இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
தங்களை நேர்மையாளராக காட்டிக்கொள்ள, பலரை குற்றவாளிகளாக மாற்றுகின்ற நிகழ்வு அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னை நேர்மையாளராக காட்டிக் கொள்வதற்காக தனக்குப் பின்னால் இருந்த ஒரு நபரோடு ஒப்பிட்டு பார்த்து ஒருவர் இறைவேண்டல் செய்கின்றார். ஆனால், மற்றவரோ கடவுள் முன்னிலையில் தன்னை தாழ்த்திக் கொண்டு, தாழ்ச்சியோடு கடவுளிடத்தில் மன்றாடுகின்றார்.
இறைவன் விரும்புவது தாழ்ச்சி கொண்ட மனதையே. இந்த தாழ்ச்சி கொண்ட மனம் தான், நம்மை, நான் என்ற ஆணவத்திலிருந்து அடக்கி, கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்த வைக்கிறது. நாம் என்ற ஆணவத்தை தகர்த்தெறிந்து, மற்றவரை விட நாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவதற்கு பதிலாக, நாம் சமமானவர்கள், எல்லோரும் ஒன்று என்ற மனநிலையோடு, ஒவ்வொரு நாளும் கடவுளுக்குரிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக