சனி, 4 மே, 2019

அசையாத நம்பிக்கையுடன் (05.05.2019)

அன்புக்குரிய ஆண்டவரின் சொந்தங்களே இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு முன்வைக்கும் இரரு முக்கியச் செய்திகள்..
1. எதற்கும் அஞ்சாது துணிவோடு உண்மையை எடுத்துரையுங்கள்.

2. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் ஆண்டவர் இயேசுவிடம் சரணடைவோம்..

   இன்றைய முதல் வாசகத்தில் சீடர்கள் இயேசு உண்மையாகவே இறைமகன் அவர்  இம்மண்ணில் வாழ்ந்த போது நன்மைகளை செய்து வந்தார். ஆனால் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும்இயேசுவை இறைமகன் அல்ல என்று கூறி அவரை குற்றவாளி என்று கூறிப்பிட்டு அவரை கொலை செய்தார்கள் என்று சீடர்கள் உண்மையை அறிவித்தார்கள். அதனால் சீடர்கள் பலவாறு துன்பத்திற்கு ஆளானார்கள். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க அவர் களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இருந்தபோதும் எதற்கும் அஞ்சாத இயேசுவைப் பற்றி சென்ற இடங்களிலெல்லாம் திருத்தூதர்கள் அறிவித்து வந்தார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது...இன்றைய முதல் வாசகத்தில் வழியாக நமது வாழ்வுக்கு இறைவன் தரக்கூடிய செய்தி எது என ஆராய்ந்து பார்க்கும் பொழுது உண்மையை எடுத்துரைப்பதே நமது பணியாகும். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி அதற்காகவே உலகிற்கு வந்தேன் என இயேசுவும் கூறியுள்ளார். இயேசுவைப் போல உண்மைகளை எடுத்துரைப்பது நமது பணிவாகவும் இருக்க வேண்டும். உண்மையை எடுத்துரைக்கும் போது பலவிதமான துன்பங்களை நாம் சந்திக்க நேரலாம் அப்போதெல்லாம் மனந்தளராது ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு திருத்தூதர்களை போல உண்மையை எடுத்துரைக்க இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது...
உண்மையை எடுத்துரைக்கும் போது அதனால் வரக்கூடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கு ஆண்டவர் இயேசசுவின் மீது ஆழமான நம்பிக்கை அவசியமாகும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரவு முழுவதும் மீன்பிடிக்கச் சென்று மீன்பாடு இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சீடர்களைப் பார்த்து இயேசு மீண்டும் கடலுக்கு சென்று தங்களின் வலைகளை போடுங்கள் என்றார் அதை கேட்டு சீடர்கள் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு அவரது வார்த்தைகளை பின்பற்றினார்கள்அதன் விளைவாக மிகுதியான மீன்பாட்டை கண்டார்கள் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் அனைவரும் வாசிக்க கேட்டோம். ஆண்டவர் இயேசுவின் மீது நாம் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை தான் நமது வாழ்வில் அனைத்திற்கும் ஆணிவேராக அமைகிறது. உண்மையை எடுத்துரைத்த சீடர்கள் இயேசுவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எனவே தான் அதனால் உண்டான துன்பங்களை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. நாம் நமது வாழ்வில் உண்மைகளை எடுத்துரைக்க முயலும் பொழுது பல விதமான துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க நேரிடலாம். அந்நேரங்களில்  திருத்தூதர்களை போல ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு அவரது வார்த்தைகளை பின்பற்றி நடக்க முயல வேண்டும். அப்போது அகிலத்தையும் காத்துவரும் ஆண்டவர் இயேசு நம்மோடு இருந்து திருத்தூதர்களை தேற்றியது போல, நமக்கும் துணையாக இருந்து, நம்மை தேற்றி நம்மை உண்மையை எடுத்துரைக்கும் அவரது உண்மையான சீடர்களாக வாழ உதவி செய்வார்..எனவே அந்த ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நம்மையே நாம் இறைவனிடம் முழுமையாக சரணடைந்து அவரின் பணியை செய்யத் தேவையான ஆற்றலை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்... அசையாத நம்பிக்கையுடன்...

4 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...