கோடை கால விவிலிய பயிற்சி வகுப்பு நிறைவு திருப்பலிக்கான முன்னுரை….
(12.05.2019)
இறையேசுவில் பிரியமானவர்களே உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன எனக்கு அவற்றை தெரியும் அவையும் என்னை பின்தொடர்கின்றன. என்ற இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப கடந்த சில நாட்களாக கோடை கால விவிலிய பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்து கடவுளின் குரலுக்கு அழைப்பு விடுத்தபோது அதை ஏற்று ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுத்த அவரின் மந்தைளான நாம் இன்று ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றி இங்கு கூடியிருக்கிறோம்.
இன்றைய நாளில் நம்மை இவ்வகுப்பிற்கு அனுப்பி வைத்த நமது பெற்றோர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக செபிப்போம்.இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கவிற்கும் புனித பவுலும் பர்னபாவும் இனைந்து மக்கள் அனைவரும் கடவுளின் அருள்லில் நிலைத்திருக்கும்படி அவர்களை தூண்டினார்கள் என்று அவர்களை போலவே சில நாட்களாக நம்மோடு இருந்து நம்மை ஆண்டவரின் அருளில் நிலைத்திருக்க உதவிய நமது அருள் சகோதரர்களையும் இவ்வகுப்பை ஏற்பாடு செய்த நமது பங்குத்தந்தை அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து இந்த திருப்பலியில் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கடவுளின் ஆட்டுக்குட்டிகளான நாம் அனைவரும் இணைந்து இவ்விவிலிய வகுப்புகள் மூலம் அறிந்தவைகளை மனதில் இருத்தி நமது வாழ்நாட்களில் அவற்றின்படி வாழவும் வளரவும் அருள் வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து பக்தியோடு ஒருவர் மற்றவருக்காக செபிப்போம்...இறையாசிர் பெருவோம்.
மூன்றே கருத்தில் VBSக்கு இறைவனில் இணைத்த சகோதரருக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குNice to say about VBS! Congratulations to all of you!
பதிலளிநீக்கு