இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய வாசகங்கள் அனைத்துமே நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக நாம் நாளும் பயணிக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. இயேசு கிறிஸ்து செய்த எல்லா அரும் அடையாளங்களும் நம்பிக்கையை மையப்படுத்தியது. நம்பிக்கையோடு துன்பங்கள் வருகிற போதும், தோல்விகளை சந்திக்கிற போதும் மனம் தளர்ந்து விடாமல், கடவுள் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தருகிறார் என்ற ஆழமான நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்கிறபோது நாம் நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.
இயேசுவை சொந்த ஊரில் இருந்தவர்கள் ஏற்றுக் கொள்ள தயங்கியதன் விளைவு, அவர்கள் இந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள தயங்கியதன் விளைவு இயேசுவால் அங்கு வல்ல செயல்களை செய்ய முடியவில்லை என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். நாம் நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் சென்று பலவிதமான நலன்களை பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். துன்பங்களும் தோல்விகளும் வருகின்ற போது எல்லாம், ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக