செவ்வாய், 3 டிசம்பர், 2019

எதன் மீது நமது அடித்தளத்தை கட்டி இருக்கிறோம். (5.12.2019)

அன்புக்கு உரியவர்களே

இன்றைய நாளில் நாம் எதன் மீது நமது அடித்தளத்தை கட்டி இருக்கிறோம் என்பது பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம், பல விதமான நற்செயல்களை நாம் கேட்கின்றோம். நாம் கேட்பதையும், பார்க்கக் கூடிய பல நல்ல செயல்களையும் நமது வாழ்வில் செயல்படுத்துகின்றோமா? என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.

 

செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை என்று கூறுவார்கள். அது போலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் பல நேரங்களில் கேட்கின்றோம். கேட்ட வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரே ஆண்டவரே என அழைப்பதால் நாம்

ஆண்டவருக்கு ஏற்ற மக்களாக மாற இயலாது. அவரின் வார்த்தைகளை எப்போது வாழ்வாக மாற்ற முயல்கிறோமோ அப்போது தான் நாம் பாறையின் மீது அடித்தளமிட்டவர்களாக உறுதியாக நிலைத்து நிற்க முடியும். எனவே இன்றைய திருப்பலியில் நாம் அனைவரும் இணைந்து நமது அடித்தளமானது எதன்மீது இடப்பட்டிருக்கிறது என்பது குறித்து சிந்திப்போம். பாறையின் மீது அடித்தளமிடப்பட்டவர்களாக உறுதியாக நிலைத்து இருந்து நற்செயல் புரிவதில் இயேசுவை வெளிகாட்ட உள்ளத்தில் உறுதி ஏற்றவர்கள் இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

பிறர் மீது அன்பு (4.12.2019)

அன்புக்குரியவர்களே 

திரையுலகில் இருக்கக்கூடிய ஒருவர் கூறினார். “ஏழைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டியது கடவுளுக்குத்தான்” என்றார். ஆனால் இயேசுவால் கவரப்பட்டு அவரைப் போலவே பிறரன்பு பணியை செய்த நம் புனிதை புனித அன்னை தெரசா அவர்கள் கூறுகிறார் “ஒரு ஏழை ஒருவன் பசியால் உயிர் விட்டால் அது கடவுளால் அல்ல உன்னையும் என்னையும் போன்றோர் அவனுக்கு உணவளிக்காமையால் தான் அது நிகழ்ந்தது” எனக் குறிப்பிடுகிறார். இன்று தன் குறைகளை விடுத்து மற்றவரின் குறைகளை பெரிதுபடுத்தி கூறுவதையே பலர் வாடிக்கையாகக் கொண்டு சுயநலம் கொண்ட மனிதர்களாக வாழும் நிலை  நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு செல்கிறது.

 

புரட்சிக்கவி பாரதிதாசன் கூறுகிறார் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோன்.” என்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள் நம்மை பிறர் மீது அன்பு கொண்டவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா ஆண்டவர் எல்லார் முகங்களில் இருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார் என குறிப்பிடுகிறார். இதனையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உடல் ஊனமுற்றோர் நலம் அடையச் செய்வதும், பார்வையற்றோருக்கு பார்வை வழங்குவதும், பேச்சாற்றல் இழந்தவருக்கு பேச்சாற்றலை தருவதுமான பல விதமான செயல்களை இயேசு செய்கிறார். அதோடு மட்டுமன்றி அடுத்தவரின் பசியை உணர்ந்தவராய் தன்னை பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய நிகழ்வையும் இன்றைய வாசகங்களில் நாம் காணலாம். எனவே இன்றைய நாளில் கண்ணில் காணக்கூடிய மனிதர்களுக்கு உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

 

அப்துல் கலாம் அவர்கள் கூறுவார் “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும்  தலைமுறை”என்று அவ்வார்த்தைகளை சற்று மாற்றி “வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் ஒரு தலைமுறையாவது” என்று சிந்தையில் நிறுத்துவோம். ஒவ்வொரு நாளும் தேவையில் இருக்கக்கூடிய யாராவது ஒருவருக்கு உதவி செய்ய முன்வருவோம். உதவி என்பது பொருளைச் சார்ந்தது மட்டுமல்ல மற்றவருக்காக நாம் நேரம் செலவிடும் நல்ல உள்ளத்தையும் சார்ந்தது. உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். அதற்கான அருளை இறைவனிடத்தில் வேண்டுவோம்.

 

திங்கள், 2 டிசம்பர், 2019

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)
அன்புக்குரியவர்களே 
எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு”. இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறிய வார்த்தை
இன்று நாம் அனைவரும் இணைந்து புனித சவேரியாரின் திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றியவர் இவர். “ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்ற இன்னாசியாரின் வார்த்தைகளால் கவரப்பட்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவராய் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நற்செய்தி பணியாற்றி பல உள்ளங்களை ஆண்டவர் இயேசுவை விதைத்தவர். 
    இன்றைய நற்செய்தி வாசகங்கத்தில் ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிப்பதற்கு சீடர்களை அனுப்பிய நிகழ்வை நாம் வாசிக்க இருக்கிறோம். இன்று நாம் வாழும் உலகில் நம்மில் பலர் பலவற்றை பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பேசுவதை யாராவது கவனிக்கிறார்களா? அல்லது நாம் தான் பிறர் பேசும் போது கவனிக்கின்றோமா? கவனித்ததையும், பேசியதையும் நம் வாழ்வில் நாம் செயல்படுத்துகிறோமா? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி. இன்னாசியாரின் வார்த்தைகளை புனித சவேரியார் கேட்டார் அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். நாமும் அனுதினமும் திருப்பலியில் பங்கெடுக்கிறோம், இறைவார்த்தையைக் கேட்கிறோம், பல நல்ல மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களின் வாய் மொழி வார்த்தைகளை கேட்கிறோம், நாம் கேட்டவற்றையும், பார்த்த நல்லவைகளையும் நமது வாழ்வு செயல்படுத்தி இருக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
 இன்றைய நாளில் உறுதி ஏற்போம் நமது வாழ்வில் நாம் கேட்கக் கூடிய நல்ல செயல்களை நமது வாழ்வில் செயல்வடிவமாக்கிடுவோம் என்று அதற்கான அருள்வேண்டி இறைவனை நாடி செல்வோம். இறைவனை மட்டும் நாடிச் செல்வதால் செயல்வடிவம் பெற முடியாது. நமது முயற்சியும், உறுதியான நிலைப்பாடுமே அதற்கு வழிவகுக்கும் எனவே ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு கேட்ட நல்லவற்றை செயலாக்க முயலுவோம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

திருவருகைக் காலத்தின் முதல் திங்கள் 2019. 12. 02

இறைவன் இயேசுவின் அன்புக்குரிய அருள் தந்தை அவர்களே, அருள் சகோதரர்களே உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . 

நேற்றைய தினம் நம்பிக்கை எனும் தீபம் ஏற்றி திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நுழைந்த நாம் இன்று அக மகிழ்வோடு ஆண்டவர் இல்லம் வந்துள்ளோம் அவரின் வருகைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள....


நாம் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா? அல்லது கிறிஸ்து பிறப்பு என்னும் விழாவை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?  என்று சிந்திக்க வேண்டிய சூழலில் நாம் அனைவரும் உள்ளோம்.


 இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை பற்றி கூறப்படுகிறது... ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூத சமூகத்தில் நீர் எனது வீட்டிற்கு வர நான் தகுதியற்றவன் என தன்னையே தாழ்த்திக் கொண்டு ஆண்டவரின் வருகையை விட அவரின் வார்த்தைகளில் அதிகம் நம்பிக்கை கொண்டவராய் நூற்றுவர் தலைவர் இன்று நமக்கு காட்டப்படுகிறார்..


அவரின் நம்பிக்கை அவரது மகனுக்கு நற்சுகத்தையும் அவருக்கு மதிப்பையும் இச்சமூகத்தில் உருவாக்கியது...


நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி  கை வைக்கலாம் என்பதற்கு ஏற்ப நூற்றுவர் தலைவரிடத்தில் காணப்பட்ட நம்பிக்கையை நமது வாழ்வில் செயல் வடிவமாக மாற்ற பக்தியோடு இணைந்து ஜெபிப்போம் இத்திருப்பலியில்


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

இளையோர் ஞாயிறு 2019

இளையோர் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறைஇயேசு கிறிஸ்துவி;ல் பிரியமான இளையோரே, இறைமக்களே,
    திருஅவையின் எதிர்கால நம்பிக்கைகளாய் நம் மத்தியில் வலம் வரும் இளையோரின் வாழ்விற்கு அழகு சேர்க்கும் அற்புதமான ஞாயிறு இந்த இளையோர் ஞாயிறு. திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், திருஅவையின் எதிர்கால தூண்களாள் திகழும் இளையோர் மீது அவர் கொண்டிருக்கின்ற அன்பின் வெளிப்பாடே இளையோர் பற்றி எடுத்துரைக்கும் சிந்தனைகள். கரடு முரடான பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறையினரை மென்மையான பாதையில், மிருதுவான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு திருஅவைக்கு உள்ளதென்பதைத் தெளிவாய் உணர்ந்ததால், திருத்தந்தை அவர்கள் இந்த ஆண்டின் இளையோர் ஞாயிறை நம் அனைவரின் தாயான மரியாவின் வார்ததைகளை வாழ்வாக்க நம்மை அழைக்கிறார். ‘இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்ற அன்னை மரியாவின் பதில்மொழி நம்முடைய வாழ்வில் மேலோங்க வேண்டுமென்ற சிந்தனையை மிகத் தெளிவாக வழங்குகிறது இந்த இளையோர் ஞாயிறு.
இளைஞர்களின் வாழ்வானது இன்று பல தளங்களில் சிக்குண்டு உலகத்தின் இன்பங்களுக்கும், போலியான, எதிர்மறையான பல்வேறு சூழல்களுக்கும் அடிமையாகி இன்று தங்களுடைய வாழ்வையே இழக்கும் நிலைக்கு மாறிவிட்டனர். இந்திய அளவில் தென்படும் சமயம் சார்ந்த சிக்கல்களிலும், மதம் சார்ந்த பிரச்சனைகளிலும், நுகர்வுக் கலாச்சாரத்தாலும், அலைபேசியின் தவறான போக்குகளினாலும், உறவுச்சிக்கல்களினாலும், ஆணவக்கொலைகள், சாதிய வன்முறைகள், தவறான கருத்தியல்கள், சிற்றின்ப ஆசைகள் இவற்றில் ஏதாவது ஒன்றில் அடிமையாகி ஆண்டவரின் அழைப்பினை நிராகரிக்கும் மக்களாக, கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தும் மனிதராக இன்று இளையோர் உருவாக்கப்பட்டுவிட்டனர். இத்தகைய அடிமைநிலை நம்மில் நீக்கப்பட்டு, முழுமன சுதந்திரத்தோடும், இறைவன் மீது கொள்ளும் ஆழமான நம்பிக்கையினாலும் எவ்வாறு அன்னை மரியா எப்படி நான்  ஆண்டவரின் அடிமை உமது சொற்படி நிகழட்டும் என்றாரே அவ்வாறு நாமும் ஆண்டவரின் அடிமைகளாக உருவாகிட அழைக்கின்றது, இத்தகைய சிந்தனையில் வேரூன்றிட முயற்சிப்போம்.
அன்னை மரியாவின் வாழ்வு ‘ஆம்’ என்ற சொல்லின் வழியாக அவனிக்கு மீட்பைக் கொண்டு வந்தது. அதே போன்று நம்முடைய பதில்மொழியின் அடிப்படையி;ல்தான் நாம் முன்னோக்கிப் பயணிக்க இருக்கும் வாழ்வும் அமைந்திருக்கிறது என்பதை ஆழமாய் புரிந்துகொள்வோம். இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைக்கொண்டு, இறைவுறவில் எந்நாளும் மகிழ்ந்திட, இறைவனுக்காய் அடிமைநிலையை ஏற்க நம்மையே இத்திருப்பலியில் ஒப்புக்கொடுப்போம். இறைவனின் அருள் வேண்டி ஒருவர் மற்றவருக்காய் மனமுவந்து செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை: (சபை உரையாளர் 1: 2, 2: 21-23)
    அன்பிற்கினியவர்களே இன்றைய முதல் வாசகமானது சபை உரையாளிரின் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வாகத்தின் தொடக்கத்திலேயே ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் ‘வீண் முற்றிலும் வீண், எல்லாமே வீண் என்கிறார் சபைஉரையாளர். இன்றைய அறிவியல் உலகில் உண்மையில்லாத மாயையை உண்மையென நினைத்து அதன் பின்னே போவதை தெளிவாக உணர்த்துகிறார். இன்று நாம் வைத்திருப்பது பிறர் கொடுத்தவையே, அவ்வாறே இன்று நாம் ஓடி உழைத்து சேர்த்துவைப்பதும் பிறர் பயனுக்காகவே இதனால் என்ன பயன்? உடல், மன அமைதி இழந்து வாடுவது தேவைதானா? என்பதை உணர்வதில்லை. ஆகவே இறைவனைத் தவிர இவ்வுலகில் இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமில்லை, நம்முடன் பயணிக்கப்போவதும் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவர்களாய் இன்றைய முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:  (கொலோசையர் 3: 1-5, 9-11)
கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்
இறைவன் இயேசுவில் அன்பானவர்களே! புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து இன்றைய இரண்டாம் வாசகமானது எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக புனித பவுலடியார் நம்மை ஒன்றித்து வாழ அழைக்கின்றார். நாம் வாழும் இந்த உலகில் பலவிதமான பிரிவினைகளும், பலவிதமான வேறுபாடுகளாலும் மனிதர்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒன்றுபட்டு வாழ்வது என்பது இன்று அரிதான காரியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் இந்த உலக எண்ணங்களை விடுத்தும், இவ்வளவு நாட்டங்களையும், ஆசைகளையும், இச்சைகளையும் கலைந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றிய மேலான எண்ணம் கொண்டவர்களாய் வாழ்வதற்கான அழைப்பினை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வழங்குகிறது. நம்வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும், நாம் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் நம் வாழ்வில் கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பதையும் இன்றைய இரண்டாம் வாசகமானது தெளிவாக எடுத்துரைக்கிறது. நம்மிடையே இருக்கக்கூடாத ஒரு முக்கியமான பண்பு வேறுபாட்டுணர்வு. நான் வேறு நீ வேறு என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து நாம் அனைவரும் கிறிஸ்துவால் இணைக்கப்பட்டவர்கள். நம்முள் கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பவர் என்ற கருத்தினை இன்றைய இரண்டாம் வாசகத்தில் வழியாக மிக ஆழமாக நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இத்தகைய சிந்தனைகளோடு புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து வாசிக்கப்படும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்…
மன்றாட்டுகள்
1. திருஅவைத் தலைவர்களுக்காக மன்றாடுவோம்.
    அன்பின் ஊற்றே எம் இறைவா! எம் திருஅவைத் தலைவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். மாறிவரும் காலச்சுழ் நிலைகளுக்கேற்ப காலத்தின் அறிகுறிகளை அறிந்து, இளைஞர்களை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்ப வழிநடத்த தேவையான ஆற்றலை திருஅவையின் தலைவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நாட்டுத்தலைவர்களுக்கா மன்றாடுவோம்.
    வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைவா! எம் நாட்டுத்தலைவர்களை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். உண்மையின் வழியில் அவர்கள் நடக்கவும், ஏழை, எளிய கைவிடப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு தேவையான செயல் திட்டங்களைத் தீட்டவும் அருள் தாரும். மேலும் இப்புதியச சூழலுக்கேற்ப எம் இளைஞர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டு நல்லதொரு தலைவர்களாய் உருவாகிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. பெற்றோர்களுக்காக மன்றாடுவோம்.
    தாயும் தந்தையுமான இறைவா! நாங்கள் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும் உம்மாலேதான். உமது அருளிற்காகவும், ஆசீருக்காகவும் நன்றி கூறும் இவ்வேளையில் எம் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எங்கள் பெற்றோர்களுக்காக உம்மை வேண்டுகின்றோம். அவர்கள் மாறி வரும் இந்த அறிவியல் உலகத்தில் தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்ளவும், அன்பு செய்யவும் அரவனைக்கவும் ஆற்றல் தாரும். சமூக முரண்பாடுகளுக்கு மத்தியில் இப்பெற்றோர்கள் வளரும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தேவையான அருள் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அனைத்து இளைஞர்களுக்காகவும் மன்றாடுவோம்.
    அருட்பெரும்ஜோதியாகிய இறைவா! இளைஞர்கள் அiவைருக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். உமது மனநிலையை பெற்றவர்களாய் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, குடும்ப நலன், சமூக நலன் மற்றும் திருஅவையின் நலனில் அக்கறைகொண்டவர்களாய் வாழவும், சமூக தொடர்பு ஊடகங்களை அனைவரின் வளர்ச்சிக்காக பயண்படுத்திடவும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு தகுந்த துணை கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இயற்கைக்காக மன்றாடுவோம்.
    எங்கும் நிறைந்திருக்கும் இறைவா! உம் அருள் வளங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். மனிதர்கள் தங்கள் சுய நலத்திற்காக இயற்கை வளங்களை சுரண்டுவதை தவிர்கவும், புவி வெப்பமயமாதலை உணர்ந்து மரங்களை பாதுகாக்கவும் அருள்தாரும். மேலும் எங்களுக்கு தேவையான பருவ மழையை பொழிந்து இயற்கை வளங்கள் மற்றும் கால்நடைகள் செழிக்கவும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

மாற்றத்திற்கான கதாநாயகர்கள் Article 2019

மாற்றத்திற்கான கதாநாயகர்கள்
மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என்ற தலைப்பினை பார்த்தபோது உள்ளத்தில் ஒரு விதமான கேள்வி எழுந்தது யார் இன்றைய சூழலில் மாற்றத்தை கொடுக்கக்கூடிய கதாநாயகர்கள்?  உடனே அருகிலிருந்த ஒரு நண்பரை நோக்கிக் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என யாரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர் சமூக போராளிகளையே நான் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என்பேன் என்றார். எனது களப்பணித்தளமான கீரனூர் மறைவட்டத்தில் உள்ள இலட்சுமணன் பட்டி (அந்தோணியார் நகர்) என்னும் கிராமத்துக்குச் சென்ற போது அங்கிருந்த சிறுவர்களிடம் கேட்டேன் உங்களைப் பொறுத்தவரையில் இன்றைய சூழலில் மாற்றத்தை கொடுக்கக்கூடிய கதாநாயகர்கள் யார்? எனக் கேட்ட போது சிலர் விஜய் என்றும், சிலர் அஜித் என்றும், சிலர் கமல் என்றும், இளைஞர்கள் சீமான் என்றும் பதில் கூறினார்கள். இதிலிருந்து அறிந்து கொண்டேன் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் எனப்படுபவர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்டவர்கள், மாறுபட்டக் கருத்தை தரக்கூடியவர்கள் என்று. அதன் அடிப்படையில் யார் இந்த மாற்றத்திற்கான கதாநாயகர்கள்? யாரால் இந்த சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க இயலும்? என்ற கேள்வி எனக்குள் எழுப்பிக்கொண்டே இருந்தேன். அவ்வேளையில் என்னுள் எழுந்த சிந்தனைகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். நாம் ஏன் கதாநாயகர்களை வெளியில் தேடவேண்டும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஏனெனில் ஒரு மனிதரைப் பார்த்து இவரை போல் நான் உருவாக வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் இன்று இவ்வுலகில் அதிகம். இவர்களுக்கு மத்தியில்; நான்தான் முதலில் எனக்கு கதாநாயகனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் உருவாக வேண்டும்.  அனுதினமும் நம் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பலர் பேசுகிறார்கள், சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதே இன்று நம்முன் இருக்கக் கூடிய கேள்வி. நாம் மாற்றம் பற்றி  பேசக்கூடியவர்களை  கதாநாயகர்களாக ஏற்றுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்க கூடியவர்களா? அல்லது மாற்றத்தை முன்னெடுக்க கூடிய ஒரு கதானாயகனாக நாம் இருக்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும். விவேகானந்தர் கூறுவார் 20,000 வெற்;றுப் பேச்சிகளை விட ஒரு துளிச் செயல் மேலானது என்று. நானும் பல நேரங்களில் பல இடங்களில்  பல மனிதர்கள் மாற்றத்தைப் பற்றி பேசுவதை கேட்டிருக்கின்றேன.; ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் பேசும் விதம் கண்டு வியந்ததுண்டு. ஆனால் என்னிடத்தில் மாற்றத்திற்கான செயல்பாடுகள் என்று எதுவுமில்லை. வெறுமென பேசுவதையும், கேட்பதையும் விட செயல்படே அவசியமானது. எனவே மாற்றத்துக்கான முதல் விதையாக செயல்;ட வேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் நாம் உணர வேண்டும். நாம் அனைவரும் இன்று சிறுவர்களாகவே, இளைஞர்களாகவோ இருக்கலாம். ஆனால் நிகழ்காலத்தின் கதானாயகனாக மறுவது என்பதும் நம் கையில் தான் உள்ளது. ஒரு குழந்தைகள் பல்வேறு இடங்களிலிருந்து பலவற்றைக் கற்றாலும் 60 சதவீதம் அக்குழந்தை அனைத்தையும் அதன் குடும்பங்களில் இருந்தும், மீதமுள்ள 40 சதவீதத்தை அவர்கள் வெளியில் (குமூகத்தில்) இருந்து பெருகிறார்கள் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம் வாழ்வு மூலம் எதை கற்பிக்க போகிறோம். வருங்காலம் தேடும் கதானயகாகளாக நாம் மாறுகிறோமா? அல்லது நாமே கதாநாயகர்கள் என்பதை உணராது அனுதினமும் காதாயகர்கள் என்று சிலரை நம்பி பின் தொடரக் கூடியவர்களாகவே இருக்கபோகின்றோமா? இன்று நாம் வாழும் சமூகத்தில் புதிய கல்விக் கொள்கை, விவசாயிகளுக்கு எதிரான அரசின் செயல்பாடுகள், மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு எதிராக புனையப்படும் பொய் வழக்குகள், இயற்கைக்கு எதிரான போக்குகள் என அனைத்தையும் எதிர்த்து மாற்றத்தை விதைக்கும் கதாநாயகனாக நாம் உருவாக வேண்டும். நாம் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் காண விரும்புகிறோமோ அந்த மாற்றமாக நாம் முதலில் மாற வேண்டும். இதையே காந்தியடிகள்; “சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக முதலில் நீ இரு” என்று கூறுகிறார். எனவே இச்சமூகத்தில் மாற்றத்திற்கான கதாநாயகர்களை நாம் வெளியில் தேடுவதை நிறுத்தி, நாம் ஒவ்வொருவருக்குள்ளும் அதைத் தேட வேண்டும். இயற்கையைப் பேணி பாதுகாப்போம் என கூறுவதை விட இயற்கையைப் பேணி பாதுகாக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அன்று இயேசு சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென முயன்றபோது வெறுமென பேசக்கூடியவராகவோ அல்லது ஒரு நல்ல மாற்றத்தை தரும் கதானாயகனை தேடக்கூடியவராகவோ இல்லாமல் தான் விரும்பிய மாற்றத்தினை தன் வாழ்வில் வெளிக்காட்ட கூடியவராகவே வலம்வந்தார் என்பதை வரலாற்றிலிருந்த நாம் அறியலாம்.  அந்த இயேசுவின் நண்பர்களான நாம் எப்போது நாமே மாற்றத்திற்கான கதாநாயகர்கள்; என்பதை உணரப் போகிறோம். இன்று இளைஞர்களான நாம் நாளை வருங்கால தலைமுறையை வழிநடத்தும் சக்தியாக மாறிட மாற்றத்திற்கான கதாநாயகர்களை வெளியில் தேடுவதை நிறுத்திவிட்டு மாற்றத்திற்கான கதாநாயகர்களை நமக்குள் தேடுவோம். மாற்றத்திற்கான கதாநாயகர்களாக மாறுவோம்...
சகோ. சகாய ராஜ் ஜே.
அம்மாபேட்டை
தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி.

Current Situation of Water Issue 2019

Current Situation of Water Issue

Nothing in this world is possible without water.  It is essential 1 for all of us. Nowadays people are struggling for water and scarcity is increasing day by day. The people don't have water even to fulfil their daily activities. We have elected our leaders to govern us but they are concentrating on their family members and their billionaires. They always concentrate on the profit instead of doing service. “It is only for the water if there would be third world war” said the poet Mr. Vairamuthu. People are coming to the streets, because of the scarcity of water. If we go through the last week's newspaper there are no pages without the issue of water. People from neighbouring state can understand our need of water. For example Mr. Pranab Vijayan, the chief minister of Kerala came forward to give 20, 00,000 litres of water for satisfying the needs of the people. But we already know that what our government did. First our minister rejected their help but when the issue was spreading in the media our government came forward to accept the help of neighbouring state. Our government is best in politics however it makes politics when a person comes forward to help one another. This was the situation when there was flood in Chennai. At the same time we can identify the cause of flood every lake has become buildings and factories and there is no place to store water in Chennai. In Tamil Nadu people on the harm are struggling for water.  On the other side some corporates are taking hydrocarbon in order to get profit. For that they are taking all the groundwater and instead of that they are inserting some chemical waters to destroy the land. There are many people fighting against this issue but the media never focus on them. There were many leaders ruling us and among them Mr. Kamaraj the former Chief Minister of Tamil Nadu was the only one to build the dams to store water. Apart from him nobody worries about us. Every year the government allots crores and crores for the betterment of the dams. But we don't know what they are doing with the amount. If they use the money properly the Cauvery Bridge would not have broken last year. At the same time last year the Cauvery Dam was opened to save the water for the people but the government has shown the irresponsible way of wasting the water to mingle in the sea. Today all the parties of Tamil Nadu are taking this issue of water for politics. The central government imposes some injustices behind this issue namely hydrocarbon, new education polices, etc. It is our responsibility to take initiative to save water.

Dear friends it is our responsibility to understand the value of water. We should be aware that we should not waste the water. In our seminary we will be rushing with one bucket of water if there is no water. But we will have 3 or 4 buckets of water if we have more water.

Dear brothers we must save water at the same time we should also make people to understand the value of water in the ministry places. “An action is more valuable than speaking many words” said by Vivekananda. We don't have enough rain because of lack of trees so we will plant a tree after this English Academy on behalf of the director of the English Academy the secretary and all of us in order to make our word into action.

Thank you...

By

Bro. Sahaya Raj J.

மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி 2019

மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று தாய்த்திரு அவையானது புனித ஜான் மரிய வியானி எனப்படும் குருக்களின் பாதுகாவலரை நினைவுகூற நம்மை அழைக்கிறது. இன்று குருக்களின் விழா. இன்று நாம் நினைவு கூறும் புனித ஜான் மரிய வியானி என்பவர் ஒரு எளிமையானவர். இவருக்கு படிப்பு என்பது பாகற்காய் போன்றது. இலத்தின் மொழியில் புலமை இல்லாததால் பல முறை பல தேர்வுகளில் தோற்றவர். குருவாக தகுதியற்றவர் என பல அருள் தந்தையர்களால் கூறப்பட்டவர். மன்னிப்பதே கிறித்தவத்தின் மகத்துவம் எனவே தம் வாழ்வில் பெரும்பகுதியை பாவ மன்னிப்பு வழங்கும் இருக்கையில் அமர்ந்து செலவிட்டவர். அன்னை மரியாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவரின் வாழ்வு நமக்கு கற்பிக்கும் பாடம் ஏராளம். ஆனால் இன்று இவரின் வாழ்விலிருந்து நாம் மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி என்ற தலைப்பில் நமது சிந்தனைகளை சீர்தூக்க பார்க்க இருக்கிறோம்.
மாற்றம் என்பது மட்டுமே உலகில் மாறாத ஒன்று. மாற்றம் மண்ணில் வேண்டுமானால் முதலில் மனதில் மாற்றம் வேண்டும். அனுதினமும் நாம் பலவற்றை கற்கின்றோம், பலவற்றை கற்பிக்கின்றோம். ஆனால் அதில் எவை நம் வாழ்வை முதலில் மாற்றியது என்பதை சிந்திக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் இன்று நினைவு கூறும் புனித யோவான் மரிய வியானி பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் நகரத்தில் உள்ள டார்லி என்னுமிடத்தில் மே மாதம் எட்டாம் நாள் 1786 ஆம் ஆண்டு பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பு தடைபட்டது. ஆடுகளை மேய்க்கும் வேலையானது இவருக்கு கொடுக்கப்பட்டது. ஆடுகளை மேய்தாலும் ஆண்டவர் இயேசுவின் அன்புக் கட்டளைகளை உள்ளத்தில் ஏற்றவராய். தனக்கு பள்ளி படிப்பை தொடர யாரும் உதவிடத போதும் கூட தன் நி;லை யாருக்கும் வரக்கூடாது என்பதை உணர்ந்தவராய் பல வசதியற்ற மாணவர்கள் படிப்பை தொடர அவர்களுக்கு என்று ஒரு சிறிய விடுதியை இலவசமாக நடத்தினார். என்னைப் போல் பலர் படிப்பை வசதியின்றி பாதியில் நிருத்தியுள்ளனர் என பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் மாற்றத்தை விதைக்கும் முதல் விதையாக செயல்பட்டார் பனித ஜான் மரிய வியான்னி.
இவர் எங்கே சென்றாலும் மரத்தாலான அன்னை மரியாவின் சிருபத்தை எப்போதும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார். ஆடுகள் மேய்க்கும் போதும் கூட மரத்தாலான அன்னை மரியாவின் சிருபத்தின் முன்பு முழந்தாளிட்டு செபம் செய்து கொண்டே இருப்பாராம் இவர். இன்று பலவிதமான சூழல்களுக்கு மத்தியில் பம்பரமாக சுற்றி வரக்கூடிய நமக்கு புனித ஜான் மரிய வியானி போல தினமும் செபிக்க ஆசை. ஆனால் நேரமில்லை. இவர்; செபியுங்கள் என போதிப்பதை விட அதற்கு செயல் வடிவம் தரும் முதல் விதையாக செயல்பட்டவர் நாம் நினைவுகூறும் புனித ஜான் மரியவியான்னி.
இவர் குருவாக வேண்டும் என்ற ஆசையால் குருகுலம் நாடிச் சென்றார். நம்மில் பலருக்கு அன்னிய மொழி எப்படி பல நேரங்களில் அன்னியமாகவே தெரிகிறதோ அது போலவே இவருக்கும் இலத்தின் மொழி அந்நியமாக தெரிந்தது. கடுமையாக முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், முயற்சியை நிறுத்தாது கடுமையாக முயன்றார். கற்க வேண்டும் என்றானதற்கு பிறகு மொழிக்கு பயத்தால் முடியுமா? என்பது போல இவர் தன் தாய்மொழியில் அனைத்தையும் கற்றுக் கொண்டார். சிலமுறை முயன்றும் முடியாத போது இது இனி என்னால் இயலாது எனக்கூறி ஒதுங்குவோர் மத்தியில் வேறு வழியில் இதை எப்படி முயற்சிக்கலாம் என்று சிந்தித்து. தன் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரக்கூடிய மாற்றத்திற்கு முதல் விதையாக செயல்பட்டவர் புனித ஜான் மரிய வியான்னி.
கிரிக்கெட் மோகம் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழலில் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. சுகிசிவம் அவர்கள் கூறுவார் கிரிக்கெட் விளையாட்டை வெறிகொண்டு பார்க்கும் நாம் அதிலிருந்து வாழ்க்கையை உணர முயல வேண்டும்  என்று. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் பந்தை அடித்து மதிப்பெண்கள் எடுக்க முயலும் போது எத்தனை பேர் அவரை சுற்றி அவரை தோற்கடிப்பதற்காக நிற்கிறார்கள் என்று பார்க்கும் போது 11 நபர்கள். அதுதான் வாழ்க்கை நாம் வாழ்வில் முன்னேறிச் செல்ல விரும்பினால் நம்மை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டமே காத்திருக்கும் என்கிறார். அவர்களை எதிர்கொண்டு வாழ முதலில் நாம் பழக வேண்டும். இதனை எதிர்கொண்டவர் புனித ஜான் மரிய வியானி இலத்தின் மொழி தெரியவில்லை, இவர் குருவாக தகுதியற்றவர், இவர் முழுமையாக இறையியல் படிக்காதவர் என பலவிதமான குறைகளை கூறி இவர் குருவாக திருநிலைப்படுத்துவதற்கு முன்பும், திருநிலைப்படுத்தப்பட்ட பின்பும் குறை கூறியவர்கள் பலர். எப்படி கிரிக்கெட் விளையாட்டில் 11 பேர் இணைந்து ஒருவரை வீழ்த்த வேண்டுமென்ற எண்ணத்தில் சுற்றி நிற்கும் போது, மட்டையைப் பிடித்துள்ள ஒருவர் அவர்களை எதிர்கொண்டு விளையாடுகிறாரோ அதுபோல நாமும் அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு அனைவரையும் எதிர் கொண்டவர் புனித ஜான் மரிய வியானி.
இவர் முழுமையான இறையியலை இலத்தின் மொழியில் பயிலாதவர். எனவே, இவர் பாவ மன்னிப்பு வழங்க தடை விதிக்க வேண்டும் என சில அருள்தந்தையர்கள் பிரான்ஸ் நகரின் ஆயருக்கு கடிதம் எழுதி அதை அனைத்து பங்கிற்கும் அனுப்பி கையொப்பம் பெற்ற போது அதில் இவரும் கையொப்பம் இட்டுவிட்டு அமைதியாக இருந்தார். இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற கூடியக்கூட்டத்தை கண்டு அதை தடுக்க எண்ணியவர்கள் பலர். ஆனால், அவர் செய்த அந்த பணியை அர்த்தமுள்ள வகையில் செய்ய எவரம் முன் வரவில்லை. தம்மை மட்டம் தட்டும் மனிதர்கள் மத்தியில் எதிர்வாதம் செய்வதை விட தன்னை நோக்கி வரக்கூடிய  மக்களுக்கான பணியே முக்கியம் என தன் குருத்துவப் பணியின் முதல் விதையாக இருந்து செயல்பட்டு வந்தவர் புனித ஜான் மரிய வியானி. “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” (மாற்கு12:10) என்பதற்கு ஏற்ப, பிரான்ஸ் நாட்டில் பல இடங்களில் இருந்து இவரிடம் பாவமன்னிப்புப் பெற மக்கள் கூட்டம் கூட்டமாக பிரான்சில் உள்ள ஆர்சு நகரை நோக்கி பயணம் செய்தனர். எனவே பிரான்சு நாட்டின் அரசும்; இந்த கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் முன்பதிவு அலுவலகத்தை புதிதாக துவங்கியது.
அன்புக்குரியவர்களை இன்று நாம் வாழும் இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் மற்றவர்களின் வளர்சியைக் கண்டு பொறாமைப்படும் மனிதர்களாகத் தான் அதிகம் காணப்படுகின்றனர். நம் நாட்டு அரசியலில் கூட ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை குறை கூறிக்கொண்டே அரசியல் செய்கிறார்கள். ஆனால் அவர்களால் குறைகளை நிறைகளாக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சிகளை அவர்கள் எடுப்பது இல்லை என்பது தான் இன்று வெள்ளிடைமலை.
அன்புக்குரியவர்களே “இருபதாயிரம் வெற்றுப் பேச்சுகளை விட ஒரு துளிச் செயல் மேலானது” என்கிறார் விவேகானந்தர். “நீ விரும்பும் மாற்றமாக முதலில் நீ மாறிடு” என்கிறார் காந்தியடிகள். இவர்களின் வார்ததைகளின் அடிப்படையிலும், புனித ஜான் மரிய வியானியின் வாழ்வும் நம்மை மாற்றத்தைப் பற்றி பேசுவதை விட அதற்கு செயல்வடிவம் தரும் முதல் விதையாக வாழ, மாற அழைக்கின்றது. எவ்வாறு குருவாவதற்கு முன்பும், குருவானனதற்கு பின்பும் பலரால், பல சூழ்ச்சிகளால், வாழ்வில் முன்னேற விடாது தடை கற்களாக பலர் மாறி நின்ற போது, தடைகளை கடந்து மாற்றத்தின் முதல் விதையாக எதையும் கண்டு துவண்டுவிடாமல் தன் பணிகளை மட்டுமே முன்னெடுத்து புனித ஜான் மரிய வியானி செயல்பட்டாரோ, அவரை போல நீங்களும் நானும் வாழ்வை அமைத்திட மாற்றத்தைப் பற்றி போசுவதை விட மாற்றத்தின் முதல் விதையாக மாறிட அருள் வேண்டியவர்களாய் இத்திருப்பலியில் தொடர்ந்து பயணிப்போம் மாற்றத்தின் முதல் விதையாக மாறிட...

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...