மன்றாட்டுகள்
1) அன்புத்தந்தையே இறைவா
உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அனைவரையும் உம்பாதம் அர்பணிக்கிறோம். உம் பணியை தங்கள் வாழ்வாக்;கி, இறைமக்களை அன்பின் சமூகமாக கட்டியெழுப்பவும், உம் அன்புக் கட்டளைகளை தங்கள் வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
2) தாயும் தந்தையுமான இறைவா!
அன்பிய ஆண்டுவிழா நாளாகிய இன்று உம்மை தேடி வந்திருக்கும் எம் அன்பிய மக்களை நிறைவாக ஆசீர்வதியும். எவ்வாறு எம் அன்னையாம் கன்னிமரியாள் உம்மோடு ஒன்றித்து, உம் திருவுளத்தை நிறைவேற்றினாரோ, அதேப்போன்று எம்மக்களும் ஒற்றுiiயிலும், சமாதானத்திலும் ஒன்றித்திருந்து உம் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3) ஞானத்தின் ஊற்றே இறைவா!
சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள என்றவரே, எம்கிராமத்தில் உள்ள சிறுகுழந்தைகள் அனைவரும் ஞானத்திலும், அன்பிலும், ஒழுக்கத்திலும் வளர்ச்சி பெற்று விளங்கவும், என்றும் உம் அன்பு பிள்ளைகளாக வளரவும் உம் வல்லமையை இவர்கள் மேல் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4) நலம் அருளும் நல்ல ஆயனே இறைவா!
உடல்நலக் குறைவினால் மருத்துவமனையிலும், தங்கள் இல்லங்களி;லும் இருந்து சிகிச்சை பெறும் ஓவ்வொரு நல்ல உள்ளங்களுக்காவும் உம்மிடம் மன்றாடுகிறோம். உமது அன்புக் கரங்களால் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5) அன்பு இறைவா
எங்கள் ஊரை நிறைவாக ஆசீர்வதியும், அனைவரும் உடல் உள்ள சுகம் பெற்று, எங்கள் கடைமைகளை சரிசரச் செய்யவும், ஒற்றுமையுடன் தொடர்ந்து வாழவும், செய்கின்ற தொழில்களில் வெற்றி காணவும், எமது பங்கின் வளர்ச்சியில் பங்குதந்தையுடன் முழுமையாக ஒத்துழைக்கவும், எடுத்துகாட்டான மக்களாக வாழவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக