மாற்றத்திற்கான கதாநாயகர்கள்
மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என்ற தலைப்பினை பார்த்தபோது உள்ளத்தில் ஒரு விதமான கேள்வி எழுந்தது யார் இன்றைய சூழலில் மாற்றத்தை கொடுக்கக்கூடிய கதாநாயகர்கள்? உடனே அருகிலிருந்த ஒரு நண்பரை நோக்கிக் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என யாரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர் சமூக போராளிகளையே நான் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் என்பேன் என்றார். எனது களப்பணித்தளமான கீரனூர் மறைவட்டத்தில் உள்ள இலட்சுமணன் பட்டி (அந்தோணியார் நகர்) என்னும் கிராமத்துக்குச் சென்ற போது அங்கிருந்த சிறுவர்களிடம் கேட்டேன் உங்களைப் பொறுத்தவரையில் இன்றைய சூழலில் மாற்றத்தை கொடுக்கக்கூடிய கதாநாயகர்கள் யார்? எனக் கேட்ட போது சிலர் விஜய் என்றும், சிலர் அஜித் என்றும், சிலர் கமல் என்றும், இளைஞர்கள் சீமான் என்றும் பதில் கூறினார்கள். இதிலிருந்து அறிந்து கொண்டேன் இன்றைய சூழலில் மாற்றத்திற்கான கதாநாயகர்கள் எனப்படுபவர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்டவர்கள், மாறுபட்டக் கருத்தை தரக்கூடியவர்கள் என்று. அதன் அடிப்படையில் யார் இந்த மாற்றத்திற்கான கதாநாயகர்கள்? யாரால் இந்த சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க இயலும்? என்ற கேள்வி எனக்குள் எழுப்பிக்கொண்டே இருந்தேன். அவ்வேளையில் என்னுள் எழுந்த சிந்தனைகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். நாம் ஏன் கதாநாயகர்களை வெளியில் தேடவேண்டும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஏனெனில் ஒரு மனிதரைப் பார்த்து இவரை போல் நான் உருவாக வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் இன்று இவ்வுலகில் அதிகம். இவர்களுக்கு மத்தியில்; நான்தான் முதலில் எனக்கு கதாநாயகனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் உருவாக வேண்டும். அனுதினமும் நம் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பலர் பேசுகிறார்கள், சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதே இன்று நம்முன் இருக்கக் கூடிய கேள்வி. நாம் மாற்றம் பற்றி பேசக்கூடியவர்களை கதாநாயகர்களாக ஏற்றுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்க கூடியவர்களா? அல்லது மாற்றத்தை முன்னெடுக்க கூடிய ஒரு கதானாயகனாக நாம் இருக்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும். விவேகானந்தர் கூறுவார் 20,000 வெற்;றுப் பேச்சிகளை விட ஒரு துளிச் செயல் மேலானது என்று. நானும் பல நேரங்களில் பல இடங்களில் பல மனிதர்கள் மாற்றத்தைப் பற்றி பேசுவதை கேட்டிருக்கின்றேன.; ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் பேசும் விதம் கண்டு வியந்ததுண்டு. ஆனால் என்னிடத்தில் மாற்றத்திற்கான செயல்பாடுகள் என்று எதுவுமில்லை. வெறுமென பேசுவதையும், கேட்பதையும் விட செயல்படே அவசியமானது. எனவே மாற்றத்துக்கான முதல் விதையாக செயல்;ட வேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் நாம் உணர வேண்டும். நாம் அனைவரும் இன்று சிறுவர்களாகவே, இளைஞர்களாகவோ இருக்கலாம். ஆனால் நிகழ்காலத்தின் கதானாயகனாக மறுவது என்பதும் நம் கையில் தான் உள்ளது. ஒரு குழந்தைகள் பல்வேறு இடங்களிலிருந்து பலவற்றைக் கற்றாலும் 60 சதவீதம் அக்குழந்தை அனைத்தையும் அதன் குடும்பங்களில் இருந்தும், மீதமுள்ள 40 சதவீதத்தை அவர்கள் வெளியில் (குமூகத்தில்) இருந்து பெருகிறார்கள் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம் வாழ்வு மூலம் எதை கற்பிக்க போகிறோம். வருங்காலம் தேடும் கதானயகாகளாக நாம் மாறுகிறோமா? அல்லது நாமே கதாநாயகர்கள் என்பதை உணராது அனுதினமும் காதாயகர்கள் என்று சிலரை நம்பி பின் தொடரக் கூடியவர்களாகவே இருக்கபோகின்றோமா? இன்று நாம் வாழும் சமூகத்தில் புதிய கல்விக் கொள்கை, விவசாயிகளுக்கு எதிரான அரசின் செயல்பாடுகள், மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு எதிராக புனையப்படும் பொய் வழக்குகள், இயற்கைக்கு எதிரான போக்குகள் என அனைத்தையும் எதிர்த்து மாற்றத்தை விதைக்கும் கதாநாயகனாக நாம் உருவாக வேண்டும். நாம் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் காண விரும்புகிறோமோ அந்த மாற்றமாக நாம் முதலில் மாற வேண்டும். இதையே காந்தியடிகள்; “சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக முதலில் நீ இரு” என்று கூறுகிறார். எனவே இச்சமூகத்தில் மாற்றத்திற்கான கதாநாயகர்களை நாம் வெளியில் தேடுவதை நிறுத்தி, நாம் ஒவ்வொருவருக்குள்ளும் அதைத் தேட வேண்டும். இயற்கையைப் பேணி பாதுகாப்போம் என கூறுவதை விட இயற்கையைப் பேணி பாதுகாக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அன்று இயேசு சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென முயன்றபோது வெறுமென பேசக்கூடியவராகவோ அல்லது ஒரு நல்ல மாற்றத்தை தரும் கதானாயகனை தேடக்கூடியவராகவோ இல்லாமல் தான் விரும்பிய மாற்றத்தினை தன் வாழ்வில் வெளிக்காட்ட கூடியவராகவே வலம்வந்தார் என்பதை வரலாற்றிலிருந்த நாம் அறியலாம். அந்த இயேசுவின் நண்பர்களான நாம் எப்போது நாமே மாற்றத்திற்கான கதாநாயகர்கள்; என்பதை உணரப் போகிறோம். இன்று இளைஞர்களான நாம் நாளை வருங்கால தலைமுறையை வழிநடத்தும் சக்தியாக மாறிட மாற்றத்திற்கான கதாநாயகர்களை வெளியில் தேடுவதை நிறுத்திவிட்டு மாற்றத்திற்கான கதாநாயகர்களை நமக்குள் தேடுவோம். மாற்றத்திற்கான கதாநாயகர்களாக மாறுவோம்...
சகோ. சகாய ராஜ் ஜே.
அம்மாபேட்டை
தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி.
செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019
மாற்றத்திற்கான கதாநாயகர்கள் Article 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
The best attitude had been expressed by you for today's youth and children! Congrats!
பதிலளிநீக்கு