நம்பிக்கையோடு கேளுங்கள்!
கடவுள், உங்கள், விண்ணப்பங்களுக்கு பதில் தருவார்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் நாம் அனைவரும் உரிமையோடும் நம்பிக்கையோடும் இறைவனிடத்தில் விண்ணப்பங்களை எடுத்து வைக்க அழைக்கப்படுகிறோம். விண்ணப்பங்கள் அனைத்தும் இறைவனால் கேட்கப்படுகிறது. கேட்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் கடவுளால் நமக்கு திருப்பித் தரப்படுகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் குழந்தையின்மையால் வாடிய ஒரு தம்பதியினர் கடவுளிடம் குழந்தையை கேட்கின்றனர். அவர்களின் வேண்டுதலை இறைவன் கேட்டருளினார். எனவே அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்தார். கடவுள் கொடுத்த குழந்தையை கடவுளுக்கென அர்ப்பணிக்கக் கூடிய பெற்றோரை பற்றி தான், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட அன்று யூத சமூகத்தில் நிலவிய பலவிதமான இன்னல்கள், அரசியல் பின்னணிகள், அரசியல் சூழல்கள் என அனைத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில், எதையெல்லாம் அவர்கள் எங்களிடமிருந்து அகற்றி விடும் என்று வேண்டினார்களோ , அவைகளை எல்லாம் தொகுத்து அன்னை மரியாள் ஒரு பாடல் ஒன்றை பாடுகிறார் . அந்தப் பாடலானது, மரியாவின் பாடல் என விவிலியத்தில் லூக்கா நற்செய்தியில் இடம்பெற்றாலும், அப்பாடல் வரிகள், அங்கு நிலவிய சூழ்நிலையையும், எத்தகைய சூழ்நிலையிலிருந்து அந்த மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் அந்த மாற்றத்தை இறைவன் கேட்டு அதற்கு செவி கொடுத்தார் என்ற செய்தியை நமக்கு, உணர்த்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. மரியா ஆண்டவரை போற்றி பெருமைப்படுத்தினார். காரணம், தன்னுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஏனென்றால், அடிமையாக இருந்தவர்கள் அந்த அடிமை நிலையிலிருந்து மீண்டு எழுந்தார்கள். இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்டதால், ஏன் நாம் அனைவருக்கும் தெரியும், யூத சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் தாள் நிலையில் இருப்பவர்கள் ஆதரித்தவர்கள்.கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு அவர் இரக்கம் காட்டி வருகிறார். கடவுள் தன்னுடைய வல்லமையை காட்டுகிறார். உள்ளத்தில் செருக்கோடு சிந்திப்போரை சிதறடிக்கிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிகிறார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார், என்ற செய்திகள் அனைத்தும் துன்புறும் மக்கள் சார்பாக இறைவன் இருந்து அவர்களின் வேண்டுதலுக்கு செவிகொடுத்து, அவர்களை துன்பத்திலிருந்து மீட்கிறார் என்ற செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
நாமும் நமது வேண்டுதல்களை நம்பிக்கையோடு இறைவனை நோக்கி எடுத்துரைப்போம். அப்படி எடுத்துரைக்கும் போது, இறைவன் கண்டிப்பாக, நம்முடைய வேண்டுதலுக்கு, செவிகொடுக்கக் கூடியவராக இருப்பார். நமது வேண்டுதலுக்கும் அவர் செவிகொடுப்பார். அப்போது நாம் அவரையும், அவரின் அன்பையும் பராமரிப்பையும் கண்டுகொள்ள முடியும். எனவே நம்பிக்கையோடு நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன. அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் இறைவனிடத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடத்தில் எழுப்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக