வெள்ளி, 9 அக்டோபர், 2020

உங்களால் முடியுமா...? (10.10.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என குறிப்பிடுகிறார்.  இறைவனது வார்த்தைகளைக் கேட்டு அதன் படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது நாம் பேறு பெற்றவர்களாக மாறுகிறோம் என்ற செய்தியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக நாம் பெறுகிறோம். 
இறை வார்த்தைகளாக புனித பவுல் கலாத்தியர் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நீங்கள் அனைவரும் ஒன்றானவர்கள். இனி உங்களிடையே யூதர் என்றோ கிரேக்கர் என்றோ உரிமைக் குடிமக்கள் என்றோ அடிமைகள் என்றோ வேறுபாடுகள் இல்லை என குறிப்பிடுகிறார். 

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயற்கை தன்னுடைய செல்வங்களையெல்லாம் நம்மிடையே பகிர்ந்து கொடுக்கிறது.

பகலுக்கு சூரியனை கொடுத்த இயற்கை....
 இரவுக்கு நிலவையும் நட்சத்திரங்களையும் கொடுத்திருக்கிறது.

 மயிலுக்கு அழகைக் கொடுத்த இயற்கை....
 குயிலுக்கு இனிய குரலை கொடுத்திருக்கிறது .

மலையிடம் இருப்பது கடலிடமில்லை....
கடலிடம் இருப்பது மலையிடமில்லை.

 ஆணிடம் இருப்பது பெண்ணிடம் இல்லை....
 பெண்ணிடம் இருப்பது ஆணிடம் இல்லை....

மீன்களுக்கு கால்கள் இல்லை...
 விலங்குகளுக்கு சிறகுகள் இல்லை.

 அது இருந்தால் இது இல்லை....
 இது இருந்தால் அது இல்லை....

 இதுதான் வாழ்க்கையின் நியதி. 
இதனை அறியாது மனித இனம் பல நேரங்களில் நான் வேறு... நீ வேறு... என்று தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்றைய  வாசகத்தின் வழியாக கடவுள் கூறுகிறார் கிறிஸ்துவால் நீங்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளீர்கள்.   கிறிஸ்துவால் இணைக்கப்பட்டுள்ள நம்மிடையே வேறுபாடுகள் இல்லை, பிளவுகள் இல்லை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம்.

இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது இறைவன் கூறக்கூடிய வண்ணமாக நாம் அதிகம் பெற்றவர்களாக மாறுகிறோம்.

ஆனால் இன்றைய நவீன உலகத்தில் மனிதனின் போக்கு முற்றிலுமாக மாறி இருக்கிறது.  சமீபத்தில் நாளேடு ஒன்றில் வாசித்த வரிகள் ..

தங்கள் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அனைத்து இனங்களும் இணைந்து போராடுகின்றன .... ஆனால் மனித இனம் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பெரும்பாலான நபர்கள் தங்களை முன் நிறுத்துவதை மட்டுமே முதன்மையாக கொண்டு தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்து அதை மற்றவருக்கு பகிர்வதன் மூலம் மகிழ்வைத் தேடுகிறார்கள். ஆனால் இருப்பதை பகிரும்போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்கிறது விவிலியம். அடுத்தவருக்காக தன்னையே இழப்பது தான் உண்மையான தியாகம். இதுவே உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும். 

இந்த மகிழ்ச்சியை நாம் நம்முடையதாக மாற்றிக் கொள்ள நாம் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு உயர்வு தாழ்வு என்ற பாகுபாடுகளை எல்லாம் கடந்து மனிதன் என்ற முறையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய இயேசுவின் சீடர்களாக நாம் உருமாறி இறைவனது வார்த்தைகளை வாழ்வாக மாற்ற  வேண்டும். அப்போது நமது வாழ்வு அர்தமுள்ள  உண்மையான மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாழ்வாக மாறும். 

நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்.

உங்களால் இறைவார்த்தையை வாழ்வாக்க முடியுமா? 

கேள்வியை எழுப்பியுள்ளேன் பதிலை நீங்களே கூறுங்கள்......
 

10.10. 2020


3 கருத்துகள்:

  1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! இறையருள் இருந்தால் எல்லாம் நிறைவேறுவது உண்டு! சிந்திக்க தூண்டும் விதமான இன்றைய நாளின் கருத்துகளுக்கு சொந்தக்காரரானஅருட் சகோதரர் ஜெயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👏👏👏👏👏

    பதிலளிநீக்கு
  2. நன்று நன்று நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியரே! நல்ல கருத்துகளுக்கு நன்றி! உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  3. "எண்ணங்களை மனிதர் எண்ணலாம். ஆனால் எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்."
    -நீ.மொ.16:1
    இறைவார்த்தையை வாழ்வாக்க செபிக்கிறேன்.
    நன்றி சகோ.🙏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...