அன்புக்குரியவர்களே....
இன்றய வாசகங்கள் நமக்கு சில கேள்விகளை விடுக்கின்றன...
1. நமது முகம் வானதூதரின் முகம் போல் மாறுவது எப்போது?
2. நாம் இயேசுவை தேடிச் செல்வது எப்போது?
3. நாம் இயேசுவை தேடிச் சென்றால்
அது எதற்காக?
4. நம் செயல்கள் கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த கேள்விகளுக்கு புனித தோமினிக் சாவியோ அவர்களின் வாழ்வோடு இணைந்து விடை காண்போம்...
புனித தோமினிக் சாவியோ அவர்கள் நற்கருணை அருட்சாதனத்தை பெற்றபோது நான்கு விதமான விருதுவாக்குகளை எழுதி அதை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடிப்பேன் எனக் கூறி அதைத் தன் தாயிடம் ஒப்படைத்தார். அவைகளாவன
1. அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று நற்கருணையை உட்கொள்வது ...
2. கடன் திருநாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பலியில் முழுமையாக பங்கு பெற்று நற்கருணையை பெறுவது.
3. ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியும் எனது நண்பர்கள்.
4. பாவம் செய்வதை விட சாவதே மேல்
இவைகளை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்து வந்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைத் தேடிய மக்கள் கூட்டத்தினரை போலவே இவரும் அதிகாலையில் பனியை பொருட்படுத்தாது ஆலய கதவுகள் திறப்பதற்கு முன்பாகவே வந்து ஆலயத்தின் கதவுகள் அருகே காத்திருப்பார்...
இவர் ஆண்டவர் இயேசுவை தேடி சென்றதற்கான காரணம்ஆலயத்தில் பீடப்பணி ஆற்ற வேண்டும் என்பதற்காகவே...இதில் ஆச்சரியம் என்னவென்றால் பீடத்தின் உயரத்தை விட இவரது உயரம் மிகக் குறைவு.
இம்மண்ணில் வாழ்ந்த போது இவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவுக்கு ஏற்புடையதாக அமைந்தது.. எனவே தான் இன்றும் இவர் விண்ணக வீட்டில் வானதூதர்களோடு ஒருவராக இருந்து நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி வருகிறார். எனவே இம்மண்ணில் நாம் வாழும் போது நமது செயல்கள் ஆண்டவருக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும் என்றால் நமது செயல்களில் தன்னலம் அகற்றப்பட்டு பொது நலன் காணப்பட வேண்டும். பொது நலனுடன் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களும் ஆண்டவருக்கும் ஏற்புடையதாக அமையும்... அப்போது
இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட புனித ஸ்தேவானின் முகத்தினை போல நமது முகமும் வானதூதர்களின் முகம் போல் ஒளிரும்.
வாருங்கள் ......பொதுநலத்துடன் நமது செயல்களைத் தொடர்ந்து செய்வோம்....
Today's reflection says about the steps to meet God closer through spiritual activities! Nice reflections about St. Dominic! Common goodness a little more to be explained with reference! Do well
பதிலளிநீக்கு