வெள்ளி, 3 மே, 2019

04. 05. 2019.சிந்தனைகள்...

 04. 05. 2019
அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் அடிப்படையில் மூன்று கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
1. கேட்பது
2. அழைப்பது
 3. வேண்டுவது அல்லதுஜெபிப்பது 
முதலாவதாக கேட்பது
     யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் 19 ஆவது வசனம் என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இதைத் தெரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினம் கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும்.  பேசுவதை விடுத்து பிறர் கூறுவதை நாம் கேட்க இன்றய வாசகம் நம்மை அழைக்கிறது.
2. இரண்டாவதாக அழைப்பு திருத்தூதர்களும் சீடர்களும் இணைந்து மக்களிடையே நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த வருமான எழுவரை கவனமாக தேர்ந்தெடுத்து  பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காக அனுப்பி வைக்கிறார்கள்..
நாமும் நமது வாழ்வில் அடுத்தவரின் நலனுக்காகவே இருக்கின்றோம் எத்தனை நாள் நாம் பிறர் நலத்துடன் வாழ்வதற்கு நம்மால் ஆன முயற்சியை செய்திருக்கிறோம் நமக்கு இத்தகைய பொறுப்பானது வழங்கப்பட்டிருக்கிறது அந்த பொறுப்பை நாம் சரிவர செய்தோமா என சிந்திக்க இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது...
3. மூன்றாவதாக வேண்டுவது அல்லது ஜெபிப்பது
    இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்களும் சீடர்களும் இணைந்து பிறரின் தலைமீது கைவைத்து பிறருக்காக வேண்டுகிறார்கள். நமது வாழ்வில் நம்மில் பலர் தினமும் திருப்பலியில் பங்கு பெறுகிறோம் திருப்பலியில் மன்னிப்பு வழிபாடு பகுதியில் நாம் அனைவரும் இணைந்து சொல்லுவோம்.... எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே... ஆகையால் எப்பொழுதும் கன்னியான புனித மரியாவிடமும் வானதூதர்கள், புனிதர்கள்  அனைவரிடமும் சகோதர சகோதரிகளே உங்களிடமும் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்... இந்த ஜெபத்தை நாள்தோறும் பயன்படுத்துகிறோம் ஆனால் நம் அருகில் இருப்பவரின் குற்றங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் என நம்மில் எத்தனை பேர் நமது அருகில் நிற்பதற்காக மன்றாடி இருப்போம் என்பதை சிந்திக்க இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது. ஜெபம் என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல அது நம் வாழ்வாக வேண்டும்...

அன்புக்குரியவர்களே அனைத்தையும் கவனமாக கேட்போம்...
நம் அழைத்தலின் பொறுப்பையும் உணர்வோம்...
தொடர்ந்து ஜெபிப்போம் திருத்தூதர்களை போல பிறரின் நலனுக்காக....

8 கருத்துகள்:

  1. your ideas are simple and easy to understand.Still conclusion can include all the above said points.

    பதிலளிநீக்கு
  2. Sahayam! A different way of thinking about our prayers in mass! Thought provoking to consider as ourselves! Nice!

    பதிலளிநீக்கு
  3. Sahayam! A different way of thinking about our prayers in mass! Thought provoking to consider as ourselves! Nice!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...