இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் கடவுள் எடுத்துரைக்கக் கூடிய அனைத்து வாழ்வுக்குரிய அற நெறிகளையும் இதயத்தில் ஏற்று அதனை வாழ்வாக மாற்றுவதற்கு அழைக்கப்படுகின்றோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள முடியும். கடவுளுக்குரியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறை வார்த்தையினை அப்படியே பின்பற்றுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் சீர்தூக்கிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இறை வார்த்தையை பின்பற்றுவதன் வாயிலாக இறைவனுக்கு உகந்த மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக