இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தை வழியாக நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க நாம் அழைக்கப்படுகின்றோம். நல்லது செய்தாலும் அதில் தீமையை கண்டு கொள்ளுகின்ற மனப்பான்மை உடையவர்களாக நம்மில் பலரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இயேசு செய்த அரும் அடையாளங்களிலும் குற்றம் காணும் மனநிலையோடு பலர் அவரை சூழ்ந்திருந்தார்கள். பேச்சிலிருந்த ஒரு மனிதனின் தீய ஆவியை விரட்டி அவரை பேச வைத்த போது கூட, இயேசு செய்த அந்த வல்ல செயலை கண்டு இறைவனை புகழ்வதை நிறுத்திவிட்டு, தீய ஆவியின் துணையோடு தான் இவர் இதனை செய்கிறார் என்று சொல்லி, அவர் மீது எப்படியாவது குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையோடு செயல்பட்டதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்தி காட்டுகின்றன.
பல நேரங்களில் இதே மனநிலை கொண்ட மனிதர்களாகத்தான் நாமும் பல நேரங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் பலர் செய்கின்ற நன்மைகளை நோக்குவதற்கு பதிலாக அதில் இருக்கின்ற தீமைகளை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கண்டு, அவர்களை குற்றவாளிகள் என குறிப்பிடுகிற மனிதர்களாக நம் வாழ்வை பல நேரங்களில் அமைத்துக் கொள்கிறோம். இத்தகைய செயலிலிருந்து நம்மை முழுவதுமாக விடுவித்துக் கொள்வதற்கு இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். எனவே இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை ஆய்வு செய்து பார்த்து நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்களை தகர்த்தெறிந்து கடவுளின் பாதையில் நாளும் நடக்க அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக