இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்று கண்ட இறைவன் தகுந்த துணையை கொடுத்தார். கடவுள் இந்த உலகத்தில் மனிதன் மற்றவரோடு இணைந்து மகிழ்ந்து இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புக் கூடியவராக இருக்கின்றார். இந்த கடவுளின் விருப்பத்துக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக எழுப்பிப் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம். அன்றைய யூத சமூகத்தில் மனிதர்களை அன்னியப் படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மெசியா வந்தால் யூதர்களை மட்டுமே மீட்டு செல்வார் என்ற மனநிலை அவர்களின் மனதில் மேலோங்கி இருந்தது.
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் பயணம்
செய்தபோது இந்த சமாரியர்களையும் கனானியர்களையும் தேடிச் சென்று இறைவனுடைய மீட்பு அனைவருக்கும் ஆனது என்பதை எடுத்துரைப்பவராக இருந்தார். இந்த சமாரியர்களாக இருக்கட்டும் அல்லது கனானியர்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவருமே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். யூதர்கள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள் என்பது அல்ல, மாறாக சமூகத்தில் வாழ்ந்த அத்துணை பேரும் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கானானியப் பெண் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடவுள் படைத்த இந்த உலகத்தில் ஒருவர் மற்றும் ரோடு இணைந்து அந்நியப்படுத்தாது ஒதுக்காது சேர்ந்து வாழ்வதற்கான ஆற்றலை இறைவன் இன்னும் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக