இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்துமே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றன. ஞானம் என்பது கடவுளிடமிருந்து வரக்கூடியது. இந்த ஞானத்தின் துணைகொண்டு நம் வாழ்வில் சந்திக்கின்ற அத்தனை நிகழ்வுகளையும் நாம் எதிர்கொள்வதற்கான ஆற்றலை நாம் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். உங்களோடு நாம் நம்புகின்ற இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாம் அவரை நாடி செல்கிறபோது அவரிடம் இருந்து பல நலன்களை பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நம்புகிறவருக்கு எல்லாம் கூடும் என்பதற்கு ஏற்ப தன்னை நம்பி வந்தவருக்கு நலம் தருகின்ற பணியினை இயேசு செய்வதை தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை புடமிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் ஆற்றுகின்ற அளப்பரிய காரியங்களை உணர்ந்து கொண்டவர்களாக நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக