இறைவன் இயேசுவின் பிரியமான இறைமக்களே. விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வு தரும் உணவாகிய ஆண்டவரை தங்களுடைய உள்ளத்தில் முதல் முறையாக ஏற்பதற்கு நம் பங்கை சார்ந்த சில சிறுவர் சிறுமியர்கள் இங்கே இருக்கிறார்கள் இவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் ஆண்டவர் இயேசுவை எப்போதும் தங்கள் உள்ளத்தில் வைத்துக்கொள்ளவும், ஆண்டவர் இயேசுவின் உண்மையான சாட்சிகளாகவும் இவர்கள் வாழவும் இவர்களுக்காக இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
எனது உடலை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் பெறுவர் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவரின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளவிருக்கும் இவர்கள் ஆண்டவர் இயேசுவில் நிலை திருக்கவும், தங்களின் உயிர் உள்ளவரை ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழவும், அவரை பற்றிய நற்செய்தியை அதில்அகிலத்திற்கு எடுத்துரைக்கும் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்ந்து காட்டவும். ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான பற்று கொண்டிருந்து அவரை தங்கள் உள்ளத்தில் ஏற்க பல நாட்களாக தங்களைத் தயாரித்து இன்று அந்த நிலைக்கு தயாராகி இருக்கக்கூடிய இவர்களை இறைவன் இன்று ஆசிர்வதித்து, இவர்களின் தேவைகளை நிறைவு செய்து, இவர்கள் உள்ளத்தில் அப்பரசத்தின் வடிவில் செல்லவிருக்கும் இறைவன் இவர்களோடு என்றும் இருந்து இவர்களை காத்து வழி நடத்த வேண்டி நாம் அனைவரும் இன்று ஒரே குடும்பமாக இந்த குழந்தைகளுக்காக இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம். குறிப்பாக அவர்களைப் பயிற்றுவித்த பயிற்சியாளர்களையும் இவர்களை இந்த நிலைக்கு அனுப்பி வைத்தத இவர்களின் பெற்றோர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து இந்த திருப்பலியில் அவர்களுக்காகவும் ஜெபித்து இறை ஆசியைப் பெறுவோம்...
✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐➕➕➕➕➕
பதிலளிநீக்கு