சனி, 31 அக்டோபர், 2020

அனைத்து புனிதர்கள் திருநாள் (01.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் திரு அவையானது அனைத்து புனிதர்கள் தினத்தை கொண்டாடுகிறது. 
அனைத்து புனிதர்கள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன என்பது இன்று நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். திருஅவை என்பது புனிதர்களின் இரத்தத்தால் உருவானது என்று கூறுவார்கள். எத்தனையோ நபர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அந்த நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்திருந்தது தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இப்படி இழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். இயேசுவுக்காக உயிர்த்தியாகம் செய்த பலரையும் நினைவு கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரையும் நினைவு கூறவேண்டும் என்றால் நாட்கள் போதாது. எனவே அனைத்து புனிதர்களையும் நினைவு கூறும் விதமாக தான் இந்த நாள் சித்தரிக்கப்படுகிறது.


 ஏன் இந்த நாள் நவம்பர் 1 என தீர்மானிக்கப்பட்டது? என்பதை நாம் உணர்ந்து அறிந்து கொள்ள இன்றைய நாளில் கடமைப்பட்டிருக்கிறோம். அதனடிப்படையில், 
நவம்பர் 1 நடப்பு தேதி போப் கிரிகோரி III (731-741), உரோமில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலுள்ள அனைத்து புனிதர்களுக்கும் ஒரு தேவாலயத்தை பிரதிபலித்தபோது நிறுவப்பட்டது. கிரிகோரி ஆண்டுதோறும் அனைத்து புனிதர்களின் பண்டிகை கொண்டாட தனது குருக்களுக்கு உத்தரவிட்டார். இந்த கொண்டாட்டம் முதலில் உரோம் மறைமாவட்டத்திற்குள் மட்டும் இருந்தது, ஆனால் போப் கிரிகோரி IV (827-844) முழு திருஅவையுடன் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படும்படி உத்தரவிட்டார்.


இன்றைய நாளின் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் நாம் புனிதர்களை போல வாழ அழைக்கப்படக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேறு பெற்றவர்கள் என குறிப்பிடுகிறார். யாரெல்லாம் பேறு பெற்றவர்கள் என பார்க்கும்பொழுது துன்பத்தில் இருப்போர், அழுதுகொண்டு இருப்போர், பசியால் வாடுவோர் என பலரை குறிப்பிடுகிறார். இப்படி அவர் குறிப்பிடக்கூடிய நபர்கள் அனைவருமே ஏழைகளாகவும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட வர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களை தேடிச் செல்ல வேண்டும். இத்தகைய மனிதர்களுக்கு பணிபுரிபவர்களாக நாம் இருக்க வேண்டும். இதையே இயேசு இன்றைய செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு உணர்த்துகிறார். இத்தகைய பணியை செய்வது மிகவும் எளிதான காரியம் அல்ல. ஆனால் பேசுவது மிகவும் எளிது. இன்று மேடைக்கு மேடை நின்று,  "ஏழைகளுக்கு உதவுங்கள்". "எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்" என பேசுபவர்கள் ஏராளம். ஆனால் பேசுபவர்கள் கூட இன்று உதவி செய்யவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஒருவேளை பேசுபவர்கள் எல்லாம் இணைந்து உதவ முன் வந்திருந்தால் இன்று ஓரளவிற்கு  மனிதனை மனிதனே தனக்கு கீழானவன் என எண்ணக் கூடிய, மனிதனை மனிதன், மதத்தின் வாயிலாகவும், இனத்தின் வாயிலாகவும், மொழியின் வாயிலாகவும், சாதியத்தின் வாயிலாகவும், பிரித்தாளக் கூடிய தன்மையானது என்றோ ஒளிந்திருக்கும். இன்றும் அது தொடர்கிறது என்பதன் அடிப்படை இதை பெரும்பாலும் மனிதர்கள் பேசும் பொருளாக வைத்து இருக்கிறார்கள் என்பதுதான்.

 தந்தை பெரியார் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தந்தை பெரியார் எதை பேசினாரோ அதை இந்த சமூகத்தில் செயலாக்கம் செய்து காண்பித்தார். சாதிகள் இல்லை என்று கூறினார். அதை வெறும் வாய்ச் சொல்லாக வைத்து விடாமல் அதை செயலில் காட்டினார். தன்னோடு பழகுபவர்கள் தன்னோடு உணவருந்துபவர்கள் யாரென்று அறியாது அனைவரும் எப்போதும் இணைந்து செயல்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தேவையில் இருக்கக்கூடிய மக்களுக்காக பணி செய்யக் கூடியவர்களாக  நாம் இருக்க வேண்டும் என்பதை இயேசு அறிவுறுத்துகிறார். இத்தகைய பணியை செய்யும் போது நாம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். நாம் சந்திக்கக் கூடிய இடர்பாடுகள் ஏராளம். அன்று யூதச்சமூகத்தில் யூதர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணம் நிலவியது. வழிபாடு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு என்ற நிலை இருந்தது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் மக்களை எப்படி வேண்டுமானாலும் தங்களுக்கு கீழ் அடிமைப் படுத்திக் கொள்ளலாம் என்ற சூழல் நிலவி கொண்டிருந்த வேளையில் அதை தவறு என இயேசு முன்னுரைத்து  அவர்களுக்கு எடுத்துக் காட்டினார். தனது சொல்லாலும் செயலாலும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஓரம் தள்ளப்பட்ட மக்களின் சார்பாக நின்றார் இயேசு. அவரை பின்தொடர்ந்த சீடர்களும் இயேசுவைப் போலவே தங்கள் வாழ்வை அமைத்து கொண்டார்கள். அதன் விளைவாகவே பலவிதமான இன்னல்களை இயேசுவைப் போலவே பலவிதமான இன்னல்களை சந்தித்தார்கள். இன்னல்களை சந்திக்கும் போது இயேசு மனம் தளரவில்லை. அதே அன்பை தான் இயேசுவோடு இருந்த சீடர்களும் இயேசுவைக் கண்டு நம்பியவர்களும் கொண்டிருந்தார்கள்.  அதன் விளைவாக பலர் தங்களுடைய இன்னுயிரை இழந்தார்கள். இன்னுயிரை இழந்த அனைவருமே இன்று கடவுளின் மக்கள் என முத்திரை பெற்றவர்களாக இருக்கிறார்கள். முதல் வாசகத்தில் கடவுளின் மக்கள் என்ற முத்திரையை பெற்றவர்கள் இவர்கள் எனக் குறிப்பிடுகிறது. அந்த கடவுளின் முத்திரையைப் பெற்றவர்களைத் தான் இன்று புனிதர்களாக  திருஅவை நினைவு கூறுகிறது.  இந்த உலகத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்க இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வு எப்படி அமைகிறது?
 வெறும் வெற்று பேச்சு மட்டுமே நமது வாழ்க்கையாக இருக்கிறதா? அல்லது நமது வார்த்தைகள் அனைத்தும் செயல் வடிவம் பெற்று உண்மையான இயேசுவின் சீடர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நீங்களும் நானும் எழுப்பி பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். இயேசுவை நம்பி இயேசுவுக்காக பணி செய்ய முன்வந்து ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த எத்தனையோ நபர்கள் துன்பங்களின் காரணமாக தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இழந்த போதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருந்த இயேசுவின் மீதான ஆழமான பற்றையும் அவர்கள் விட்டு விடவில்லை. இன்று நாம் எப்படி இருக்கிறோம்?  என சிந்தித்துப் பார்ப்போம். நமது நம்பிக்கை என்பது எதிலிருக்கிறது?  நமது செயல்களில் எதில் இருக்கிறது? நமது பேச்சுக்கள் எதில் இருக்கிறது? நமது பேச்சுக்களை எந்த அளவிற்கு செயலாக்கம் செய்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம்.
இந்தக் கேள்விகளுக்கு, "இன்று நான் சரியாகத்தான் இருக்கிறேன்" என பதில் கூற முடியுமா? என்று யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை நீங்கள் பேசுவதை தான் செயலாக்கம் செய்கிறீர்கள் என்றால்  கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். ஆனால் நமது பேச்சு பல நேரங்களில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்து, அது செயல் வடிவமாகவில்லை என்ற எண்ணம் உங்களுக்குள் எழுமாயின் இன்றைய நாளில்
உங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள ஆண்டவர் இயேசு நம்மை இந்நாளில் அழைக்கிறார். நம் கண்களுக்கு முன்பாக எத்தனையோ புனிதர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் மனதில்கொண்டு இவர்களைப் போல
வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவோம். வெறும் வார்த்தைகளால் இவரைப் போல் வாழவேண்டும் என சொல்வதை விட அதை செயலாக்கிட இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் நமது வாழ்வை எடுத்துக்காட்டான முன்மாதிரியான விசுவாசமான வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். வேண்டுவதோடு மட்டுமல்லாமல், வேண்டல் நிறைவேற வேண்டுமாயின் நமது செயல்கள் அதற்கேற்ற வகையில் அமைய வேண்டும். எனவே செயல்களால் வாழ்க்கை மாற்றத்தை நம்மில் உருவாக்கிட இணைந்து செபிப்போம்.


வெள்ளி, 30 அக்டோபர், 2020

எனக்கு எது முக்கியமாக உள்ளது? (31.10.2020)

எனக்கு எது முக்கியமாக உள்ளது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய இறைவார்த்தை அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

பில் பிரைட் என்பவர் இயேசுவும் அறிவாளிகளும் என்ற பெயரில் ஒரு வித்தியாசமான நூலை எழுதியிருக்கிறார் அதில் அவர் ஒரு அதிசயமான புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கிறார்.

1923 இல் சிக்காகோவில் எட்ஜ் வாட்டர் பீச் ஹோட்டல் என்ற இடத்தில் ஒரு முக்கியமான கூட்டம் நடந்தது. அதில் உலகத்திலேயே மிகப் பெரும் பணக்காரர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.

மிகப் பெரிய தனியார் எஃகு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஷ்வாப்.
 
மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் தலைவர் சாமுவேல் இன்சில் 

மிகப்பெரிய எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஹேவார்ட் ஹாப்சன் 

மிகப்பெரிய கோதுமை வணிகர் ஆர்தர் காட்டன்

 நியூயார்க் பங்குச் சந்தையில் மிகப்பெரிய தலைவர் ரீச்செட் விட்னி

அமெரிக்க ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒருவரான ஆல்பர்ட்ஃபால் 

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய வங்கி ஒன்றின் தலைவரான லியோன் பிரேசர்

வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை வர்த்தகர் ஜெஸ்ஸி லிவர்மோர் 

பெரிய ஏகபோக நிறுவன முதலாளி ஐவர் குரூகர் 

இவர்கள் 9 பேரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு 

சார்லஸ் ஷ்வாப் இறப்பதற்கு முன்பு 5 ஆண்டுகள் கடன் வாங்கி பிழைத்தார். இறுதியில் திவாலாகி இறந்தார் 

சாமுவேல் இன்சில்  தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு ஓடி அங்கேயே கையில் காசு இல்லாமல் இறந்துபோனார்.

ஹேவார்ட் ஹாப்சன்  பைத்தியமாகி இறந்தார்.


ஆர்தர் காட்டன் திவாலாகி வெளிநாட்டில் இறந்து போனார்.

ரீச்செட் விட்னி நியூயார்க் நகரில் மிக மோசமான சிங் சிங் சிறையில் கடுங்காவல் கைதியாக காலம் கழித்தார்.

ஆல்பர்ட்ஃபால் பெரிய ஊழல் புரிந்து மாட்டிக்கொண்டார். 

லியோன் பிரேசர், ஜெஸ்ஸி லிவர்மோர் , ஐவர் குரூகர்  ஆகியோர் தற்கொலை புரிந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் எப்படி சம்பாதிப்பது என்பதை நன்றாக கற்று இருந்தார்கள். ஆனால் எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொள்ளவில்லை. வாழ்வதற்காக பொருள் வேண்டும் ஆனால் இவர்களோ பொருள் ஈட்டுவதற்காக வாழ்க்கையை இழந்து விட்டார்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பதற்காக தான் பணம் ஆனால் இவர்களோ பணத்துக்காக வாழ்க்கையை விட்டு விட்டார்கள். பணம் இருந்தால் உயர்வு பெறலாம் என்ற எண்ணம் இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் பலரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் கிறிஸ்து இயேசுவை குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதையும், கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதில் அவருக்கு இருக்கும் மிகுந்த ஆர்வத்தையும் நாம் காண்கிறோம். கோணலான பாதைகளையும் இறைவன் நேராக்குவார். கோணலான வரிகளிலும் கூட இறைவனின் வார்த்தை நேர்த்தியானதாக அமையும் என்பதற்கேற்ப நற்செய்தி அறிவிப்பவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுவதே முதன்மையானது என்று புனித பவுல் கூறுகிறார்.

வாழ்விலும் சாவிலும் முழு துணிவுடன் நான் கிறிஸ்துவை அறிவிப்பேன். கிறிஸ்துவை பெருமைப்படுத்துவேன் என்று புனித பவுல் கூறுவதன் வழியாக நமக்கெல்லாம் முன்மாதிரிகையாக தன்னை வெளிப்படுத்துகின்றார். நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தாலும் கிறிஸ்துவோடு இணைவதால் அது எனக்கு ஆதாயமே, என்று கூறும் புனித பவுல் இறைவார்த்தையை அறிவிப்பதன் வழியாகவும், கிறிஸ்துவோடு விண்ணகப் பேரின்பத்தில் இடம்பெற தான் கொள்ளும் ஆவலை வெளிப்படுத்துவதன் வழியாகவும், தனது வாழ்வில் இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வெளிப்படுத்துகின்றார். அவரைப்போல கிறிஸ்து இயேசுவுக்காக, நற்செய்திப் பணிக்காக, நம்மை அர்ப்பணிக்க இன்றைய வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 
 
இன்றைய நாளில் நம் அருகில் இருப்பவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைக்க நாம் தயாராக இருக்கின்றோமா ? என சிந்திப்போம்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம்மை தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்று கூறுகிறார். 

உன்னை ஒருவர் தாழ்த்திப் பேசும் போது நீ அமைதியாக இரு. அது உனது வீரம். 
உன்னைத் உயர்த்தி பேசும் போது நீ கவனமாக இரு. அது உனது விவேகம் என்பார்கள்.
ஆனால் இன்று இயேசு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். பெற்றோர் முன் பிள்ளைகள் தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள் ஆசிபெற. வயலில் விளையும் தானியங்கள் கூட தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றன, அவை பக்குவமடைந்ததை காண்பிக்க. இன்று இயேசு நம்மை தாழ்த்திக் கொள்ள அழைக்கின்றார். எதற்காக என்று சிந்திப்போம்!

"நான் குறைய வேண்டும் அவர் வளர வேண்டும்" என்று கூறிய திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவுக்கு முன் தன்னை தாழ்த்தி கொள்கின்றார். அது போலத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கூட புனித பவுல் கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாக, தன்னைத் தாழ்த்தி கொள்கின்றார்.

இன்று நாமும் புனித பவுலை போலவும், புனித திருமுழுக்கு யோவானை போலவும், கிறிஸ்து இயேசுவுக்காக நம்மை எவ்வாறு தாழ்த்தி கொள்ளலாம் என்று சிந்திப்போம்! 

கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை இன்றைய சூழலில் எவ்வாறு நாம் அறிவிக்க முடியும் என்பதை சிந்திப்போம். 

இன்று இந்த கொரோனாவின் காலகட்டத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழையருக்கு சிறிது உணவு கொடுத்து அவர்களின் பசியை ஆற்றி இறைவனை முன்னிலைப்படுத்துவோம்.

நாம் கல்வி கற்றவர்களாக இருந்தால் கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதன் வழியாக அறிவொளியோடு இறை ஒளியையும் ஏற்றுவோம். 

ஆறுதலற்ற முதியவருக்கு நமது இதமான வார்த்தைகளால் ஆறுதல் கூறி வலுவூட்டுவோம்!

இவ்வாறு நமது வார்த்தைகளும் அன்புச் செயல்களும் நற்செய்தியாய் மலரட்டும்! மலரும் ஒவ்வொன்றிலும் மனிதநேயத்தையும் இறைவனையும் முன் நிறுத்துவோம். 

வியாழன், 29 அக்டோபர், 2020

இதயத்தில் இடம் பெறுவோம்! (30.10.2020)

இதயத்தில் இடம் பெறுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் உங்கள் அனைவருடனும் இன்றைய வாசகங்களின்  அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் திமொத்தேயுவுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவிடம் அங்குள்ள மக்களுக்காக ஜெபிப்பதாக கூறுகிறார். அங்குள்ள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இறைவனிடம் ஜெபிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். உங்களிடம் காணப்படக்கூடிய நற்செயல்களை எல்லாம் தொடங்கியவர் இயேசு கிறிஸ்து. அதை அவரே உங்களிடமிருந்து நிறைவுறச் செய்வார் என வாழ்த்துச் செய்தியாக கூறி அவர்களுக்கு கடிதம் வழியாக இயேசுவின் இறையாட்சி கருத்துக்களை எடுத்துரைக்கிறார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் நீர்க்கோவை நோயுற்ற ஒருவரை இயேசு குணமாக்குகிறார். ஆனால் இயேசுவின் செயலை குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் செய்வது தவறான செயல், ஓய்வு நாளின் போது அவர் சட்டத்தை மீறிவிட்டார் என கூறி, அவர்கள் இயேசுவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஓய்வு நாள் என்பது யூதர்கள் பின்பற்றிய சட்டங்களுள் மிகவும் முக்கியமானது. கடவுள் உலகைப் படைத்து ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏழாம் நாளில் யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதில் அவர்கள் கொண்டிருந்த சட்டம். அந்த ஏழாம் நாளான ஓய்வு நாளில் இறைவன் மட்டுமே செயலாற்றுவார் என்பது அவர்களின் எண்ணம். அந்த நாளில் இயேசு ஒரு நோயாளியை குணமாக்கியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவன் சட்டத்தை மீறுகின்றான் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இயேசுவோ ஓய்வு நாளின் போது உங்கள் குழந்தைகள் கிணற்றில் விழுந்து விட்டாலோ அல்லது உங்களுக்கு உரிமையான ஒன்றைத் தவற விட்டு விட்டாலோ அதை நீங்கள் எடுக்க மாட்டீர்களா? என வாழ்க்கையிலிருந்து இயல்பாக கேள்வியை எழுப்பி அதனால் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முயலுகிறார். நோயாளி எப்போது நோயிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருக்கக் கூடியவர். அப்படி காத்துக் கொண்டிருந்தவனுடைய காத்திருப்பை அறிந்தவராக இயேசு கிறிஸ்து அவனுடைய நோயை குணமாக்குகிறார். எப்படி பவுல் திமொத்தேயுவில் வாழ்ந்த மக்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இணைந்து ஜெபித்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்களோ, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பவுல் எப்படி கடிதங்கள் வாயிலாகவும்  அவர்களோடு உரையாடினாரோ, அதுபோல நாமும் ஒருவர் மற்றவரின் துன்பத்தையும் அடுத்தவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்களாக அடுத்தவர்களை மதிக்கவும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும் நம்மாலான சிறு சிறு செயல்கள் மூலம் நற்செயல்கள் செய்து வாழ்ந்திட இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். நற்செயல் செய்வது எளிது. ஆனால் நல்ல செயலைச் செய்யும்போது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பலரும் பல விதங்களில் நம்மீது குற்றம் காட்டுவார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு மனம் கலங்கி விடாமல், தடுமாறாமல், பின்வாங்காமல், இயேசுவை துணையாக கொண்டவர்களாக தைரியத்தோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நல்ல செயல்கள் செய்வதால் இந்த உலகத்தில்  நாம் பலவிதமான துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் துணிவோடு பயணித்து நல்ல செயல்கள் செய்து, அடுத்தவரின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவர்களாகவும், அவர்களுடைய உணர்வுகளையும் அவர்களுடைய தேவைகளையும் அறிந்தவர்களாக நாம் செயல்பட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். அவ்வாறு இறையருளை வேண்டுவதோடு மட்டுமல்லாமல் நமது சின்னஞ்சிறு செயல்களில் இன்றைய நற்செய்தி வாசகம் தரக்கூடிய மைய கருத்தான அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைச் செயலாக்குவோம். அவ்வாறு செயலாக்குவதால் நாமும் ஆண்டவரின் இதயத்தில் இடம் பெறுவோம். நீங்களும் நானும் ஆண்டவரின் இதயத்தில் இடம் பெற,  இன்றைய நாளில் இணைந்து  செயல்பட்டு நமது வாழ்வை மாற்றிட தொடர்ந்து முயலுவோம். இயேசுவின் பாதையில்,  இதயத்தில் இடம் பெற்றிட.

புதன், 28 அக்டோபர், 2020

போராட்டமே வாழ்வாகட்டும்! (29.10.2020)

போராட்டமே வாழ்வாகட்டும்!
இறைவன் இயேசுவில்
அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய முதல் வாசகத்தில் நாம் அனைவரும் எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆண்டவரோடு இணைந்து நாம் வலிமையும், ஆற்றலும் வலுவூட்டபெறவேண்டுமென இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இன்று மனிதர்களாகிய நாம்  ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர் என பலவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என முதல் வாசகத்தின் வழியாக நாம் உணர்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தனது பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கு தன்னுடைய ஆட்சி அதிகாரம் இவரால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இயேசுவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஏரோது அரசன் அவரை கொல்ல வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்ய தேடினான் என்ற செய்தியை பரிசேயர் சிலர் இயேசுவிடம் கூற, இயேசு அவர்களுக்கு, அவரிடம் சென்று சொல்லுங்கள் நான் இங்கே இருந்து என் பணியை செய்து கொண்டே இருப்பேன் என்று கூறுகிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் அனைவரும் வாசிக்க கேட்கலாம். இன்றைய வாசகங்கள் நமக்கு தரக்கூடிய பாடம் போராட்டமே நமது வாழ்வாக அமையட்டும் என்ற செய்தியாகும். 


மனித வாழ்க்கையில் போராட்டங்கள் இல்லாத வாழ்வே இல்லை. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பலவிதமான போராட்டங்கள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அனுதினமும் பலவிதமான போராட்டங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த போராட்டங்களை எல்லாம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய புதிய வழிகளில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. ஆட்சி அதிகாரமிக்கோரும் வலிமை படைத்தோரும் இன்று பாமர மக்களை அடக்கியாள நினைக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இயேசுவைப்போல துணிவு கொண்டவர்களாக  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை கண்டு அஞ்சாது, ஆண்டவரின் பணியை நாம் செய்கிறோம். அடிப்படை தேவையில் இருக்கக்கூடிய மக்களுக்கான பணியை நாம் செய்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமது உடலில் உயிர் உள்ளவரை போராட்டத்தோடு, போராட்ட குணத்தோடு  எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு நீதியை விதைக்கக் கூடியவர்களாக, நீதிக்குக் குரல் கொடுக்கக் கூடியவர்களாக, எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் நசுக்கப் படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக,  பெயருக்காக போராட்டம் செய்பவர்களாக அல்லாமல் உண்மையாலுமே மனிதநேயத்தோடு, உள்ளார்ந்த உணர்வோடு ,அடுத்தவர்களை நம் அன்பு சகோதரர்கள் என்ற மனப்பான்மையோடு ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாக,  ஒருவருக்கு ஏற்படக்கூடிய, ஒருவருக்கு இழைக்கப்படக்கூடிய அநீதியை கண்டு குரல் கொடுத்து நீதியை நிலைநாட்டிட,  இயேசுவைப் போல துணிவோடு வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை நாம் கையாள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் உண்மை சீடர்கள் என நாம் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது,  நமது சொல்லும் செயலும் அதை வெளிப்படுத்த வேண்டும். 

சமீபத்தில் கூட ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக போராடிய தந்தை ஸ்டேன் என்பவர் NIA என்ற அமைப்பினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்வு இது. ஆனால் அவரை விடுவிக்க வேண்டும் என பல கிறிஸ்தவர்கள், பல பிற மதத்தைச் சார்ந்த சகோதரர்கள், பல தன்னார்வத் தொண்டர்கள், பல மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்கள் என பலரும் இணைந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவருக்காக. ஆனால் அவர்களோடு இணைந்து நாமும் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுப்பது மட்டும் போதாது. அவரை போல ,அந்த அருள்பணியாளரைப் போல நாமும் நசுக்கப்படக்கூடிய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக உருவாக வேண்டும். அப்படி நாம் உருவாகும் போது நமக்காக கண்டிப்பாக அடுத்தவர் குரல் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு போராட்டத்தை வாழ்க்கை ஆக்கிக்கொள்வோம். மக்களுக்கு நம்மை சுற்றி இருக்கக் கூடிய மக்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம். எந்த நிகழ்வாக இருந்தாலும் நம்மை அது பாதிக்காத வரை நாம் அதில் தலையிடக்கூடாது என ஒதுங்கி இல்லாமல் அடுத்தவருக்கு இழைக்கப்படக்கூடிய அநீதி என்றாவது ஒருநாள் நமக்கும் இழைக்கப்படும் என்ற எண்ணத்தோடு  எப்போதும் விழிப்பாய் இருந்து ஒருவர் மற்றவரின் உரிமைக்காகவும் உண்மைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உண்மையான போராட்ட   வீரர்களாக இவ்வுலகத்தில் தொடர்ந்து பயணிக்க உங்களை இன்றைய நாளில் அன்போடு அழைக்கின்றேன். வாருங்கள் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் உண்மைக்கும் நீதிக்கும் அநீதிக்கும் நீதிக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கக் கூடியவர்களாக இயேசுவைப்போல துணிவோடு செயல்படுவோம்.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

நாம் அனைவரும் ஓரே குடும்பமா?(28.10.2020)


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

                                                                                    என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய நாளில் திருஅவை உருவான பின்னணியை சிந்தித்து பார்க்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

 இன்று நமது அன்னையாம் திருஅவை, திருத்தூதர்களான சீமோனையும் யூதாவையும் நினைவு கூறுகிறது. முதல் வாசகத்தின் வழியாக நாம் அனைவரும்  கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்ட ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்ற செய்தியானது ஆழமாக வலியுறுத்தி கூறப்படுகிறது. 



இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தன்னுடைய பணிக்காக திருத்தூதர்கள் பன்னிருவரை பெயரிட்டு அழைத்து அவர்களை தன் பணியில் இணைத்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். இயேசுவின் செயல்களை கண்டு அவரால் நலம் பெற்ற பலரும்  அவருடைய செயல்களை கண்டு ஈர்க்கப்பட்ட பலரும், அவரை நோக்கி நாடி வருவதையும் அவரைத் தொட விரும்புவதையும் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் வாசிக்க கேட்கிறோம். 

இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு திருதூதர்கள் வழியாக கட்டமைக்கப்பட்ட கட்டிடம் நாம் என குறிப்பிடப்படுகிறது.
                   
 நாம் அனைவரும் திருஅவையோடு இணைந்து செயல்பட கூடிய ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆனால் நமது குடும்பங்களில் நாம் இன்று எவ்வாறு இருக்கிறோம்? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம். குடும்பம் என்பது ஒரு குட்டி திருஅவை என்பார்கள். இன்று நமது குடும்பத்தில் குடும்ப ஜெபம் இருக்கிறதா?  எப்போதும் அருள்பணியாளர்கள் குடும்பமாக இணைந்து செபியுங்கள் என்று கூறுவார்கள்‌. ஜெபம் எப்படி குடும்பத்தை உயர்த்தும்? என்ற எண்ணம் எழுகிறது.‌ குடும்பத்தில் அமர்ந்து பலர் இணைந்து ஜெபிப்பதால் எத்தகைய மாற்றத்தை காண முடியும்? என்ற கேள்வி இன்று இயல்பாகவே எழுந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெபம் என்பது அமைதியை உருவாக்கும் ஒரு செயல். ஜெபம் என்பது நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வதற்காக ஒதுக்கப்பட கூடிய நேரமாகிறது. பொதுவாக கூறுவார்கள், நாம் வேண்டும் போது இறைவன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாம் மௌனத்தில் இருக்கும்போது தான் இறைவனது குரலை  நாம் கேட்க முடியும் என்று கூறுவார்கள். குடும்ப ஜெபம் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியது . எப்போதும் பேசிக்கொண்டே, எப்போதும் சண்டை சச்சரவுகள் செய்து கொண்டே, எப்போதும் நாடகங்களைப் பார்த்து கொண்டு காலத்தைக் கழிக்கக்கூடிய நாம், சில மணி நேரம் அல்லது சில நிமிடங்களாவது இறைவனின் முன்னிலையில் அனைவரும் இணைந்து செபிப்பது தான் உங்களுக்குள் நீங்கள் அமைதியை
உணர்ந்துகொள்ள கூடிய ஒரு வழி என்பதை குடும்ப ஜெபம் எப்போதும் வலியுறுத்துகிறது.

 தொடக்கத் திருச்சபையில் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்களும் அன்னை மரியாவும் மாடியறையில் இணைந்து செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இயேசு தனிமையில் கடவுளிடம் ஜெபித்து கொண்டிருந்தார் என்பதை விவிலியத்தின் மூலம் அறியலாம். இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்தார் என்பதையும் விவிலியத்திலிருந்து நாம் அறியலாம். ஆனால் நாம் செபிக்கின்றோமா?  நமது குடும்பத்தில் ஜெபம் என்பது எவ்வாறு உள்ளது? செபத்திற்கும் குடும்பத்திற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? என்ன இணைப்பு இருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்குள் எழுமாயின்   குடும்பங்களில்  ஒற்றுமையையும் அமைதியையும் பொறுமையையும் உருவாக்குவது இந்த ஜெபங்கள். குடும்ப ஜெபம் எப்போதுமே குடும்பத்தை நல்வழிப்படுத்தும் என்று கூறுவார்கள்.நாம் நமது குடும்பத்தில்   செபிக்கின்றோமா?      நாம் அனைவரும்  கிறிஸ்து இயேசுவோடு இணைந்து ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அண்டைவீட்டார்  யார் என அறியாத மக்களும் இருக்கிறார்கள். எப்போதும் எல்லோருடனும்  இணைந்து இருந்த  நாம் இப்போது தனித்திருப்பதே நல்லது   என்று  எண்ணுகிறோம். 

என்னுடைய களப்பணி தளமான இலட்சுமணன்பட்டி அந்த கிராமத்தில் ஒருநாள் அந்த கிராமத்தில் இருந்த ஒருவர் விபத்துக்குள்ளாகி எதிர்பாராத விதமாக கால் அடிபட்டது. அன்றைய  நாள் முழுவதும் அந்த ஊர்மக்கள் காலடிப்பட்ட நபருக்கு  ஆறுதல் கூறிக்கொண்டே அமைதியை பின்பற்றினார்கள். ஆனால் இது மிகவும் சாதாரண செயல் போல தோன்றினாலூம் பரபரப்பான இந்த உலகத்தில் தன்னுடைய வீீீடு,  தன்னுடைய குடும்பம் என ஓடிக் கொண்டிருக்கக்   
கூடியவர்கள் மத்தியில் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக தோன்றினார்கள். 

தொடக்க காலத்தில் திருஅவை கிறிஸ்தவத்தைப் பற்றி இயேசுவின் வாழ்க்கை முறையையும்  சமூகத்தில் விதைக்க முயன்றபோது பலர் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளானார்கள். பலர் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இயேசுவால் அழைக்கப்பட்ட 12 திருத்தூதர்களும் இயேசுவைக்  பின்தொடர்ந்த பலரும் இயேசுவைப்பற்றி அறிவித்ததனால் கொல்லப்பட்டார்கள். இந்த கொல்லப்பட்ட திருத்தூதர்கள்,   இயேசுவின்பால் நம்பிக்கை கொண்டவர்களின் இரத்தத்தில் உருவானதுதான் இந்த திருஅவை. இந்தத் திருஅவை விரைவில் அழிந்து போகும் என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று வியந்து நிற்கிறார்கள். காலங்கள் பல கடந்தும் இந்த திருஅவை இன்றும் நிலைத்து நிற்கிறது. இன்று திருஅவை உலகிற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்று திருஅவையை எளிதாக விமர்சிக்க முடியும். ஆனால் திரு அவையை உருவாக்கியவர் இறைவன். இந்த இறைவனுடைய சாயலும் மதிப்பீடுகளும் இந்த திருஅவையில் பல மனிதர்கள் வழியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுதான் இன்றும் இந்தத் திருஅவையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.  

திருஅவை என்றாலே அதில் முக்கியமானவர்கள் மக்கள். மக்களோடு இணைந்து இருப்பது தான் திருஅவை. இன்று திருஅவை என்பது கிறிஸ்துவின் மதிப்பீடுகளின் படி மக்களை வாழ தூண்டக் கூடிய ஒன்றாகும். இந்தத் திருஅவை எப்போதும் இணைந்திருக்க வலியுறுத்துகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்டது போல கிறிஸ்துவோடு இணைந்து உள்ள நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இருக்க ஒவ்வொரு நாளும் அழைப்பு தரக்கூடியதுதான் இந்த திருஅவை. அந்தக் குடும்பத்தில் எந்தவிதமான சண்டைகளும் சச்சரவுகளும் வந்துவிடாமல் இருப்பதற்காகவும்,  கருத்துவேறுபாடுகள் ஏற்படுமாயின் அதனை சரி செய்து கொள்வதற்காகவும் நம்மை சுய ஆய்வு செய்வதற்கு தேவையான பணியை ஜெபம் என்பது செய்யும். அந்த ஜெபத்தை எப்போதும் செய்யுங்கள். அமைதியில் அமருங்கள். இறைவனது குரலுக்கு செவி கொடுங்கள் என திருஅவை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும் வலியுறுத்துகிறது. இணைந்து ஜெபிப்பது வாயிலாக உருவான இந்த திருஅவையில் என்றும் நாம் இணைந்து ஜெபிக்கவும், நாம் அனைவரும் இந்த  ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாக, நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். நம்மிடம் உயர்வு தாழ்வு இல்லை, என்பதை உணர்ந்தவர்களாக மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப,
பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று நம் நினைவு கூரக்கூடிய சீமோன் யூதா என்ற திருத்தூதர்களைப் போன்று பல நபர்கள் திருச்சபையின் வளர்ச்சிக்காக தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள். அவர்களது வாழ்வை கருத்தில்கொண்டு நமது வாழ்வு பிறருக்கு வாழ்வை வழங்கக் கூடியதாக மாற்றிக்கொள்ள இறையருளை வேண்டி தொடர்ந்து இணைந்து ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

திங்கள், 26 அக்டோபர், 2020

எப்படி இறையாட்சி மலரும்? (27.10.2020)

இறைவன் இயேசுவின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
இன்றைய வாசகங்களின் வழியாக இறைவார்த்தையை பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


சரியான பெண்ணைத் / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் காதலர் தினம் தான்!

தவறான பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் தியாகிகள் தினம் தான்!

சோம்பேறி பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால்? தினமும் உழைப்பாளிகள் தினம் தான்!

பணக்கார பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் புத்தாண்டு தினம் தான்!

மூளை சரியில்லாத பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் குழந்தைகள் தினம் தான்!

         இன்றைய முதல் வாசகத்தில் வழியாக இரண்டு மனங்கள் இணையும் திருமணத்தை திருஅவைவுடன் புனித பவுல் இணைத்து கூறுகிறார். திருமணம் புதிய உறவுகள் சங்கமிக்கும் இடம். ஒருவருக்காக இன்னொருவர் வாழ்வதாக உறுதி கூறி இறுதிவரை இணைந்து வாழக்கூடிய ஒரு புனிதமான உறவு தொடங்குமிடம்.  இந்த புனிதமான திருமண சடங்கில் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் வாயிலாக பணிந்து இருக்கவும் இணைந்து இருக்கவும் வாக்களிக்கின்றனர்.  இந்த மகத்துவமான உறவில் காணப்படக்கூடிய பணிந்து இரத்தலும் இணைந்திருந்தாலும் திருஅவை யோடு இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன.  

மேலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சியை மிகச்சிறிய கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் இயேசு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
இந்தச் சிறிய பொருட்கள் வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடமானது இறையாட்சிக்கு வழிவகுக்கக் கூடியது.  திருஅவையோடு இணைந்திருப்பதும் பணிந்திருப்பதும் திருஅவையோடு இணைந்து அது காட்டக்கூடிய வழிமுறைகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதும் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்வதற்கான வழிமுறைகள் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணரலாம்.
   
 இறையாட்சி புளிப்பு மாவுக்குஒப்பாகும் என்று குறிப்பிடுவதன் வழியாக சிறிதளவு மாவானது மிகப் பெரிய அளவில் புளிப்பேற்றுவதுப் போல திருஅவை என்ற ஒன்றோடு இணைந்து இருக்கக்கூடிய நாம் அனைவரும் இறைவன் விரும்பக்கூடிய இறையாட்சி இம்மண்ணில் மலர்வதற்கான கருவிகளாக நமது செயல்களையும் சொல்லையும் அமைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.  திருமணத்தின் வழியாக உறவுகள் இணைவது போல திருஅவை வழியாக ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

ஆனால் இன்று நாம் வாழக்கூடிய சூழ்நிலையை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்போது மதத்தின் வாயிலாக நாம் பெரும்பாலும் பிரிந்து நிற்கிறோம்.  இன்று கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ளாகவே பலவிதமான பிரிவுகளை கொண்டிருக்கிறார்கள்.    இந்தப் பிரிவுகள் பெரும்பாலும் பணத்தின் அடிப்படையில் எழுகின்றன. இன்னும் சில பிரிவுகள் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் உதயமாகின்றன. சிலர் இறையாட்சி பணியை இம்மண்ணில் செய்வதை வியாபாரமாக்க கூடியவர்களாக மாறியுள்ளனர். கடந்த 2000 ஆண்டுகளை திருப்பிப் பார்க்கும் பொழுது கிறிஸ்தவ மதத்தில் பல விதமான பிரிவுகளும் பிரிவினை சபைகளும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.  நகைச்சுவையாக கூறுவார்கள் எத்தனை திருஅவை கிறிஸ்தவத்தில் இருக்கிறது என்பது தூய ஆவியானவருக்கு தெரியாத ஒன்று எனக் கூறுவார்கள். கடந்த பல வருடங்களாகவே நாம் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் பிளவுகள் மனக்கசப்புகள் காரணமாக தனித்தனியே பிரிந்து சென்று ஜெபிக்க கூடியவர்களாக மாறிக் கொண்டே வருகிறோம்.   பல பன்னாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற சபைகளை ஊக்குவித்து வருகின்றது என்பது பலரும் அறியாத மறைமுக அரசியலாகவே இருந்து கொண்டிருக்கிறது.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற வார்த்தைகளின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என இயேசு நமக்கு கற்பித்தார். பிள்ளைகளிடையே சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும் அல்லது ஒருவர் கருத்தை மற்றவர் மதிக்கும் அவர்களை ஏற்றுக் கொள்ளவும் நாம் இன்று தவறிப்போய் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் உதயமானால் பிரிந்து வாழ்வதே இன்பம் என்று எண்ணக்கூடியவர்களாக மாறி வருகிறோம். ஆனால் பெயரளவில் பிரிந்துபோன சகோதரர்களுக்காக நாம் இறைவனிடத்தில் ஜெபிக்கிறோம். கருத்து வேறுபாடுகளுடன் வாழக்கூடியவர்களுக்காக இறைவனிடத்தில் ஜெபிக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், வெறும் வார்த்தைகளால் மட்டும் இறைவனிடம் வேண்டுவதால் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து ஒருவர் மற்றவரோடு இணைந்து பணிந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் வாழும் போதுதான் இறையாட்சியை இம்மண்ணில் நம்மால் மலரச் செய்ய இயலும்.  இல்லையேல் இறையாட்சி என்பது எப்போதும் பேசும் பொருளாக மட்டுமே இருந்து கொண்டே இருக்கும் அது செயலாகாது. இறையாட்சி இம்மண்ணில் உருவாகுவது நம்முடைய சிறுசிறு செயல்களாலும், தியாகத்தாலும், அன்பாலும், பணிவாலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அனைவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம் .


முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!

முடியுமா? என்று கேட்பது அவநம்பிக்கை!

முடியும் என்று சொல்வது
தன்னம்பிக்கை.
        
                எனவே இன்றைய நாளில் புனித பவுலின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவின் இறையாட்சி கனவை இம்மண்ணில் நனவாக்கிட ஒருவர் மற்றவரோடு இணைந்தும் பணிந்தும் இறையாட்சியின் உண்மைத்தன்மையை இந்த உலகத்தில் மலரச் செய்ய உண்மையான இறையாட்சி பணியாற்றும் சீடர்களாக இயேசுவை பின் தொடர்வோம். 

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

நல்லதை விரும்புவோம் (26.10.2020)

நல்லது செய்வோம் நல்லதை விரும்புவோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் உங்களிடம் எனது சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நாம் நல்லது செய்யவும், நல்லதை விரும்பவும் இன்றைய வாசகங்கள் வழியாக இயேசு நம்மை அழைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உடல்நலமற்ற ஒருவரை நலமாக்குகிறார்.

ஒருவருக்கு நலம் அளிப்பது என்பது மிகவும் நல்லது. இந்த பணியை செய்வதால் இயேசுவின் மீது குற்றம்சாட்ட கூடிய நபர்களை நாம் இன்ற வாசகத்தில் காண்கின்றோம். 
 
ஓய்வு நாளில் சட்டத்தை இயேசு மீறியதாக  குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஓய்வுநாள் என்பது மனிதனுக்காகவே, மனிதனுக்கு நலம் தரும் செயல்களை செய்வதை ஓய்வுநாள் எப்போதும் தடுப்பதில்லை. தவறான எண்ணத்தையும், தவறான சட்டத்திற்கான விளக்கத்தை மனதில் கொண்டு வாழ்ந்த சமூகத்தில் இயேசு மாற்றுச் சிந்தனையை விதைக்கிறார்.

நாம் வாழக்கூடிய சமூகத்தில் நாம் நலமான பணிகளை செய்ய முன்வரும் போது நம்மில் பலர் பெரும்பாலும் அதை குற்றம் நோக்கத்தோடு காண்பதுண்டு.  ஒருவரை தவறானவர் என குற்றம் சாட்ட வேண்டும் என முடிவு செய்த பிறகு அந்த நபர் எத்தனையோ நல்ல செயல்களை செய்தாலும் அதில் குற்றம் காண கூடியவர்களாக நாம் இருப்போம்.  

இயேசு வாழ்ந்த காலத்திலும் இதுதான் நடந்தது.   நேர்மையாளரான இயேசு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை மரணத்திற்கு கையளிக்கப்பட்ட நிகழ்வவை நாம் அனைவரும் அறிந்ததே.  

உண்மையை பேசுவதாலும், நன்மையை செய்தாலும் குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இயேசு செய்த நல்லதை விடுத்து விட்டு, அவர் செய்த நல்ல காரியங்களில் இருந்து கூட அவர் மீது எப்படி குற்றஞ்சாட்டலாம் என்ற எண்ணத்தோடு அவரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தார்கள். இதையே இன்றைய வாசகத்தின் வழியாக நாம் உணருகிறோம்.  

நமது வாழ்க்கையின் நலமான காரியங்களைச் செய்ய முன்வரும் போதும், ஏன்  நாமும் பெரும்பான்மையான நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திப்பது உண்டு. ஏன் நாமே இப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பதும் உண்டு.
ஏன் நாமே சில நேரங்களில் சிலரை தவறானவர்கள் என்று எண்ணம் கொண்டு அவர்கள் செய்யக் கூடிய சிறு நல்ல செயல்களை கூட புரிந்து கொள்ளாமல், அதிலிருந்து அவர்கள் மீது குற்றம் சாட்ட கூடியவர்களாகவும், அவர்களை விமர்சனம் செய்பவர்களாகவும் நாம் இருக்கிறோம். நமது செயல்களை சிந்தித்து பார்த்து, நாம் நம்மை சரி செய்துகொள்ளவும், நல்லதைச் செய்யவும், நல்லது செய்வதை விரும்பக் கூடியவர்களாக நாம் வாழ இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

சனி, 24 அக்டோபர், 2020

இறைவனுக்குள் இணைவது எப்படி? (25.10.2020)

உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாளின் வாசகங்கள் வாழ்வின் ஆழமான அர்த்தங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. 

 இன்றைய முதல் வாசகத்தில் தனது இன்ப துன்பங்களை போலவே மாற்ற மனிதருக்கும் இன்ப துன்பங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, அடிமை நிலையில் உள்ளோர், கடன்பட்டு இருப்போர், ஆகியோரின் துன்ப நிலையினை அவர்களின் உடல் உள்ள கஷ்டங்களை, போராட்டங்களை, புரிந்துகொள்ளவும் அவர்களும் இவ்வுலகில் வாழ தகுதியுடன் பிறந்த மனிதர்களே என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கவும் இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 

அன்று மனிதனைப் படைத்த கடவுள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்ற கடவுள், இந்த உலகில் மனிதர்கள் அனைவரும் மேன்மையான வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இன்று இவ்வுலகில் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் பணக்காரர் ஏழை என்றும் ஆண் பெண் வேறுபாட்டு அடிப்படையிலும் ஜாதிய பாகுபாடுகளும் மனிதர்கள் மனிதர்களாலே கொடுமைக்கு உள்ளாகும் நிலை இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கு நாம் எந்த வகையில் பொறுப்பேற்கிறோம்? நம் அருகில் வாழக்கூடிய மனிதர்களிடத்தில் எவ்வாறு சமத்துவம் பேணுகிறோம் எவ்வாறு நீதியை நிலைநாட்டுகிறோம்? இன்று நமது உள்ளத்தினை ஆழ்ந்து சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் அந்த மக்களிடம்  இறை வார்த்தை மீது இருந்த அளவற்ற ஆர்வத்தை எடுத்துரைக்கிறார். துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிய பொழுது இறைவார்த்தையின் வழியாக அவர்கள் ஊக்கம் அடைந்ததையும், உள்ளத்தின் ஆழத்தில் தூய ஆவியின் வழியாக பெற்றுக்கொண்ட மகிழ்வையும் புனித பவுலடியார் எடுத்துக் கூறுகிறார்.
ஆண்டவரைப் போல நடக்கின்ற மக்கள் என்று இந்த தெசலோனிக்க மக்களை புனித பவுல் பெருமையுடன் கூறுகின்றார்.  மணமகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என்று கூறிய இயேசு ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க, அவரைப்போல பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது உடல் மன இயல்புகளை
துன்பங்களை பொருட்படுத்தாமல் ஆண்டவரைப் போல வாழ்ந்திட தன்னையே அர்ப்பணித்த தெசலோனிக்கர் மக்கள், தாங்கள் சந்தித்த துன்பங்களில் மத்தியிலும் இயேசு ஆண்டவருக்காக உறுதியான உள்ளத்தோடு வாழ்ந்ததைப் போல நாமும் நம்முடைய சுயநலமிக்க போக்கினை களைந்து ஆண்டவர் இயேசுவுக்காக உழைக்க உள்ளத்தில் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் தூய ஆவி என்னும் அருட்பெரும் ஜோதியை உள்ளத்தில் அணையாது பாதுகாத்துக் கொள்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உலகை மீட்க இவ்வுலகிற்கு வந்த இயேசுவை சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட நூலில் சிறந்த கட்டளை எது? என்று பரிசேயர் அவரிடம் கேட்கின்றனர். 

உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு செலுத்துவாயாக என்று கூறுவதன் வழியாக  இயேசு ஆண்டவர் முழுமுதல் தலைவனாகிய நம் கடவுளை முதலில் வைக்கவும் நமது வாழ்வில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்கவும் அழைப்பு விடுக்கின்றார். நம்மையே நாம் முழுமையாக இறைவனுக்கு கொடுக்கின்ற பொழுது நாம் இறைவனுக்குள் இணைந்து விடுகின்றோம். அவராகவே மாறிவிடுகின்றோம். எனவே நம்மை நாம் இறைவனிடத்தில் முழுமையாக  நம்மை அர்ப்பணிக்கும் பொழுது இறைவன் நம்மை ஆசீர்வதிக்கின்றார்.
   
உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை.
உடைக்க படுவோம் என்று அழும் விதைகள் மரமாவது இல்லை. 
மண்ணுக்குள் மறைந்து இருக்கிறோம் என்று கவலைப்படும் வேர்கள் மரத்தை தாங்குவதில்லை.
              என்பதை உணர்ந்தவர்களாக  இன்றைய நாளில் நான் சந்திக்கக்கூடிய அனைத்துவித இடர்பாடுகளின் மத்தியிலும் ஆண்டவரின் அன்பு மகனாக, அன்பு மகளாக வாழ்ந்திட உள்ளத்தில் உறுதி கொள்வோம்!

வெள்ளி, 23 அக்டோபர், 2020

Homily for Rosary

 

Homily for Rosary 

 


           

This coming Tuesday will be the Feast of the Holy Rosary, and this Sunday  is celebrated in our Dominican churches as “Rosary Sunday,” since our Order was entrusted with promoting the Rosary as a Christian way of prayer from very early times. So today, I shall dispense with the readings appointed for this Sunday to speak to you instead about the Rosary.

 

It is a way of Christian prayer. This little string of beads is what we call a “sacramental,” which means a holy tool, to be used by Christians as an instrument of prayer. You see, we Catholics pray not only with our minds and hearts but with our bodies and their senses too. We stand or kneel to pray; we bow and genuflect; we make the sign of the Cross; we pray before pictures and statues; we wear vestments, light candles, burn incense, and make music; in the principal sacraments we are washed, anointed with oil, and fed. All the senses of the body are caught up in the raising of our hearts and minds to God—and that is as it should be, since God created us with bodies.

 

The Rosary involves the most intimate and personal of all our senses, that is the sense of touch: we hold the rosary; our fingers move along the fifty beads. On the beads, we repeat the most familiar of all Christian prayers—the Our Father, the Hail Mary, and the Glory Be. We can pray the Rosary alone or with others; in churches or in cars; on sidewalks or in subways; sitting at home or lying down. The rosary is eminently portable. In our pockets or our handbags, it reminds us that our God is always with us. It can help in times of trouble.

 

I have an amusing example of that. A brave and strong young man I know one night intervened to break up a nasty fight that had started outside a bar that he was passing on the sidewalk of a run-down neighborhood. He was successful, but the police arrived and they arrested him along with the drunken hoodlums, despite his protestations that he was not part of the problem, but trying to be part of the solution. Then, as he was being booked and emptying his pockets, instead of a weapon the police found this young man’s rosary, on the strength of which they believed him and he was released.

 

Well, obviously that’s not the reason for carrying a rosary. The reason is to pray with it. Personal prayer, in the Catholic tradition, is threefold: it is vocal (using words); meditative (using thoughts); and contemplative (resting in God).

 

The familiar vocal prayers of the rosary are meant to instill a rhythmic beat to the activity of prayer, which is really not a matter of the lips or voice, but of the mind and heart. Repeating the sacred words, while moving fingers along the beads, has the effect of steadying and balancing the mind, to help it focus on the mysteries that correspond to each successive decade. These mysteries—the sorrowful, the joyful and the glorious (“5 for sorrow, 10 for joy,” in the phrase of an excellent book about the rosary)—are to be meditated on. They are to be food for mind and heart.

 

The mysteries are, as it were, mental snapshots of the Word of God: they show God speaking to us through his Son, as he was seen through the most pure, most faithful and attentive eyes of Mary. Guided by her view of him, we follow Jesus through the scenes that brought her joy, or sorrow, or ecstatic bliss; with her mind, we ponder the mighty works of God our Savior; and with her heart, we rest in his love.

 

Of course, our minds and hearts are very prone to wandering. The repetitive rhythm of the vocal prayers does help somewhat to steady them, but to really focus mind and heart upon the mysteries is often very difficult.

 

I use a method that was taught by a great apostle of the rosary, St. Louis Grignon de Montfort. He suggested that at each Hail Mary, we stop with the words, blessed is the fruit of your womb Jesus, and at the Name of Jesus add a phrase that focuses one aspect of the mystery. For example, in the first joyful mystery, the Annunciation, one might say, Hail Mary, full of grace, the Lord is with you; blessed are you among women, and blessed is the fruit of your womb, Jesus who received his human life from you. Or in the last glorious mystery, the Coronation of the Virgin, one might say, Hail Mary, full of grace, the Lord is with you; blessed are you among women, and blessed is the fruit of your womb, Jesus who made you our Advocate in Heaven.

 

This method has brought me some success in focusing my mind, so that my rosary becomes a way of meditation. But something more is needed for the rosary to be a way of contemplation, leaving words and thoughts behind to bring our hearts to rest in God. For that to happen, God himself, the Holy Spirit, has to take us from our vocal prayers and thoughts, and lift us up beyond ourselves. That’s not something we can do, but we can dispose ourselves to let God do it for us, through the rosary.

 

The end of prayer is simply for our heart to rest in God and his love. From that hidden place, beyond ourselves, comes all the energy we need to live a life of faith, and hope, and charity—a holy life. Many, many of the saints have used the rosary, this simple, tactile sacramental, to let Mary lead them to a point from which the Lord could take them up to rest in him, and in his love; so why not you and me as well?

 

ADORATION SERVICE: Thanks

 ADORATION SERVICE

THANKS


 

            Lord Jesus, there so much we owe you that we do not know where to begin. Your favours are numberless; we just cannot count them. When we look at our position with respect to you, we have to admit that there is nothing that we have not received from you. Our very breath comes from you. And so our thanksgiving to you endless.

 

(Pause for a few moments)

 

Gospel: Luke 17: 11-19

 

Reflection: (Read little slowly)

            The only one who returned to thank God for the miracle was the samaritan – not any of the nine jews. It is easy to condemn the nine jews; but how often have we perhaps acted in exactly the same manner? Specially when we have received an extra ordinary gift it is so easy to absorbed and engrossed in the gift itself, to go around telling everyone about our fortune that we forget the giver. We find it easy to thank God for the things which happen for our good. And about the things that seem to be our disadvantage, how often do we thank God for even these? We need to thank God for everything because as St. Paul tells us: “For those who love God, everything works for their good – even adversity.

            Let us pause for a few moments and reflect on how spontaneously do we give thanks to God in our daily lives?

 

Silence

(soft music can be played)

 

Intercessions: 

                        Response:  We thank you and we praise you Lord Jesus

Ø  For all the world you created and all living creatures both great and small.  / R.

Ø  For having loved us and for filling our lives with your love. / R.

Ø  For all our companions, superiors, all our family members, our friends and foes.  / R.

Ø  For giving us our daily bread and for forgiving us our sins.  / R.

Ø  For bringing us together to follow your path.  / R.

Ø  For all our benefactors. / R.

 

Lord Jesus our ability to thank you is itself your gift. Fill us with the spirit of praise and thanks that in all we do and say, we will praise you our Lord and Father. We make this prayer through Christ our Lord. Amen.          

மனமாற்றம் ஒன்றே. (24.10.2020)

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.

இறைவன் இயேசுவின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! 
நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருத்தொண்டாற்றும் பணியில் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் அதன் வழியாக கிறிஸ்துவின் உடலை கட்டி எழுப்பவும், புனித பவுலின் வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். கிறிஸ்துவின் உடலைக்கட்டி எழுப்புதல் என்பது நான் மட்டும் தனித்து நின்று செயல்படுகின்ற ஒரு காரியமல்ல. மாறாக, ஆண்டவர் நமக்கு அளித்த அருளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஆண்டவரின் பணிக்கு நம்மை ஆர்வத்துடன் ஆயத்தப் படுத்த வேண்டும். அன்பின் அடிப்படையில் உண்மை பேசி தலையாகிய கிறிஸ்துவை போன்று எல்லாவற்றிலும் வளர வேண்டும் என்று புனித பவுல் குறிப்பிடுகின்றார். 

ஒருவர் தன்னுடைய தலையான சிந்தனை திறத்தால் தன்னுடைய செயல்பாடுகள் வழியாக, தன்னுடைய வார்த்தைகளின் வழியாக, தன்னுடைய முயற்சிகளின் வழியாக, தன்னுடைய ஆறுதல்படுத்தும் வார்த்தைகளின் வழியாக, தீமையைக் கண்ணுறும் போது வெளிப்படும் அறச் சினத்தின் வழியாக, ஒரு ஏழையை கண்ணுறும் போது அவர் மீது இரக்கப்பட்டு உதவி செய்தல் வழியாக, இன்று இவ்வாறாக பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றார். 
இன்று நன்மையா அல்லது தீமையா எதுவாயினும் ஒவ்வொரு மனிதரும் எதையாவது செய்து  கொண்டே இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவன் காட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்ப இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்ந்திட ஆண்டவர் இயேசு நம்மை அழைக்கின்றார்.

நாம் இறைவனுக்கு செலுத்துகின்ற பலிகள், நம்முடைய செல்வங்களை இறைவனிடத்தில் கொட்டினாலும்,  ஆண்டவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லி ஆலயங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஆண்டவர் இயேசு நம்மிடம் விரும்புவது உண்மையான மனமாற்றம் ஒன்றே. 

 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. என்று
லூக்கா 6:44 இறை வசனம் கூறுவது போல, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த அருளுக்கேற்ப உள்ளத்தில் இறைவனை தாங்கியவர்களாய், உண்மையான மன மாற்றத்துடன் வாழ்ந்திட இன்றைய நாளில் நமது மனங்களை செம்மைப்படுத்துவோம். ஆண்டவருக்கு உகந்த பிரியமுள்ள காணிக்கையாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.

வியாழன், 22 அக்டோபர், 2020

Adoration Service: MAN’S RESPONSE TO GOD’S LOVE

 

Theme: MAN’S RESPONSE TO GOD’S LOVE



 

Introduction

The whole of creation is a manifestation of God’s love. The creation of man, as the king and crown of creation, is a greater manifestation of God’s infinite love. God’s love to us was shown not only by creating us, but also by redeeming us and showing us the way to serve Him. Nay, God’s love follows every moment of our life and permeates our entire being. But like any other true love, god’s love is a two-way movement, a bipolar or a reciprocal act. God’s  love must find a response in us. our Christian life is nothing but a response to god’s love. Let us spend this half hour with  Christ, the incarnate love, meditation on this essential aspect of our Christian life.

 

Hymn no. 396

 

Exposition of the blessed Sacrament

 

First reading :  Genesis 22: 1-5,9-14

Commentator:  Because of His great love for Abraham, God did for him even the impossible and gave him a son through his barren wife, Sarah. But God demanded that Abraham should love Him back, to the point of sacrificing his only son. God’s love is very demanding but infinitely rewarding as well

 

Responsorial hymn – 574

 

Second reading : Mathew 11: 20-25

Commentator: Christ’s severest words were uttered against those on whom God’s grace had been poured out in abundance, but, who in their turn, did not respond to that love.

 

Reflection

 

Prayer of the faithful from the prayer of the church

 

Time for silent personal prayer

 

Eucharistic hymn

Blessing

Final recessional hymn.

 

 

 

அன்பு என்றால் என்ன? (23.10.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என பவுல் முதல் வாசகத்தில் குறிப்பிடுகிறார். நற்செய்தி வாசகத்தில் இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள ஆண்டவர் கூறுகிறார். இயற்கையிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய நாம் ஏன் நமது வாழ்க்கையில் காணும் மனிதர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.

நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் எனவும் புனித பவுல் நம்மை அழைக்கின்றார். இவ்வுலகில் இறைவன் யாரையும் வெறுமனே படைக்கவில்லை. நமது சாயலாகவும் பாவனையாகவும், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர் அவருக்கென்று ஒரு சிறப்பான பணியையும் இறைவன் கொடுத்திருக்கின்றார். 
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் நல்லவர்களாக வாழ முற்படுகின்ற பொழுதும், இன்றைய நாளிலே சிறப்பாக
நாம் அனைவரையும் முழுமனதாழ்மையுடன் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி வழிநடத்த புனித பவுல் வழியாக இறைவன் அழைப்பு விடுக்கின்றார். 
அன்பிற்காக இவ்வுலகில் மனுவுரு எடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நமது அன்பு எத்தகையது என்று இன்றைய நாளில் நாம் சிந்தித்துப் பார்ப்போம். 
உண்மையான அன்பு!

ஒரு முனிவரிடம் சென்று ஒரு பெண்மணி என் கணவன் என்னை அன்பு செய்யவே இல்லை என்று கூறினாள். அவளைப் பார்த்து அன்பு என்றால் என்ன? என்று கேட்டார் அந்த முனிவர். ஆனால் அந்தப் பெண்ணோ பதிலேதும் கூறாமல் அமைதியாக நின்றாள். அவளைப் பார்த்து அந்த முனிவர் கூறினார், எனக்கு உன்னை பிடித்துள்ளது. நீ எனக்கு உரியவன் நானே உன் மீது அதிக உரிமை கொள்வேன். என்னிடம் மட்டுமே நீ பேச வேண்டும். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும். ஏனென்றால் உன் மேல் நான் அதிக அன்பு வைத்திருக்கிறேன். இப்படி எல்லாம் சொல்வது அன்பா? என்று கேட்டார். அந்தப் பெண்மணி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். முனிவர் கூறினார், நிச்சயமாக இது அன்பு இல்லை. அன்பு என்றால், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உன்னிடம் எனக்கு உரிமை உள்ளது. ஆனால் அந்த உரிமை எப்பொழுதும் உன்னை கட்டுப்படுத்தாது. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதே மாதிரி நீயும் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. என் அன்பை மட்டும் பெற்றுக் கொள் போதும். எதுவும் என்னிடம் பிடிக்கவில்லை என்றால் கூறிவிடு. உனக்காக மாற்றிக்கொள்கிறேன். என்னையும் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடு. நெருங்கி நின்று துன்புறுத்தாமல் விலகி நின்று உன்னை நேசிப்பேன் என்று கூறுவதுதான் அன்பு. அன்புக்கு அடிமையாகத்தான் தெரியும். அடிமைப்படுத்தத் தெரியாது என்று கூறினார். அருகிலோ தொலைவிலோ அன்பை மட்டுமே கொடுங்கள். அன்புடன் வாழுங்கள். உன் வாழ்க்கை அழகாகும் என்று கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தார். முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட பெண்மணி அன்பு என்றால் அடிமைப்படுத்துவது அல்ல அடிமையாகுவது, அன்பு என்றால் அடிமைப்படுத்துவது அல்ல என்பதை உணர்ந்தவளாய் அங்கிருந்து சென்று தன் கணவனோடு அன்புறவில் வாழ்ந்தாள். இன்று நாம் வாழக்கூடிய உலகில் பலரும் அன்புக்கு அர்த்தம் தெரியாமல், நமது விருப்பப்படி அடுத்தவர் செயல்பட வேண்டும் என்பதையும், நம் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அன்பு என்ற பெயரால் அடுத்தவரை அடிமைப்படுத்த முயலுகிறோம். இதிலிருந்து விடுபட்டு உண்மையான அன்பின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படும் போது வாழ்க்கை அன்பானதாகவும் அழகானதாகவும் அமையும். வாழ்க்கையை அன்பானதாகவும் அழகானதாகவும் ஆக்க இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம். நம் மீது அளவற்ற அன்பு கொண்ட ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி நாமும் நாம் சக மனிதர்களிடத்தில் உண்மையான அன்போடு வாழ அதன் வழியாக உண்மையானவர்களாய் வாழ இன்றைய நாளில் உள்ளத்தில் நம்மை மாற்றிக்கொள்வோம்!

புதன், 21 அக்டோபர், 2020

ADORATION SERVICE (LENT SEASON) - ‘FORGIVENESS’

 

ADORATION SERVICE (LENT SEASON)

THEME- ‘FORGIVENESS’



Introduction:

            “Father, forgive them they do not know what they are doing.” These were the words Jesus Christ uttered on the cross. Jesus Christ died to forgive our sins. Are we ready to forgive our parents? Are we ready to forgive or reconciled with our friends, our Superiors and our neighbor? The prodigal son was accepted in his family. His father forgave him. He gave him new life.

            Today in this half an hour adoration service let us ask the Lord to give us courage, strength to forgive all our enemies.

 

  Hymn: We have come into his house. (Pray-sing hymn no. 34)

 

 (During the hymn Blessed Sacrament will be exposed.)

 

Now we will listen to the word of God.

                                                            Mat. 18:21-22

 

 

Reflection and silent music

            In this Gospel reading Jesus invites us to forgive not seven times but seventy times seven. Jesus Christ was the real example of forgiveness. Keeping Jesus as our model let us remember all our enemy and talk to Jesus in our hearts.

 

            Silent for some time.

                        Let us hold each other’s hands and say the prayer, which our Father has taught us.

  

            OUR FATHER...............

 

ü Please kneel down for benediction

ü Hymn no. 286  (Let us bow in adoration)

ü Blessing

ü Divine praises

ü Final hymn no. 270 (Father forgive them)          

 

அச்சுறுத்தும் வார்த்தைகள் ஆழமான பொருள் கொண்டது. (22.10.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய நாளில் வாசிக்கக்கூடிய நற்செய்திகள் அனைத்தும் மனதில் ஒரு விதமான கலக்கத்தை தரக் கூடியதாக அமைகிறது.
ஏனெனில் மண்ணுலகிற்கு நான் அமைதியை ஏற்படுத்த வரவில்லை. தீ மூட்டவே வந்தேன் என இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுவதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.
 இன்றைய சூழலில் இந்த வார்த்தைகளை எவ்வாறு பொருள் கொள்வது என சிந்திக்கும் போது ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பார்கள்,  என இயேசு கூறுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் பல குடும்பங்கள் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கின்றன. 

திருமணத்தின் போது இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்து பலரின் முன்னிலையில், கடவுளின் முன்னிலையில், கடவுளின் பணியை செய்யக்கூடிய அருள்பணியாளர்கள் முன்னிலையில்,  இச்சமூகத்தில் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொருவரின் முன்னிலையிலும் வாக்குறுதியை கொடுத்து  இணைய கூடியவர்கள். குடும்பத்தில் எப்போதும் இணைந்து இருக்கிறார்களா? என சிந்திக்கும் போது பல நேரங்களில் பல விதமான காரணங்களால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடிய சூழல் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன.  இந்த உலகில் நான் அமைதி அல்ல தீயை மூட்ட வந்தேன் என்கிறார் இயேசு. 

எண்ணங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொண்டவர்கள். எண்ணங்கள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. சூழலுக்கு ஏற்றவாறு, நேரத்திற்கு ஏற்றவாறு நேரத்திற்கு ஏற்றவாறு இந்த எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எண்ணிக் கொண்டே இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் என தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருப்பதன் அடிப்படையில் தான் நம்மிடையே பல விதமான கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன.  இவைகளை கருத்து முரண்பாடுகளாக பார்ப்பதை விடுத்து நாம் அடுத்தவர் மீதான ஒரு வகையான கோபமாக பார்க்கக் கூடிய சூழ்நிலை அதிகமாகிவிட்டது.


 ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணைந்து ஒரு காரியத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்‌. கணவனுடைய பார்வை ஒன்றாக இருக்கிறது. மனைவியின் பார்வை வேறாக இருக்கிறது. இருவரும் மாறி மாறி தங்களுடைய பார்வையை தெரிவிக்கிறார்கள் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் சண்டையில் எழுகிறது. நான் சொல்வது தான் சரி என்கிறார்கள் ஆண்கள். சில நேரங்களில் பெண்கள் நான் சொல்வது தான் சரி என்கிறார்கள். இவ்வாறு ஏற்படக் கூடிய கருத்து மோதல்கள் உறவை பிரிக்கின்றன. கருத்து மோதல்கள் உறவை பிரிப்பதை கண்டுணர்ந்து கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எண்ணங்கள் வேறுபட்டு இருப்பதன் அடிப்படையில் தான் பலவிதமான சிக்கல்கள் எழுகின்றன. எண்ணங்கள் எப்போதும் இணைந்தே  இருக்கும் என எண்ணுவதும் தவறான ஒன்று. எனவே நாம் வாழக்கூடிய இந்தச் சூழலில் ஒருவருடைய எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும், அடுத்தவரின் எண்ணங்களை மதிக்கக் கூடியவர்களாகவும், அடுத்தவரின் பார்வையை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் வாழ்வதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். அவ்வாறு நாம் வாழும் போதுதான் இவ்வுலகில் அமைதி நிலவும். அதை விடுத்து எண்ணங்களை, அடுத்தவர்கள் உணர்வுகளை, அவர்களின் பார்வைளை, அடுத்தவரின் எண்ணங்களை மதிக்கத் தவறி என்னுடைய கருத்து தான் சரி! நான் சொல்வதே சரி என்ற எண்ணத்தோடு நாம் இணைந்திருக்கும்போது நம்மிடையே ஒற்றுமை என்பது இருக்காது. மாறாக நம்மிடையே சண்டைகளும் சச்சரவுகளும் தான் தீயாக வெடித்துக் கொண்டிருக்கும். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக இறைவன் உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம். 

இன்றைய முதல் வாசகத்தில் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்கிறார் பவுல். அவரின் வார்த்தைக்கு ஏற்ப குடும்பங்களுக்காக நன்றி கூறுவோம் . பலவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் பல குடும்பங்கள்  குடும்பங்களாக தான் இருந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். கூட்டுக்குடும்பம் என்றால் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இன்று கணவன் மனைவி இணைந்து இருப்பதுதான் கூட்டுக் குடும்பம் என்ற நிலை உருவாயிற்று. சமீபத்தில் பார்த்த ஒரு செய்தி. ஒரு இல்லத்தின் பெயர் அன்னை இல்லம்.ஆனால் அன்னை இருப்பதோ அனாதை இல்லம். இத்தகைய சூழல்தான் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நாம் அனைவரும் நம்முடைய செயல்பாடுகளை  சிந்திக்க அழைக்கப்படுகிறோம். பல கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும் இன்றும் பல குடும்பங்களில் அடுத்தவர்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் கருத்துக்களையும் மதிக்கக் கூடிய நபர்கள்  அதிகம். அதனால் தான் குடும்பங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு குடும்பம்தான் குழந்தைக்கு பல  காரியங்களை கற்றுக்கொடுக்கிறது என்று கூறுவார்கள். ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி தான் என்று கூறுவார்கள். தாயின் மடியில் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைப் கற்றுக் கொள்கிறார்கள்.  நமது குடும்பம்  நல்ல குடும்பங்களாக இருப்பது என்பது  நாம் விட்டுக் கொடுக்கக் கூடியதிலும், பிறருடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் கூடியவர்களாக இருக்கும்போதுதான் நல்ல குடும்பங்களாக அமைதியான குடும்பங்களாக நாம் இருக்க முடியும். எனவே எண்ணத்தால் நாம் தனித்து இருந்தாலும், மாறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால் உணர்வால் ஒன்றிணைந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். 
இறைவனின் வார்த்தைகள் அச்சுறுத்துவது போல இருந்தாலும்  அச்சுறுத்தும் வார்த்தைகள் தரக்கூடிய ஆழமான கருத்துக்களை புரிந்து கொண்டு நல்ல குடும்பங்களாக இச்சமூகத்தில் நாம் வலம் வர  இன்றைய நாளில் இறையருளை நாடுவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...