வியாழன், 15 அக்டோபர், 2020

தலைப்பு : ஒற்றுமையில் மலரும் அன்பியம்

 தலைப்பு : ஒற்றுமையில் மலரும் அன்பியம்


முன்னுரை

இறையேசுவில் அன்பார்ந்தவர்களே

தூய பவுல் மற்றும் தூய அன்பிய ஆண்டு விழாவை மகிழ்வோடு சிறப்பிக்கும் இந்நாளில் அன்பிய திருப்பலியில் கலந்து கொண்டு செபித்து இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். இன்று நாம் “ஒற்றுமையில் மலரும் அன்பியம்” என்னும் தலைப்பில் சிந்திக்க அழைக்கபடுகின்றோம்.கூடி வாழ்வதிலேதான் குதூகலம் உண்டு. மனிதன் ஒரு சமூக பிராணி. அவன் சார்ந்து வாழ்வபன். பிறரோடு இணைந்து ஒற்றுமையில் வாழ்வதில் தான் மனித வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்கிறது. கடவுள் மனிதனை கூடி வாழவே அழைத்திருக்கிறார். தொடக்கதிருஅவையில் சீடர்கள் கூடி செபிப்பதிலும் அப்பம் பிடுவதிலும் ஒன்றாய் இருந்தனர். ஒருவரோடு பழகி ஒற்றுமையோடு வாழ்ந்தனர். ஓற்றித்து வாழ்வதுதான் அன்பிய வாழ்விற்கு அடிப்படை ஆகும். ஆனால் இன்று பணம், தொலைகாட்சி. அலைபேசி, பொறாமை, நான் என்ற எண்ணம் நம்மை நம் அடுத்திருப்பவரிடம் இருந்து பிரித்து பகைமை, சண்டை போன்ற தீய பண்புகளில் வளரச் செய்கிறது. அன்பியமாக வாழ அழைக்கப் பட்டுள்ள நாம் ஒற்றுமையோடு ஒருவரை ஒருவர் அன்பு செய்து விட்டுகொடுத்து பகிர்ந்து வாழ கடமைபட்டுள்ளோம். பல வேளைகளில் இவற்றிலிருந்து தவறிய நேரங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டி இப்பலியில் மன்றாடுவோம். அதே வேளையில் நம் அன்பியத்திலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்காகவும் இப்பலியில் சிறப்பாக செபிப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...