மனிதர்கள் ஒவ்வொருவருக்கும்பிறந்தது முதலே ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சிறுவயதிலிருந்தே நமக்கு கற்பித்திருக்கிறார்கள். ஆனால் இன்று இப்பழக்கம் மறைந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பான இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நமக்கு ஒரு காவல் தூதர் இருப்பதை மறந்து விடுகின்றோம்.
வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று கொண்டு கடவுளை இடையறாது போற்றித் துதித்து கொண்டிருப்பவர்கள்.
அவர்கள் பாடுகின்ற துதி பாடலைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தூயவர் தூயவர் தூயவர்!
வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்!
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன! உன்னதங்களிலே ஓசான்னா !ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் !உன்னதங்களிலே ஓசான்னா !
என்று வானதூதர் களோடு இணைந்து தந்தையை பாடி புகழ்கிறோம்.
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் அக்டோபர் இரண்டாம் நாளை காவல் தூதர்களின் நாளாக குறிப்பிட்டுள்ளார்.
உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். என்று
திருப்பாடல்கள் 91:12 கூறுகிறது.
'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்று புனித
மத்தேயு நற்செய்தியில் கூறுகிறார்.
இவ்வாறாக வல்லமை நிறைந்த இறை பணியை வானதூதர்கள், விண்ணகத்தின் திறவுகோல்களாக!
வானக படைவீரர்களாக!
பாதுகாப்பாளர்களாக !குணமளிப்பவராக ! இறந்தோரை விண்ணகம் சேர்ப்பவராக! இறை செய்தியை மக்களுக்கு அறிவிப்பவராக!
உடன் வழி நடப்பவர்களாக! தங்களின் பணியை விண்ணக பிரசன்னத்தில் இருந்துகொண்டு இம்மண்ணகத்தில் தங்கள் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
சிறுவயது முதல் நமக்கு கற்பிக்கப்பட்ட நமது காவல் தூதரை நாம் நினைவு கூறுகின்றோமா?
நமது வானதூதர்களோடு உரையாடுகிறோமா? சிந்திப்போம்!
நமக்குள் ஒருவராக இருந்து நம்மை அனுதினமும் வழிநடத்தும் வானகத் தூதர் களோடு நமது உள்ளத்தின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் அறிந்து இறை விருப்பத்தை நம்மில் செயல்படுத்த நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் வானதூதர்களின் உடனிருப்பை உணர்வோம்! அவர்களோடு இணைந்து நமது விவேகம் நிறைந்த வாழ்வால் இறைவனைப் புகழ்வோம்!
வானதூதர்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்!
பதிலளிநீக்குஎன் கால் கல்லின் மேல் மோதாமல் தங்கள் கைகளில் என்னை என்றும் தாங்கி வழிநடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆவர்களின் உடனிருப்பை அறிந்துள்ளேன். உங்கள் அனைவரோடும் அவர்கள் தொடர்ந்து உடனிருக்க வேண்டுகிறேன். நன்றி.
பதிலளிநீக்குThanks
பதிலளிநீக்கு