இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தையில் இயேசு கிறிஸ்து தன் பணிக்கென தன் சீடர்களை அழைத்ததை குறித்து நாம் வாசிக்க கேட்கின்றோம். ஆண்டவர் இயேசு ஒவ்வொரு மனிதனையுமே தன் பணிக்கென அழைக்கின்றார். கடவுளின் பணி எது என சிந்திக்கின்ற போது அன்போடு இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதையும், மனித நேயத்தை வலியுறுத்திய செயல்களை முன்னெடுப்பதுமே கடவுளின் பணி. இந்த கடவுளின் பணியை செய்ய அழைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் இன்று நமக்கு புனிதர்களாக சான்று பகருகிறார்கள். இவர்களையெல்லாம் பின்பற்றக் கூடியவர்களாக நாம் நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நெறிப்படுத்திக் கொண்டு, இந்த கடவுளின் அழைப்பை உணர்ந்தவர்களாக அவரால் அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே அவரைப் போல இந்த சமூகத்தில் அன்போடும், மனிதநேயத்தை முன்னிறுத்திய மனிதர்களாக நாளும் மற்றவர்களுக்கு நல்லதை செய்கின்ற நபர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக