புதன், 23 டிசம்பர், 2020

கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி (25.12.2020)

கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி

திருப்பலி முன்னுரை:

“அவரிடம் வாழ்வு இருந்தது,

அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது 

அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது 

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை”, (யோ 1: 4-5) 


அன்புக்குறிய இறை மக்களே பிறந்துள்ள இயேசு பாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் உங்களுக்கு காலை வணக்கத்தையும் கூறிக் கொள்கிறேன். ஒளியானவர் ஒளியாய், இந்த உலகத்தை இருளில் இருந்து பிரித்து அதாவது பாவத்திலிருந்து பிரித்து பாவம் இல்லாத வாழ்வு வாழ நம்மை அழைக்க வந்திருக்கிறார். அன்று விண்மீன் காட்டிய பாதையில் நடந்து மீட்பராய் பிறந்த நம் பாலனைக் கண்டு கொண்டனர் ஞானிகளும், இடையர்களும். அதைபோன்று நம்மிட் ஒளியாய் பிறந்த பாலன் இயேசு காட்டக்கூடிய வழியில் நடந்து வாழ்வை கண்டு கொள்வோமா? என்பது தான் இன்றைய கிறித்து பிறப்பு விழாவின் மையச் செய்தி. 

நம் குடும்பத்தில் பிறந்த குழந்மையை எவ்வளவு பத்திரமாய் பாராட்டி, சீராட்டி வளர்ப்போம். அதைப்போன்று நம்மிடம் பிறந்த  பாலனை மகிழ்ச்சி பொங்க நம் உள்ளத்தில் வரவேற்று குழந்தை மனம் கொண்டவர்களாய் பாவ வாழ்வை மறந்து, மறுவாழ்வு பெற்றவர்களாய் பாலன் இயேசுவுக்கு இதயத்தில் இடம் தருவோம். மனித உருவெடத்து வானின்று நமக்கு வாழ்வு என்னும் ஒளியை தர வந்துள்ளார் இந்த பாலன் இயேசு. இன்று நிலவும் இக்கட்டன சூழலுக்கு மத்தியில் சுய நலம் சார்ந்த நம் வாழ்வு இருள் என்னும் பாவத்தில் இருந்து,  ஒளி என்னும் பாவமில்லாத மனிதநேயம் கொண்ட வாழ்வுக்கு அழைத்துச் செல்ல பிறந்துள்ள பாலனிடம் அருளை வேண்டி இணைவோம் பிறந்த பாலனின் பிறந்தநாள் திருப்பலியில். 


முதல் வாசக முன்னுரை: (எசாயா 52: 7-10)


நலம் தரும் பாலன் இயேசுவின் பிறப்பு விழாவாகிய இந்நன்னாளில் அனைவரும் ஆர்பரித்து பாடுங்கள் ஏனெனில் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து நம்மிடையே விடுதலையையும், நல் வாழ்வையும், நலம் தரும் செய்திகளையும் நம்மிடையே கொண்டு வந்தார் என்று கூறும் இன்றைய முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம். 



இரண்டாம் வாசக முன்னரை: (எபிரேயர் 1:1-6)


இறைவன் நம்முடன் ஒவ்வொரு நாளும் இருந்து வருகிறார் என்பதை நாம் திருவருட்சாதனங்கள் வழியாக அறிவோம். ஆனால் இன்று உலகை படைத்த நம் மீட்பர் சுடர் ஒளியாகவும் நம்மை பாவங்களிலிருந்து நம்மை தூமைபடுத்த இன்று நம்மோடு பேசுகிறார் என்று கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.  


மன்றாட்டுகள்: 


1. எங்களை எந்நாளும் வழிநடத்தி செல்லும் எம் இறைவா! எம் திருச்சபையின் பணியை செம்மையாகச் செய்து கொண்டு இருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும் ஆசீர்வதியும். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செம்மையாக செய்யவும், நற்செய்தியை பறைசாற்றவும் தேவையான ஆசீரை பிறந்திருக்கும் பாலன் இயேசு கிறிஸ்து வழியாக பெற்றுத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 



2. அன்பின் வடிவே எம் இறைவா எம் தாய் திருநாட்டை வழிநடத்தும் எம் அரசியல் தலைவர்களை ஆசீர்வதியும். ஒவ்வொரு நாளும் தங்களுக்குறிய கடமைகளை கடமை உணர்வோடு செயல்படவும், மக்களின் வாழ்வு செழிக்கவும் தேவையான ஞானத்தையும், அறிவையும் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. “நானே திராட்சைச் செடி நீங்கள் அதன் கொடிகள்” என்று சொன்ன எம் அன்பு செல்வமே எம் பங்கு மக்களை நிறைவாக ஆசீர்வதியும், அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் சுகம் கிடைக்கவும், எம்  பங்கு பிள்ளைகள் நன்றாக படிக்கவும், இளையோருக்கு வேலை வாய்பு கிடைக்கவும் தேவையான ஆசீரை எம் பாலன் இயேசு கிறிஸ்து வழியாக பெற்றுத் தருமாறு இறiவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. உழைப்பவன் கூலிக்கு உரியவன் என்ற அன்பு தெய்வமே… கடுமையான சட்டங்களாலும், வளர்ச்சி என்ற மாய வார்த்தையாலும் அனுதினமும் உழைக்கும் மக்கள் இன்று அடையக்கூடிய அவலநிலைகள் யாவும் விரைவில் அவர்கள் வாழ்வில் இருந்து விலகிட உமது அருளை தந்து அவர்களை உம் ஆசிகளால் நிரப்ப இறiவா உம்மை மன்றாடுகிறோம்.


5. இரக்கத்தின் தெய்வமே எம் இறைவா! இன்றைய நாளில் உம்முடைய பிறப்பின் விழாவில் பங்குகொள்ள முடியாதவர்களை ஆசீர்வதியும். அவர்கள் நோயினால் அவதிப்பட்டு துன்பப்படுகின்றார்கள். அவர்களை கண்ணோக்கி பார்த்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் மேலும் அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து காரியங்களையும் நிறைவேற்றி உமமுடைய பிறப்பின் மகிழ்ச்சியை தருமாறு இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...