புதன், 9 டிசம்பர், 2020

அஞ்சாதீர்கள்....(10.12.2020)

யார் வெச்சது? 
யார் வெச்சது? 
உன் சட்டமடா!
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் 
நிலம் மட்டுமடா!

                      என்ற பாடல் வரிகள் இன்றையச் சூழலில் திரும்பும் திசை எங்கும் ஒலிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆம்! திரும்பும் திசை எங்கும் பலவிதமான போராட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. மக்களின் மனங்களில் அச்ச உணர்வானது குடிகொண்டிருக்கிறது. 

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

இன்றைய நாளில் நாம் வாசிக்கவிருக்கும் முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இஸ்ரயேல் மக்கள் பாலஸ்தீன அடிமைத்தனத்திலிருந்து போது பலவிதமான துன்பங்களை சந்தித்தார்கள். அத்துன்பங்களின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து போனார்கள். இன்று நம்மை சுற்றி நடக்க கூடிய நிகழ்வுகளைப் போலவே அன்று பாலஸ்தீன அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் பலவிதமான இன்னல்களை சந்தித்தார்கள். அந்த இன்னல்களின் காரணமாக அவர்கள் தங்களது நம்பிக்கையை சிறிது சிறிதாக இழந்து கொண்டே இருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக எசாயா இறைவாக்கினர் அவர்களுக்கு உரைத்த இறைவாக்கு பகுதியைத்தான் இன்றைய நாளில் நாம் வாசிக்கவிருக்கிறோம். துன்பத்திலிருந்த மக்களுக்கு எசயாவின் வார்த்தைகள் ஆறுதலை தந்தது. அதுபோலவே இன்று துன்பத்திலுள்ள நமக்கும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கும் என்பதை  இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

இயேசு இந்த மண்ணகத்தில் பிறந்த  போது இன்று நிலவக்கூடிய அதே நிகழ்வுகள் தான் அன்றும் அரங்கேறிக் கொண்டிருந்தன. இயேசு இந்த மண்ணில் பிறந்த போது சட்டங்களால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களே மக்களை நெரிக்கக்கூடிய சட்டங்களாக மாறின.  மனிதர்களிடையே ஒரு அச்ச உணர்வு  ஆழமாக குடிகொண்டிருந்தது. பாவத்தில் பலரும் உழன்று கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்  அவர்களை அச்சூழலில் இருந்து மீட்டெடுக்க வே இறைமகன் இயேசு  இம்மண்ணில் அன்று அவதரித்தார்.   இன்றும் நாம் திரும்பும் திசை எங்கும் போராட்டங்கள். சட்டங்களால் மக்கள் தங்கள் உரிமைகளைக் கூட பெற முடியாத அளவிற்கு ஒடுக்கப்பட கூடிய சூழ்நிலை. கொடிய நோய் தொற்று காரணமாக, அருகில் உள்ளவர்களை கூட அரவணைக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அன்பு, பிறரன்பு,   பொதுசேவை, என்பதெல்லாம் அச்ச உணர்வு என்று மழுங்கடிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையில் இறைவன் இயேசு கிறிஸ்து இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளின் வழியாக,  அஞ்சாதீர்கள்! நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்ற வார்த்தைகளின் வடிவில் நம் உள்ளங்களை திடப்படுத்துகிறார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு நம்மிடையே இருக்கக்கூடிய அச்ச உணர்வுகளை எல்லாம் கடந்து,  இறையாட்சியின் மதிப்பீடுகளான   
 இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் "அஞ்சாதீர்கள்!" எனும் வார்த்தை இன்று நமக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிச் சுடராக இருக்கிறது.  நிகழக் கூடிய கொடிய நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீள வழி தெரியாது தவித்துக் கொண்டிருக்கையில், ஒரு புறம் புயலால் பல இடங்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கை பேரிடர்களால் பல இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போகிறது. அடுத்தவருக்கு உணவளிக்க வேண்டும் என விவசாயத்தில் ஈடுபட கூடிய விவசாய ஏழைகள் இன்று அரசின் கடுமையான சட்டங்களால் நெருக்கம் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழலில், அனைவருடைய மனங்களிலும் நம்பிக்கை என்பது அடியோடு அழிந்து கொண்டு வருகிறது. நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் அச்ச உணர்வு ஆழமாக அதிகரிக்கிறது. இந்நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு அச்சத்திலிருந்து நம்பிக்கையை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. நம்மோடு இருப்பதற்காக நம்முள் இருந்து செயலாற்றுவதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருக்கக்கூடிய அச்சங்களை அகற்றி நமக்கு ஒரு தக்க துணையாகவும், உறுதுணையாகவும் இருந்து, நல்ல செயல்கள் செய்யவும், பிறர் நலப்பணியை நாடவும், சமூக சேவையை செய்யவும், அஞ்சாது, அடுத்தவருக்காக இன்னுயிரையே கையளித்த ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் வாழ்ந்திட,  இன்றைய நாளில் இயேசுவின் அருளை வேண்டியவர்களாக,  இறை அருளை வேண்டியவர்களாக,  நமது உள்ளங்களில் இயேசுவை நம்பிக்கையின் தீபமாகப் பிறக்க வைக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருப்பலியில் அச்சம் தவிர்த்து,
கலக்கம் தவிர்த்து, உறுதியான, அசைக்க முடியாத ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவை நமது உள்ளங்களில் ஏற்றவர்களாய் அனைவரும் இணைந்து இறைவனின் திருப்பலியில் பங்கேற்போம்.

1 கருத்து:

  1. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று கூறுவார்கள்! ஆண்டவரின் அருள் துணை நம்மை என்றும் பாதுகாக்கும் என்று உற்சாகமூட்டும் வார்த்தைகளின் வழியாக அனைவருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் செபங்களும்! 👏👏👏👏👏👏 🤱🤱🤱🤱🤱

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...