புதன், 8 மே, 2019

உறுதிபூசுதல் அருள்சாதனம் பெரும் திருப்பலிக்கான முன்னுரை (09. 05. 2019)

அன்பார்ந்த அருமையான இறைமக்களை உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைகிறோம் இன்று  சில சிறுவர் சிறுமியர்கள் உறுதிபூசுதல் என்னும் அருள் சாதனத்தை பெறவிருக்கிறார்கள்.

ஆண்டவர் உனக்கு பக்கத் துணையாக இருப்பார் உன் கால் கன்னியில் சிக்காத படி உன்னைக் காப்பார் என்ற நீதிமொழிகள் 3 ஆம் அதிகாரம் 26 வது வசனத்திற்கு ஏற்ப ... இன்று ஆண்டவர் நம்மோடு நம் பக்கத்தில் பக்கத்துணையாக இருப்பதற்கு தூய ஆவியானவரை உறுதிபூசுதல் என்னும் அருள்சாதனத்தில் வழியாக நம் குழந்தைகளுக்கு தரவிருக்கிறார்.
எனவே இந்த நாளில் நாம் அனைவரும் இணைந்து தூய ஆவியானவரை பெறவிருக்கும் நம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம்.  அன்று தூய ஆவியாரை பெற்றுக்கொண்ட  இயேசுவின் சீடர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அகிலத்திற்கு அறிவித்தது போல
இந்த குழந்தைகள் தூய ஆவியானவரை பெற்றுக்கொண்ட நாள் முதல் தங்கள் உயிர் உள்ளவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கவும், அவரின் உண்மையான சாட்சிகளாகவும், உண்மையான கிறிஸ்தவர்களாகவும் வாழ இவர்களுக்காக இந்த திருப்பலியில் நாம் அனைவரும் இணைந்து ஜெபிப்போம்.

மேலும் நீ எதை செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்து செய் அப்பொழுது அவர் உன் பாதையைச் செம்மையாக்குவார். என்ற நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரம் ஆறாவது வசனத்தினை நமது மனதில் இருத்தி இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதி பூசுதல் என்னும் அருட்சாதனத்தை பெறவிருக்கும் நம் குழந்தைகளுக்ககு இத்தகைய வார்த்தைகளை கூறி  அவர்களை எது செய்தாலும் ஆண்டவரை மனதில் இருத்தி செய்ய வேண்டும் அப்போது ஆண்டவர் அவர்களை நல்வழியில் நடத்திச் செல்வார் என்று ஆசி கூறி நமது குழந்தைகளுக்காக  ஒருமித்த கருத்துடன் ஜெபித்து இன்றைய வழிபாட்டில் பக்தியோடு பங்கெடுத்து இறையாசீரை நம் குழந்தைகளுக்கு பெற்றுத் தருவோம்.

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...