நாம் அனைவரும் தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம்.
இறைவனைச் சார்ந்து வாழக்கூடிய அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாளில் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் பவுலடியார் மக்களிடம் காணப்படக்கூடிய வெளிவேடத்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் வெளிவேடத்தன்மையை காட்டிலும் உள்ளார்ந்த மாற்றமே சிறந்தது என வெளிப்படுத்துகிறார். இந்த உள்ளார்ந்த மாற்றத்தை நமக்கு உணர்த்துவது தூய ஆவி அந்த தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம் என்பதை கலாத்திய நகர மக்களுக்கு வெளிப்படுத்தும் வண்ணமாக கடிதத்தை எழுதுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு யூதர்களிடத்தில் காணப்பட்ட "தாங்கள் மட்டுமே மேலானவர்கள்! மற்றவர்கள் எல்லோரும் தங்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறார்.
சட்டத்தின் பெயரால் அவர்கள் மக்களை குற்றவாளிகள் என தீர்ப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களோ சட்டத்தை கடைபிடிப்பது இல்லை. அவர்கள் பேசுவது ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவர்களின் செயல்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்பதை இயேசுவின் இன்றய நற்செய்தி வாசகத்தின் வழியாக சுட்டிக்காட்டுகிறார். தங்களை சுட்டிக்காட்டுகிற இயேசுவின் தன்மையை ஏற்றுக்கொள்ள இயலாத அவர்கள் எங்களை இழிவு படுத்துகிறீரா?என்றுகேள்வி எழுப்பும் போது இயேசு அவர்கள் செய்யக்கூடிய செயல்களை அழுத்தமாக சுட்டி க்காட்டுகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் நாம் செய்வது சரி மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற மனநிலையோடு பல நேரங்களில் அடுத்தவர்களை நோக்குகிறோம். எப்போதுமே இந்த உலகத்தில் ஒருவர் சரி என்று சொல்லக் கூடிய ஒவ்வொன்றையும் தவறு எனவும் சொல்ல முடியும். தவறு என்று சொல்லக்கூடிய ஒவ்வொன்றும் சரி எனவும் சொல்லப்படும்.
ஒவ்வொருவரும் தாங்கள் செய்கின்ற செயல்களை அவர்களின் மனநிலை மற்றும் சூழலின் அடிப்படையில் அவர்கள் செய்கிறார்கள். பல நேரங்களில் மனமானது " இது தவறு. இதை செய்யாதீர்கள்" என உணர்த்துகிறது. அப்படி உணர்த்தக்கூடிய மனதின் குரலை தூய ஆவியின் குரலாக பலர் காண்கின்றனர். பலர் பல நேரங்களில் தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுப்பதில்லை. தங்கள் விருப்பப்படி செயல்படுகிறார்கள். ஆனால் இயேசு இன்றைய நாளில் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்றை மட்டுமே.இந்த உலகத்தில் நான் செய்வது மட்டுமே சரி நீங்கள் எல்லாம் தவறு செய்தவர்கள் என சுட்டிக் காட்டி மற்றவர்களை அடிமைப்படுத்தக்கூடிய தன்மையை விட்டொழிக்க அனைவரையும் அழைக்கின்றார். யூதர்களிடத்தில் காணப்பட்ட தாங்கள் மட்டுமே மேலானவர்கள் மற்றவர்களெல்லாம் கீழ் என்ற எண்ணத்தை இயேசு உடைத்தெறிய கூடிய முயற்சியில் ஈடுபடுகிறார்.அப்படி என்றால் தவறு செய்தவர்களை தண்டிக்க கூடாதா? என்ற அடிப்படையில் நோக்கும் பொழுது இயேசு தவறை சுட்டிக் காட்டினார். இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்திலும் கூட தவறு என்று நமக்கு தெரிவதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கக்கூடிய தூய ஆவியானவரின்குரல் அதாவது மனசாட்சியின் குரலுக்கு ஒவ்வொருவரும் செவி கொடுக்க வேண்டும். நான் செய்ய நினைக்கக் கூடிய ஒரு செயல் சரிதானா? என நாம் முதலில் யோசித்து பின்னர் செயல்படுத்த வேண்டும். இதே செயலை நமக்கு ஒருவர் செய்தால் நாம் அதை எப்படி ஏற்றுக் கொள்வோம்? என்ற கேள்வியை எப்போதும் நமக்குள் எழுப்பி பார்க்க வேண்டும்.
அப்படி கேள்வியை எழுப்பி பார்த்து நாம் ஒரு செயலைச் செய்ய முயலும்போது அச்செயல் கண்டிப்பாக நல்ல செயலாக அமையும். அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று நமது மனசாட்சியின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். பவுல் அடியார் கூறுவது போல நாம் அனைவரும் தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம். இந்தத் தூய ஆவியானவர் தான் மனசாட்சியின் குரல் வழியாக நம்மோடு உரையாடுகிறார். அவரின் குரலுக்கு செவி கொடுத்து அநீதியை எதிர்க்கக் கூடியவர்களாகவும் எப்போதும் அனைவரும் சமமானவர்கள் என்று எண்ணக் கூடியவர்களாகவும் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயல் அவரவரின் சூழல் மற்றும் எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதை உணர்ந்தவர்களாய் நமது மனசாட்சியைை வாயிலாக வெளிப்படும் தூய ஆவியாரின் குரலுக்கு செவிமடுத்து வாழ உள்ளத்தில் உறுதியை ஏற்றவர்களாய் இயேசுவின் பின்னே பயணம் செய்வோம்.
நமக்குள் இருக்கும் தூய ஆவியார் ஆம் நமது மனசாட்சியின் குரல் வழியாக நல்லவரோடு இணைந்திடுவோம் என்ற கருத்து அனைவருக்கும் உற்சாகமூட்டுகிறது! தம்பி சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு