இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
அன்பு செய்வது மட்டுமே நம் வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இன்று இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ வேண்டும் என்பதை அறிந்திருக்கின்ற நாம், அதற்கு செயல் வடிவம் தருவதற்கு இயலாத நிலையில் இந்த சமூகத்தின் கட்டமைப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய இறை வார்த்தை வழியாக முதன்மையான கட்டளையாகிய இந்த அன்பு கட்டளையை சொல்லிலும் செயலிலும் பின்பற்றுகின்ற நபர்களாக நீங்களும் நானும் வாழ்வதற்காக அழைக்கப்படுகின்றோம். இந்த அன்பு கட்டளையை இதயத்தில் இருத்தியவர்களாக காணுகின்ற மனிதர்களிடத்தில் எல்லாம் அன்பை பகிர்ந்து, அன்போடு, ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக