செவ்வாய், 14 மே, 2019

திருமண திருப்பலி முன்னுரை

திருமண திருப்பலி முன்னுரை
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
    இல்வாழ்க்கையில் அன்போடும் அறத்தோடும் விளங்கினால் அவ்வாழ்க்கையே பண்பாகவும் பயனாகவும் அமையும் என்பது இத்திருக்குறளின் விளக்கம்…
    அன்போடும், அறத்தோடும் வாழ இல்வாழ்க்கையில் புகவிற்கும் செல்வன். ............ மற்றும் செல்வி......... இவர்களின் திருமண நிகழ்வில் பங்கெடுத்து கடவுளின் ஆசியையும், தங்களின் ஆசியையும் வழங்க வந்துள்ள அருட்தந்தையர்கள், உறவினர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
    ஒருவருக்கு வாழ்வு கொடுப்பதல்ல திருமணம். ஒருவருடன் ஒருவர் வாழ்வை பகிர்வதே திருமணமாகும். அவ்வகையில் இந்நாள் வரை தங்களுக்காக வாழ்ந்த இவர்கள் இத்திருச்சடங்கின் மூலம் ஒருவர் மற்றவருக்காக வாழவிருக்கிறார்கள். இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நின்று பாசத்தை மாறா நேசத்தோடு பகிர்ந்து வாழ நாம் அனைவரும் இவர்களுக்காக இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்…
    இந்நாள் வரை செல்வன்.......
மற்றும் செல்வி.......... என்று அழைக்கப்பட்ட நீங்கள் இத்திருச்சடங்கின் மூலம் திரு. ........ மற்றும் திருமதி. ...
.. என்று அழைக்கப்படவிருக்கிறீர்கள் இச்சடங்கின் மூலம் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும், பொறுப்பும் அதிகரிக்கின்றது. எனவே இந்த மங்கல நாளில் திருவிவிலியத்தில் காணப்படும் திருமண தம்பந்தியராகிய தோபித்து மற்றும் சாரா ஆகிய இருவரும் தங்களின் திருமண வாழ்வை தொடங்கும் முன் “நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்” (தோபித்து 8:7) என்ற செபத்துடன் திருமண வாழ்வை தொடங்கினார்கள். என்று தோபித்து நூல் அதிகாரம் 8 வசனம் 7 கூறுவதைப் போலவே நீங்களும் இணைந்து இணைபிரியாது வாழ இத்திருப்பலியில் செபியுங்கள்.
    எல்லா அருளும் நிறைந்த இறைவன் தன் ஆசியால் இவர்களையும், நம்மையும் நிரப்ப அருட்தந்தையர்களோடு இணைந்து செபித்து இறையாசீரை பெற இத்திருப்பலியில் அனைவரும் பக்தியோடு பங்கொடுப்போம்.
நன்றி

திருமண ஓப்பந்தம்:
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. (மத்தேயு 1:18)
இணைப்பு: இரண்டு வீட்டு நபர்கள், கணவன் மனைவி…
தொடர்பு: திருகுடும்பமாக வாழ…

வெள்ளி, 10 மே, 2019

ஞாயிறு-இரவு செபம்

ஞாயிறு
அருள்வாக்கு திருவெளிப்பாடு 22 : 4 – 5
கடவுளின் பணியாளர்கள் அவர்களது முகத்தை காண்பார்கள். அவரது பெயர்
அவர்களுடைய நெற்றியில் எழுப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ
அவர்களுக்கு தோவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது
ஒளிவீசுவார். அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நாங்கள் எல்லாத் தீமைகளினின்றும் விடுதலையடைந்து, அமைதியில்
கண்ணுறங்கவும் உம் புகழ்ச்சியைப் பாட மகிழ்ச்சியோடு விழித்துக் கொள்ள
வேண்டுமென்ற எங்கள் பணிவான வேண்டுதலைக் கேட்டருளும். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

சனி-இரவு செபம்

சனி
அருள்வாக்கு இணைசட்டம் 6 : 4 - 7
இசுரயேலே செவிகொடு! நம் கடவளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன்
முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன்
கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்கு கட்டளையிடும்
இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின்
உள்ளத்தில் பதியமாறு சொல். உன் வீட்டில் இருக்கம்போதும், உன்
வழிபயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றை பற்றி பேசு.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! எம் இல்லத்தை சந்தித்துப் பகைவனின் கண்ணிகள் அனைத்தையும்
எங்கள் இல்லத்திலிருந்து அகற்றியருள உம்மை மன்றாடுகின்றோம். உம்முடைய
தூதர்கள் எங்கள் இல்லத்தில் குடியிருந்து எங்களை அமைதியில் காப்பர்களாக. உமது
ஆசி எங்கள்மீது என்றென்றும் தங்குவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

வெள்ளி-இரவு செபம்

வெள்ளி
அருள்வாக்கு எரேமியா 14: 9
ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர். உமது பெயராலேயே நாங்கள்
அழைக்கப்படுகிறோம். எங்களை கைவிட்டு விடாதேயும்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் எங்கள் வேண்டல்களையும், உழைப்பையும் ஏற்றுக்
கொண்டு எந்நாளும் நாங்கள் விருப்புடன் உமக்கு ஊழியம் புரியத் தேவையான
இளைப்பாற்றியை எமக்கருள உம்மை கொஞ்சிக் மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகின்றோம். ஆமென்.

வியாழன் -இரவு செபம்

வியாழன்
அருள்வாக்கு 1தெசலோணிக்கர் 5: 23
அமைதியை அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.
அவரே, நம் ஆண்டவர் இயேசு கிறித்து வரும்போது, உங்களுடைய உள்ளம், ஆன்மா,
உடல் அனைத்தையும் குற்றமின்றி முமுமையாகக் காப்பாராக.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் உழைப்பால் நாங்கள் மிகவே சோர்வடைந்துள்ளோம்.
அமைதியான உறக்கத்தால் எங்களைப் புதுப்பித்தருளும். இவ்வாறு, உமது உதவியால்
சோர்வு நீங்கிய நாங்கள் உடலாலும், உள்ளத்தாலும் உமக்கு பணிபுரிவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக
உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

புதன் - இரவு செபம்

புதன்
அருள்வாக்கு எபேசியர் 4: 26 – 27
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள், பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம்
தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் எங்கள் வேண்டல்களையும், உழைப்பையும் ஏற்றுக்
கொண்டு எந்நாளும் நாங்கள் விருப்புடன் உமக்கு ஊழியம் புரியத் தேவையான
இளைப்பாற்றியை எமக்கருள உம்மை கொஞ்சிக் மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகின்றோம். ஆமென்.

செவ்வாய் - இரவு செபம்

செவ்வாய்
அருள்வாக்கு 1பேதுரு 5: 8 – 9
அறிவுத் தொளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை
விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போல் தேடித் திரிகின்றது. அசையாத நம்பிக்கை
கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது
பணியாளர்கள் அமைதியில் உறங்கவும், உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து,
புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

திங்கள் - இரவு செபம்

திங்கள்
அருள்வாக்கு 1தெசலோணிக்கர் 5: 9- 10
கடவுள் நம்மை தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு
கிறித்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும்
அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நலமளிக்கும் இளைப்பாற்றியை எங்கள் உடலுக்குத் தந்தருளும்.
எங்களுடைய இன்றைய உழைப்பு நிலைவாழ்வில் என்றுமுள்ள மாட்சிக்கு விதையாக
அமைவாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.

வியாழன், 9 மே, 2019

முதல்முறையாக நற்கருணை பெறுபவர்களுக்கான திருப்பலி முன்னுரை (10.05.2019)

இறைவன் இயேசுவின் பிரியமான  இறைமக்களே.  விண்ணிலிருந்து  இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வு தரும் உணவாகிய ஆண்டவரை தங்களுடைய உள்ளத்தில் முதல் முறையாக ஏற்பதற்கு நம் பங்கை சார்ந்த சில சிறுவர் சிறுமியர்கள் இங்கே இருக்கிறார்கள் இவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் ஆண்டவர் இயேசுவை எப்போதும் தங்கள் உள்ளத்தில் வைத்துக்கொள்ளவும்,  ஆண்டவர் இயேசுவின் உண்மையான சாட்சிகளாகவும் இவர்கள் வாழவும் இவர்களுக்காக இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.

எனது உடலை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் பெறுவர் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவரின் உடலிலும் இரத்தத்திலும்  பங்கு கொள்ளவிருக்கும் இவர்கள் ஆண்டவர் இயேசுவில் நிலை திருக்கவும், தங்களின் உயிர் உள்ளவரை ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழவும், அவரை பற்றிய நற்செய்தியை அதில்அகிலத்திற்கு எடுத்துரைக்கும் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்ந்து காட்டவும். ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான பற்று கொண்டிருந்து அவரை தங்கள் உள்ளத்தில் ஏற்க பல நாட்களாக தங்களைத் தயாரித்து இன்று அந்த நிலைக்கு தயாராகி இருக்கக்கூடிய இவர்களை இறைவன் இன்று ஆசிர்வதித்து, இவர்களின் தேவைகளை நிறைவு செய்து, இவர்கள் உள்ளத்தில் அப்பரசத்தின் வடிவில்  செல்லவிருக்கும் இறைவன் இவர்களோடு என்றும் இருந்து இவர்களை காத்து வழி நடத்த வேண்டி நாம் அனைவரும் இன்று ஒரே குடும்பமாக இந்த குழந்தைகளுக்காக இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.  குறிப்பாக அவர்களைப் பயிற்றுவித்த பயிற்சியாளர்களையும் இவர்களை இந்த நிலைக்கு அனுப்பி வைத்தத  இவர்களின் பெற்றோர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து இந்த திருப்பலியில் அவர்களுக்காகவும் ஜெபித்து இறை ஆசியைப் பெறுவோம்...

புதிய மனிதர்களாக அழைப்பு (10.05.2019)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே சவுலே சவுலே நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய் என்று சவுலை நோக்கி அன்று இயேசு கேட்ட கேள்வியை இன்று நாம் நமது வாழ்வில் அசைபோட்டு பார்ப்போம்.

இயேசு மண்ணில் வாழ்ந்த போது மனிதனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் தன் சொல்லால் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார். தன் கூறியதோடு மட்டுமல்லாமல் தன் கூறியதை தன் வாழ்வில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார். நாம் இன்று சக மனிதரை மனிதராக மதிக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் அனைவரும் நமக்குள் கேட்டுப்பார்க்க அழைக்கப்படுகிறோம். ஒரு வேலை இந்த கேள்விக்கு சரியான பதிலை கூற முடியவில்லை என்றால் எந்த விதத்தில் நாம் பிறரை மதிக்காமலும் அவர்களை அவர்கள் இருப்பது போல ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம். 
இவ்வுலக வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான மக்கள் பிறர் இருப்பது போல் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார் கள். தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் செயல்பட வேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். இதனை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணலாம்  இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொள்ள நினைக்கிறது ஒரு கூட்டம் ஆனால்
அவர்கள் இயேசுவைப் பற்றி பேசவும் அவரைக் கடவுள் என அறிக்கையிடவோ கூடாது என தடுக்கிறார்கள் பெரும்பான்மையான மக்கள் இவர்களில் பலர் அவர்களை இருப்பது போல ஏற்றுக்கொள்ள அஞ்சுபவர்கள். இத்தகைய நிலை நீடிக்கும் பொழுது இறைவனை தன் மக்களுக்காக இறங்கி வருகிறார் யார் தன் மக்களைத் துன்புறுத்துகிறாரோ அவரையே தன்னைப்பற்றி அறிவிக்கும் சாட்சியாக
மாற்றுகிறார். நான் அப்போது அவரின் சாட்சியாக மாறப் போகிறோம்?

உன்னை நீ நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு செய் என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் அனுதினமும் சிந்தித்துப் பார்ப்போம். நம்மை நாம் நேசிப்பது போல நாம் அடுத்தவரையும் நேசிக்க வேண்டும். ஏன் நம்மால்  பிறரை அவர் இருப்பது போல அன்பு செய்ய இயலவில்லை என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
பவுலைப் போல மனம் மாறுவோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சதையை உண்டு இரத்தத்தை குடித்து புது வாழ்வு பெருவோம்,  புதிய மனிதர்களாவோம். சக மனிதர்களை நம்மை போல் அன்பு செய்யத் தொடங்குவோம்.

புதன், 8 மே, 2019

உறுதிபூசுதல் அருள்சாதனம் பெரும் திருப்பலிக்கான முன்னுரை (09. 05. 2019)

அன்பார்ந்த அருமையான இறைமக்களை உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைகிறோம் இன்று  சில சிறுவர் சிறுமியர்கள் உறுதிபூசுதல் என்னும் அருள் சாதனத்தை பெறவிருக்கிறார்கள்.

ஆண்டவர் உனக்கு பக்கத் துணையாக இருப்பார் உன் கால் கன்னியில் சிக்காத படி உன்னைக் காப்பார் என்ற நீதிமொழிகள் 3 ஆம் அதிகாரம் 26 வது வசனத்திற்கு ஏற்ப ... இன்று ஆண்டவர் நம்மோடு நம் பக்கத்தில் பக்கத்துணையாக இருப்பதற்கு தூய ஆவியானவரை உறுதிபூசுதல் என்னும் அருள்சாதனத்தில் வழியாக நம் குழந்தைகளுக்கு தரவிருக்கிறார்.
எனவே இந்த நாளில் நாம் அனைவரும் இணைந்து தூய ஆவியானவரை பெறவிருக்கும் நம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம்.  அன்று தூய ஆவியாரை பெற்றுக்கொண்ட  இயேசுவின் சீடர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அகிலத்திற்கு அறிவித்தது போல
இந்த குழந்தைகள் தூய ஆவியானவரை பெற்றுக்கொண்ட நாள் முதல் தங்கள் உயிர் உள்ளவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கவும், அவரின் உண்மையான சாட்சிகளாகவும், உண்மையான கிறிஸ்தவர்களாகவும் வாழ இவர்களுக்காக இந்த திருப்பலியில் நாம் அனைவரும் இணைந்து ஜெபிப்போம்.

மேலும் நீ எதை செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்து செய் அப்பொழுது அவர் உன் பாதையைச் செம்மையாக்குவார். என்ற நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரம் ஆறாவது வசனத்தினை நமது மனதில் இருத்தி இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதி பூசுதல் என்னும் அருட்சாதனத்தை பெறவிருக்கும் நம் குழந்தைகளுக்ககு இத்தகைய வார்த்தைகளை கூறி  அவர்களை எது செய்தாலும் ஆண்டவரை மனதில் இருத்தி செய்ய வேண்டும் அப்போது ஆண்டவர் அவர்களை நல்வழியில் நடத்திச் செல்வார் என்று ஆசி கூறி நமது குழந்தைகளுக்காக  ஒருமித்த கருத்துடன் ஜெபித்து இன்றைய வழிபாட்டில் பக்தியோடு பங்கெடுத்து இறையாசீரை நம் குழந்தைகளுக்கு பெற்றுத் தருவோம்.

செவ்வாய், 7 மே, 2019

நான் யாருடைய விருப்பத்திற்ககாக? (08.05.2019)

இயேசுவில் பிரியமானவர்களே

என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே விண்ணிலிருந்து இறங்கி வந்தேன் என்கிறார் ஏசு கிறிஸ்து...

இன்று நாம் யாருடைய விருப்பத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம்? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி.
1. நாம் நமது சொந்த விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்களா?  அல்லது 2. பிறரின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்களா? என சிந்திக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் வாழும் உலகில் பல வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் சிலர் தங்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். இன்னும் சிலர் பிறரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். இன்னும் சிலர் உண்டு எப்பாடுபட்டாவது பிறரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனவே தங்களின் விருப்பத்தை தியாகம் செய்யக் கூடியவர்கள்.  இன்னும் சிலரும் உண்டு இவர்கள் எப்படியாவது அடுத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆதரவு பெற்றுக்கொண்ட பிறகு அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களில் நாம் எவ்வகையான மனநிலை கொண்டவர்கள் என்பது இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி இந்த நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை மனிதர்களை  சார்ந்தவர்கள்..
இன்றைய முதல் வாசகத்தில்  இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். உதாரணமாக பிலிப்பு நற்செய்தி அறிவித்ததையும், அவரால் உண்டான சில புதுமைகளை பற்றியும் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு தெளிவு படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

நாமும் நமது வாழ்வில் பலமுறை திருப்பலியில் பங்கேற்று இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் இது விசுவாசத்தின் மறைபொருள் எனக் கூறும் பொழுது நாம் அனைவரும் இணைந்து ஆண்டவரே நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம் உமது உயர்ப்பை எடுத்துரைக்கிறோம் என்று கூறுவோம். ஆனால்  நாம் ஒரு நாளைக்கு எத்தனை பேரிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு பற்றி அறிவிக்கின்றோம்.... என்று சிந்தித்துப் பார்ப்போபோம்...
தொடக்ககால கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்த போது பலவிதமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.  ஆனால் இன்று அந்த அளவிற்கு இன்னல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான்.  இருந்த போதும் நம்மில் ஏன் பலர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பற்றி அறிவிக்க முடியாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு விதத்தில் நாம் நமது சொந்த விருப்பத்திற்காகச் செயல்படுவதும் ஒரு காரணமாகும். தனது சொந்த விருப்பத்திற்காகச் செயல்படும் பொழுது நாம் நமது தேவைகளுக்காக இறைவனை நோக்கி செல்வோம். மற்றவரின் தேவைகளுக்காக செல்வதில்லை. நாம் இன்று நினைவு கூறும் ஸ்தேவான் தன் சொந்த விருப்பத்திற்காக அல்லாமல்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பத்திற்காக தன் வாழ்வை மாற்றிக் கொண்டார். அதன் விளைவே அவர் மரணத்தை பரிசாக பெற்றார். ஆனாலும் இன்றளவும் அவர் நினைக்கப்பட்டு கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் தன் சொந்த விருப்பத்திற்காகச் செயல்படாமல் பிறரின் விருப்பத்திற்காக செயல்பட்டது தான்.  நாம் யாருடைய விருப்பத்திற்காக செயல்படப் போகிறோம் என்ற சிந்தனையோடு இந்த நாளில் தொடர்ந்து பயணிப்போம்.

திங்கள், 6 மே, 2019

VBS நிறைவு நாள் திருப்பலி முன்னுரை


கோடை கால விவிலிய பயிற்சி வகுப்பு நிறைவு திருப்பலிக்கான முன்னுரை….

(12.05.2019)

இறையேசுவில் பிரியமானவர்களே உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன எனக்கு அவற்றை தெரியும் அவையும் என்னை பின்தொடர்கின்றன. என்ற இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப கடந்த சில நாட்களாக கோடை கால விவிலிய பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்து கடவுளின் குரலுக்கு அழைப்பு விடுத்தபோது அதை ஏற்று ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுத்த அவரின் மந்தைளான நாம் இன்று ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றி இங்கு கூடியிருக்கிறோம்.

இன்றைய நாளில் நம்மை இவ்வகுப்பிற்கு அனுப்பி வைத்த நமது பெற்றோர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக செபிப்போம்.இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கவிற்கும்  புனித பவுலும் பர்னபாவும் இனைந்து மக்கள் அனைவரும் கடவுளின் அருள்லில் நிலைத்திருக்கும்படி அவர்களை தூண்டினார்கள் என்று அவர்களை போலவே சில நாட்களாக நம்மோடு இருந்து நம்மை ஆண்டவரின் அருளில் நிலைத்திருக்க உதவிய நமது அருள் சகோதரர்களையும் இவ்வகுப்பை ஏற்பாடு செய்த நமது பங்குத்தந்தை அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து இந்த திருப்பலியில் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கடவுளின் ஆட்டுக்குட்டிகளான நாம் அனைவரும் இணைந்து இவ்விவிலிய வகுப்புகள் மூலம் அறிந்தவைகளை மனதில் இருத்தி நமது வாழ்நாட்களில் அவற்றின்படி வாழவும் வளரவும் அருள் வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து பக்தியோடு ஒருவர் மற்றவருக்காக செபிப்போம்...இறையாசிர் பெருவோம்.

ஆன்ம தாகம் கொண்டவர்களாக...(07.05.2019)

அன்பு நண்பர்களே ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு எப்போதும் தாகம் இராது என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டிருப்போம்..தாகம் அனைவரிடத்திலும் இருக்கக்கூடிய ஒன்று. இன்றைய வாசகங்களில் நாம் இரு விதமான தாகங்களை பார்க்கிறோம்.
1. உடல் சார்ந்த தாகம்.
2. ஆன்மா சார்ந்த தாகம்.

உடல் சார்ந்த தாகம் என்பது இவ்வுலகின்  மீது நாம் கொண்டிருக்கக்கூடிய பற்றை குறிக்கின்றது. எப்படியாவது அதிக செல்வத்தை சேர்த்து விட வேண்டும். எங்காவது யாரையாவது பிடித்து வாழ்வில் முன்னேறி விட வேண்டும். யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் உடல் மட்டும் சார்ந்து செயல்படும் கூடியவர்களே இந்த உடல் சார்ந்த தாகம் கொண்டவர்கள்.

ஆன்மா சார்ந்த தாகம் என்பது அகில உலகின் மீதும் பற்றுக்கொள்வது அகிலத்தில் உள்ளவர்கள் அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டுமென்றும்.  உண்மை எது? என்று அவர்களுக்கு எடுத்துரைப்பதும். உண்மைக்கு சான்றாக நிற்கக் கூடியவர்களும். பிறரின் நலனில் முக்கியத்துவம் காட்டக் கூடியவர்களும் தான் ஆன்மா சார்ந்த தாகம் கொண்டவர்கள் நாம் உடல் சார்ந்த தாகம் கொண்டிருக்கிறோமா? அல்லது ஆன்மா சார்ந்த தாகம் கொண்டிருக்கிறோமா?

இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட புனித ஸ்தேவான் அவர்கள்  உடல் சார்ந்த தாகம் அல்ல ஆன்மா சார்ந்த தாகம் கொண்டிருந்தார். அதன் விளைவே உலகத்தின் நன்மைக்காக உண்மையை உரக்கச் சொன்னார். அதன் விளைவு மரணத்தை பரிசாக பெற்றார்.  மரண வேளையிலும் மக்கள் நலன் கருதி மற்றவர்களை மன்னித்து இயேசு சிலுவையில் கற்பித்ததை தன் வாழ்வில் செயல்வடிவமாக்கி காண்பித்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க நாம் காணலாம் மன்னா உணவை சுட்டிக்காட்டி எங்களுக்கும் அரும் அடையாளங்களைக் தாரும் என ஆண்டவர் இயேசுவை நோக்கி வந்த மக்கள் கூட்டம் நிலைவாழ்வு தரும் தண்ணீரை பற்றி இயேசு கூறியதும் அதை எங்களுக்குத் தாரும் என அவரை நோக்கி மன்றாடினார்கள்.

நாமும் அனுதினமும் நமது வாழ்வில் தாகம் கொள்கிறோம். நாம் கொள்ளும் தாகம் உடல் சார்ந்த தாகமா? அல்லது ஆன்மா சார்ந்த தாகமா? என சிந்திக்க வேண்டிய கடமை இன்று நமக்கு இருக்கிறது. சிந்திப்போம் தொடர்ந்து நாம் கொண்டிருக்கும் தாகம் உடல் சார்ந்ததா?  ஆன்மா சார்ந்ததா?

ஆன்மா சார்ந்த தாயின் அது ஆண்டவருக்கு ஏற்புடையதாகும். அது ஆண்டவரின் கட்டளைகளையும், போதனைகளையும், அவரது வாழ்வில் அவர் நமக்கு கற்பித்தவைகளையும், நமது வாழ்வில் பிரதிபலிக்க செய்வதாகும். நம் செயல்பாடுகள் அவ்வாறு உள்ளதா? நாம் ஆன்ம தாகம் கொண்டவர்களாக இருக்கிறோமா? அல்லது உடல் சார்ந்த தாகம் கொண்டவர்களாக இருக்கிறோமா?
உடல்சார்ந்த தாகம் கொண்டவர்களாக நாம் இருப்பின் அதனை விடுத்து. ஆன்ம தாகம் கொண்டவர்களாக வாழ தொடர்ந்து முயற்சி செய்வோம்.
அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...