இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் அனைவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த விழாவினை கொண்டாடிட அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கோவிலில் பெற்றோர்கள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்ற ஒரு நிகழ்வு யூத சமூகத்தில் இருந்த ஒரு சட்ட திட்டத்தையும் வழிபாட்டு முறையையும் நாம் நினைவு கூருவதற்கு வலியுறுத்துகிறது. கடவுள் மனிதனை படைத்ததன் நோக்கமே இந்த மனிதன் இந்த சமூகத்தில் மற்றவரோடு மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே. கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே, இந்த இயேசுவுக்கு எத்தகைய காணிக்கைகளை திரும்ப கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். நாம் கொடுக்கின்ற பணமும்
பொருளும் மட்டும் கடவுளுக்கு உகந்தது என்று நாம் எண்ணி விடலாகாது. அன்று பலவிதமான குற்றங்குறைகளை செய்தவர்கள் எல்லாம் கடவுளுக்கென பலிப் பொருட்களை கொடுத்துவிட்டு தாங்கள் செய்த குற்றங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டது என்ற மனநிலையோடு பயணித்தார்கள்.
கடவுள் விரும்புவது இத்தகைய பலியை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்பது இத்தகைய பொருள்களை அல்ல என்பதை உணர்ந்தவர்களாக, கடவுள் விரும்புவது உள்ளார்ந்த மாற்றம் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் கடவுளுக்கு காணிக்கையாக தரவிருப்பது நமது தூய்மையான உள்ளம் என்பதை மட்டும் இதயத்தில் இருத்தியவர்களாக நம்மிடம் இருக்கின்ற குற்றம் குறைகளை எல்லாம் சரி செய்து விட்டு, நம்மை நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குவோம். நம்மை படைத்த இறைவன் நம்மை படைத்ததின் நோக்கத்தை நாம் நிறைவேற்றுகின்ற மனிதர்களாக ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையை வாழ்வாக்கக் கூடியவர்களாக சொல்லிலும் செயலிலும் இந்த இயேசுவை பின்பற்றக்கூடியவர்கள் நாம் என்பதை வெளிகாட்டுகின்ற மனிதர்களாக தொடர்ந்து வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக