இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே சவுலே சவுலே நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய் என்று சவுலை நோக்கி அன்று இயேசு கேட்ட கேள்வியை இன்று நாம் நமது வாழ்வில் அசைபோட்டு பார்ப்போம்.
இயேசு மண்ணில் வாழ்ந்த போது மனிதனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் தன் சொல்லால் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார். தன் கூறியதோடு மட்டுமல்லாமல் தன் கூறியதை தன் வாழ்வில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார். நாம் இன்று சக மனிதரை மனிதராக மதிக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் அனைவரும் நமக்குள் கேட்டுப்பார்க்க அழைக்கப்படுகிறோம். ஒரு வேலை இந்த கேள்விக்கு சரியான பதிலை கூற முடியவில்லை என்றால் எந்த விதத்தில் நாம் பிறரை மதிக்காமலும் அவர்களை அவர்கள் இருப்பது போல ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம்.
இவ்வுலக வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான மக்கள் பிறர் இருப்பது போல் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார் கள். தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் செயல்பட வேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். இதனை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணலாம் இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொள்ள நினைக்கிறது ஒரு கூட்டம் ஆனால்
அவர்கள் இயேசுவைப் பற்றி பேசவும் அவரைக் கடவுள் என அறிக்கையிடவோ கூடாது என தடுக்கிறார்கள் பெரும்பான்மையான மக்கள் இவர்களில் பலர் அவர்களை இருப்பது போல ஏற்றுக்கொள்ள அஞ்சுபவர்கள். இத்தகைய நிலை நீடிக்கும் பொழுது இறைவனை தன் மக்களுக்காக இறங்கி வருகிறார் யார் தன் மக்களைத் துன்புறுத்துகிறாரோ அவரையே தன்னைப்பற்றி அறிவிக்கும் சாட்சியாக
மாற்றுகிறார். நான் அப்போது அவரின் சாட்சியாக மாறப் போகிறோம்?
உன்னை நீ நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு செய் என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் அனுதினமும் சிந்தித்துப் பார்ப்போம். நம்மை நாம் நேசிப்பது போல நாம் அடுத்தவரையும் நேசிக்க வேண்டும். ஏன் நம்மால் பிறரை அவர் இருப்பது போல அன்பு செய்ய இயலவில்லை என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
பவுலைப் போல மனம் மாறுவோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சதையை உண்டு இரத்தத்தை குடித்து புது வாழ்வு பெருவோம், புதிய மனிதர்களாவோம். சக மனிதர்களை நம்மை போல் அன்பு செய்யத் தொடங்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக