இறைவன் இயேசுவின் அன்புக்குரிய அருள் தந்தை அவர்களே, அருள் சகோதரர்களே உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
நேற்றைய தினம் நம்பிக்கை எனும் தீபம் ஏற்றி திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நுழைந்த நாம் இன்று அக மகிழ்வோடு ஆண்டவர் இல்லம் வந்துள்ளோம் அவரின் வருகைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள....
நாம் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா? அல்லது கிறிஸ்து பிறப்பு என்னும் விழாவை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்ப் படுத்திக் கொள்கிறோமா? என்று சிந்திக்க வேண்டிய சூழலில் நாம் அனைவரும் உள்ளோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை பற்றி கூறப்படுகிறது... ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூத சமூகத்தில் நீர் எனது வீட்டிற்கு வர நான் தகுதியற்றவன் என தன்னையே தாழ்த்திக் கொண்டு ஆண்டவரின் வருகையை விட அவரின் வார்த்தைகளில் அதிகம் நம்பிக்கை கொண்டவராய் நூற்றுவர் தலைவர் இன்று நமக்கு காட்டப்படுகிறார்..
அவரின் நம்பிக்கை அவரது மகனுக்கு நற்சுகத்தையும் அவருக்கு மதிப்பையும் இச்சமூகத்தில் உருவாக்கியது...
நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி கை வைக்கலாம் என்பதற்கு ஏற்ப நூற்றுவர் தலைவரிடத்தில் காணப்பட்ட நம்பிக்கையை நமது வாழ்வில் செயல் வடிவமாக மாற்ற பக்தியோடு இணைந்து ஜெபிப்போம் இத்திருப்பலியில்
It is true that who ever kneels down before God, never fell down before Satan! Trusting on God takes us to the peaks of life!
பதிலளிநீக்குIt is true that who ever kneels down before God, never fell down before Satan! Trusting on God takes us to the peaks of life!
பதிலளிநீக்கு