ஒரு பேச்சாளர் ஒருவர் மிகவும் ஆர்வத்துடன் மதுப்பழக்கத்திலிருந்து மக்கள் அனைவரும் விடுதலை பெறவேண்டும் எனும் தாகத்துடன், உற்சாகத்துடன் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். "இந்த ஊரில் இருக்கின்ற பெரும் பணக்காரர்கள் மதுக்கடை காரர்களாக இருக்கிறார்கள்". உங்களின் உழைப்பு அனைத்தும் மதுக்கடைக்காரர்களால் சுரண்டப்படுகிறது. உங்கள் பணம் அனைத்தும் உங்களுக்கு பயன்படாமல் மதுக்கடைக்காரர்களை கோடீஸ்வரராக்குகிறது. எனவே இந்த மதுப்பழக்கத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை நலமாக வாழுங்கள்" என்று உரையாற்றினார். அவர் உரையாற்றி முடிந்ததும் மக்களை சந்திக்கும் பொழுது, "இனி நீங்கள் இந்த மதுக்கடைகளை ஒழித்து விட்டு இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள் தானே! இந்த குடிப்பழக்கம் இல்லாத ஊராக விரைவில் நமது ஊர் மாற வேண்டும்" என்று அவர்களிடம் கூறினார். அப்போது தம்பதியர் இருவர் அவரிடம், உங்களது கருத்துக்கள் எங்களுக்கு மிகப் பல தெளிவுகளை கொடுத்திருக்கின்றன. நாங்கள் இவரும் என்ன தொழில் துவங்கலாம்? இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் ஈட்டித்தரும் தொழில் எது? என்று தெரியாமல் இருந்தோம். இன்று உங்களின் உரை மதுக்கடையின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்பதையும் எங்களுக்கு உணர்த்தியது. எங்களுக்கு நல்லதொரு லாபகரமான தொழிலுக்கு வழிகாட்டியதற்கு உங்களை பாராட்டுகிறோம்! என்று கூறி விட்டுச் சென்றார்கள்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு வெளிப்புற தூய்மை பற்றியும் உட்புற தூய்மை பற்றியும் கூறுகிறார். வெளிப்புற தூய்மை கண்களுக்கு இனிமையாக தெரியும். ஆனால் இயேசுவோ வெளிப்புற தூய்மையை விட உட்புறப் தூய்மையே சிறந்தது, அதாவது உள்ளத்தின் தூய்மையே சிறந்தது என்று கூறுகிறார்.
இன்றைய பேச்சாளரின் நிகழ்வில் அந்த ஊர் மக்கள் அவரது உரையினை மேலோட்டமாக மட்டுமே செவிமடுத்தவர்களாக இருந்தார்கள். அவரது உரையின் உள்நோக்கத்தை கண்டுணர இயலாதவர்களாக மாறிவிட்டார்கள்.
நாம் எத்தனையோ காரியங்களை வெளிப்புறத்தில் பேசலாம். ஆனால் உள்ளார்ந்த விதமாக எத்தனை செயல்பாடுகளை நாம் முன்னெடுக்கின்றோம்? எத்தகு நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என சிந்திப்போம்.
நமது இந்தியத் திருநாட்டில் கூட நமது பிரதமர் மோடி அனைத்து மக்களின் வங்கி கணக்கிலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக பணம் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த நிமிடம் வரை என் ஊரில் உள்ள யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை. இது ஒரு வெளிப்புறத்தை மட்டுமே மையமாகக் கொண்ட வார்த்தைகளாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பல மணி நேரம் பலருக்கு உபதேசம் செய்கின்ற நபர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கின்ற ஏழை மக்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஒரு சிறு உதவியும் செய்திட யோசிப்பதை, தயங்குவதை, பல நேரங்களில் நாம் காண்கிறோம். இத்தகையோரின் வாழ்வானது வெளிப்புறத்தில் மட்டுமே அழகுபடுத்துகின்ற செயல்பாடாக அமைகின்றது. நமது வாழ்வில் நாம் எத்தகைய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று சிந்திப்போம்.
நமது உடலில் கூட வெளிப்புறத்தில் ஏற்படுகின்ற காயங்கள் விரைவில் ஆறிவிடும். ஆனால் உடலின் உட்புறத்தில் ஏற்படுகின்ற காயங்கள் மிக கவனமாகவும் நுட்பமாகவும் சரியாகவும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே குணமாகும் என்பதை நாம் அறிவோம். வெளிப்புறத்தை விட உட்புறமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது உடலின் மொழிகள் கூட வெளிப்படுத்துகின்றன. எனவே நமது வாழ்விலும் வெளிப்புற ஆடம்பரமான வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும், பகட்டான வெளி அலங்காரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து நமது உள்ளத்தில் எழும் நல்ல எண்ணங்களுக்கும், நல் முயற்சிகளுக்கும் உயிர் கொடுத்திட உட்புற உள்ளத்தின் தூய்மையின் வழியாக உள்ளத்தில் நம்மோடு உரையாடும் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்து அதனை வாழ்வில் கடைபிடிக்கும் உன்னதமானவர்களாக வாழ உறுதி ஏற்றவர்களாய் இறையருளில் இணைந்திடுவோம்.
நீங்களே சொல்லுங்க... உங்கள் மாற்றம் உள்ளத்திலா? வெளியிலா?
இப்படி ஒரு குழப்பத்திலே மாட்டி விட்டுட்டீங்களே!
பதிலளிநீக்குஇப்படி ஒரு குழப்பத்திலே மாட்டி விட்டுட்டீங்களே!
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குMy change is in my heart not in my body thank you for explaining it
பதிலளிநீக்குஎன்னுடைய மாற்றம் உள்ளத்தில் அண்ணா
பதிலளிநீக்குஎன்னுடைய மாற்றம் உள்ளத்தில் அண்ணா
பதிலளிநீக்குஎன்னுடைய மாற்றம் உள்ளத்தில் அண்ணா
பதிலளிநீக்கு