தேடிவந்து விடுவித்தருளினார்.
இறைவன் இயேசுவின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகம் தொடங்கிய அன்று தொடங்கி இன்று வரை மனித வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எதையாவது தேடுபவர்களாக இருக்கிறோம். ஒரு காரியத்தைத் தேடி செல்வது அக்காரியத்தில் ஆழ்ந்த அனுபவத்தையும் நமக்கு வழங்குகிறது. இப்பொழுதும் கூட, இந்த சிறு நொடிப் பொழுதுகளில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை தேடியவர்களாக, நாம் இருக்கிறோம் என்பதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் தாவீது அரசர் ஆண்டவருகென்று ஒரு ஆலயத்தை தேடுபவராக, அதனை அமைத்திட ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
அவரது தேடலை அறிந்த கடவுள், அவருக்கு நிறைவான ஆசிகளை வழங்குகின்றார் .
சிறப்பாக இஸ்ரயேல் மக்களுக்கு, நிலையான வாழ்வை, அமைதியும் மகிழ்வும் நிறைந்த வாழ்வை இறைவன் , அனைத்து தொல்லைகளில் இருந்தும் அவர்களை விடுவிப்பேன் என்று வாக்களிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட புனித செக்கரியா, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவராக, இறை புகழ்ச்சிப் பாடல் வழியாக இறை அருளை தேடுகிறார். "தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்கம் முதல் அவர் மொழிந்தபடியே", என்று கூறுவதன் வழியாக இறைவன் ஒவ்வொரு நாளும் மட்டுமல்லாது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தாவீது அரசரின் வழிமரபில் மீட்பரை தோன்றச் செய்ய முன்குறித்து வைத்துள்ளதை நாம் பார்க்கிறோம்.
நமக்கெல்லாம் முன்மாதிரியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரைப்போல ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும், நல்வாழ்வினை நோக்கி அடியெடுத்து வைக்க நம்மை அழைக்கின்றார்.
அவரது அன்பின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாக, அனைத்திற்கும் மேலாக இறைவனைத் தேடும் ஆர்வத்தோடு அவரை கண்டு கொள்ள, அவரது நலம் தரும் பணிகளுக்கு நம்மை அர்ப்பணிக்க, நம்மை ஒப்புக் கொடுக்க சிறப்பான இறையருளை ஆண்டவரிடத்தில் வேண்டுவோம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்மை முன் குறித்து வைத்த கடவுள், இன்று நம்மை தேடி வருகிறார். அவரது தேடலில் நம்மை நாம் கண்டுபிடிக்க, நம்மைத் தேடும் இறைவனை நாமும் கண்டுகொள்ள, அவரோடு நம்மை இணைத்துக் கொள்ள, நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு, எங்களது அன்பின் வாழ்த்துக்களும்! செபங்களும்!
பதிலளிநீக்கு