திருப்பலி தலைப்பு : உறவில் மலரும் அன்பியம்
முன்னுரை
இறையேசுவில் அன்பார்ந்தவர்களே
தூய குழந்தை தெரசாள் அன்பிய ஆண்டுவிழாவை மகிழ்வோடு சிறப்பிக்கும் இந்நாளில் அன்பிய திருப்பலியில் கலந்து கொண்டு செபித்து இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். இன்று நாம் “உறவில் மலரும் அன்பியம்” என்னும் தலைப்பில் சிந்திக்க அழைக்கபடுகின்றோம். வளர்ந்து வரும் ஊடக உலகில் நாம் நம்மையே மறந்து வாழ்கிறோம். அதாவது நமது வாழ்வின் அடிப்படையான உறவோடு வாழ்தல் என்பதனையே மறந்து வாழ்கிறோம். உறவுகள் இல்லாமல் நாம் வாழ்வது என்பது கல் மண் போன்று வாழ்வதற்கு சமம். கடவுள் மனிதனை கூடி வாழவே அழைத்திருக்கிறார். தொடக்கதிருஅவையில் சீடர்கள் கூடி செபிப்பதிலும் அப்பம் பிடுவதிலும் ஒன்றாய் இருந்தனர். ஒருவரோடு பழகி உறவோடு வாழ்ந்தனர். உறவுதான் அன்பிய வாழ்விற்கு அடிப்படை ஆகும். ஆனால் இன்று பணம், தொலைகாட்சி. அலைபேசி, பொறாமை, நான் என்ற எண்ணம் நம்மை நம் அடுத்திருப்பவரிடம் இருந்து பிரித்து பகைமை, சண்டை போன்ற தீய பண்புகளில் வளரச் செய்கிறது. அன்பியமாக வாழ அழைக்கப் பட்டுள்ள நாம் உறவோடு ஒருவரை ஒருவர் அன்பு செய்து விட்டுகொடுத்து பகிர்ந்து வாழ கடமைபட்டுள்ளோம். பல வேளைகளில் இவற்றிலிருந்து தவறிய நேரங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டி இப்பலியில் மன்றாடுவோம். அதே வேளையில் நம் அன்பியத்திலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்காகவும் இப்பலியில் சிறப்பாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக