இயேசுவில் பிரியமானவர்களே
என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே விண்ணிலிருந்து இறங்கி வந்தேன் என்கிறார் ஏசு கிறிஸ்து...
இன்று நாம் யாருடைய விருப்பத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம்? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி.
1. நாம் நமது சொந்த விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்களா? அல்லது 2. பிறரின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்களா? என சிந்திக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாம் வாழும் உலகில் பல வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் சிலர் தங்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். இன்னும் சிலர் பிறரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். இன்னும் சிலர் உண்டு எப்பாடுபட்டாவது பிறரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனவே தங்களின் விருப்பத்தை தியாகம் செய்யக் கூடியவர்கள். இன்னும் சிலரும் உண்டு இவர்கள் எப்படியாவது அடுத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆதரவு பெற்றுக்கொண்ட பிறகு அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களில் நாம் எவ்வகையான மனநிலை கொண்டவர்கள் என்பது இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி இந்த நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை மனிதர்களை சார்ந்தவர்கள்..
இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். உதாரணமாக பிலிப்பு நற்செய்தி அறிவித்ததையும், அவரால் உண்டான சில புதுமைகளை பற்றியும் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு தெளிவு படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
நாமும் நமது வாழ்வில் பலமுறை திருப்பலியில் பங்கேற்று இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் இது விசுவாசத்தின் மறைபொருள் எனக் கூறும் பொழுது நாம் அனைவரும் இணைந்து ஆண்டவரே நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம் உமது உயர்ப்பை எடுத்துரைக்கிறோம் என்று கூறுவோம். ஆனால் நாம் ஒரு நாளைக்கு எத்தனை பேரிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு பற்றி அறிவிக்கின்றோம்.... என்று சிந்தித்துப் பார்ப்போபோம்...
தொடக்ககால கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்த போது பலவிதமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இன்று அந்த அளவிற்கு இன்னல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். இருந்த போதும் நம்மில் ஏன் பலர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பற்றி அறிவிக்க முடியாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு விதத்தில் நாம் நமது சொந்த விருப்பத்திற்காகச் செயல்படுவதும் ஒரு காரணமாகும். தனது சொந்த விருப்பத்திற்காகச் செயல்படும் பொழுது நாம் நமது தேவைகளுக்காக இறைவனை நோக்கி செல்வோம். மற்றவரின் தேவைகளுக்காக செல்வதில்லை. நாம் இன்று நினைவு கூறும் ஸ்தேவான் தன் சொந்த விருப்பத்திற்காக அல்லாமல்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பத்திற்காக தன் வாழ்வை மாற்றிக் கொண்டார். அதன் விளைவே அவர் மரணத்தை பரிசாக பெற்றார். ஆனாலும் இன்றளவும் அவர் நினைக்கப்பட்டு கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் தன் சொந்த விருப்பத்திற்காகச் செயல்படாமல் பிறரின் விருப்பத்திற்காக செயல்பட்டது தான். நாம் யாருடைய விருப்பத்திற்காக செயல்படப் போகிறோம் என்ற சிந்தனையோடு இந்த நாளில் தொடர்ந்து பயணிப்போம்.
Sahayam! You have told to identify the self willingness and also the willingness for God through others! Well done!
பதிலளிநீக்கு