இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
இன்று நமது தாய் திரு அவையானது புனித சவேரியாரை நினைவுகூர நம்மை அழைக்கிறது. எனவே சவேரியார் பெயரைத் தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். மேலும் சவேரியாரை பாதுகாவலராக கொண்டுள்ள கொண்டுள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் திருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஒரு சாலையோரத்தில்
ஒல்லியான சிறுவன்...
ஒட்டிய வயிறு...
ஒடுங்கிய கண்ணம்...
கிழிந்த ஆடைகள்....
தன்னை விட அதிகமான சற்று குண்டான ஒரு சிறுமியை தனது முதுகில் சுமந்து கொண்டு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த முதியவர் உன்னை விட எடை அதிகம் உள்ள இந்த சிறுமியைத் தூக்கிச் செல்ல உனக்கு கடினமாக இல்லையா? என்றார். அதற்கு சிறுவன் இல்லை, நான் சுமந்து செல்வது ஒரு கால் ஊனமுற்று நடக்க முடியாத என் அன்பு தங்கை அல்லவா என்றான்.
அவன் தங்கையின் மீது உள்ள அளவு கடந்த அன்பு சுமையாக இருந்தாலும் அதை சுகமாக சுமந்து கொள்ள அவனை தூண்டியது.
"அன்பு வலிக்கும் ஆனால் வலிகளை தாங்கிக் கொள்ளும்" என்பார்கள்.
இன்று திருஅவையோடு இணைந்து நாம் நினைவு கூறக்கூடிய புனித சவேரியார் மிகப்பெரிய ஆடம்பரமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் பிறந்தது ஒரு அரண்மனையில். சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் அரண்மனையிலேயே தங்கியிருந்து தனது படிப்பை படித்தவர். பாரிஸ் நகருக்குச் சென்று முதுகலைப் பட்டம் பெற்றவர். இறையியல் கற்று தலைசிறந்து விளங்கிய ஒரு இறையியலாளர் எனவும் இவரை கூறலாம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த சவேரியார் தன் வாழ்வில் இவருக்கு அதிகமான செல்வங்கள் இருந்தாலும், அனைத்தையும் துறந்து ஆண்டவர் இயேசுவின் மீது பற்றுக்கொண்ட காரணம் புனித லொயோலா இஞ்ஞாசியார் பயன்படுத்திய இறைவனது வார்த்தைகளான ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் தன் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன் ?என்ற வார்த்தைகளால் கவரப்பட்டு லொயோலா இஞ்ஞாசியார் காட்டிய பாதை வழி சென்று இறைவன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணங்கள் பல மேற்கொண்டவர். படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் அவர்கள் அனைவருக்கும் திருமுழுக்குக் கொடுங்கள் என்ற விவிலிய வார்த்தைகளின் அடிப்படையில் நற்செய்தி அறிவிப்பதற்காக துறவு மேற்கொண்டு பயணங்கள் பல செய்து இந்தியாவை நோக்கி வந்தவர் புனித சவேரியார்.
நற்செய்தி பணியாற்றுவது என்பது எளிதான காரியமல்ல இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தியாளர் செய்ய வேண்டியது பற்றி தெளிவாகக் கூறப்படுகிறது. ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், நோயாளிகளை குணப்படுத்தவும், சிறைப்பட்டடோருக்கு விடுதலையை பறைசாற்றிடவும், ஆண்டவர் வருகிறார் என்ற செய்தியை அறிவிக்கவும் இறைவாக்கினர்கள் அழைக்கப்படுகிறார்கள்.விவிலியத்தில் இந்த பணியினை செய்த பல இறைவாக்கினர்களை நாம் காணலாம். அவர்களுல் ஒருவரான புனித பவுல் தன்னுடைய நற்செய்தி அறிவிப்புப் பணியில் சந்தித்த இடர்பாடுகளை குறித்து அறிவித்த செய்திகளை பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் காணலாம் பல இங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்த பவுல் நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
எல்லாருக்கும் எல்லாமானேன் என்பது சாத்தியமா இன்று? என்று கேள்வி எழுப்பினால் நான் எல்லோருக்கும் எல்லாமுமாய் இருக்கப்போகிறேன் என்று சொல்லும்போது, பலரும் கூறக் கூடியது நீ ஒரு பச்சோந்தி இடத்திற்கு ஏற்றார்போல், நேரத்திற்கு ஏற்றாற்போல், சூழ்நிலைக்கு ஏற்றார்போல், உன்னை நீ மாற்றிக்கொண்டு நயமாக தப்பித்துக்கொள்ள கூடியவனாக இருக்கிறாய் என்ற ஒரு பார்வையானது மேலோங்கி காணப்படுகிறது. ஆனால் எல்லாருக்கும் எல்லாமுமானேன் என்ற வார்த்தைகளின் வழியாக உணர்த்தும் செய்தி நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை அனைவருக்கும் கீழாக கருதினார்,அடிமை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க இவரும் அடிமையானார், இயேசு பிறவினத்தாரை தேடி சென்றது போல இவரும் பிற இனத்தாரை தேடிச் சென்று அவர்களுக்கும் நற்செய்தியை பறைசாற்றினார்.
இயேசுவின் காலத்திலிருந்தே பிற இனத்தாருக்கும் யூதருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனால் தொடக்க திரு அவையில் எல்லாருக்கும் எல்லாமுமானேன் என்ற அடிப்படையில் இருவரையும் இணைக்கும் இணைப்பு பாலமாக இருந்தார். தன்னுடைய பணியில் பலவிதமான இன்னல்களை சந்தித்தார்,பலவிதமான இன்னல்களை சந்தித்தாலும் நற்செய்தி அறிவிக்கும் பணியில் இருந்து பின்வாங்கவில்லை. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு என கூறிக்கொண்டு ஆண்டவர் இயேசுவின் பற்றிய நற்செய்தியை அகிலத்திற்கு அறிவிக்க அனுதினமும் அடி எடுத்து வைத்தவர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட உலகெங்கும் சென்று படைப்பிற்கு நாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் வரிகளை நாம் வாசிக்கின்றோம். நற்செய்தி என்பது அனைவருக்கும் இன்பம் தரக்கூடியதாகும். நற்செய்தி தவறான வாழ்வை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. நற்செய்தி என்பது ஒவ்வொரு மனிதனையும் ஊடுருவக் கூடியது. பல நேரங்களில் இன்று நாம் வாழக்கூடிய இந்த சூழ்நிலையில் நற்செய்தியை அறிவிக்க தவறுகிறோம். ஒரு செயல் தவறு என தெரிந்தும் அது தவறு எனச் சுட்டிக் காட்ட மறுக்கிறோம் காரணம் அதனால் நமக்குத் துன்பம் வந்து விடுமோ? என்ற அச்சத்தின் காரணமாக நற்செய்தி பணியாற்ற தவறுகிறோம். ஆனால் இன்று நம் தாய்த்திரு அவையோடு இணைந்து நினைவு கூடிய புனித சவேரியார் துன்பங்களுக்கு மத்தியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க பல பயணங்கள் மேற்கொண்டார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இறந்து போனாலும் அவரது உடல் இன்றும் அழியாமல் இருந்து நம்பிக்கையை காண்பவருக்கு விதைக்கிறது.குறிப்பாக நற் செய்தியை அறிவிப்பவர்கள் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காக என இதனைக் கருத்தில் கொள்ளலாம்.
நற்செய்தி பணியாற்றும் போது பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரலாம் இன்னல்களை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து மனிதத்தின் அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாமுமானேன் என்ற பவுலின் வார்த்தைகளின் அடிப்படையில் துன்பங்களையும், ஆதிக்க சக்திகளையும், அதிகாரம் கொண்டவர்களையும் கண்டு அஞ்சி நற்செய்தி அறிவிக்காமல் அமைதியாக இருப்பதை விட எதையும் கண்டு அஞ்சாது துணிவோடு நற்செய்தி பணியினை ஆற்றி புனித சவேரியாரை போல பலருக்கும் நம்பிக்கை தரக்கூடியவர்களாக தொடர்ந்து பயணிப்போம்.... மனிதத்தின் அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாமுமாகிட ....
தான் இறந்த பின்னரும் இறைப் பணியாற்றும் புனித சவேரியாரை போல அவரைப் பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற வகையில் பணியாற்றுவோம். இன்றைய கருத்துகள் மிகவும் அருமை! எங்களது நன்றிகளும்! வாழ்த்துக்களும்! 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பதிலளிநீக்கு