அன்பு நண்பர்களே ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு எப்போதும் தாகம் இராது என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டிருப்போம்..தாகம் அனைவரிடத்திலும் இருக்கக்கூடிய ஒன்று. இன்றைய வாசகங்களில் நாம் இரு விதமான தாகங்களை பார்க்கிறோம்.
1. உடல் சார்ந்த தாகம்.
2. ஆன்மா சார்ந்த தாகம்.
உடல் சார்ந்த தாகம் என்பது இவ்வுலகின் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய பற்றை குறிக்கின்றது. எப்படியாவது அதிக செல்வத்தை சேர்த்து விட வேண்டும். எங்காவது யாரையாவது பிடித்து வாழ்வில் முன்னேறி விட வேண்டும். யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் உடல் மட்டும் சார்ந்து செயல்படும் கூடியவர்களே இந்த உடல் சார்ந்த தாகம் கொண்டவர்கள்.
ஆன்மா சார்ந்த தாகம் என்பது அகில உலகின் மீதும் பற்றுக்கொள்வது அகிலத்தில் உள்ளவர்கள் அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டுமென்றும். உண்மை எது? என்று அவர்களுக்கு எடுத்துரைப்பதும். உண்மைக்கு சான்றாக நிற்கக் கூடியவர்களும். பிறரின் நலனில் முக்கியத்துவம் காட்டக் கூடியவர்களும் தான் ஆன்மா சார்ந்த தாகம் கொண்டவர்கள் நாம் உடல் சார்ந்த தாகம் கொண்டிருக்கிறோமா? அல்லது ஆன்மா சார்ந்த தாகம் கொண்டிருக்கிறோமா?
இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட புனித ஸ்தேவான் அவர்கள் உடல் சார்ந்த தாகம் அல்ல ஆன்மா சார்ந்த தாகம் கொண்டிருந்தார். அதன் விளைவே உலகத்தின் நன்மைக்காக உண்மையை உரக்கச் சொன்னார். அதன் விளைவு மரணத்தை பரிசாக பெற்றார். மரண வேளையிலும் மக்கள் நலன் கருதி மற்றவர்களை மன்னித்து இயேசு சிலுவையில் கற்பித்ததை தன் வாழ்வில் செயல்வடிவமாக்கி காண்பித்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க நாம் காணலாம் மன்னா உணவை சுட்டிக்காட்டி எங்களுக்கும் அரும் அடையாளங்களைக் தாரும் என ஆண்டவர் இயேசுவை நோக்கி வந்த மக்கள் கூட்டம் நிலைவாழ்வு தரும் தண்ணீரை பற்றி இயேசு கூறியதும் அதை எங்களுக்குத் தாரும் என அவரை நோக்கி மன்றாடினார்கள்.
நாமும் அனுதினமும் நமது வாழ்வில் தாகம் கொள்கிறோம். நாம் கொள்ளும் தாகம் உடல் சார்ந்த தாகமா? அல்லது ஆன்மா சார்ந்த தாகமா? என சிந்திக்க வேண்டிய கடமை இன்று நமக்கு இருக்கிறது. சிந்திப்போம் தொடர்ந்து நாம் கொண்டிருக்கும் தாகம் உடல் சார்ந்ததா? ஆன்மா சார்ந்ததா?
ஆன்மா சார்ந்த தாயின் அது ஆண்டவருக்கு ஏற்புடையதாகும். அது ஆண்டவரின் கட்டளைகளையும், போதனைகளையும், அவரது வாழ்வில் அவர் நமக்கு கற்பித்தவைகளையும், நமது வாழ்வில் பிரதிபலிக்க செய்வதாகும். நம் செயல்பாடுகள் அவ்வாறு உள்ளதா? நாம் ஆன்ம தாகம் கொண்டவர்களாக இருக்கிறோமா? அல்லது உடல் சார்ந்த தாகம் கொண்டவர்களாக இருக்கிறோமா?
உடல்சார்ந்த தாகம் கொண்டவர்களாக நாம் இருப்பின் அதனை விடுத்து. ஆன்ம தாகம் கொண்டவர்களாக வாழ தொடர்ந்து முயற்சி செய்வோம்.
அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.
Sahayam! You have told rightly the two opposite poles of attraction of life! Made us to think of it! Very nice! Do well!
பதிலளிநீக்குSahayam! You have told rightly the two opposite poles of attraction of life! Made us to think of it! Very nice! Do well!
பதிலளிநீக்கு