இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் இந்த உலகை மிகவும் அழகாக படைத்தார். எல்லாவற்றையும் படைத்து விட்டு இறுதியில் மனிதனை படைத்தார். நம்மை படைப்பதற்கு முன்பதாக நமக்கு தேவையான அத்துணை காரியங்களையும் பார்த்து பார்த்து உருவாக்கிய கடவுள், இன்றைய இறை வார்த்தையின் வழியாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பு தருகின்றார்.
ஆண்டவரால் படைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே நமது படைப்பின் நோக்கத்தை உணர்ந்தவர்களாக மனிதநேயத்தோடு நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முற்படுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காகவும் அவரிடமிருந்து நலன்களை பெற்றுக் கொள்வதற்காகவும் பலரும் இயேசுவை நோக்கிச் சென்றார்கள் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நமது வாழ்வில் எத்தனையோ நன்மைகளை இந்த இயேசுவினிடத்தில் இருந்து பெற்றிருந்தாலும் நமது வாழ்வு இந்த இயேசுவை தேடிச் செல்லுகின்ற வாழ்வாக இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, ஆழமான நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் சென்று பலவிதமான நன்மைகளை பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்துவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக