15. புனித சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்தார்.
16. பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்தார்.
17.1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தவர்.
18.1543இல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தவர்.
19. சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசுவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தவர்.
20.திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டது. (ஒரு வருடத்திற்குள் 45 சிறிய கிறிஸ்தவ ஆலயங்கள் நிறுவப்பட்டன)
21. கி.பி. 1544-ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவர்களுக்கு சவேரியார் படையெடுப்பின் போது உதவினார். (அங்கு ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் நிறுவப்பட்டது. இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது).
22. ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது.
23. சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார்.
24.கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார்.
25. ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார்.
26. சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அவரின் சொந்த நாட்டுக்கு அவரது எஞ்சிய பொருட்களை எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது.
27.அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவு கரையை வந்தடைந்தது.
28.பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
29. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது.
30.450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
அருளாளர் பட்டம் :
ஐந்தாம் பவுல்-ஆல் 25 அக்டோபர் 1619
புனிதர் பட்டம்:
பதினைந்தாம் கிரகோரி-ஆல் 12 மார்ச் 1622
புனித சவேரியாரே பற்றிய பல்வேறு அரிய கருத்துக்களை எமக்கு வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!
பதிலளிநீக்கு