இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தான் உருவாக்கிய மனிதனை குறித்து வருந்துகின்ற நபராக இருப்பதை நாம் வாசிக்க கேட்கின்றோம். நற்செய்தி வாசகத்திலும் எத்தனையோ நன்மைகளை செய்து இருந்தாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து தங்களோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள தவறியவர்களாக, உணவில்லை என்று தங்களுக்குள் வாதாடுகின்ற சீடர்களோடு இயேசு உரையாடிய நிகழ்வினை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கக் கேட்டோம்.
இந்த இரு வாசகப் பகுதிகளுமே, மனிதர்கள் மாறக்கூடியவர்களாக இருந்தாலும், கடவுள் எப்போதும் மாறாத நிலையான நம்பிக்கையின் தெய்வமாக இருக்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. நாம் நம்புகின்ற கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அவரின் உடனிருப்பு அவரின் பராமரிப்பு நம்மை என்றும் வழிநடத்தும் என்ற ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
நோவாவின் காலத்தில் மனிதர்கள் தீங்கிழைத்த போதும், நேர்மையாளரை காண்பதற்காக கடவுள் அவர்களுக்கு உதவியதை நாம் வாசிக்க கேட்கின்றோம். இந்த வாசகப் பகுதிகளை மனதில் இருத்தியவர்களாக நாம் கடவுள் மீது நம்பிக்கையோடு இருக்கின்ற போது இந்த கடவுள் நம்மை வழி நடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக கடவுள் மீது ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக