம் எப்படி வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய உறவு பற்றி இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகிறது. சகோதர சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கக்கூடியவர்கள். அவர்கள் அனைவரும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களில் ஈடுபடுபவர்கள். எனவே அவர்கள் பொய்யர்கள் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் வழங்குகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிமியோன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் கண்டு கொள்கிறார். சிமியோன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டு கொண்டு,  இந்த குழந்தை பலரின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் என மரியாவிடம் கூறுகிறார். மேலும் உனது  உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற செய்தியையும் மரியாவினிடத்தில் கூறுகிறார்.

 இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்த கூடிய செய்தி எது என்ற மையக்கருத்தோடு சிந்திக்கும் பொழுது,  ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்போடு உறவோடு நேர்மறையாக வாழவேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் முன்னிறுத்துவதாக உணர்கின்றேன். சிமியோன், இந்த குழந்தை இஸ்ரயேலில் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் என குறிப்பிடுகிறார். வீழ்ந்தவர்கள் எல்லாம் எதிரிகளும் அல்ல.  எழுந்தவர்கள் எல்லாம் எப்போதும் இயேசுவோடு உடன் இருந்தவர்களும் அல்ல. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது சகோதரத்துவத்தையும் உறவையும் மையப்படுத்தி தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். சுய விருப்பு வெறுப்பு காரணமாக ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவது என்பது தவறு என்பதை தனது செயலால் சுட்டிக்காட்டினார். அடிமையாக வைக்கப்பட்ட மக்களுக்கு அடிமை நிலையை ஏற்று நாம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து தொண்டு செய்து வாழ வேண்டும் என்ற பாடத்தை கற்பித்துச் சென்றார்.

 இன்றைய முதல் வாசகத்தில் கூறப்படுவது போல, சகோதர சகோதரிகளை வெறுப்போர் இருளில் நடப்பவர்கள் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, நாம் வாழாமல்  ஒளியின் மக்களாக வாழவேண்டும் என்ற செய்தியை நமக்கு இயேசு வழங்கிச் சென்றார். இயேசு வழங்கிச் சென்ற செய்தியை நாம் இன்றைய நாளில் உள்ளத்தில் சீர்தூக்கிப் பார்த்து சிந்தித்து, நமது வாழ்க்கையை நல்வழியில் அமைத்துக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். சிமியோன் ஆண்டவர் இயேசுவை தன் கரங்களில் பெற்றதும் என்னை அமைதியோடு போகச் செய்யும் என்று வேண்டுகிறார். நாமும் பல நேரங்களில் உறவுச் சிக்கல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் போதும், உறவுகளிடத்தில் கோபங்கள் உருவாகும் போதும்,  அமைதியோடு இருக்க இறையருளை வேண்டுவோம். அதற்கு இன்றைய வாசகங்கள் நமக்கு உதவியாக அமைகின்றன.  அதிலும் குறிப்பாக சிமியோனின் செயல்பாடுகள் நமக்கு இந்த வாழ்க்கை பாடத்தை கற்பிக்கின்றன. சிமியோன் மரியாவை நோக்கி, உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று கூறுகிறார். நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் வியப்பாக இருந்தபோதிலும் அன்னை மரியா அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். நமது கற்பனைக்கு எட்டாத நிகழ்வுகள் நிகழும் பொழுது, நாம் பரபரப்பு அடையாளமும், வேகம் கொள்ளாமலும், நிதானமாக எதையும் சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறோம். பெரும்பாலும் சிந்திக்காமல் செயல்படக்கூடிய நேரங்களில்தான் உறவுகளிடையே சிக்கல்கள் உருவாகிறது. சகோதர சகோதரிகளின் உறவுகளுக்கு இடையே மனகசப்பு ஏற்படுகிறது. எனவே அது பழிவாங்கலுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.  இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும், நாம் அமைதியோடும், நேர்மையோடும், உண்மையோடும் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக் கூடியவர்களாக, உறவில் வாழக் கூடியவர்களாக எப்போதும் உறவை மட்டுமே மையப்படுத்தி நமது பணியினை செய்யக்கூடியவர்களாக இருப்பதற்கு, அழைப்பு தரப்படுகிறது. நம் வாழ்க்கையில் நாம் உறவோடு வாழ வழிகாட்டும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு, திறந்த மனதோடு செவிகொடுத்தவர்களாக நமது வாழ்வை இறை வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய்,  இயேசுவின் பாதையில் அவரோடு இணைந்து பயணிப்போம்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ஒளியை சார்ந்தவர்களாக இருப்போம்! (28.12.2020)

ஒளியை சார்ந்தவர்களாக இருப்போம்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்று நம் தாய்த்திரு அவையோடு இணைந்து மாசில்லா குழந்தைகள் தினத்தில் மாசில்லா குழந்தைகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.  இயேசுவின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து மீட்டது. மாசில்லாத பல குழந்தைகளின் ரத்தம் இயேசுவுக்காக அன்று சிந்தப்பட்டது. இயேசுவின் பிறப்பை ஒட்டிய  நிகழ்ச்சிகளை செக்கரியா எனப்படக்கூடிய மலையாள எழுத்தாளர்,  கற்பனை நயத்துடன் கதைகளாக வடிவமைத்திருக்கிறார். அவர் வடிவமைத்த கதைகளுள் ஒன்று, இன்றைய நாள் வாசகங்களுக்கு சிறந்ததாக அமையும் என எண்ணுகிறேன். ஒரு படைவீரன் ஒருவன், உடல் முழுக்க ரத்த குருதியால் நனைந்த வண்ணம், கையில் வாளோடு ஒரு விபச்சாரியின், ஒரு விலைமகளின் வீட்டிற்கு முன்பாக வந்து நின்றான். அவன் அந்த விலை மகளைப் பார்த்து, நான் மிகவும் களைப்புற்று இருக்கிறேன். என் களைப்பைப் போக்கிக் கொள்ளவும் என்மீது இருக்கக்கூடிய இந்த ரத்த வாடையை நான் அகற்றிக் கொள்ளவும் எனக்கு வெந்நீர் வைத்து தா! 
 நான் என்னுடைய சோர்வைப் போக்கி கொள்ள வேண்டும். என்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றான். ஆனால் அந்த விலைமகளோ, அந்த படைவீரனை நோக்கி, ஏன் உனக்கு இவ்வளவு விரோதம்? சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தன? எதற்காக சின்னஞ்சிறு குழந்தைகளை நீ கொன்று குவிக்கிறாய்? உனக்கு எதிராக அவர்கள் செய்த சதி திட்டம் தான் என்ன? என்ற கேள்வியை எழுப்பினாள். அதற்கு அந்த படை வீரன் சலிப்போடு,  யார் சொன்னது? இந்த குழந்தைகள் எல்லாம் எனக்கு எதிராக சதித்திட்டம் செய்தவர்கள் என்று? எனக்கும் அந்த குழந்தைகளுக்கும் பகை உள்ளது என்று? எனக்கும் அவர்களுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்றான்.  உடனே அந்த விலைமகள், இருந்தபோதும் ஏன் குழந்தைகளை நீங்கள் தேடித் தேடிக் கொன்று கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டாள். அதற்கு அந்த படைவீரன்,  அந்த விலை மகளிடம் கூறினான், நாங்கள் கொல்ல வேண்டும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  போர்முனையில் நிற்கும் போது எனக்கு எதிரே இருக்கக் கூடியவனும்,  போருக்கு வந்திருக்கிறான் என்றால் எனக்கும் அவனுக்கும் இடையே எந்தவித மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை.  எங்களை எங்களது அரசன் அவர்களை தாக்க வேண்டும் எனக் கூறும்போது மட்டுமே நாங்கள் அவனை, அவர்களை தாக்க முயலுகிறோம். அந்த அடிப்படையில், எங்கள் அரசன் இட்ட கட்டளை.  கட்டளைக்கு செவிகொடுக்க வேண்டியது படைவீரர்களாகிய எங்களுடைய கடமை.  நாங்கள் எங்கள் கடமையை தான் செய்தோம் என்று கூறினான். இருந்த போதும் இந்த பெண்மணி அவனை விடுவதாக இல்லை. மீண்டும் நச்சரித்தாள். கடமை என்ற பெயரில் ஒன்றுமறியாத சிசுக்களை கொல்வது முறை தானா? என்றாள்.  உடனே மாடி அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. விலைமகள் உடனடியாக படை வீரனிடம் எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பூனைகள் கூட குழந்தைகளைப் போலவே அழுகின்றன என்றாள். உடனே அந்தப் படை வீரன் அது குழந்தையாக இருந்தால் தான் என்ன?  என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. இனி நான்  எந்த சிசுவையும் கொல்லப் போவது இல்லை. ஏனென்றால் எனது பணி நேரம் முடிந்து நான் ஓய்வுக்கு வந்துவிட்டேன்,  என்று கூறிய வண்ணம், அரைமயக்கத்தில் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கட்டிலில் சரிந்து கிடந்தான்.  

அப்போது மாடியிலிருந்து மரியாவும் சூசையும் கையில் குழந்தையோடு இறங்கி வந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள். இந்த விலைமகள் மரியாவிடம்,  உங்கள் மகன் பெரியவனாக வளர்ந்து வரும் போது என்னை நினைவில் கொள்ளச் சொல்லுங்கள் எனக் கூறினாள்.  உடனே, சரி! என்று கூறிவிட்டு கழுதையின் மீது ஏறி அமர்ந்த வண்ணம் தங்களின் பயணத்தை தொடர்ந்தார்கள். மீண்டுமாக அந்த விலைமகள் விரைவாக ஓடி வந்தாள். ஓடி வந்த விலைமகள், மரியாவிடம் என்னை மட்டுமல்ல, அந்தப் படை வீரனையும் உங்கள் மகனை நினைவில் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு,  அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள். 

காலங்கள் உருண்டோடின. இயேசு வளர்ந்தார். அவர் சந்தித்து தீர்ப்பு வழங்கிய அந்த விலைமகள் தான், அன்று இயேசுவை காப்பாற்றிய விலைமகள் எனவும், இயேசுவை ஊடுருவக் குத்திய நூற்றுவர் தலைவன் தான் அந்த படை வீரன் என்றும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கற்பனை நயத்தோடு எழுதியிருந்தார்.

 இன்றைய முதல் வாசகத்தில், நாம் அனைவரும், ஒளியை சார்ந்தவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். கடவுளாக இருக்கிறார். அவரிடம் இருள் இல்லை. இருளுக்குரிய செயல்களை செய்து விட்டு,  கடவுளோடு நட்புறவோடு இருக்கிறோம் என கூறக் கூடியவர்கள் பொய்யர் என சுட்டிக்காட்டப்படுகிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஏரோது அரசனின் கட்டளைக்கு இணங்கி, ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கொன்று குவிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் வாசிக்கின்றோம். 
 இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பல அதிகாரிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை எனக்கூறி, நீதிக்குப் புறம்பாகவும், மனிதநேயத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.  சமீபத்தில் நடந்த பல போராட்டங்கள், வன்முறைகளாக மாறியதற்கு மூலகாரணம், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்கள் சிலரின் தவறான செயல்பாடுகள் என்பது அனைத்து ஊடகங்களும் வெளிப்படையாக சுட்டிக்காட்டிய ஒன்று,  என்பதை மறுக்கவியலாது.

 கடமை என்ற பெயரில் பல நேரங்களில் நாம் நீதிக்கு துணை நிற்பதை விட்டுவிட்டு அநீதிக்கு துணை நிற்கக் கூடியவர்களாக இருக்கிறோம். அநீதிக்கு துணை நின்று விட்டு, நாம் அனைவரும் ஒளியைச் சார்ந்தவர்கள் எனக் கூறினால், கண்டிப்பாக இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்பட்டது போல, இருளுக்குரிய செயல்களை செய்து விட்டு,  கடவுளோடு நட்புறவு எங்களுக்கு இருக்கிறது எனக் கூறக்கூடிய உயிர்களாகத் தான் நாம் இருப்போம்.  நாம் அனைவரும் கடமையைச் செய்தாலும், நீதியில் சிரமேற்கொண்டு சிறப்போடு செயல்பட, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.  அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  உண்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கக் கூடிய இயேசுவின் சீடர்களாக, இச்சமூகத்தில் ஒளியின் மக்களாக விளங்கிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

சனி, 26 டிசம்பர், 2020

மாசில்லா குழந்தை தினம் (28.12.2020)

மாசில்லா குழந்தை தினம்


முன்னுரை

இறையேசுவில் அன்புகொண்டு அவரின் பிள்ளைகளாய் வந்திருக்கும் இறைமக்கள் (அ) சகோதர சகோதரிளே உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்னையாம் திருச்சபை இன்றைய நாளில் மாசில்லா குழந்தைகள் தினத்தை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஏன்? என்று பார்க்கும்போது, இயேசு பிறந்தபோது இயேசு பாலனைக் கண்ட மூன்று ஞானிகள் தம்மிடம் திரும்பி வரவில்லை என்ற கோபத்தினால் பெத்லகேமிலும், அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள 2 வயதிற்குற்பட்ட ஆண்களை கொல்ல ஆணையிட்டான். அவ்வாறு இறந்த குழந்தைகளின்  நினைவாகத் திருச்சபை அவர்களையும் மறைசாட்சிகளாகவும், முதல் மறைசாட்சிகளாகவும் மதித்து விழா எடுத்து சிறப்பிக்கின்றது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த குழந்தைகளின் விழாநாளில் இன்றை இறைவார்த்தைகளின் வழியாக இறைவன,; ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை என்றும், என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்று புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வழியாகவும், வானதூதர்  யோசேப்புக்கு கனவின் மூலம் எச்சரித்து அவர் குடும்பத்துடன் எகிப்துக்கு தப்பி ஓடியதும், ஏரோது மன்னன் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதிற்குற்பட்ட குழந்தைகளை கொலை செய்யும்படியும் நிகழ்வுகளை கொண்ட புனித மத்தேயு நற்செய்தி வழியாகவும் இறைவன் நம்மிடம் பேசுகிறார். எனவே நாமு; அத்தகைய ஒளியால் இறைவன், தெய்வபாலனாக நம் மனதிலும் பிறந்திருக்கிறார் என்ற எண்ணங்களோடும் அந்த குழந்தை யேசுவுக்காக மரித்த குழந்தைகளுக்காகவும் மற்றும் நமது பங்குகளில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும் ஜெபிப்போம். மேலும் என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என்று இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்ற புனித யோவானின் விருப்பப்படி வாழவும் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசுக்;கு நுழைய முடியாது என்ற இயேசுவிடம் நாமும் குழந்தைகள் போல் மாசில்லா வாழ்வு வாழ வரம் கேட்டு இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை: (1யோவா 1:5-2:2)

ஒளியின் மக்கள் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெறிவிக்கிறேன். இறைமகன் இயேசு கிறிஸ்து “நானே உலகின் ஒளி என்னை பின் செல்பவர் இருளில் நடவார்” என்று பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் அதற்கு சான்றாக புனித யோவனும் தனது முதல் திருமுகம் வாயிலாக கடவுள் ஒளியாய் இருக்கிறார் என்றும் அந்த ஒளியில் நடந்தால் வாழ்வு, மன்னிப்பு தாழ்ச்சி ஆகிய ஆசீர்களை பெறமுடியம் என்பதை உணரவும், இயேசுவே நம் பாவங்களுக்குக் கழுவாய் என்பதை உணர்ந்தும் இந்த முதல் வாசகத்திற்கு நம் முழு மனதுடன் செவிமெடுப்போம். 

மன்றாட்டுகள்: 

1. நானே உலகின் ஒளி என்றுகூறிய எம் இறைவா! உலகின் ஒளியான நீர் பிறந்தவுடன் உமக்காக மரித்த மாசில்லா குழந்தைகள் அனைவருக்காகவும், எம் பங்கில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும்  ஜெபிக்கின்றோம். நீர் தாமே அவர்களை உமது வான்வீட்டில் சேர்த்து கொள்ளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறன்றோம். 

2. சிறு பிள்ளைகளைப்போல் மாறாவிட்டால் விணணகத்திற்குள் நுழைய முடியாது என்று உரைத்த எம் இறைவா, பாவிகளாக வாழ்ந்து வரும் எங்கள் ஒவ்வொருவரையும் உம் கருணைக் கண் பாரும்.நாங்கள் ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகள் போல்  தூய்மையாக மாறுவதற்கு தேவையான அருளும் ஆசிரும் தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் என்று கட்டளையிட்ட எம் ஆயனே! எமது பங்கில் குழந்தை வரம் இல்லாமல் தவிக்;கும் ஒவ்வொருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அருளி அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று எல்லாம் வலல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. இச்சிறியவர்களுக்குச் செய்ததை எல்லாம் எமக்கே செய்தீர்கள் என்று கூறிய எங்கள் தேவனே, இன்றைய உலகில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன் கொடுமைகளுக்காகவும், குழந்தை தொழிலாளர்கள்  ஒடுக்குமுறைக்காக மன்றாடுகிறன்றோம். தேவனே அத்தகைய உம் பிள்ளைகளுக்கு எதிராக உள்ள அனைத்துக் கொடுமைகளை அகற்றி நல்வாழ்வு தந்திட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


நாம் கடவுளின் குழந்தைகள்! (27.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று நாம் தாய்த் திரு அவையோடு இணைந்து திருக்குடும்ப பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், உரித்தாக்குகிறேன். 

வாழ்த்துக்கள் சரி! ஏன் பாராட்டுக்கள்? என்ற கேள்வி எழலாம்.  குடும்பமாக இன்று இணைந்து வாழ்வதென்பது சவாலாக உள்ளது. ஏனென்றால், நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  ஆனால் இந்த நேரத்தில், நீங்கள் இன்றுவரை குடும்பமாக இணைந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் குடும்பமாக இருப்பதே இவ்வுலகிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமும் அருளுமாக இருக்கிறது.  எனவே தான், உங்களுக்கு பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.  
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நமக்கு நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளன.  
10 வயதில் ஒருவன் குழந்தையாக இருக்கிறான். 
20 வயதில் இளைஞராகிறான்.  
30 வயதில் முறுக்கேறி திரிகிறான். 
40 வயதில் பொறுப்போடு நகர்கிறான். 
50 வயதில் ஆசைகளை அடைவதற்கு முயலுகின்றான். 
60 வயதில் ஓய்வு பெறுகிறான். 
70 வயதில் ஏக்கம் கொள்கிறான். 
80 வயதில் நடுங்குகிறான். 
90 வயதில் படுக்கையில் கிடக்கிறான். 
100 வயதில் கல்லறைக்குள் அடக்கப்படுகிறான்.  

மனித வாழ்க்கையை இவ்வாறாக குறிப்பிடுவார்கள். ஆனால், கடவுளின் பார்வையில் நாம் என்றுமே, அவரது குழந்தைகள் தான்.  ஒரு மனிதன், ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு விதமான நிலைகளில் இருக்கிறான். 
ஒரு இடத்தில் குழந்தையாக இருக்கக் கூடியவன்,  
நண்பர்கள் மத்தியில் நண்பனாகிறான். 
திருமணம் முடிக்கும் போது கணவனாக மாறுகிறான். 
தன்னுடைய பிள்ளைக்கு தந்தையாகிறான். 
மீண்டும் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாக மாறுகிறான்.  

மனிதன் ஒவ்வொரு நிலையிலும், தன்னுடைய வளர்ச்சியில்,  பலவிதமான நிலைகளைக் கடந்து செல்கிறான். ஆனால் கடவுளின் பார்வையில் நாம் எப்போதும் அவரது குழந்தைகள் தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதையே இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். 

ஒவ்வொரு மனிதனுமே பலவிதமான நல்ல பண்புகளை கொண்டிருக்கிறான். அந்த பண்புகளைத் தான், இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் பட்டியலிட்டு காண்பிக்கின்றார். ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசுவிடமிருந்து இந்த நற்பண்புகளை பெற்றிருக்கிறோம். அப்பண்புகளுக்கு ஏற்றபடி வாழ்வதற்கு அழைப்பு தருகிறார்.  
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, வானதூதரின் வார்த்தைக்கு இணங்கி,  யோசேப்பு, தாய் மரியாவையும், குழந்தை இயேசுவையும், பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வானதூதரின் வார்த்தைகளுக்கு இணங்கி, இயேசுவையும் தாயையும் அழைத்துக் கொண்டு, நாசரேத்து என்னும் ஊரில் வந்து குடியேறுகிறார். ஒரு பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பு, பாதுகாக்கும் பணி. சூசை இன்று,  வானதூதர்களின் வார்த்தைக்கு இணங்கி,  தாய் மரியாவையும் குழந்தையையும் பாதுகாத்து வந்தார். நமது பெற்றோர்களும் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது பெற்றோர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றால், அந்த உழைப்பு அவர்களுடைய நலனுக்காக அல்ல. மாறாக! தங்கள் குழந்தைகளின் நலனுக்காக. குழந்தைகள் மீது கொண்ட அதீத அக்கறையின் காரணமாகவே, கண் துஞ்சாது உழைக்கக்கூடிய தந்தையர்களின் எண்ணிக்கை அதிகம். தான் உண்ணா விட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை உண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு, இருப்பதையெல்லாம் குழந்தைக்கு கொடுத்து, குழந்தை உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழக் கூடிய தாய்மார்கள் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக இருக்கிறோம். நாம் நமது குழந்தைகளுக்காக பலவிதமான இன்னல்களையும், துன்பங்களையும், அனுபவித்தாலும், நாம் குழந்தைகளின் மகிழ்வில் மகிழ்வது போல, நம்முடைய நேர்மறையான, அறம் சார்ந்த, நம்மிடம் இருக்க கூடிய நல்ல பண்புகளின் அடிப்படையில், நாம் அடுத்தவரை பேணிப் பாதுகாப்பதும், அடுத்தவர் மகிழ்வில், அது குழந்தையாக இருந்தாலும் சரி! யாராக இருந்தாலும் சரி! அடுத்தவருக்காக நாம் செய்யக்கூடிய 
 சின்னஞ்சிறு தியாகங்களில் இருந்து  இறைவன் மகிழுகிறார்.  அவர் நம்மை குழந்தையாகத்தான் பார்க்கிறார்.  நாம் வளர்ச்சியில் பல நிலைகளை அடைந்தாலும், கடவுளின் பார்வையில் குழந்தைகளாகத் தான் இருக்கிறோம்.  குழந்தைகளை இறைவன் அதிகம் அன்பு செய்கிறார். கடவுளின் குழந்தைகளாகிய நாம், இன்று குடும்பங்களாக இருக்கிறோம்.  நாம் குடும்பத்தில், நமது வளர்ச்சியில், பல நிலைகளில், பல்வேறு நிலைகளை அடைந்தவர்களாக இருந்தாலும், நாம் எப்போதும் கடவுளின் குழந்தைகள். கடவுள் நம்மைக் கண்ணோக்குகிறார்.  நம்மை அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொண்டவர்களாக, இன்றைய நாளில் மார்தட்டிச் சொல்லுவோம்,  "நாம் கடவுளின் குழந்தைகள்! கடவுளே நம் தந்தை" என்று.  கடவுளிடம் காணப்படக்கூடிய அந்த  குடும்ப உறவின் மனப்பான்மையை, நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக, வாழ்க்கையில் நல்ல விதமான மாற்றங்களை முன்னெடுக்கக் கூடிய கடவுளின் குழந்தைகளாக, உருவாக, உருமாறிட, இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று செயல்படுவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...