சனி, 18 மார்ச், 2023

எல்லோரும் ஒன்று! (18-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

                தங்களை நேர்மையாளராக காட்டிக்கொள்ள, பலரை குற்றவாளிகளாக மாற்றுகின்ற நிகழ்வு அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  தன்னை நேர்மையாளராக காட்டிக் கொள்வதற்காக தனக்குப் பின்னால் இருந்த ஒரு நபரோடு ஒப்பிட்டு பார்த்து ஒருவர் இறைவேண்டல் செய்கின்றார். ஆனால், மற்றவரோ கடவுள் முன்னிலையில் தன்னை தாழ்த்திக் கொண்டு, தாழ்ச்சியோடு கடவுளிடத்தில் மன்றாடுகின்றார்.

   இறைவன் விரும்புவது தாழ்ச்சி கொண்ட மனதையே. இந்த தாழ்ச்சி கொண்ட மனம் தான், நம்மை, நான் என்ற ஆணவத்திலிருந்து அடக்கி,  கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்த வைக்கிறது. நாம் என்ற ஆணவத்தை தகர்த்தெறிந்து, மற்றவரை விட நாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவதற்கு பதிலாக, நாம் சமமானவர்கள், எல்லோரும் ஒன்று என்ற மனநிலையோடு, ஒவ்வொரு நாளும் கடவுளுக்குரிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.


      

வியாழன், 16 மார்ச், 2023

அன்பினால் ஆண்டவருக்கு உகந்தவர்கள் ஆவோம்! (17-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!    

            அன்பு செய்வது மட்டுமே நம் வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இன்று இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ வேண்டும் என்பதை அறிந்திருக்கின்ற நாம், அதற்கு செயல் வடிவம் தருவதற்கு இயலாத நிலையில் இந்த சமூகத்தின் கட்டமைப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய இறை வார்த்தை வழியாக முதன்மையான கட்டளையாகிய இந்த அன்பு கட்டளையை சொல்லிலும் செயலிலும் பின்பற்றுகின்ற நபர்களாக நீங்களும் நானும் வாழ்வதற்காக அழைக்கப்படுகின்றோம்.  இந்த அன்பு கட்டளையை இதயத்தில் இருத்தியவர்களாக  காணுகின்ற மனிதர்களிடத்தில் எல்லாம் அன்பை பகிர்ந்து, அன்போடு, ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


          

நன்மைகளை நோக்கும் நல்லவர்களாய் வாழ்வோம்! (16-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

             இன்றைய இறை வார்த்தை வழியாக நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க நாம் அழைக்கப்படுகின்றோம்.  நல்லது செய்தாலும் அதில் தீமையை கண்டு கொள்ளுகின்ற மனப்பான்மை உடையவர்களாக நம்மில் பலரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

இயேசு செய்த அரும் அடையாளங்களிலும் குற்றம் காணும் மனநிலையோடு பலர் அவரை சூழ்ந்திருந்தார்கள். பேச்சிலிருந்த ஒரு மனிதனின் தீய ஆவியை விரட்டி அவரை பேச வைத்த போது கூட, இயேசு செய்த அந்த வல்ல செயலை கண்டு இறைவனை புகழ்வதை நிறுத்திவிட்டு, தீய ஆவியின் துணையோடு தான் இவர் இதனை செய்கிறார் என்று சொல்லி, அவர் மீது எப்படியாவது குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையோடு செயல்பட்டதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்தி காட்டுகின்றன. 

   பல நேரங்களில் இதே மனநிலை கொண்ட மனிதர்களாகத்தான் நாமும் பல நேரங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் பலர் செய்கின்ற நன்மைகளை நோக்குவதற்கு பதிலாக அதில் இருக்கின்ற தீமைகளை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கண்டு, அவர்களை குற்றவாளிகள் என குறிப்பிடுகிற மனிதர்களாக நம் வாழ்வை பல நேரங்களில் அமைத்துக் கொள்கிறோம். இத்தகைய செயலிலிருந்து நம்மை முழுவதுமாக விடுவித்துக் கொள்வதற்கு இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். எனவே இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை ஆய்வு செய்து பார்த்து நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்களை தகர்த்தெறிந்து கடவுளின் பாதையில் நாளும் நடக்க அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புதன், 15 மார்ச், 2023

கடைப்பிடித்து கற்பிக்கிறவரே விண்ணரசில் பெரியவர்! (15-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் கடவுள் எடுத்துரைக்கக் கூடிய அனைத்து வாழ்வுக்குரிய அற நெறிகளையும் இதயத்தில் ஏற்று அதனை வாழ்வாக மாற்றுவதற்கு அழைக்கப்படுகின்றோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள முடியும்.  கடவுளுக்குரியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறை வார்த்தையினை அப்படியே பின்பற்றுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் சீர்தூக்கிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இறை வார்த்தையை பின்பற்றுவதன் வாயிலாக இறைவனுக்கு உகந்த மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

திங்கள், 13 மார்ச், 2023

இறக்கத்தான் பிறந்தோம்! இரக்கத்தோடு இருப்போம்! (14-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
        
                இரக்கத்தோடு வாழ்வதற்கு இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் அழைப்பு விடுக்கின்றார். எத்தனையோ நன்மைகளை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட நாம், மற்றவர்களுக்கும் அதே நன்மைகளை செய்கின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை அழகிய உவமை வாயிலாக இறைவன் எடுத்துரைக்கின்றார்.

       எத்தனையோ முறை நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த அமைத்துக் கொள்ள நாம் தவறி இருந்தாலும் கூட, நமக்கு நன்மைகளை மட்டுமே செய்த நம் மீது இரக்கத்தை மட்டுமே பொழிந்த இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் சக மனிதர்கள் மீது இரக்கம் காட்டவும், மன்னிப்பை வழங்கவும், அன்பை அதிகப்படுத்தவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்ய இறைவன் உணர்த்துகின்ற இந்த வாழ்வுக்கான நெறியை இதயத்தில் இருத்தியவர்களாக,  நம் வாழ்வில் இரக்கத்தையும் மன்னிப்பையும் வழங்குகின்ற மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
             

ஞாயிறு, 12 மார்ச், 2023

யாருக்கு யார் அறிவுரை கூறுவது!! (13-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

      இறைவாக்கினர் தனது சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற இறைவார்த்தைகளுக்கு ஏற்ப,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு இறைவாக்கினர்களை சுட்டிக்காட்டுகின்றார். ஒருவர் எலியா; மற்றொருவர் எலிசா. இந்த எலியா இறைவாக்கு உரைத்த போது மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து போகும் என்று சொன்னார். ஆனால் பலரும் அவரது வார்த்தைகளின் மீது நம்பிக்கை அற்றவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் எலியாவிற்கான உணவினை பஞ்சகாலத்தில் ஏற்பாடு செய்கின்றார். அதன் விளைவாக சாரிபாத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண்ணிடம் சென்று, அந்த பஞ்ச காலம் முழுவதும் அங்கு தங்கியிருந்தார் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். அதுபோல இந்த எலியாவை பின்பற்றி வந்த எலிசா இறைவாக்கினர் எத்தனையோ நன்மைகளை முன்னுரைத்த போதும், ஆண்டவரின் வார்த்தைகளை அறிவித்தபோதும், அதற்கு செவி கொடுக்க மறுத்தவர்களாக,  நம்மோடு இருப்பவர்கள் நம்மை விட பெரிதாக என்ன செய்து விடப் போகிறார்கள்? என்ற மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரேல் மக்களிடையே தொழுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இருந்தார்கள். ஆயினும், சிரிய நாட்டிலிருந்த படைத் தலைவன் நாமான் என்பவர், நம்பிக்கையோடு இந்த எலிசாவை சந்தித்து நோயிலிருந்து முழுவதுமாக குணம் பெறுவதைத் தான் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

இந்த எலிசாவையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கு சுட்டிக்காட்டுகின்றார்.  இந்த எலியாவும் எலிசாவும் மக்கள் மத்தியில் வாழ்ந்த போது அவர்களின் வாழ்வு நெறிப்பட எத்தனையோ வழிகளை கற்பித்தார்கள். அதைக் கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள தவறியவர்களாகவே தங்கள் வாழ்வை அங்கிருந்தவர்கள் அமைத்துக் கொண்டார்கள். ஆனால் நாம் இன்றைய இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமது வாழ்வு நெறிப்பட வேண்டும் என்பதற்காக எத்தனையோ அறிவுரைகளை, இறை வார்த்தையின் வழியாகவும், மூத்தவர்கள் வழியாகவும்,  நாம் அறிந்த நபர்கள் வழியாகவும் இறைவன் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் கூறுகின்ற காரியங்களை எல்லாம், இவர்கள் என்ன நமக்கு கூறுவது? என்ற மனநிலையோடு கடந்து சென்று விடாமல்,  சொல்லுகின்ற வார்த்தைகள் நம் வாழ்வை நெறிப்படுத்துமாயின் அதனை ஏற்றுக்கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் இயேசுவின் பாதையில்,  அவரின் சீடர்களாக பயணிக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

சனி, 11 மார்ச், 2023

அனைவரும் கடவுளின் பிள்ளைகள் தான்! (12-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
       எத்தனையோ நன்மைகளை ஆண்டவரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்ட இஸ்ரேல் மக்கள் தான் பெற்றுக் கொண்ட நன்மைகளின் நிமித்தமாக மற்றவர்களுக்கு நன்மை செய்து, இருக்கின்றவர்களோடு இணைந்து வாழ்வதற்கு பதிலாக, தங்களுக்குள்ளாக பல்வேறு கருத்து முரண்களை வைத்துக்கொண்டு மனிதர்களை அன்னியப் படுத்தி  வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வகையில், பலரை தங்களிடம் இருந்து அந்நியப்படுத்தி வாழ்ந்தார்கள்.

   அதிலும் குறிப்பாக சமாரியர்களோடு யூதர்கள் பழக விரும்பாதவர்களாகவும் சமாரிய பகுதிகளுக்கு செல்லுவதை  கடவுளுக்கு உகந்த காரியம் அல்ல என்று எணணக் கூடியவர்களுமாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்று மனநிலையோடு கடவுள் தங்களுக்கு உரியவர் என்ற மனநிலையோடு வாழ்ந்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சமாரியர்களை தேடிச் சென்று, அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு தங்கி இருந்து, அவர்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்தார். இந்த இயேசுவைப் போலவே நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எத்தனையோ பிரிவினைகளும் எத்தனையோ கருத்து முரண்களும் இருந்தாலும், அனைத்திற்கும் மத்தியிலும் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்ற கடவுளைப் போல, நாமும் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றவர்களாக, நம்மோடு இருப்பவர்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்தவர்களாக நமது வாழ்வை வைத்துக்கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வெள்ளி, 10 மார்ச், 2023

மீண்டும் தந்தையிடம் திரும்புவோம்! (11-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
         தவறிழைத்த ஒரு மனிதன் தன் தவற்றை உணர்ந்து வருகிற போது அவனை மன்னிக்கும் மனநிலை படைத்தவராக கடவுள் இருக்கிறார் என்பதை ஊதாரி மைந்தன் நிகழ்வு வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு வழியுறுத்துகின்றார். ஊதாரி மைந்தன் தன் தந்தையின் சொல்லுக்கு இணங்க மறுத்து தனக்குரியதை எல்லாம் பெற்றுக்கொண்டு அதை ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு தான் துன்புறுகின்ற நேரத்தில் தான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணிப் பார்த்து மனம் வருந்தியவனாய், நான் என் தந்தையிடம் செல்வேன் என்று சொல்லி தந்தையிடம் வந்து மன்னிப்பு வேண்டுகிறான். தந்தையும் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு விலை உயர்ந்த ஆடைகளையும் பட்டாடைகளையும் அவனுக்கு உடைத்தி, மோதிரங்கள் அணிவித்து, அவனுக்காக விழா எடுப்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக வாசிக்க கேட்டோம்.

    பல நேரங்களில் நாம் செய்த தவறுகளை எல்லாம் நினைவு கூர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாக இயேசுவை நோக்கி திரும்பி வருகிற போது கடவுள் நம்மை குறித்து மகிழக்கூடியவராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நாளும் இந்த சமூகத்தில் நாம் வாழுகின்ற போது, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி ஆண்டவரிடத்தில் மீண்டுமாக திரும்பிச் செல்வதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை எல்லாம் சரி செய்து கொண்டு மீண்டுமாக ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வியாழன், 9 மார்ச், 2023

கடமையை உண்மையாக செய்வோம்! (10-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

         கட்டுவோர் புறக்கணித்த கல்லை கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப 
 தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்ட யோசேப்பு தன் உடன் பிறந்த சகோதரர்களை பாதுகாப்பவராக மாறுவதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

           நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யாத நபர்களை குறித்து மறைமுகமாக உவமை வழியாக உரையாடுகின்றார். இந்த இறைவார்த்தை பகுதியை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, கடவுள் நம்மீது அதீத அன்பு கொண்டிருந்தார்; அதன் விளைவே இந்த அகிலத்தில் நம்மை படைத்திருக்கிறார். அவரால் படைக்கப்பட்ட நாம் இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் இந்த கடமையை உணர்ந்து செயல்படாமல் நாம் இருக்கின்ற போதெல்லாம் கடவுள் பொறுமையோடு காலம் தாழ்த்துகிற நபராக, பல மனிதர்கள் மூலமாக, நம் வாழ்வு நெறிப்பட வேண்டுமென, நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொண்டு இந்த மண்ணில் செயல்பட வேண்டும் என்பதற்கான அழைப்பினை கொடுக்கிறார். அந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நாம் நெறிப்படுத்த தவறுகிற போது தீர்ப்பு நாளில் இறைவன் நீதி தவறாத நீதிபதியாக இருந்து நமக்கு தீர்ப்பு வழங்குவார் என்பதை இந்த உவமையின் வாயிலாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வில் நாம் செய்யத் தவறிய காரியங்களை எல்லாம் நினைவு கூர்ந்து, மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். சில நேரங்களில் நாம் செய்யாமல் விட்டு வந்த காரியங்கள் தான் நாம் செய்ய வேண்டிய மூலைக்கல்லாக, தலையாய பொறுப்பாக அமைகிறது.
          இன்றைய நாளில் இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை செய்யத் தவறிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பை வேண்டுவோம். நம் கடமையை உணர்ந்து சரிவர செய்கின்ற நபர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அருகில் இருப்பவர்களையும் கண்டு கொள்வோம்! (9-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தைகள் அருகில் இருப்போரை கண்டுகொள்ள அழைப்பு விடுக்கின்றன. தன் அருகில் இருந்த ஏழை லாசரை கண்டுகொள்ளாத செல்வந்தனை பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம். 

 இந்த வாசகப் பகுதியை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, பல நேரங்களில் நம்மோடு வாழ்பவர்கள், தேவையில் இருப்பவர்களை கண்டும் காணாதவர்களாக நமது வாழ்வை செல்வந்தனின் வாழ்வு போல பல நேரங்களில் அமைத்து விடுகிறோம். இத்தகைய நிலையில் இருந்து நம்மை நாமே மாற்றிக் கொண்டு, அருகில் இருக்கக் கூடியவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு,  அவர்களின் இன்ப துன்பங்களில் எல்லாம் உடன் இருக்கக்கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம்.  உடன் இருப்பவரின் துன்பங்களை கண்டும் காணாமல் இருந்த தருணங்களுக்காக இறைவனிடத்தில் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாக, நம்மை நாமே சுய ஆய்வு செய்து பார்த்து,  நமது செயல்களை எல்லாம் சரி செய்து கொண்டு, அருகில் இருப்பவரோடு நம்மால் இயன்ற நற்காரியங்களை புரிந்து, நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக நாம் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இறையாட்சிப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்! (8-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

         கடவுளுக்கு உரியவற்றை நாடுபவர்களாகவும் இந்த உலகின் போக்கின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது பாடுகளை குறித்தும் தனது மரணத்தை குறித்தும் உயிர்ப்பு குறித்தும் எடுத்துரைத்த போது அதை உணர்ந்து கொள்ளாத சீடர்கள், தங்களுக்குள் யார் பதவி பெறுவது  என்ற எண்ணத்தோடு செயல்பட துவங்குகிறார்கள்.  அதிலும் குறிப்பாக ஒரு தாயானவள் தன்னுடைய மகன்களுக்காக ஆண்டவர் இயேசுவினிடத்தில்,  நீர் ஆட்சி உரிமை பெற்று வருகிற போது வலப்புறமும் இடப்புறமும் தமது பிள்ளைகளை அமர செய்ய வேண்டும் என இயேசுவின் இடத்தில் மன்றாடுகிறார். இந்த இரு சகோதரர்களின் மீதும் மற்ற 10 திருத்தூதர்களும் கோபம் கொள்ளுகின்ற நிகழ்வினை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் வாசிக்க கேட்டோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உடனிருந்த இந்த சீடர்கள் இயேசுவின் மனநிலையை தங்கள் மனநிலையாகக் கொண்டிருக்காமல் இந்த உலகுக்கு உரியவற்றை நாடக்கூடியவர்களாக, மோகம் கொண்ட மனிதர்களாக, பதவிகளை பெறுவதற்கும் தங்களில் முதன்மையானவராக இருப்பதற்கும் ஆவல் கொண்டவர்களாக இருந்தார்கள்.  இந்த தவக்காலத்தில் இந்த இறை வார்த்தை பகுதியை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது, பல நேரங்களில் நாமும் கடவுளுக்குரியவற்றை நாடுவதை விட்டுவிட்டு இந்த உலக காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்கிறோம். ஆனால் இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு உகந்தவற்றை நாடுகிறவர்களாக வாழ்வதற்கான அழைப்பை பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நன்மைகளால் நம் வாழ்வை அலங்கரிப்போம்! (7-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தை வழியாக தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்றைய சமூகத்தில் நிலவிய ஒரு நிலையை சுட்டிக்காண்பிக்கின்றார்.  பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்களை நீதிமான்களாக காட்டிக் கொள்ள, கடுமையான சட்டங்களை பின்பற்றுவதற்காக மக்களை தூண்டினார்கள்.  கடுமையான சட்டங்களாக அவை இருந்தாலும் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தது பல நேரங்களில்.  அப்படிப்பட்ட சட்டங்களை கூட அவர்கள் பின்பற்றாமல் இவர்கள் அதனை பின்பற்றவில்லை நாம் மட்டும் எதற்கு பின்பற்ற வேண்டும் என்ற மனநிலையோடு, தங்கள் வாழ்வை தடம் புரண்ட வாழ்வாக அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு கற்பிக்கின்றவற்றில் நன்மையானதை எடுத்துக் கொண்டு அதை பின்பற்றுபவர்களாக நீங்கள் இருங்கள். அவர்கள் பின்பற்றவில்லை என்பதால் நாமும் பின்பற்ற வேண்டாம் என்பது அல்ல என்று சொல்லி, பிறர் உங்களுக்கு கற்பிப்பவற்றை குறித்து கவனமாய் இருக்கவும், நன்மையானதை எடுத்துக் கொள்ளவும், தீமையை விலக்கி விட்டு நன்மையை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார். இந்த இறைவனுடைய அழைப்பை உணர்ந்தவர்களாக நமது வாழ்வில் தீயது  எனப்படுவதை  விட்டுவிட்டு நன்மையெனக் கருதுவதை எல்லாம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் பலவிதமான நன்மைகளால் நம் வாழ்வை அலங்கரிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

இரக்கம் மிக்க மனிதர்களாக நாளும் வளர்வோம்! (6-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

           நம் விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும் நானும் இரக்கமுள்ள மனிதர்களாக இந்த சமூகத்தில் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள்  நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. 
        நாம் நம்மிடம் இருப்பதை திறந்த மனதோடு அடுத்தவருக்கு இன்முகத்தோடு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி கொடுக்கின்ற போது நாம் பல கைமாறுகளை கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற ஆழமான நம்பிக்கையினை இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு வலியுறுத்துகின்றன. நம் பகைவர்களை அன்பு செய்து, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய இரக்கமிக்க மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஆண்டவரின் பணியை செய்ய அவருக்கு உகந்தவர்கள் ஆகிடுவோம்! (5-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

இன்றைய முதல் வாசகத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு வந்த ஆபிரகாமை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த ஆபிரகாமை போலவே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது பாடுகளை பற்றி அறிவித்த போது இவ்வாறு உமக்கு நேரக் கூடாது என்று பேதுரு அவரை கடிந்து கொண்டார். பேதுருவின் வார்த்தையை கேட்ட மாத்திரமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து அப்பாலே போ சாத்தானே! என்று சொல்லி, நீ கடவுளுக்கு உரியவற்றை நாடாமல் மனிதனுக்குரியவற்றை நாடுகிறாய் என்று கூறினார். அதன் பிறகு தான் இந்த தாபோர் மலை உருமாற்றமானது நிகழ்கிறது தன்னுடைய சீடர்கள் தன்னையும் தனது பணியையும் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவராக தாபோர் மலைக்கு தன்னுடன் சில சீடர்களை அழைத்துக் கொண்டு இயேசு செல்லுகிறார். தாபோர்  மலையில் அவர்கள் இரண்டு விதமான குரலை கேட்கிறார்கள். ஒன்று- இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள் என்பதாகும்.  அந்த வார்த்தையை கேட்ட மாத்திரமே அவர்கள் இந்த ஆண்டவரின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.  அதனை முடித்த பிறகு இந்த மலையிலேயே நாம் தங்கியிருப்பது எத்தனையோ நல்லது என்று அவர்கள் எடுத்துரைத்த போது, நாம் இங்கிருத்தல் ஆகாது என்று சொல்லியவராக அவர்களை மலையிலிருந்து கீழே அழைத்துச் செல்லுகின்றார், இயேசு கிறிஸ்து.

    இந்த நிகழ்வுகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் மேன்மை மிக்கவர்களாக, மதிப்பு மிக்கவர்களாக, உயர்ந்த இடத்தை நாடுகிறவர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுளுக்கு முன்னிலையில் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக்கூடியவர்களாக  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஆபிரகாமை போல, நமது வாழ்வையும் அவர் மீது நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டு, அவரது பணியை செய்வதற்காக நாம் இருக்கின்ற நிலையில் இருந்து இன்னும் நாம் இறங்கி வர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையை இன்றைய நாளில் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து, நம்மிடம் இருக்கின்ற மதிப்பு மிக்க காரியங்கள், உயர்ந்த எண்ணங்கள், நான்தான் பெரியவன் என்ற ஆணவம் அனைத்தையும் தளர்த்தியவர்களாக ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு, இந்த தவக்காலத்தில் அவருக்குரிய மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கடவுளுக்கு உகந்த வாழ்வை தேர்ந்து கொள்வோம்! (4-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

        ஒவ்வொரு நாளும் கடவுளுக்குரிய மனிதர்களாக கடவுளின் சட்ட திட்டங்களை இதயத்தில் ஏற்று அதனை நிறைவேற்றுவதில் நாட்டம் கொள்ளக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவரிடத்திலும் அன்பு காட்டக்கூடியவர்களாகவும் பகைவர்களை மன்னிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற அழைப்பினை நமக்கு தருகிறார்.  இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு சொல்லிலும் செயலிலுமாக இதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் வாழுகிற போது, கடவுளுக்கு உகந்த வாழ்வை நாம் தேர்ந்து கொண்டவர்களாக இருப்போம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத்தகைய இயேசுவை பின்பற்றுகிற மனிதர்களாக நாம் வாழ்தற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கடவுளுக்குரியவர்களாக! (2-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே? இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக தவறிழைத்த மனிதர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொண்டு கடவுளுக்குரிய பாதையில் நடக்க வேண்டும் என்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரிசேயர் சதுசேயர் நெறியை காட்டிலும் நமது நெறி புதுமையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் பயணம் செய்தபோது, மற்றவர்கள் கூறியதை கேட்டு அதன் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் சொல்லுகிறவற்றிலும், கற்பிக்கின்றவற்றிலும் எது உண்மை, எது கடவுளுக்குரியது என்பதை கண்டு உணர்ந்தவராக நல்லதொரு நெறியை தன் வாழ்வில் பின்பற்றுகின்ற நபராக இயேசு இருந்தார். இந்த இயேசுவை பின் தொடரக்கூடிய நீங்களும் நானும் நமது நெறியை மற்றவரின் நெறியை காட்டிலும் நல்ல நெறியாக அமைத்துக் கொண்டு நம் வாழ்வு மூலமாக வாழுகின்ற மற்ற அனைவருக்கும் நல்லதொரு முன்மாதிரியாக திகழ்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார் எனவே நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை சரி செய்து கொண்டு கடவுளுக்குரியவர்களாக கடவுளின் பாதையில் நாளும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

நன்மை செய்ய ஆற்றல் பெறுவோம்! (1-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

யூதர்களுக்கு துன்பம் நேர்ந்த போது என்ன செய்வதென்று அறியாத எஸ்தரின் வளர்ப்பு தந்தையான மொர்த்தக்காய் அவர்கள் எஸ்தரின் உதவியை நாடுகிற போது கடவுளிடத்தில் மன்றாடுவதற்கு எஸ்தர் பணிகின்றார். அதன் அடிப்படையில் கடவுளிடத்தில் தங்களுக்கு நேருகின்ற இந்த இன்னலில் இருந்து தங்களை காக்க வேண்டும் என மொர்த்தக்காய்  மன்றாடியதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் என ஆண்டவரின் வார்த்தையானது நமக்கு தரப்படுகிறது.

 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரிய நாம் ஒவ்வொருமே நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் மற்றவர்கள் நமக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணுவது போல,  நாமும் நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவர்களுக்கு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். எப்படி ஒருவர் நமக்கு தீங்கு இழைத்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் நாம் தவிக்கிறோமோ, அப்படித்தான் மற்றவரும் தவிப்பார்கள் என்பதை உணர்ந்தவர்களாக நம்மால் இயன்ற அளவு நன்மைகளை மற்றவர்களுக்கு செய்யக்கூடியவர்களாக மற்றவரையும் நம்மை போல எண்ணக்கூடிய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இப்படித்தான் செபிக்க வேண்டுமா! (28-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

இன்றைய இறை வார்த்தையானது செபிப்பதை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவருக்கு முன்னிலையில் வார்த்தைகளை அடக்கி கொண்டே போவதிலோ அல்லது அடுக்கு மொழிகளை பேசுவதிலோ அல்லது ஆயிரம் ஆயிரம் துதிகளை பாடுவதிலோ இறைவன் நாட்டம் கொள்வதில்லை. மாறாக ஆண்டவரோடு உரையாடுகின்ற நாம் எதைச் சொல்லி உரையாடுகிறோம்? என்பதை உணர்ந்தவர்களாக கடவுள் முன்னிலையில் பேசுகிற போது, எண்ணி பார்த்து எதையும் செய்ய வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

      ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு எப்படி செபிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார். அந்த ஜெபத்தை நாம் சீர்தூக்கி பார்க்கிற போது நாம் நமது செயல்பாடுகளை வைத்து தான், அந்த ஜெபம் உருவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நாம் மற்றவரை எந்த அளவிற்கு மன்னிக்கிறோமோ அதே அளவிற்கு கடவுள் நம்மீது மன்னிப்பை பொழிய வேண்டும் என வேண்டுகிறோம். சோதனைகளை எதிர்கொள்ளுகிறபோது அந்த சோதனைகளுக்கு மத்தியிலும் மீண்டும் எழுந்து நிற்பதற்கான ஆற்றலை தர வேண்டுமென இறைவனிடத்தில் மன்றாடுவதற்கு இயேசு கற்றுக் கொடுத்தார். 

     இயேசுவின் செபம் நம்மால்  உணரப்படக்கூடிய,   நமது செயல்களை மையப்படுத்திய ஜெபமாக அமைந்தது. அத்தகைய செபமாக நமது வாழ்வும் அமைய வேண்டும் என்பது தான் இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு தருகின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்தவர்களாக இறைவனோடு உள்ள செப உறவில் நாம் எப்போதும் நம்பிக்கையோடும் பக்தியோடும் இறைவன் முன்னிலையில் எதைச் சொல்லுகிறோம் என்பதை சிந்தித்தவர்களாய், நாம் இறைவனோடு உள்ள உரையாடலை தொடர்வதற்கும், தொடர்ந்து இந்த உரையாடல் வழியாக இறைவனோடு உறவில் நிலைத்திருப்பதற்கும் ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

புதன், 8 மார்ச், 2023

நன்மைகள் புரிவோம்! (27-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 ஏழை எளியவருக்கு நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய உதவிகள் அனைத்தும் ஆண்டவருக்கு செய்கின்றது என்று சொல்லி இன்றைய இறைவார்த்தையின் வழியாக நன்மைகளை செய்கின்ற நபர்களாக நாம் வேண்டும்; மனிதநேயத்தோடு சக மனிதனின் தேவையை உணர்ந்தவராக; துன்பத்தில் வாடுகிறவருக்கும் தேவையில் உழல்பவர்களுக்கும் நாம் துணை புரிய வேண்டும் என்பதை இறைவன் எடுத்துரைக்கின்றார். 

இந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொள்கிற போது இந்த கடவுளுக்கு உரியவராக அவரது ஆட்சியில் பங்கு பெறுவோம் என்பதை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த இயேசு காட்டுகின்ற பாதையில் தொடர்ந்து பயணிக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை ஆசிர்வதிப்பார்.

சோதனைகளுக்கு மத்தியிலும் சாதனை! (26-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                    
                   இன்றைய முதல் வாசகம் முதல் பெற்றோரின் பாவத்தையும் இரண்டாம் வாசகம் பாவத்தினால் உண்டான சாவு குறித்தும் நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவின் சோதனைகளை பற்றியும் நாம் வாசிக்க கேட்டோம்.  தொடக்கத்தில் கடவுள் மனிதனை படைத்து இந்த மனிதன் தனக்கு கீழ்படிகின்ற மனிதனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு கனியினை உண்ணக்கூடாது என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னதை மீறி மனிதன் சோதனைக்கு உள்ளாகி விலக்கப்பட்ட கனியினை உண்டு கடவுளிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டான் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு அறிந்து இருக்கிறோம். ஒருவிதத்தில் இது போன்ற ஒரு சோதனையினை இயேசுவும் தன் வாழ்வில் மேற்கொள்ளுகிறார். 40 நாட்களுக்கு பிறகாக அவரை சந்திக்கின்ற அலகை உண்பதற்கு இனிய அப்பங்களை அவருக்கு உண்பதற்கு ஏற்ற வகையில் கல்லினை அப்பமாக மாற்றி உண்ணுமாறு அவரை தூண்டிய போது, அவர் கடவுளின் வார்த்தைகளே உணவு என்பதை எடுத்துரைக்கின்றார். இந்த உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் காண்பித்து தனக்கு அடிபணிந்தால் அனைத்தையும் தருகிறேன் என்று சொன்னபோது கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து உலக மாயைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல், கடவுளுக்குரியவற்றை நாடுகிறவராக இருந்து சாத்தானின் சோதனையிலிருந்து வெற்றி பெறுகிறார். மூன்றாவதாக கடவுளை சோதிக்கும் நோக்குடன்,  மேலிருந்து கீழே குதியும். உம்முடைய தூதர்கள் உம்மை தாங்கிக் கொள்வார்கள் என்று சொன்னபோது, நான் கடவுளை சோதித்தல் ஆகாது என்று சொல்லி அலகையினுடைய அத்தனை சோதனைகளையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முறியடித்ததை இன்று நாம் வாசிக்க கேட்டோம். 
இந்த தவக்காலத்தில் எண்ணிலடங்கா தவ முயற்சிகளை நாம் மேற்கொள்வதற்காக திட்டங்கள் பல தீட்டி இருந்தாலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாம் முனைப்போடு செயல்படுகிற போது பல நேரங்களில் பலவிதமான தடைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரிடலாம். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் கடவுளின் துணைகொண்டு சோதனைகளை எதிர்கொண்ட இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாய் எல்லாவிதமான தடைகளினின்றும் நம்மை நாம் மேற்கொள்ளுகின்ற தவ முயற்சிகளில் இருந்து விலகி விடாமல் நிலைத்திருந்து ஆண்டவருக்கு உரியவர்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள இன்றைய இறை வார்த்தைகள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். இந்த இறைவார்த்தைகளுக்கு  ஏற்ப நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, சோதனைகளுக்கு மத்தியிலும் சாதனைகள் புரியக்கூடிய மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வோம்! (25-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் லேவி என்ற மனிதனை தன்னை பின்பற்றி வருமாறு அழைக்கின்றார். இந்த லேவி என்ற மனிதன் வரி வசூலிக்க கூடிய பணியினை செய்து வந்தார். இப்பணியை செய்வதால் அவர் உரோமை அரசருக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். இவர் உரோமை அரசுக்கு நெருக்கமாக இருந்து, நம்மிடமிருந்து அதிக வரிகளை பெற்று அவர்களுக்கு கொடுக்கிறார் என்ற எண்ணத்தின் பெயரில் உடன் இருந்தவர்கள் எல்லாம் அவரை பாவி எனவும், நேர்மையற்ற மனிதர் எனவும் கருதி, அவரை அந்நியப்படுத்தினார்கள். இப்படி அந்நியப்படுத்தப்பட்ட நபரை எல்லோரும் அந்நியப்படுத்திய போது ஆண்டவர் அவரை தேடிச் சென்றார். தன்னைப் பின் செல்வதற்கான அழைப்பை அவருக்கு கொடுத்தார். இயேசு அவரோடு கொள்ளுகின்ற அந்த உறவை கண்டு பலரும், பாவிகளோடு இவர் விருந்து உண்கின்றாரே என்று சொல்லி அவரை ஏளனமாக பேசியபோது மருத்துவர் நோயுற்றவருக்குத்தானே அன்றி, நோயற்றவருக்கு அல்ல என்று சொல்லி தான் இந்த சமூகத்தில் யாரெல்லாம் தங்கள் வாழ்வை நெறி தவறி அமைத்துக் கொண்டார்களோ அவர்களை நெறிப்படுத்துவதற்காகத் தான் இவ்வுலகிற்கு வந்தேன் என்பதை இயேசு தன் சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டுவதை தான் இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம். 

          இந்த வாசகத்தின் பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நாமும் பல நேரங்களில் இந்த லேவியை போல நமது வாழ்வை தவறிழைத்த பாதையில் அமைத்துக் கொண்டிருந்தாலும், இன்றைய நாளில் நம்மை நாமே சரி செய்து கொண்டு ஆண்டவர் இயேசுவை நோக்கி முன் செல்லக்கூடியவர்களாக நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

உண்மையாக நோன்பு இருப்போம்! (24-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

நோன்பு இருத்தலை குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நோன்பு இருத்தல் என்ற பண்பானது நெடுங்காலமாகவே மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய ஒன்று. தங்களை வருத்திக் கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுவதை இது குறிக்கிறது. தங்களை வருத்திக் கொள்வதன் நோக்கம் உணவை தவிர்ப்பது மட்டும் என்று நினைத்துக்கொண்டு, பெயரளவில் நோன்பு இருப்பவர்களாகவும்,  கடவுளின் கட்டளையை பின்பற்றிய தவறியவர்களுமாக தொடக்கத்தில் இஸ்ராயேல் மக்கள் இருந்தார்கள். அவர்களின் இந்த நிலையை சுட்டிக்காட்டுகின்றவராக இறைவாக்கினர்  எசாயா இருந்தார். எனவே தான் அன்று அவர்கள் பின்பற்றிய நோன்பு முறைகளை குறித்து கேள்வி எழுப்புகின்ற வகையில் இன்றைய முதல் வாசகம் அமைந்திருப்பதை நாம் வாசிக்க கேட்டோம். இயேசுவோடு இருந்த சீடர்களும் கூட மானிட மகன் தங்களை விட்டு பிரிகின்ற நேரத்தில் நோன்பு இருக்க வேண்டும் என இயேசுவும் சுட்டிக்காட்டுகின்றார். நோன்பிருப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்ற நாம் உண்மையான நோன்பு என்பது எது என்பதை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். 
                உணவை தவிர்ப்பது மட்டும் உண்மையான நோன்பு அல்ல நாம் தவிர்க்கின்ற அந்த உணவினை கொண்டு இல்லாதவருக்கு உணவிட வேண்டும் என்ற உண்மைத்தன்மையை  உணர்ந்து கொண்டவர்களாக நம்மை நாமே தயாரிக்கின்ற வகையில் நோன்புகளை மேற்கொண்டு இல்லாதவருக்கு உதவி செய்து நம் வாழ்வை ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாய் நாம் அழைக்கப்படுகின்றோம். நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் ஆளப்பட நம்பிக்கையோடு இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்; இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இறைவனுக்கு உரியவற்றை நாடுவோம்! (23-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 வாழ்வும் அழிவும் நன்மையும் தீமையும் நமக்கு முன்பாக இருக்கிறது‌. இதில் எதை நாம் எடுத்துக் கொள்ள போகிறோம் என சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. 

    முதல் வாசகமானது நமக்கு முன்பாக ஆசிகளும் சாபங்களும் இருக்கிறது; நாம் ஆசிகளை நாடுகின்ற நபர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,  அவரை பின்பற்ற விரும்புகிற எவருமே தன்னலம் துறந்து பொதுநலத்தோடு தங்களின் சிலுவையை சுமந்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

         இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த கடவுளுக்குரிய காரியங்கள் இந்த மண்ணில் பல இருக்கின்றன. இந்த காரியங்களை முன்னெடுத்துச் செல்வதால் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை கடவுள் நமக்கு தரவல்லவர் என்பதை நாம் இதயத்தில் இருத்தியவர்களாக இந்த உலகின் போக்கிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து சூழ்நிலையிலும் கடவுளுக்கு உரியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.

 இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்ப்போம் ‌‌‌‌‌‌;  நாம் கடவுளுக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தவறி இருப்போமாயின் அத்தகைய தருணங்களை நினைவு கூர்ந்து கடவுளிடத்தில் மன்னிப்பு வேண்டுவோம். வெறும் வார்த்தைகளில் மன்னிப்பு என்று விட்டுவிடாமல் நமது வாழ்வில் இனி வருகின்ற நாட்களில் கடவுளுக்குரிய காரியங்களை ஆர்வத்தோடு நாடுவதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

தவக்காலம் - சாம்பல் புதன்! (22-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் என்பது தகுதியுள்ள மனிதர்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கின்ற  ஒரு காலம்.  இன்றைய நாள் இறை வார்த்தைகள் அனைத்துமே ஜெபத்திலும் தவத்திலும் தர்ம செயல்களிலும் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த வலியுறுத்தல்கள் அனைத்துமே நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்ளக் கூடியவர்களாக கடவுளை நோக்கி திரும்பி வருவதற்கான அழைப்பு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நம்மிடம் இருந்து சரி செய்யப்பட வேண்டியவைகளை கண்டு உணர்ந்து, சரி செய்து கொண்டு நமது வாழ்வை செபத்திலும், தவத்திலும், தர்ம செயல்களிலுமாக அலங்கரித்துக் கொண்டு ஆண்டவருக்கு உரிய ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு பயணிப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. இந்த அழைப்புக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த நாளை இனிய நாளாக மாற்றுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

யார் முதல்வர்! (21-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
 ஆண்டவர் இயேசுவின் பணியை செய்ய முன் வந்திருக்கக்கூடிய அனைவருமே எல்லாவிதமான இடர்பாடுகளுக்கு வந்து அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் ஆண்டவருக்கு உரியவற்றை நாடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இயேசு தனது இறப்பை பற்றி அறிவித்த போது கூட, அதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த சீடர்கள் தங்களுக்குள்ளாக யார் அடுத்த முதல்வராக இருக்கப் போவது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தங்களுக்குள் வாதாடி கொண்டிருந்தார்கள். அவர்களின் எண்ணங்களை அறிந்த இறைவன், சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார் என்று சொல்லி ஒவ்வொரு மனிதனும் சிறு குழந்தைகளை போல கடவுளுக்கு உரியவற்றை நாடுகிறவர்களாக கள்ளம் கபடமற்ற நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொண்டு வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.  இந்த இறைவனுடைய இறைவாக்கு பகுதிகள் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் எடுத்துக் கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இயேசுவின் பாதையில் நாளும் பயணிப்போம்! (20-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்துமே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றன. ஞானம் என்பது கடவுளிடமிருந்து வரக்கூடியது. இந்த ஞானத்தின் துணைகொண்டு நம் வாழ்வில் சந்திக்கின்ற அத்தனை நிகழ்வுகளையும் நாம் எதிர்கொள்வதற்கான ஆற்றலை நாம் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  உங்களோடு நாம் நம்புகின்ற இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாம் அவரை நாடி செல்கிறபோது அவரிடம் இருந்து பல நலன்களை பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நம்புகிறவருக்கு எல்லாம் கூடும் என்பதற்கு ஏற்ப தன்னை நம்பி வந்தவருக்கு நலம் தருகின்ற பணியினை இயேசு செய்வதை தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை புடமிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் ஆற்றுகின்ற அளப்பரிய காரியங்களை உணர்ந்து கொண்டவர்களாக நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

தூயோராய் வாழ்வோம்! (19-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           இன்று  முதல் வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் தூயவராக இருப்பதற்கான அழைப்பை தருகின்றார். ஏன் தூயவராக நாம் இருக்க வேண்டும் என்ற கேள்வி இதயத்தில் எழுகிற போது, முதல் வாசகம் அழகாக பதில் தருகிறது, நாம் முந்தைய காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து நம்மை நாமே சரி செய்து கொண்டு நாம் தூயவராகவும் சகோதரர்களிடையே பகைமை பாராட்டாத நபர்களாகவும் இருப்பதற்கான அழைப்பை முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

                     இரண்டாம் வாசகத்திற்கு கடந்து செல்லுகிற போது கூட,  பவுலடியார் நமது உடல் என்பது ஆவியார் தங்குகின்ற ஆலயம்; இந்த உடலாகிய கோவிலை தூய்மையானதாக வைத்துக் கொள்ள வேண்டுமென நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள உள்ளத் தூய்மையை வலியுறுத்துவதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  நற்செய்தி வாசகத்திலும் பழைய ஏற்பாட்டில் பழிக்கு பழி என்று இருந்த சூழல்களை எல்லாம் கடந்தெறிந்து புதிய வாழ்வுக்கான நெறிகளை ஆண்டவர் இயேசு கிறிஸ்து முன்மொழிவதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.


    இந்த இறை வார்த்தைகள் அனைத்துமே உடலாகிய இந்த ஆலயத்தை தூய்மைப்படுத்திக் கொள்தற்காக கடவுள் தரும் அழைப்பு என்பதை உணர்ந்தவர்களாக நம்மை நாமே தூய்மையாக்கிக் கொண்டு நம்மிடம் இருக்கின்ற கசப்பான உணர்வுகளையும் பகை உணர்வுகளையும் அகற்றியவர்களாக கடவுளுக்கு ஏற்ற தூயதொரு ஆலயமாக நமது உடலை மாற்றிக் கொண்டு ஆண்டவரின் பாதையில் நாளும் பயணிக்க அவரது அன்பினை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ள ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

புனித சிமியோன்! (18-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்று தாய்த் திரு அவையானது சிமியோன் அவர்களை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இவர் இயேசுவுக்கு முன்பாக பிறந்தவர். இவரை இயேசுவின் சகோதரர் என்றும் அழைப்பார்கள். காரணம், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பும் இவரது தந்தையும் உறவினர்கள் என்பதன் அடிப்படையில் இவர் இயேசுவின் சகோதரர் என பல நேரங்களில் அடையாளம் காட்டப்பட்டவர்.  எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியிலும் இயேசுவை அறிவிக்கின்ற பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். 

 எம்மாவூசுக்கு சென்ற சீடர்களுள் இவரும் ஒருவர் என இவரை குறித்து குறிப்பிடுவார்கள். இந்த சிமியோனை நினைவு கூருகின்ற இந்த நந்நாளிலே இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது, இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்ட மனிதர்களாக இருப்பதற்கு அழைப்பு தருகிறது. 
     ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடன் சில சீடர்களை அழைத்துக் கொண்டு தாபோர் மலைக்குச் சென்று அவர்கள் முன்னிலையில் உருமாற்றமடைந்து எலியாவோடும் மோசையோடும் உரையாடிக் கொண்டிருக்கின்றார். இந்த உரையாடலை கடந்த நிலையில் இயேசுவின் சீடர்கள், இங்கேயே இருப்பது நல்லது எனச் சொல்லியபோது, வாருங்கள் நாம் இறங்கிச் செல்வோம் என்று சொல்லக்கூடியவராய் மக்கள் மத்தியில் சென்று பலவிதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் பல்வேறு துன்பங்களுக்கு உட்பட்டு தன் இன்னுயிரையே அடுத்தவருக்காக தியாகம் செய்தார். இந்த இயேசுவின் மனநிலை நமது மனநிலையாக இருக்க வேண்டும். எத்தனை இன்னல்கள் இடையூறுகள் வந்தாலும் அத்தனைக்கும் மத்தியிலும் ஆண்டவரின் பணியை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக சிமியோனை போல நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.  இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் பணியை செய்ய ஆவலோடு செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வாழ்வுக்கு ஈடாய் எதை கொடுப்பது! (17-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 வாழ்வுக்கு ஈடாய் எதை கொடுப்பது, என்ற இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை குறித்து சிந்திக்கவும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவும் இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு அழைப்பு தருகின்றன.  ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன் என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமது சுயநலத்தை முன்னிறுத்தி வாழ்வதைவிட பிறர் நலத்தை முந்நிறுத்திய மனிதர்களாக இயேசுவைப்போல நாம் வாழ்கிற போது நம் வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு அழைப்பு விடுகின்றன. இந்த இறை வார்த்தை பகுதிகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, நமது வாழ்வை, நமக்கான வாழ்வு, நமது நலன் என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை சுருக்கி விடாமல்,  மற்றவர் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக இயேசுவைப் போல, இயேசுவாகவே இச்சமூகத்தில் வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

தெளிவு பெறுவோம்! ( 16-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 இன்றைய முதல் வாசகத்தில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை கடவுள் எடுத்துரைக்கிறார். பெரிய அழிவிலிருந்து காத்து வந்த கடவுள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது அன்பு உறவு கொள்ள வேண்டும்; அந்த அன்பு உறவில் நிலைத்திருக்க வேண்டும்; யாரும் யாருக்கு எதிராக தீங்கு விளைவிக்க கூடாது என்பதை எடுத்துரைப்பதை முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    நற்செய்தி வாசகத்திற்கு கடந்து செல்லுகிற போது இயேசு தன்னை யார் என மக்கள் எண்ணுகிறார்கள் என்ற கேள்வியை சுற்றி இருந்த தன் சீடர்களிடத்தில் எழுப்பி தான் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற புரிதலை வெளிப்படுத்துகின்றார். பல நேரங்களில் மனிதர்கள் ஆகிய நாம் நம்மை குறித்து மற்றவர் என்ன எண்ணுகிறார்கள் என்பதில் அதிக கவனம் கொடுக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை குறித்து என்ன உணர்ந்து வைத்திருக்கிறோம் என்பதற்கு செவி கொடுக்க மறந்தவர்களாக இருக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மற்றவர்களின் பார்வையையும் அறிந்திருந்தார். அதே சமயம் தன்னை குறித்த ஒரு ஆழமான புரிதலையும் கொண்டிருந்தார்.  அந்த புரிதலின் அடிப்படையில் தான் அவர் தன்னை குறித்து புகழ்ந்து பேசுகின்ற போதும் சரி, தன் வாழ்வில் கடவுள் வெளிப்படுத்த விரும்புகின்ற திட்டத்தை அறிவிக்கின்ற போது, அந்த திட்டத்திற்கு எதிராக பேசுகின்ற போதும் சரி,  அவர்களை உடனிருந்து சீடர்களை கடிந்து கொள்ளக்கூடியவராக இயேசு இருக்கின்றார்.

 தன்னை குறித்து தெளிவு கொண்டிருந்த இந்த இயேசுவின் மனநிலை நமது மனநிலையாக மாறிடவும், நாமும் நம்மை குறித்து இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், அந்த புரிதலோடு கடவுளை அனுதினமும் நாடவும் அவர் காட்டிய அன்புப் பாதையில் நிலைத்திருக்கவும் ஆற்றல் வேண்டி தொடர்ந்து இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நன்றியுள்ளவர்களாக வாழ்வோம்! (15-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப அழிவிலிருந்து தம்மை காத்துக் கொண்ட இறைவனுக்கு நன்றி சொல்லி நன்றியின் பலியினை செலுத்துகின்ற நோவாவை குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற ஒரு மனிதன் நம்பிக்கையோடு இயேசுவை நாடி வந்து பார்வை வேண்டி நிற்கின்றான். அவனது கண்களை தொட்டு குணப்படுத்திய இயேசு,  எதை பார்க்கிறாய் என்று கேட்க, மனிதர்களை பார்க்கிறேன், அவர்கள் மரங்கள் போல் தெரிகிறார்கள் என்று சொல்லுகிறான்.  கடவுளின் அருளால் தெளிவு பெறுகின்றான். இந்த இறை வார்த்தை பகுதிகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது,  பல நேரங்களில் மனிதர்கள் ஆகிய நாம் மரங்கள் போல இருந்து விடுகின்றோம். நாம் கடவுள் நமது வாழ்வில் செய்த எல்லா விதமான அளப்பரிய காரியங்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றி செலுத்துகின்ற மனிதர்களாக நாளும் நம்பிக்கையில் வளரக்கூடியவர்களாக தெளிவான பார்வை கொண்ட மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பினை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு தருகின்றன.  இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது எண்ணத்தையும் நமது பார்வையையும் தெளிவாக மாற்றிக் கொண்டு கடவுள் செய்த காரியங்களுக்கு நன்றி சொல்லுகின்ற நன்றியின் மனிதர்களாக இருப்பதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இறைவன் தொடர்ந்து வழி நடத்துவார்! (14-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தான் உருவாக்கிய மனிதனை குறித்து வருந்துகின்ற நபராக இருப்பதை நாம் வாசிக்க கேட்கின்றோம். நற்செய்தி வாசகத்திலும் எத்தனையோ நன்மைகளை செய்து இருந்தாலும்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தங்களோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள தவறியவர்களாக, உணவில்லை என்று தங்களுக்குள் வாதாடுகின்ற சீடர்களோடு இயேசு உரையாடிய நிகழ்வினை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

 இந்த இரு வாசகப் பகுதிகளுமே,  மனிதர்கள் மாறக்கூடியவர்களாக இருந்தாலும், கடவுள் எப்போதும் மாறாத நிலையான நம்பிக்கையின் தெய்வமாக இருக்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.  நாம் நம்புகின்ற கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அவரின் உடனிருப்பு அவரின் பராமரிப்பு நம்மை என்றும் வழிநடத்தும் என்ற ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

 நோவாவின் காலத்தில் மனிதர்கள் தீங்கிழைத்த போதும், நேர்மையாளரை காண்பதற்காக கடவுள் அவர்களுக்கு உதவியதை நாம் வாசிக்க கேட்கின்றோம். இந்த வாசகப் பகுதிகளை மனதில் இருத்தியவர்களாக நாம் கடவுள் மீது நம்பிக்கையோடு இருக்கின்ற போது இந்த கடவுள் நம்மை வழி நடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக கடவுள் மீது ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வாழ்வை முறைப்படுத்துவோம்! (13-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

              கடவுளின் கட்டளைக்கு செவி கொடுக்க மறந்து இருந்தாலும்,  மனிதன் மீது கடவுள் இரக்கம் கொண்டார் என்பதன் அடையாளம் ஆதிப் பெற்றோருக்கு ஆண்டவர் குழந்தை செல்வத்தை கொடுத்தார். இந்த குழந்தைகளை கடவுளுக்குரிய காரியங்களில் வளர்க்க அவர்கள் தவறியதன் விளைவு,  காயின் ஆபேல் மீது பொறாமை கொண்டு ஆபேலை கொன்றான். ஆபேலை கொன்று  இருந்த நிலையிலும் கூட கடவுள் அவர்கள் செய்ததை தவறு என்பதை சுட்டிக்காட்டி, வாழ்வை நெறிப்படுவதற்கான அழைப்பை கொடுத்தார். மீண்டும் மூன்றாவதாக சேத்து என்ற மகனையும் அந்த ஆதி பெற்றோருக்கு கடவுள் கொடுத்து அவர்களுக்கு ஆசிகளை வழங்கினார்.

 தவறிழைக்கின்ற போதெல்லாம் கடவுள் மன்னித்து இரக்கம் காட்டுவதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

ஆனால் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, அவர் செய்த அத்தனை அருள் அடையாளங்களை கண்டிருந்தாலும் கூட அவரிடத்தில் இன்னும் அதிகமாக அடையாளங்களை தேடுகிறவர்களாக கேட்கிறார்களாகத் தான் பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தார்கள். வானத்திலிருந்து ஒருவர் அடையாளத்தை தருகிறார் என்றால் அவர் மானிடமகன் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் மேலோங்கியது. எனவே இயேசுவின் இடத்தில் வந்து நின்று வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை தங்களுக்கு காட்டுமாறு கேட்டார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கண்டு விசுவாசிக்காத அவர்களுடைய உள்ளத்தை உணர்ந்தவராக, நான் உங்களுக்கு எந்த  அடையாளத்தையும் தரப் போவதில்லை என்று சொல்லக்கூடியவராக, தான் செய்கின்ற நற்காரியங்களை  தொடர்ந்து செய்கிறவராக இருந்தார். இந்த இயேசுவின் மனநிலை இன்று நமது மனநிலையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் நமது வாழ்வை, தவறு இழைத்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டிருந்தாலும் கூட,  நம்மை சரி செய்து கொள்வதற்கு இறை வார்த்தைகள் அழைப்பு தருகின்றன. இந்த இறை வார்த்தைகள் வழியாக கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்ற அத்தனை காரியங்களையும் முறையாக செய்வதற்கு அழைக்கப்படுகின்றோம்.  பல நேரங்களில் வெளிப்புற அடையாளத்தை நாடிச் செல்வதை விட, கடவுள் நமது வாழ்வில் செய்த அத்தனை காரியங்களையும் அமைதியில் அமர்ந்து உணர்ந்து கொண்டு இந்த இயேசுவின் மீதான ஆழமான நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வாழ்வை தேர்ந்து கொள்ள ஞானம் தாரும்! (12-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
  


   பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நந்நாளிலே இன்றைய இறை வார்த்தை அடிப்படையில் நாம் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

 முதல் வாசகம் அழகாக குறிப்பிடுகிறது நமக்கு முன்னிலையில் வாழ்வும் சாவும் இருக்கிறது. எதை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

         இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு கடந்து செல்லுகிற போது நம் மத்தியில் இருந்த இயேசு கிறிஸ்து நமக்கு வாழ்வு வழங்க வந்தவர். அதை உணர்ந்து கொள்ளாமல் ஞானமற்றவர்களாக இந்த இயேசுவின் இறப்புக்கு நாம் அனைவரும் காரணமாகி விட்டோம் என்பதை பவுல் எடுத்துரைக்கின்றார். 

       நற்செய்தி வாசகத்திற்கு கடந்து செல்கிற போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழுகிற போது, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான பல காரியங்களை முன்னுரைக்கின்றார். அத்தகைய காரியங்கள் அத்தனையுமே நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு எதை செய்தாலும் அதை அர்த்தமுள்ள உணர்வோடு அதன் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக செய்வதற்கான அழைப்பை தருகிறது.  நாம் கடவுளுக்கு முன்னிலையில் கொடுக்கிற காணிக்கை பொருட்களை அவர் விரும்புவதில்லை. மாறாக உள்ளார்ந்த மாற்றத்தோடு உறவுகளோடு இணைந்து வாழ்கின்ற வாழ்வையே அவர் விரும்புகின்றார்.  இந்த கடவுளின் முன்னிலையில் எண்ணிப் பாராமல் நம் வார்த்தைகளை கொடுப்பதை விட, எதையும் எண்ணிப் பார்த்து செய்வதற்கான அழைப்பை தருகிறார்.

 நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள அத்தனை காரியங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உரைத்ததை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த இறைவார்த்தை பகுதிகள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது முதல் வாசகம் சொன்னது போல வாழ்வையும் சாவையும் தேர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு. இயேசுவின் வார்த்தைகளை கேட்டு நாம் வாழ்வை தேர்ந்து கொள்ளக்கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் எடுத்துரைத்த அத்தனை காரியங்களும் நமது வாழ்வை நெறிப்படுத்துவதற்கு என்பதை உணர்ந்து இருக்கின்ற நாம், அந்த காரியங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

    

பரிவு கொள்வோம்! (11-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

      தவறிழைத்த மனிதன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்தான். கடவுள் அவனிடத்தில் என்ன செய்தாய் என்று வினவிய போது, தான் தவறு இழைத்ததாக அவன் ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய தவறை மற்றவரின் தவறு என, நீர் கொடுத்த அந்த பெண் தான் நான் தவறிழைக்க காரணமாக அமைந்தாள் என்று மற்றவர் மீது குற்றத்தை சுமத்தி தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள முயன்றான் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிறது.  ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் இந்த முதல் வாசகத்தை நாம் இணைத்து சிந்திக்கின்ற போது கடவுள் மனிதர்கள் மீது எப்போதும் பரிவு கொண்டவராக இருக்கிறார். மனிதன் தவறு இழைத்ததன்  விளைவாக பாவத்திற்கு உரியவனாக மாறினாலும் கூட இந்த மனிதனின் மீது இரக்கம் கொள்ளக்கூடியவராக கடவுள் இருந்தார். அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அகற்றிய போதும் கூட அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கக் கூடியவராக கடவுள் இருந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

     இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை கேட்பதற்காக பலரும் ஒன்று கூடி வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களுடைய உள்ளத்து தேவையை உணர்ந்தவராக அவர்கள் மீது பரிவு கொண்டு,  உணவு இல்லாமல் அவர்கள் போகின்ற வழியில் மயக்கமற நேரலாம் என்பதை உணர்ந்தவராக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கடவுளின் வல்லமையோடு பகிர்ந்து கொடுக்கின்ற ஒரு நிகழ்வைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம். 

         நம் மீது பரிவு கொண்டிருக்கின்ற இந்த இறைவனிடம் காணப்பட்ட அத்தகைய பரிவு குணத்தை நமது குணமாக மாற்றிக்கொண்டு தீமை செய்பவர்களை கூட நமக்கு எதிராக தீமைகளை புரிகின்ற நபர்களின் மீதும் கூட பரிவு காட்டக்கூடிய நபர்களாக, நாம் இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 7 மார்ச், 2023

கடவுளின் வார்த்தையா ?சாத்தானின் வார்த்தையா? (10-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


 கடவுள்  படைத்த மனிதன் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து வாழ வேண்டும் என கடவுள் விரும்பினார் ஆனால் மனிதன் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுப்பதை விட தீமையின் உருவமான சாத்தானின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து தன் வாழ்வை கறைபடுத்திக் கொண்டதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகப் பின்னணியோடு நற்செய்தியை நாம் நோக்குகிற போது,  பல நபர்கள் நம்பிக்கையோடு கடவுளை நாடி வந்து, நலன்களை பெற்றுக் கொண்டதை நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

   தவறிழைத்த ஒவ்வொரு மனிதனுமே தான் செய்த செயலை சீர்தூக்கிப் பார்த்து தான் செய்தது தவறு என உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிற போது கடவுள் அவனை மன்னிக்க கூடியவராக இருக்கின்றார்.

 ஆனால் தொடக்கத்தில் தான் செய்தது தவறு என்பதை அறிந்திருந்த நிலையில் கடவுள் அவரிடத்தில் கடவுளின் குரலை கேட்டு அவரிடத்தில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பதற்கு பதிலாக தன்னை மறைத்துக் கொள்ளக்கூடியவனாக மனிதன் இருந்தான் என்பதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

 இந்த இறை வார்த்தை பகுதிகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் அறிந்தோ அறியாமலோ  செய்த அத்தனை தவறுகளையும் நினைவு கூருவோம்.  கடவுளிடத்தில் நம்பிக்கையோடு அவர் நம்மீது மனமிரங்கி நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடத்தில் நமது குற்றங்களை அறிக்கையிட்டு மனமாற்றம் பெற்றவர்களாக பாவத்திற்கு ஏதுவான அத்தனை சூழ்நிலைகளையும் தகர்த்தெறியக் கூடியவர்களாக கடவுளின் வார்த்தைகளை மட்டுமே இதயத்தில் இருத்திக் கொண்டு அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை பகுதி வழியாக நமக்கு வழங்கப்படுகிறது. 

  இந்த வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு நமது வாழ்வாக மாற்றுவதற்கு இறைவனுடைய அருளை இன்றைய நாளில் இறைஞ்சி மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வெள்ளி, 3 மார்ச், 2023

இணைந்து வாழ்வோம் ! (9-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்று கண்ட இறைவன் தகுந்த துணையை கொடுத்தார். கடவுள் இந்த உலகத்தில் மனிதன் மற்றவரோடு இணைந்து மகிழ்ந்து இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புக் கூடியவராக இருக்கின்றார். இந்த கடவுளின் விருப்பத்துக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக எழுப்பிப் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.  அன்றைய யூத சமூகத்தில் மனிதர்களை அன்னியப் படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மெசியா வந்தால் யூதர்களை மட்டுமே மீட்டு செல்வார் என்ற மனநிலை அவர்களின் மனதில் மேலோங்கி இருந்தது.
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் பயணம் 
செய்தபோது இந்த சமாரியர்களையும் கனானியர்களையும் தேடிச் சென்று இறைவனுடைய மீட்பு அனைவருக்கும் ஆனது என்பதை எடுத்துரைப்பவராக இருந்தார். இந்த சமாரியர்களாக இருக்கட்டும் அல்லது கனானியர்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவருமே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். யூதர்கள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள் என்பது அல்ல,  மாறாக சமூகத்தில் வாழ்ந்த அத்துணை பேரும் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கானானியப் பெண் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடவுள் படைத்த இந்த உலகத்தில் ஒருவர் மற்றும் ரோடு இணைந்து அந்நியப்படுத்தாது ஒதுக்காது சேர்ந்து வாழ்வதற்கான ஆற்றலை இறைவன் இன்னும் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நன்மைகளை மட்டுமே தருவோம்! (8-2-23)

உள்ளார்ந்த மாற்றம் பெறுவோம்! (7-2-23)

இறைவன் இயேசுவில்  அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 ஆண்டவர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நாம் வாழ்வதற்கான இந்த அழகிய உலகை பார்த்து பார்த்து படைத்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுளால் படைக்கப்பட்ட உயரிய படைப்பாகிய மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே உள்ளார்ந்த தூய்மை கொண்டவர்களாக, கடவுளுக்கு உகந்தவற்றை நாடுகின்ற நபர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத பலர் வெளிப்புற அடையாளத்தை வைத்துக்கொண்டு ஆண்டவரின் செயல்களில் கூட குற்றத்தை கண்டுபிடிக்கக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த இறை வார்த்தை பகுதியோடு நமது வாழ்வை உரசிப் பார்க்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளால் படைக்கப்பட்ட நாம் உள்ளார்ந்த மாற்றத்தோடு கடவுளை நாடுகிறவர்களாக இருக்கின்றோமா அல்லது வெளிப்புற அடையாளத்தை மட்டுமே நாம் முதன்மைப்படுத்தக்கூடிய நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு உள்ளார்ந்த மாற்றத்தோடு கடவுளை நாடிச் செல்லவும் அவரது வார்த்தைக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக இருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

படைப்பின் நோக்கத்தை உணர்வோம்! (6-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 கடவுள் இந்த உலகை மிகவும் அழகாக படைத்தார். எல்லாவற்றையும் படைத்து விட்டு இறுதியில் மனிதனை படைத்தார்.  நம்மை படைப்பதற்கு முன்பதாக நமக்கு தேவையான அத்துணை காரியங்களையும் பார்த்து பார்த்து உருவாக்கிய கடவுள், இன்றைய இறை வார்த்தையின் வழியாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பு தருகின்றார்.

 ஆண்டவரால் படைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே நமது படைப்பின் நோக்கத்தை உணர்ந்தவர்களாக மனிதநேயத்தோடு நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முற்படுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காகவும் அவரிடமிருந்து நலன்களை பெற்றுக் கொள்வதற்காகவும் பலரும் இயேசுவை நோக்கிச் சென்றார்கள் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நமது வாழ்வில் எத்தனையோ நன்மைகளை இந்த இயேசுவினிடத்தில் இருந்து பெற்றிருந்தாலும் நமது வாழ்வு இந்த இயேசுவை தேடிச் செல்லுகின்ற வாழ்வாக இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, ஆழமான நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் சென்று பலவிதமான நன்மைகளை பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்துவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

ஏற்றப்பட்ட தீபமாக ஒளி வீசுவோம்! (5-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. தூய ஆவியாரின் தூண்டுதல் பெற்றவர்களாக நாம் ஒவ்வொருவருமே நம்மிடம் இருப்பதை மற்றவரோடு எப்போதும் பகிர்ந்து கொண்டு வாழ இன்றைய முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் அறிவுறுத்துகின்றன. இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளும் போது நாம் உப்பை போல மற்றவர்களுக்கு பயன் தருகின்றவர்களாக இருப்போம்.  மற்றவர்களுக்கு பயன்தராத ஒரு வாழ்வை நாம் வாழுகிற போது உவர்ப்பற்ற நிலையில் உப்பு வெளியே கொட்டப்படுவது போல நாமும் வீசி எறியப்படுவோம் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.

 தூய ஆவியின் தூண்டுதல் பெற்ற நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அதற்கு செயல் வடிவம்  தருகின்ற நபர்களாக இருக்கின்ற போது மலையின் மீது ஏற்றப்பட்ட விளக்கு போல, மற்றவர்களுக்கு பலன் தருகின்ற வகையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். இத்தகைய வாழ்வு நமது வாழ்வாக மாறிட இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஏற்றப்பட்ட விளக்கைப் போல மற்றவர்களுக்கு பயன் கொடுக்கக் கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இருப்பதை பகிருவோம்! (4-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இன்றைய முதல் வாசகம் நன்மை செய்யவும், நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு அழைப்பு தருகிறது.  நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கோதுமை மணி போல நாம் மண்ணில் விழுந்து மடிந்து மற்றவருக்கு பயன் தர வேண்டும் என குறிப்பிடுகின்றார். இந்த இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது இந்த இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருமே இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு முன் உதாரணமாக இந்த வார்த்தைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வு இருக்கிறதா என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்மால் முடிந்த நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டே செல்லவும், நம்மிடம் இருப்பது முழுவதையும் பகிராவிட்டாலும், இருப்பதிலிருந்து பகிரக்கூடிய மனிதர்களாக தொடர்ந்து இருக்கவும், அடுத்தவருக்காக நம் வாழ்வையும் இழக்க துணிகின்றவர்களாக நாம் வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்! (3-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
          குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதற்கு ஏற்ப ஏரோதின் உள்ளமானது கலக்கமுறுகிறது. 
இயேசுவின் பெயர் எங்கும் பரவுகின்ற நேரத்தில் யார் இந்த இயேசு? என்ற கேள்வி அவனுக்குள் எழுகிறது. தன்னால் கொலை செய்யப்பட்ட திருமுழுக்கு யோவானாக இந்த இயேசு இருப்பாரோ என்ற அச்ச உணர்வு இந்த இயேசுவை பார்க்க வேண்டும் என்ற  ஆவலை ஏரோது அரசனுக்குள் ஏற்படுத்தியது.இந்த ஏரோது  அரசன் தனது வாழ்விலே தான் செய்த தவறுகளின் நிமித்தமாக எப்பொழுதும் குற்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருந்தான் என்பதை இந்த இறை வார்த்தை பகுதிகள் நமக்கு விளக்கி கூறுகின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் சகோதர அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நமக்கு வலியுறுத்துகிறார்.

    இயேசுவின் வாழ்வும் இந்த சகோதர அன்பை வலியுறுத்திய ஒரு வாழ்வாகவே இருந்து. அவர் வாழ்ந்த போது அந்த சமூகத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்வு நெறி தவறி இருந்தபோது சகோதரர்களாக மற்றவர்களை பார்க்கத் தவறி, அந்நியப்படுத்தி வைத்திருந்த அந்த சமூகத்தில் அனைவரையும் அரவணைப்பவராக அனைவரையும் தேடி செல்லுகின்ற ஒரு மனிதனாக இயேசு இருந்தார். சகோதர அன்பில் நிலைத்திருங்கள் என்ற இயேசு, அதை தன் சொல்லிலும் செயலிலும் வெளிகாட்டினார். இவரை ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரும் நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் இருக்கிற ஒவ்வொருவரோடும் சகோதர அன்பில் நிலைத்திருப்பதற்கான ஆற்றலை வேண்டுவோம். நாம் சகோதர அன்பில் நிலைத்திருக்கின்ற போது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்வோம் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் சகோதர அன்பு நிலைத்திருக்க அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நான் கடவுளுக்கு காணிக்கையாக தரவிருப்பது என்ன? (2-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
       இன்று இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் அனைவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த விழாவினை கொண்டாடிட அழைக்கப்படுகின்றோம்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கோவிலில் பெற்றோர்கள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்ற ஒரு நிகழ்வு யூத சமூகத்தில் இருந்த ஒரு சட்ட திட்டத்தையும் வழிபாட்டு முறையையும் நாம் நினைவு கூருவதற்கு வலியுறுத்துகிறது. கடவுள் மனிதனை படைத்ததன் நோக்கமே இந்த மனிதன் இந்த சமூகத்தில் மற்றவரோடு மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே. கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே, இந்த இயேசுவுக்கு எத்தகைய காணிக்கைகளை திரும்ப கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். நாம் கொடுக்கின்ற பணமும் 
பொருளும் மட்டும் கடவுளுக்கு உகந்தது என்று நாம் எண்ணி விடலாகாது.  அன்று பலவிதமான குற்றங்குறைகளை செய்தவர்கள் எல்லாம் கடவுளுக்கென பலிப் பொருட்களை கொடுத்துவிட்டு தாங்கள் செய்த குற்றங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டது என்ற மனநிலையோடு பயணித்தார்கள்.

   கடவுள் விரும்புவது இத்தகைய பலியை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்பது இத்தகைய பொருள்களை அல்ல என்பதை உணர்ந்தவர்களாக, கடவுள் விரும்புவது உள்ளார்ந்த மாற்றம் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் கடவுளுக்கு காணிக்கையாக தரவிருப்பது நமது தூய்மையான உள்ளம் என்பதை மட்டும் இதயத்தில் இருத்தியவர்களாக நம்மிடம் இருக்கின்ற குற்றம் குறைகளை எல்லாம் சரி செய்து விட்டு, நம்மை நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குவோம். நம்மை படைத்த இறைவன் நம்மை படைத்ததின் நோக்கத்தை நாம் நிறைவேற்றுகின்ற மனிதர்களாக ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையை வாழ்வாக்கக் கூடியவர்களாக சொல்லிலும் செயலிலும் இந்த இயேசுவை பின்பற்றக்கூடியவர்கள் நாம் என்பதை வெளிகாட்டுகின்ற மனிதர்களாக தொடர்ந்து வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

            

இயேசுவின் வல்ல செயல்களை கண்டு கொள்வோம். (01-02-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய வாசகங்கள் அனைத்துமே நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக நாம் நாளும் பயணிக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. இயேசு கிறிஸ்து செய்த எல்லா அரும் அடையாளங்களும் நம்பிக்கையை மையப்படுத்தியது. நம்பிக்கையோடு துன்பங்கள் வருகிற போதும், தோல்விகளை சந்திக்கிற போதும் மனம் தளர்ந்து விடாமல், கடவுள் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தருகிறார் என்ற ஆழமான நம்பிக்கையோடு  கடவுளை நாடிச் செல்கிறபோது நாம் நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.


இயேசுவை சொந்த ஊரில் இருந்தவர்கள் ஏற்றுக் கொள்ள தயங்கியதன் விளைவு,  அவர்கள் இந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள தயங்கியதன் விளைவு இயேசுவால் அங்கு வல்ல செயல்களை செய்ய முடியவில்லை என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். நாம் நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் சென்று பலவிதமான நலன்களை பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். துன்பங்களும் தோல்விகளும் வருகின்ற போது எல்லாம், ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்! (31-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

             ஆண்டவர்   இயேசுவின் மீது நமது கண்களை பதிய வைக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இயேசுவின் மீது தனது பார்வையை பதித்த இருவரை பற்றி இன்றைய நற்செய்தி வாசக நமக்கு எடுத்துரைக்கிறது.

 ஒன்று யாயீர் என்ற மனிதன். தன்னுடைய மகளின் உடல் நலத்திற்காக ஆண்டவர் இயேசுவை நாடி வருகிறார். நீர் வந்து எனது மகளை தொட்டால் அவள் குணம் பெறுவாள் என்று சொல்லி நம்பிக்கையோடு இயேசுவை அழைத்துச் செல்கிறார் ‌‌.  இன்னொரு புறம் 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒரு பெண்மணி, தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் செலவு செய்தும் குணம் பெற முடியாத நிலையில் ஆண்டவர் இயேசுவின் மீது தனது கண்களை பதிய வைத்தவளாய், நம்பிக்கையோடு அவரின் மேலாடையை தொட்டால் போதும், நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கை கொண்டவளாய் இயேசுவின் மேல் ஆடையை தொட்டு குணம் பெறுவதை நாம் வாசிக்க கேட்டோம்.

      இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்கி பார்க்கிற போது, நாம் இந்த இயேசுவின் மீது எத்தகைய கண்களை பதிய வைத்திருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம். நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக நம்பிக்கையோடு இந்த இயேசுவின் மீது நாம் பார்வையை பதிக்கிற போது, இந்த இயேசுவிடமிருந்து நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவார்த்தை வலியுறுத்தும் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இனி வருகின்ற நாட்களில் நம்பிக்கையோடு கடவுளின் மீது நமது பார்வையை பதிய வைக்க ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

நம்பிக்கையால் சான்று பகருவோம்! (30-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையின் வழியாக நம்பிக்கையால் சான்று பகருகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் பிடித்திருந்த ஒரு மனிதனிடத்தில் இருந்து அப்பேயை அகற்றுகின்றார். இயேசுவின் இந்த செயலைக் கண்டு இயேசுவால் தங்களுடைய தொழிலுக்கு இழப்பு ஏற்பட்டதாக எண்ணி பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டிருந்தாலும் கூட, அவர் செய்த செய்கையினால் இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்கியவர்களாக இவ்விடத்தை விட்டு அகன்று விடும் என்று சொல்லியபோது, இயேசு மற்றொரு இடத்திற்கு நற்செய்தி ஆற்றுவதற்காக தன் பயணத்தை மேற்கொண்டார்.

 அவர் தன் பயணத்தை மேற்கொள்ளுகின்ற அந்த தருணத்தில் குணம் பெற்ற மனிதன் தானும் உம்மை பின் செல்ல விரும்புகிறேன் என்று சொன்னபோது நீ உன் வீட்டிற்கு சென்று உறவுகளை சந்தி என்று சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு அனுப்பப்பட்ட நபர் வீட்டிற்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த மக்களுக்கு எல்லாம் தான் எப்படி குணம் பெற்றேன் என்பதை எடுத்துரைக்கக் கூடியவராக, தான் அறிந்து கொண்ட இந்த இயேசுவை அடுத்தவருக்கு அறிவிக்கின்ற ஒரு மனிதனாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

   இந்த மனிதனைப் போலவே எத்தனையோ நன்மைகளை ஆண்டவரிடமிருந்து
பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நாம் அறிந்து அன்பு செய்கின்ற அந்த ஆண்டவரை நமது நம்பிக்கையின் நிமித்தமாக  மற்றவருக்கு அறிவிக்கின்ற நல்லதொரு சாட்சிகளாக மாறிட இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு,  நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்  நாம் மற்றவருக்கு இந்த இயேசுவை அறிவிக்கின்ற மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...