தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய நாளில் திருஅவை உருவான பின்னணியை சிந்தித்து பார்க்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்றைய நாளில் திருஅவை உருவான பின்னணியை சிந்தித்து பார்க்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இன்று நமது அன்னையாம் திருஅவை, திருத்தூதர்களான சீமோனையும் யூதாவையும் நினைவு கூறுகிறது. முதல் வாசகத்தின் வழியாக நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்ட ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்ற செய்தியானது ஆழமாக வலியுறுத்தி கூறப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தன்னுடைய பணிக்காக திருத்தூதர்கள் பன்னிருவரை பெயரிட்டு அழைத்து அவர்களை தன் பணியில் இணைத்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். இயேசுவின் செயல்களை கண்டு அவரால் நலம் பெற்ற பலரும் அவருடைய செயல்களை கண்டு ஈர்க்கப்பட்ட பலரும், அவரை நோக்கி நாடி வருவதையும் அவரைத் தொட விரும்புவதையும் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு திருதூதர்கள் வழியாக கட்டமைக்கப்பட்ட கட்டிடம் நாம் என குறிப்பிடப்படுகிறது.
நாம் அனைவரும் திருஅவையோடு இணைந்து செயல்பட கூடிய ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆனால் நமது குடும்பங்களில் நாம் இன்று எவ்வாறு இருக்கிறோம்? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம். குடும்பம் என்பது ஒரு குட்டி திருஅவை என்பார்கள். இன்று நமது குடும்பத்தில் குடும்ப ஜெபம் இருக்கிறதா? எப்போதும் அருள்பணியாளர்கள் குடும்பமாக இணைந்து செபியுங்கள் என்று கூறுவார்கள். ஜெபம் எப்படி குடும்பத்தை உயர்த்தும்? என்ற எண்ணம் எழுகிறது. குடும்பத்தில் அமர்ந்து பலர் இணைந்து ஜெபிப்பதால் எத்தகைய மாற்றத்தை காண முடியும்? என்ற கேள்வி இன்று இயல்பாகவே எழுந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெபம் என்பது அமைதியை உருவாக்கும் ஒரு செயல். ஜெபம் என்பது நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வதற்காக ஒதுக்கப்பட கூடிய நேரமாகிறது. பொதுவாக கூறுவார்கள், நாம் வேண்டும் போது இறைவன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாம் மௌனத்தில் இருக்கும்போது தான் இறைவனது குரலை நாம் கேட்க முடியும் என்று கூறுவார்கள். குடும்ப ஜெபம் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியது . எப்போதும் பேசிக்கொண்டே, எப்போதும் சண்டை சச்சரவுகள் செய்து கொண்டே, எப்போதும் நாடகங்களைப் பார்த்து கொண்டு காலத்தைக் கழிக்கக்கூடிய நாம், சில மணி நேரம் அல்லது சில நிமிடங்களாவது இறைவனின் முன்னிலையில் அனைவரும் இணைந்து செபிப்பது தான் உங்களுக்குள் நீங்கள் அமைதியை
உணர்ந்துகொள்ள கூடிய ஒரு வழி என்பதை குடும்ப ஜெபம் எப்போதும் வலியுறுத்துகிறது.
தொடக்கத் திருச்சபையில் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்களும் அன்னை மரியாவும் மாடியறையில் இணைந்து செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இயேசு தனிமையில் கடவுளிடம் ஜெபித்து கொண்டிருந்தார் என்பதை விவிலியத்தின் மூலம் அறியலாம். இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்தார் என்பதையும் விவிலியத்திலிருந்து நாம் அறியலாம். ஆனால் நாம் செபிக்கின்றோமா? நமது குடும்பத்தில் ஜெபம் என்பது எவ்வாறு உள்ளது? செபத்திற்கும் குடும்பத்திற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? என்ன இணைப்பு இருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்குள் எழுமாயின் குடும்பங்களில் ஒற்றுமையையும் அமைதியையும் பொறுமையையும் உருவாக்குவது இந்த ஜெபங்கள். குடும்ப ஜெபம் எப்போதுமே குடும்பத்தை நல்வழிப்படுத்தும் என்று கூறுவார்கள்.நாம் நமது குடும்பத்தில் செபிக்கின்றோமா? நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அண்டைவீட்டார் யார் என அறியாத மக்களும் இருக்கிறார்கள். எப்போதும் எல்லோருடனும் இணைந்து இருந்த நாம் இப்போது தனித்திருப்பதே நல்லது என்று எண்ணுகிறோம்.
என்னுடைய களப்பணி தளமான இலட்சுமணன்பட்டி அந்த கிராமத்தில் ஒருநாள் அந்த கிராமத்தில் இருந்த ஒருவர் விபத்துக்குள்ளாகி எதிர்பாராத விதமாக கால் அடிபட்டது. அன்றைய நாள் முழுவதும் அந்த ஊர்மக்கள் காலடிப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே அமைதியை பின்பற்றினார்கள். ஆனால் இது மிகவும் சாதாரண செயல் போல தோன்றினாலூம் பரபரப்பான இந்த உலகத்தில் தன்னுடைய வீீீடு, தன்னுடைய குடும்பம் என ஓடிக் கொண்டிருக்கக்
கூடியவர்கள் மத்தியில் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக தோன்றினார்கள்.
தொடக்க காலத்தில் திருஅவை கிறிஸ்தவத்தைப் பற்றி இயேசுவின் வாழ்க்கை முறையையும் சமூகத்தில் விதைக்க முயன்றபோது பலர் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளானார்கள். பலர் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இயேசுவால் அழைக்கப்பட்ட 12 திருத்தூதர்களும் இயேசுவைக் பின்தொடர்ந்த பலரும் இயேசுவைப்பற்றி அறிவித்ததனால் கொல்லப்பட்டார்கள். இந்த கொல்லப்பட்ட திருத்தூதர்கள், இயேசுவின்பால் நம்பிக்கை கொண்டவர்களின் இரத்தத்தில் உருவானதுதான் இந்த திருஅவை. இந்தத் திருஅவை விரைவில் அழிந்து போகும் என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று வியந்து நிற்கிறார்கள். காலங்கள் பல கடந்தும் இந்த திருஅவை இன்றும் நிலைத்து நிற்கிறது. இன்று திருஅவை உலகிற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்று திருஅவையை எளிதாக விமர்சிக்க முடியும். ஆனால் திரு அவையை உருவாக்கியவர் இறைவன். இந்த இறைவனுடைய சாயலும் மதிப்பீடுகளும் இந்த திருஅவையில் பல மனிதர்கள் வழியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுதான் இன்றும் இந்தத் திருஅவையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
திருஅவை என்றாலே அதில் முக்கியமானவர்கள் மக்கள். மக்களோடு இணைந்து இருப்பது தான் திருஅவை. இன்று திருஅவை என்பது கிறிஸ்துவின் மதிப்பீடுகளின் படி மக்களை வாழ தூண்டக் கூடிய ஒன்றாகும். இந்தத் திருஅவை எப்போதும் இணைந்திருக்க வலியுறுத்துகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்டது போல கிறிஸ்துவோடு இணைந்து உள்ள நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இருக்க ஒவ்வொரு நாளும் அழைப்பு தரக்கூடியதுதான் இந்த திருஅவை. அந்தக் குடும்பத்தில் எந்தவிதமான சண்டைகளும் சச்சரவுகளும் வந்துவிடாமல் இருப்பதற்காகவும், கருத்துவேறுபாடுகள் ஏற்படுமாயின் அதனை சரி செய்து கொள்வதற்காகவும் நம்மை சுய ஆய்வு செய்வதற்கு தேவையான பணியை ஜெபம் என்பது செய்யும். அந்த ஜெபத்தை எப்போதும் செய்யுங்கள். அமைதியில் அமருங்கள். இறைவனது குரலுக்கு செவி கொடுங்கள் என திருஅவை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும் வலியுறுத்துகிறது. இணைந்து ஜெபிப்பது வாயிலாக உருவான இந்த திருஅவையில் என்றும் நாம் இணைந்து ஜெபிக்கவும், நாம் அனைவரும் இந்த ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாக, நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். நம்மிடம் உயர்வு தாழ்வு இல்லை, என்பதை உணர்ந்தவர்களாக மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப,
பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று நம் நினைவு கூரக்கூடிய சீமோன் யூதா என்ற திருத்தூதர்களைப் போன்று பல நபர்கள் திருச்சபையின் வளர்ச்சிக்காக தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள். அவர்களது வாழ்வை கருத்தில்கொண்டு நமது வாழ்வு பிறருக்கு வாழ்வை வழங்கக் கூடியதாக மாற்றிக்கொள்ள இறையருளை வேண்டி தொடர்ந்து இணைந்து ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
செபத்தின் வழியாக ஒரே குடும்பமாக ஒன்றிணைவோம்! நமது அன்பு செயல்களால் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்போம்!
பதிலளிநீக்குஅனைவரையும் ஒன்றிணைக்கும் தம்பி சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு👍 bro..
பதிலளிநீக்கு