இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுவோர் கண்டடைவீர்கள் என இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளை நாம் வாசிக்கலாம். மேலும் நள்ளிரவில் வீட்டிற்கு வரக் கூடிய நண்பனின் உவமையைக் கூறி நாம் கேட்பதை நமது தேவைக்கு முன்பாகவே இறைவன் நிறைந்திருக்கிறார் இவ்வுலக வாழ்க்கையில் இருக்கக்கூடிய இவ்வுலக மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுக்கு நல்லதை தர என்னும் போது நம்மை எல்லாம் படைத்து பராமரிக்கும் அன்பு இறைவன் நாம் விரும்புவதை விட அதிகமாகவே நம்மீது அன்பு கொண்டுள்ளவர் நம் தேவைகளை நிறைவு செய்வார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால் கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வார்த்தைகளை வாசிக்க கேட்கும் பொழுது உள்ளத்தில் எழுந்த ஒரு எண்ணம் தட்டாதே திறந்திருக்கிறது என அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஒரு புத்தகமே நினைவுக்கு வந்தது .
அந்தப் புத்தகத்திலே அப்துல் ரகுமான் அவர்கள் இவ்வாறாக குறிப்பிடுவார் நாம் திறக்கப்படாத கதவுகளை தட்டி கொண்டே இருக்கிறோம். திறந்து இருக்கக்கூடிய வாசல்களை கண்டுகொள்வதில்லை. திறந்திருக்கும் வாசலை தேடி நாம் செல்ல வேண்டும். அதாவது திறந்து இருக்கக் கூடிய வாசல்கள் என்பது வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும் என அவர் கூறுகிறார் .
நாம் நமது வாழ்வில் எதை தேடிக்கொண்டிருக்கிறோம்? எதை தட்டிக் கொண்டிருக்கிறோம்? எதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்? என சிந்திக்க இன்றைய நாட்களில் அழைக்கப்படுகிறோம்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஒரு நாட்டின் சுதந்திரமாக இருக்கலாம், அல்லது உரிமையாக இருக்கலாம், அல்லது நமது தேவையாக இருக்கலாம் அனைத்தையும் கேட்டு தான் பெற்றிருக்கிறோம். கேட்காமலே அனைத்தும் கிடைப்பதல்ல, கேட்கக்கூடிய ஒவ்வொருவருமே பெற்றுக்கொள்கிறார்கள்.
இயேசுவினுடைய மண்ணக வாழ்வை நாம் நினைவு கூறும் பொழுது இயேசு காலையும் மாலையும் தனிமையில் இறைவனிடம் ஜெபித்தார் என விவிலியத்தில் பல இடங்களில் நாம் வாசிக்கின்றோம்.
நாமும் இன்று பல நேரங்களில் இறைவனிடம் ஜெபிக்கிறோம். நமது ஜெபம் என்பது எவ்வாறு அமைந்திருக்கிறது? என்பதை இன்றைய நாளில் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நமது ஜெபங்கள் பெரும்பாலும் தேவைக்காக இருக்கிறது. மேலும் நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இறைவனிடம் ஜெபம் என்ற பெயரில் கொடுக்கல்-வாங்கல் முயற்சியில் ஈடுபடுகிறோம். நான் ஒன்றைத் தருகிறேன் பதிலுக்கு நீ ஒன்றை தரவேண்டும் எனக் கேட்பது அல்ல ஜெபம்.
ஜெபம் என்பது உண்மையான ஒரு உரையாடல். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். இந்த உரையாடல் மன அமைதியை உருவாக்குவது. இந்த உரையாடல் நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கிறது. இந்த உரையாடல் சமூகத்தில் மனித நேயம் கொண்ட இறையாட்சியின் இயேசுவின் உண்மை சீடர்களாக நம்மை இவ்வுலகத்தில் வலம் வர வைக்கிறது.
தட்டாதே திறந்திருக்கிறது என்ற புத்தகத்தின் வழியாக அப்துல் ரகுமான் கூறுவது போல இருக்கக் கூடிய வாசலை நோக்கி நம்மில் பலர் பல நேரங்களில் சென்று கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் இயேசு இன்றைய நாளில் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வார்த்தைகள் வழியாக இச்சமூகத்தில் யாருக்கெல்லாம் எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறது அங்கெல்லாம் அதனை உரிமையை பெறுவதற்காக தட்டிக் கொண்டே இருங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் தேடிக்கொண்டே இருங்கள் என்ற செய்தியை வழங்குகிறார்.
வாய்ப்புகளைப் பயன்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் நாம் முன்வரவேண்டும். வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றால் நாம் ஜெபத்தின் வழியாக மன அமைதியில் சமூகத்திற்கான நீதிக்கான தேவைகளை உணர்ந்து கொள்ள முயல வேண்டும். இத்தகைய ஜெபத்தின் வழியாக இயேசு சமூகத்தின் தேவைகளை உணர்ந்தவராய் இருந்ததன் காரணமாகவே அந்த நீதிக்காகவும் உண்மைக்காகவும் சமூகத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்தார். இறுதியில் அந்த உண்மைக்காகவும் நீதிக்காகவும் உயிர்துறந்தார்.
இன்று அந்த இயேசுவை பின் செல்லக்கூடிய நாம் ஜெபம் என்பது நம்மை நல்வழிப் படுத்தவும் ஒருமுகப்படுத்தவும் உதவும் கருவி என்ற ஜெபத்தின் உண்மை தன்மையை உணர்ந்தவர்களாக தொடர்ந்து இச்சமூகத்தின் நன்மைக்கான தெளிவுகளை பெற்றுக்கொள்ள தொடர்ந்து நாம் ஜெபத்தின் வழியாக இறைவனின் குரலைக் கேட்பதற்காக தட்டிக் கொண்டே இருப்போம் திறந்திருக்கும் கதவுகளை மட்டும் நம்பி இல்லாமல் திறக்கப்பட வேண்டிய கதவுகளை நோக்கி.....
தட்டிக்கொண்டடே இருப்போம்...திறக்கப்பட வேண்டிய கதவுகளை நோக்கி...
பதிலளிநீக்குஅருமையான பதிவு சகோ.. 👍